Tuesday, July 30, 2013

மனதை உலுக்கிய தூக்கு மர நிழலில்

ல்லூரி காலத்தில் படித்து விக்கித்து போன நூல் சி.ஏ பாலன் என்பவர் எழுதிய "தூக்கு மர நிழலில் ".

பாலன் கேரளாவை சார்ந்த ஒரு கம்யூனிஸ்ட் தலைவர். அவருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. கருணை மனுவும் ஜனாதிபதியால்   நிரகாரிக்கப்பட - இன்னும் ஒரு வாரத்தில் தூக்கு எனும் நிலை.

அப்போது கேரளாவில் ஈ. எம் எஸ் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தது.வழக்கறிஞர் கிருஷ்ண ஐயர் மூலம் மீண்டும் ஜனாதிபதிக்கு மனு செல்ல, இம்முறை கருணை மனு ஏற்று கொள்ளப்பட்டு விட்டது !

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாலன் எந்த தவறும் செய்ய வில்லை என விடுதலை ஆகிறார் !

**********
நூல் முழுக்க முழுக்க சிறையில் இருந்த போது சி.ஏ பாலன் சந்தித்த அனுபவங்களை தான் கூறுகிறது. மேலும் பல தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை கண்ணாடி போல காட்டி விடும் இந்த புத்தகம் !

சி.ஏ பாலன் சிறையிலிருந்து வெளியான பின் எழுதிய நூல் இது. முழுக்க முழுக்க உண்மை சம்பவங்களால் நிறைந்தது

இந்த நூல் எந்த பதிப்பகத்தில் கிடைக்கும் என்ற தகவலும் இல்லை. புத்தக சந்தையிலும் கூட இந்த புத்தகம் கண்ணில் பட்டது இல்லை.  எந்த பதிப்பகத்தில் இந்த நூல் கிடைக்கிறது என்ற தகவல் யாரேனும் தந்தால் நன்றியுடையவனாவேன் !

நூல் துவங்கும் போது சி.ஏ பாலன் சிறையில் சென்று சேர்கிறார். அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. அதன்பின் சிறையில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை அவர் சொல்லி போகும் போது நமக்கு " இப்படி ஒரு உலகமா?" என்று அச்சமும் வியப்பும் மேலிடும்.

உதாரணத்துக்கு சில :

வெளி உலகில் காசு எப்படி பல பொருள்களை வாங்க பயன்படுகிறதோ அதே போல, சிறைக்குள் பீடி, சிகரெட் தான் பண்டமாற்று பொருள். சிறை வார்டன்கள் அல்லது கைதிகளிடம் பல வஸ்துகள்  கிடைக்கவும் இவையே பயன்படுகிறது. வழக்கமாய் ஜெயிலுக்கு வருவோர் தங்களை போலிஸ் பிடிக்க போகிறது என்றால் ஆசன வாயில் பீடி கட்டை சொருகி சிறைக்குள் எடுத்து வந்து விடுவார்களாம் !

வார்டன்கள் செய்கிற கொடுமை; சிறைக்குள் உள்ள அரசியல் என்றெல்லாம் சொல்லி போகும் இந்த நூல் - மிக முக்கியமாய் தொடுவது தூக்கு தண்டனை கைதிகளின் மன நிலையை !



நூலாசிரியர் சி.ஏ பாலன் ஒரு தூக்கு தண்டனை கைதி என்பதால் - பல தூக்கு தண்டனை கைதிகளுடன் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கிறது. அவர்களின் கதைகள் பலவற்றை அவர் கூறுகிறார். அநேகமாய் ஒவ்வொரு மனிதனும் எதோ ஒரு நேரத்தில்,  கோபத்தில் அல்லது முட்டாள் தனத்தில் தவறு செய்து விட்டு அந்த தவறுக்காக தன்னை தானே நொந்து கொண்டு இருப்பதை சொல்லி செல்கிறார்

தூக்கில் போடப்போகும் முன் மனிதர்கள் எப்படி பயப்படுகிறார்கள் என்பதையெல்லாம் அவர் விவரிக்கும் விதம் படித்து 20 வருடம் ஆகியும் இன்னும் மறக்க முடிய வில்லை ! தூக்கு மேடைக்கு செல்லும்போது  பலரை தர தரவென்று இழுத்து தான் செல்வார்களாம். சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம். அப்படியே கொண்டு சென்று தான் தூக்கில் இடுவார்களாம்.

நிற்க. சி.ஏ பாலனுக்கு என்ன ஆனது என்று பார்ப்போம்

அவர் ஒரு நிரபராதி எந்த தவறும் செய்ய வில்லை என வெளியில் சில அரசியல் கட்சிகள் போராடுகின்றன. குறிப்பாக நடிகர் MR ராதா இவரை விடுவிக்க கோரி பெரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்
பொதுவாய் தூக்கு தண்டனை கைதிகள் - தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை பெறுவதை தான் கேள்விப்படுவோம். இங்கு அவர் குற்றமே செய்யாதவர் என விடுவிக்கப்படுகிறார்

"எந்த தவறும் செய்யாத எனக்கு தானே தூக்கு விதிக்கப்பட்டது? அந்த தீர்ப்பு அப்படியே எடுத்து கொள்ளப்பட்டிருந்தால் நான் இறந்திருக்க வேண்டும் தானே ? நமது நீதி முறையும் தூக்கு வழங்கும் விதமும் எவ்வளவு கேலிக் கூத்தாக இருக்கிறது பாருங்கள்"  என்று நூலை முடிக்கிறார் சி.ஏ பாலன் 

படித்து 20 வருடங்கள் ஆகியும் இவ்வளவு விஷயங்கள் நினைவில் கொண்டு எழுதுவதிலேயே இந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் உங்களுக்கு புரிந்திருக்கும் !

வாய்ப்பு கிடைத்தால் இந்நூலை அவசியம் வாசியுங்கள் !

29 comments:

  1. குமுதம் இதழில் தொடராக வந்தது. அப்போது படித்து, அவைகளை தனியாக, எடுத்து பைண்ட் பண்ணி, பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். கால ஓட்டத்தில் பல பொக்கிஷங்களை இழந்திருக்கிறேன். அதில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அனுபவம் சொன்னதுக்கு நன்றி ஐயா

      Delete
  2. நானும் குமுதம் தொடராக இதை வாசித்துள்ளேன். சமீபத்தில் இன்னொரு புத்தகம் சிறை வாழ்க்கையைப்பற்றிச் சொல்லிப்போனது, வாசித்தேன். ஆனால்..... தூக்குமரத்தின் நிழலுடன் ஒப்பிட முடியாது.

    அது வேறு இது வேறு. இது இந்தக் கால நிகழ்வுகள். சிறையில் வடை சுட்டு விற்கிறார்கள்!!!

    புத்தகத்தின் பெயர் 'அடியாள்'

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதும் அடியாள் படிக்கும் ஆசை வருகிறது ; படிக்கிறேன்

      Delete
  3. பள்ளி நாட்களில் படித்தது. குமுதம் இதழில் தொடராக வந்தது.மீண்டும் படித்ததுண்டு
    இந்த கதையை தான் மேஜர் சுந்தர் ராஜன் // இன்று நீ நாளை நான் // திரைப்படமாக எடுத்தார் மாஸ்ட்ரோ வின் இசையோடு.

    ReplyDelete
    Replies
    1. அட ! நானும் அந்த படம் பார்த்திருக்கேன் ; அதில் ஹீரோ இறந்திடுவார். முடிவு மாத்திட்டாங்க என நினைக்கிறேன்

      Delete
  4. http://tamilelibrary.org/biblio/list_novels.php Check entries 3974 and 3975.

    3974 தூக்கு மர நிழலில் பாலன், சி.ஏ 1970, சென்னை, ராணிமுத்து ...,
    3975 தூக்கு மர நிழலில் பாலன், சி.ஏ 1976 சென்னை என்.பி.சி.எச்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா; விலை பட்டியல் மட்டும் பார்க்க முடிகிறது ; எப்படி ஆன் லைனில் வாங்கணும் என தெரியலை ; தெரிந்தால் சொல்லவும்

      Delete
  5. சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம். அப்படியே கொண்டு சென்று தான் தூக்கில் இடுவார்களாம்.//

    உண்மையாகவா? ஆனால் தூக்கிலிடப்படுபவர் அப்போது சுயநினைவில் இருக்க வேண்டும் என்பார்களே!




    ReplyDelete
    Replies
    1. ஆம் சார்; சட்டம் அப்படி இருந்தாலும் நிஜம் வேறு மாதிரி இருக்கிறது என்பதை குறிக்கவே அதனை எழுதினேன் ; புத்தகத்தை வாசித்து பாருங்கள்

      Delete
  6. enge kidaikkum?book name please?

    ReplyDelete
    Replies
    1. நியூ செஞ்சுரி புக் ஹவுசிலும் மின் நூலாகவும் .புத்தகம் பெயர் தூக்கு மர நிழலில் தான்

      Delete
  7. கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் சார்....
    //தூக்கு மேடைக்கு செல்லும்போது பலரை தர தரவென்று இழுத்து தான் செல்வார்களாம். சிலர் அந்த பயத்தில் ஏறக்குறைய மயங்கி போய் விடுவார்களாம்// - இந்த வரிகள் படிக்கும் போதே கனக்கிறது!!

    எப்போ தான் சட்டங்கள் திருத்தபடுமோ...

    ReplyDelete
  8. எங்கே கிடைக்கிறது என தெரியவில்லை என்று சொல்லி விட்டீர்களே மோகன்....

    மேலே சொன்ன இணைப்பில் பதிப்பகம் கொடுத்திருந்தாலும் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.....

    சென்னையில் கிடைத்தால் சொல்லுங்கள் மோகன்.....

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சொல்கிறேன் வெங்கட்

      Delete
  9. நான் ராணிமுத்து வில்தான் படித்தேன். மனதை உலுக்கிய புத்தகம்.

    ReplyDelete
    Replies

    1. நன்றி ஸ்ரீராம்

      Delete
  10. மாதம் ஒரு நாவல் திட்டத்தில் ராணிமுத்து வெளியிட்டபோது பள்ளி மாணவனாக இருந்தபோது படித்தது. அதன் பிறகு NCBH எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட நூல் இன்று என்னிடம் உள்ளது. அங்கு கேட்டுப் பாருங்கள். NCBH இல் கேட்டுப் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார்; நிச்சயம் விசாரிக்கிறேன்

      Delete
  11. I read this book in 1986- I discussed about this book with my professor in MCC.(Studied there Bsc for three months before joining BE).

    ReplyDelete
    Replies
    1. 86 ல் கல்லூரி ன்னா நீங்க என்னை விட பெரியவரா :))

      Delete
  12. பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

    நியூ செஞ்சுரி புக் ஹவுசிலும் மின் நூலாகவும் இப்புத்தகம் கிடைப்பது உங்கள பின்னூட்டம் மூலம் தான் அறிய பெற்றேன் நன்றி

    ReplyDelete
  13. அந்த ஒரு படமே ஆயிரம் செய்தி சொல்லியது மோகன்-ஜி...... உடனே அந்த புத்தகம் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.....பகிர்வுக்கு நன்றி !

    ReplyDelete
  14. ஒரு நல்ல புத்தக அறிமுகம். நன்றி

    ReplyDelete
  15. 1975 என் 13வது வயதில் என் அப்பா படிச்சிட்டு வைத்த தூக்குமர நிழலில் புத்தகத்தை படித்தேன் அருமையான உன்மை சம்பவம் அப்பாவுக்கு தோழர் சி ஏ பாலனை தெரியும்
    அப்புறம் 1986ல் சென்னை செண்டிரலில் ரோட்டோரமாக பழைய புக் வியாபாரியிடம் கேட்டேன் இரண்டு தினங்களில் கொடுத்தார் நல்ல புத்தகம் என்பதால் படிச்சிட்டு தாரேன்னு வாங்கிட்டு போனவங்க தரலை

    ReplyDelete
  16. 1975 என் 13வது வயதில் என் அப்பா படிச்சிட்டு வைத்த தூக்குமர நிழலில் புத்தகத்தை படித்தேன் அருமையான உன்மை சம்பவம் அப்பாவுக்கு தோழர் சி ஏ பாலனை தெரியும்
    அப்புறம் 1986ல் சென்னை செண்டிரலில் ரோட்டோரமாக பழைய புக் வியாபாரியிடம் கேட்டேன் இரண்டு தினங்களில் கொடுத்தார் நல்ல புத்தகம் என்பதால் படிச்சிட்டு தாரேன்னு வாங்கிட்டு போனவங்க தரலை

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...