Monday, July 15, 2013

தொல்லைகாட்சி: ஜோடி சீசன் - தோனி- Pursuit of Happiness

பார்த்த படம் - Pursuit of Happyness

வில் ஸ்மித் நடித்த அற்புதமான இப்படத்தின் தமிழ் பதிப்பை இந்த வாரம் சன் டிவியில் காண முடிந்தது

சேல்ஸ்மேன் ஸ்மித்துடன் ஒரு மன கசப்பில் மனைவி அவரை விட்டு பிரிகிறார். தனது 5 வயது மகனுடன் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய வேண்டிய சூழ்நிலை. ரயில்வே கழிப்பறை, சர்ச், பஸ் என பல இடங்களில் மகனுடன் தினமும் தங்கும் ஸ்மித், தனது தொழிலில் மீண்டும் சாதித்து - நிரந்தர வேலை அவருக்கு கிடைப்பதுடன் படம் நிறைகிறது



கார்ட்னெர் என்கிற மனிதரின் வாழ்வில் நிகழ்ந்ததையே படமாக்கி உள்ளனர். அதன் பின் சுய தொழில் தொடங்கி பெரும் பணக்காரரான அவர் - இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் !
File:Chrisgardner.jpg
The Real Chris Gardner, whose story was shot in this film 
வீடின்றி அவர்கள் இருவரும் தவிப்பது மனதை உருக்கி விடும். விடா முயற்சியும், துன்பத்தை சகித்து கொள்ளும் பொறுமையும் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியும் எனபதை நிஜ வாழ்விலிருந்து எடுத்து சொல்லும் இந்த படம் அவசியம் காண வேண்டிய ஒன்று !

ஜோடி சீசன் - 6

இந்த வாரம் ரிலேஷன்ஷிப் ரவுண்ட் என சென்டிமென்ட்டாக பிழிந்தனர். ரிலேஷன்ஷிப் என்றாலே கண்ணை கசக்கனும் என முடிவெடுத்துட்டனர் போலும்.. ஒரே அழுகாச்சி தான் !

ராதாவின் தம்பி மற்றும் பூர்ணிமா மகன் சாந்தனு வந்து அவர்களுக்கு " இன்ப அதிர்ச்சி " தந்தது ஒரு புறமிருக்க, பாக்யராஜ் உடன் போனில் பேசினர். அப்ப அவர் விஜய் டிவிக்கு சரியான செக் வைச்சார் !

" நிகழ்ச்சியிலே எல்லாம் ஓகே; ஒரு விஷயம் தான் எனக்கு பிடிக்கலை. எலிமிநேஷன்னு சொல்லிட்டு ஒருத்தரை வெளியே அனுப்புறீங்க அடுத்து அவர் அழுகுறார். பாக்க கஷ்டமா இருக்கு. ஒண்ணு யாரையும் எலிமிநேட் செய்யாதீங்க இல்லாட்டி யார் எலிமிநேட் ஆகுராங்கன்னு சொல்லாம விட்டுடுங்க. அடுத்தட ரவுண்ட் போறவங்க பேரை மட்டும் சொல்லிட்டு இவங்க பேரை சொல்லாட்டி - பரிட்சை பேப்பரில் நம்பர் வராத மாதிரி அவங்களே தெரிஞ்சுப்பாங்க இல்லியா ? " என்றார்

கேட்ட DD -க்கே சிரிப்பை அடக்க முடியலை ! இந்த ஆள் விஜய் டிவி அடி மடியிலேயே கை வைக்கிறாரே என ! பின்னே? அந்த செண்டிமெண்ட் சீன்களை வச்சு தானே பல புரோகிராம் ஓடிட்டு இருக்கு !

சீரியல் பக்கம்

சீரியல்கள் பார்க்க செம கடுப்பாக இருந்தாலும் சிலவற்றை பார்த்தே தீர வேண்டிய நிர்ப்பந்தம். வீட்டுக்கு வந்தவுடன் ஓடி கொண்டிருப்பது சீரியல் எனும் நிலையில் அதிலிருந்து நேரே தப்பி ஓடி, கணினி முன் உட்கார முடியாது ! அப்படி உட்கார்ந்தால் பின் விளைவுகள் பயங்கரமாய் இருக்கும் என்பதால் "வீட்டோடு நேரம் செலவிடுகிறேன் " என்ற பேரில் டிவி முன் உட்கார வேண்டியுள்ளது !

Photo

சரவணன் மீனாட்சியில் - சரவணன் மற்றும் மீனாட்சி பல வாரங்கள் பேசாமல் இருந்து - அப்புறம் சரவணன் மாறு வேஷம் எல்லாம் போட்டு (நம்மை தவிர யாருக்கும் தெரியாதாம் !) ஒரு வழியா பேசிட்டார். அதுக்கப்புறம் ஒரே ரொமான்ஸ் மேட்டரா ஓடிக்கிட்டு இருந்தது

ஆபிஸ் சீரியல் பார்க்கும் நேரத்தில் இன்னொரு சீரியலும் ஓடுவதால் - அம்மணியால் பார்க்க முடிவதில்லை; இரவு 10.30 க்கு ரீ டெலிகாஸ்ட் பண்றான் அப்ப பார்க்கணும் என மிரட்டி வருபவரை சமாளித்து அதற்கு முன்பே டிவியை ஆப் செய்து வருகிறேன்

விஜய் டிவியின் VJ Hunt 

எல்லா டிவியிலும் தான் தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய் டிவி ஒரே ஒரு ஆண் தொகுப்பாளர் மற்றும் ஒரே ஒரு பெண் தொகுப்பாளர் தேர்ந்தெடுக்க - ஊர் முழுக்க சுற்றி வருகிறார்கள். இதை வைத்து ஒரு நிகழ்ச்சியும் ஒப்பேற்றி விட்டனர்

ஏராள ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் பங்கேற்க - சுமாராய் பேசுவோரை - அங்கேயே கிண்டல் செய்து வெளியே அனுப்புகிறார்கள்

ஒரு சில முறை டிவி நிகழ்சிகளில் கலந்து கொண்டவன் என்ற முறையில் கோபிநாத் போன்ற பல வருட அனுபவம் உள்ள தொகுப்பாளரே - ஒவ்வரு ஷூட்டும் துவங்கும் போது பல டேக்குகள் வாங்குவதை பார்த்துள்ளேன். ஆனால் புதியவர்களான இவர்கள் - கிடைத்த சில நொடிகளில் தயக்கமே இன்றி பேச வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் !

தோனி ஸ்பெஷல்

இலங்கையுடனான பைனல் மேட்சில் தோனி ஆடிய ஆட்டத்தை மறுநாள் காலை ஹை லைட்ஸ் மூலம் தான் பார்க்க முடிந்தது. டூர் செல்லும் முன் பிக்சிங் என்று பேச்சு அதிகம் எழுந்தது. இப்போது அதே தோனியை கிரிக்கெட்டின் சிறந்த பினிஷர் என்றும் இந்தியாவின் மிக சிறந்த கேப்டன் என்றும் சொல்கிறார்கள். Nothing succeeds like Success !

அந்த கடைசி ஓவர் த்ரில்லை மிஸ் செய்தவர்கள் இந்த வீடியோவில் கண்டு மகிழுங்கள்:


இந்திய அணியின் ஆட்டம் - 3 நிமிட ஹை லைட்ஸ் - 


இஞ்சினியரிங் மோகம் - நீயா நானா 

இந்த வார நீயா நானாவில் இஞ்சினியரிங் மோகம் பற்றிய விவாதம்; இரண்டு பக்க நியாயமும் பேசினர். சீட்டு தர ஒவ்வொரு கல்லூரியும் பணம் வாங்கும் முறையை கேட்டாலே - பணம் வாங்க இம்புட்டு ஐடியாவா என இருந்தது ! தெரு முனை மளிகை கடை போல - எந்த பில்லும் தராமல் அனைத்து கல்லூரிகளும் பணம் வசூலிக்க - அரசாங்கங்கள் இது தெரிந்தே தான் பேசாமல் இருக்கின்றன.

ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்கள் கூட முன்னேறியது- மிக இளம் வயதிலேயே நன்கு சம்பாதிக்க ஆரம்பித்தது - விரைவில் செட்டில் ஆவது - வெளிநாட்டு வாய்ப்புகள் - வேறு வேலைக்கு அதிக சம்பளம் இல்லை - என இஞ்சினியரிங் மோகம் உள்ளோர் சொன்ன காரணங்கள் அவர்கள் பார்வையில் நியாயமானவையாகவே தெரிந்தது.

அடுத்த வாரம் "பெண்களை இளைஞர்கள் எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள்" என்கிற தலைப்பு;  அவர்கள் "அடுத்த வாரம்" என காட்டிய சில துளிகள் செம சுவாரஸ்யமாக இருந்தது ! பார்க்கணும் !
*******
அண்மை பதிவு :
சிங்கம் 1 Vs சிங்கம் 2 விமர்சனம்

8 comments:

  1. //ஆபிஸ் சீரியல் பார்க்கும் நேரத்தில் இன்னொரு சீரியலும் ஓடுவதால் - அம்மணியால் பார்க்க முடிவதில்லை; இரவு 10.30 க்கு ரீ டெலிகாஸ்ட் பண்றான் அப்ப பார்க்கணும் என மிரட்டி வருபவரை சமாளித்து அதற்கு முன்பே டிவியை ஆப் செய்து வருகிறேன்//

    இனி தப்ப முடியாது இன்று முதல் இரவு 10 மணிக்கு office

    ReplyDelete
  2. நாங்களும் பார்த்துடுறோம்

    ReplyDelete
  3. பைனல் மேட்ச் லைவ்ல பார்த்தேன்... தோணி நிற்கும் வரை வெற்றி உறுதி என்றே நினைத்தேன்....

    நினைத்தது நடந்துவிட்டது....

    குட் கிரிக்கெட்டர்...

    ReplyDelete
  4. நானும் நாதஸ்வரம் சீரியல் பார்கிறேன் என்ன பன்றது

    ReplyDelete
  5. ம்ம்ம் ரைட்டு

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு! வீடியோ லோட் ஆகவில்லை! எரர் மேசேஜ் வருகிறது! நன்றி!

    ReplyDelete
  7. பிரேம் : ஆஹா ; வலைச்சர ஆசிரியர் இங்கும் வந்து எட்டி பார்த்தமைக்கு மகிழ்ச்சி

    ரைட்டு கோவை ஆவி

    பிரகாஷ்: ஆம் உண்மை

    சக்கர கட்டி :)))))

    வாங்க ராஜி நன்றி

    சுரேஷ்: அப்படியா ? என்னால் ப்ளாகில் அந்த வீடியோ பார்க்க முடிகிறது ; என்ன பிரச்சனை என தெரியலை

    ReplyDelete
  8. "வீட்டோடு நேரம் செலவிடுகிறேன் " என்ற பேரில் டிவி முன் உட்கார வேண்டியுள்ளது !
    ஹா...ஹா.... நல்லா தப்பறீங்க .:)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...