Monday, July 8, 2013

தொல்லைகாட்சி - சூப்பர் சிங்கர் -அன்னக்கொடி- நாளைய இயக்குனர்

அன்னக்கொடி டீம் கேப்டன் டிவி யில் ...

அன்னக்கொடி படம் - மொத்தமே சில லட்சங்கள் தான் வசூலித்ததாக சொல்கின்றனர். படம் தியேட்டரை விட்டு போயி 4 நாள் கழிச்சு - கேப்டன் டிவியில் மனோஜ், கார்த்திகா, ஹீரோ லக்ஸ்மன் ஆகியோர் வந்து படத்தை பற்றி அளந்து விட்டனர் !

"அந்த சீன் சூப்பர்; இந்த சீன் சான்சே இல்லை; பாட்டெல்லாம் என்னாமா இருக்கு  என மனோஜ் பேசியதை காண செம சிரிப்பாய் இருந்தது; இடையில் " படம் Dry subject- தான் " என ஒரு வரி ஒப்புதல் வாக்குமூலமும் தந்தார்.

                            

ஆங்காங்கு பார்த்த சீன்கள் - கிராமத்தில் வாழும் அத்தனை பெரும் கெட்டவர்கள் என்பது போல் காட்டியது !

மனோஜ் " அமீர் பாத்திரத்தில் நான் நடிக்கலை படம் பெரிதாக இருந்ததால் - ரெண்டு பாகமாக பிரித்து விட்டார் அமீர் - இனியா வைத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் எடுப்பார் " என சொல்லி கிலியூட்டவே " போதுமடா சாமி" என சானல் மாறிட்டேன் !

பிலிம் பேர் அவார்ட்ஸ் 

விஜய் டிவியில் பிலிம் பேர் அவார்ட்ஸ் ஒளிபரப்பினர். சென்னையில் நடந்தாலும் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் தான் பேசினர். தொகுத்து வழங்கியது பாடகர்கள் கார்த்திக் - சின்மயி.

எங்கேயும் - எப்போதும் அஞ்சலி ஸ்ரீ ராம ராஜ்ஜியம் நயன் என பல சரியான தேர்வுகள் இருந்தாலும் தெய்வ திருமகனுக்கு விக்ரமிற்கு கொடுத்தது தான் பெரிதும் உறுத்தியது ! எப்படி தான் மனசாட்சியே இல்லாமல் அப்படத்திற்கு - விக்ரமிற்கு சிறந்த நடிகர் விருது தருகிறார்களோ? காப்பி அடிப்பதை கண்டிக்காமல் மீடியாவே விருது வழங்கி பாராட்டினால் எப்படி? என்னமோ போடா மாதவா !

சூப்பர் சிங்கர் 


வெஸ்டர்ன் ரவுண்ட் என 5 நாள் பாட,  இசை அமைக்க வந்த பேன்ட் - அருமையாக வாசித்தனர். எல்லாம் 3 முடிந்து பேரை " டேஞ்சர் சோன் " என நிறுத்தி சகட்டு மேனிக்கு திட்டி, " மூவரையும் வெளியேற்றுகிறோம் " என சீன் போட்டு விட்டு " மூவருமே படு கேவலமாய் - பாடியதால் யார் மோசம் என முடிவு செய்ய முடியலை - எனவே மூணு பேரும் அடுத்த ரவுண்ட் போங்க " என கூறி விட்டனர். அடங்கொன்னியா ! 40 வார நிகழ்ச்சியை 50 வாரம் ஆக்க செய்கிற வேலை இதெல்லாம் !

நல்ல நிகழ்ச்சி - மந்திரம் ஒரு தந்திரம் 

ஞாயிறு காலை 10.30 மணிக்கு ஜெயா டிவி யில் ஒளிபரப்பாகிறது " மந்திரம் ஒரு தந்திரம்" என்கிற மேஜிக் நிகழ்ச்சி. தயா என்கிற இளைஞர் கோட் சூட் எல்லாம் போட்ட படி கடந்த 2 வருடமாக இந்த நிகழ்ச்சி நடத்தி வருகிறார்

ஒரு பொருளை உங்களிடம் கொடுத்து விட்டு பின் இன்னொருவரிடம் இருந்து அதை எடுப்பது, உங்கள் கையிலிருந்து லிங்கம் வரவைப்பது, பிளேயிங் கார்ட் வைத்து நிறைய விளையாட்டுகள் ... என்று செல்லும் இந்த நிகழ்ச்சி குட்டிசுக்கு மட்டுமல்ல, பெரியார்களுக்கும் கூட நிறையவே பிடிக்கலாம் !

அசத்தல் அரங்கம் 

சானல் மாற்றி கொண்டே வரும்போது கேப்டன் டிவியில் "அசத்தல் அரங்கம்" கும்பகோணத்தில் நடக்க " அட நம்ம ஊராச்சே " என பார்த்தேன்.

குடந்தையின் பெருமைகள் என 5 நிமிடம் பேசினார் ...அடடா ..மகாமகம் துவங்கி, தாராசுரம் கோவில், டிகிரி காபி, ஆலங்குடி குருஸ்தளம் என அடுக்கி கொண்டே போக - அட என பெருமையாக இருந்தது.

நாளைய இயக்குனர்

தொடர்ந்து பார்க்க விரும்பும் ஆனால் எப்போதேனும் மட்டுமே பார்க்க முடியும் நிகழ்ச்சி இந்த சீசனில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் " பசங்க"பட இயக்குனர் பாண்டிராஜ் நடுவர்களாக உள்ளனர். இருவரும் பட டீமை காயப்படுத்தாது மென்மையாய் தங்கள் கருத்துகளை பதிவு செய்கிறார்கள்

ஆனால் செட் துவங்கி, நடத்தும் கீர்த்தி சொல்லும் டெம்பிளேட் வார்த்தைகள், கோட் அணிந்த இயக்குனர்கள் என அனைத்தும் மிக monotonous - ஆக உள்ளது. வித்யாசமான ஒரே விஷயம் குறும்படங்கள் மட்டுமே. மற்றவை டிட்டோ !
இவ்வாரம் விளையாட்டு மற்றும் பாண்டசி கதைகள் 3 ஒளிபரப்பினர்.

நெல்லு சோறு என்கிற கதை - வறுமையின் காரணமாக - அரிசி சோறு கிடைக்காத பெண் - கடவுளிடம் சென்று வேண்ட, விருந்தாடிகள் வந்தால் தான் அரிசி சோறு என்பதால் ஒவ்வொரு முறையும் கடவுள் ஒவ்வொரு விருந்தாளி உருவில் வருகிறார். பின் பள்ளிகளில் இலவச மதிய உணவு தர துவங்கியதும் , அவளை பள்ளியில் சேர்க்கிறார் அம்மா.

கடைசியில் மெசேஜ் எல்லாம் திரும்ப திரும்ப சொல்லாமல் சிம்பிள் ஆக முடித்திருக்கலாம் ...... மற்றபடி  Good !

***********
அண்மை பதிவு


உணவகம் அறிமுகம் - ரத்னா கபே , வேளச்சேரி

10 comments:

  1. that lady's dress was very glamorous.how come she comes in such a dress for such functions

    ReplyDelete
  2. Anonymous8:58:00 AM

    அன்னக்கொடியா ? கொடுமைடா.. இதில் ரண்டாம் பாகம் வேறா? சாமியோவ். விஜய் டிவி அவார்டுகள் எவன் தான் நல்ல ஆங்கிலத்தில் பேசுறா? எல்லாம் பீட்டர்கள் ( ஆங்கிலத்தை கொல்லாதீங்கடா ).. சூப்பர் சிங்கர் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். கேப்டன் டிவி எல்லாம் இங்கே எடுக்காது, தப்பித்தோம். :) விக்ரமுக்கு காப்பி கதாபாத்திர விருது கொடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  3. தொல்லைக்காட்சியை திருப்பிய பக்கமெல்லாம்இந்த வாரம் அன்னக்கொடிதான் பறந்துக்கிட்டு இருந்துச்சு. அடுத்த வாரம் சிங்கம் கர்ஜிக்குமோன்னு தெரியலை!!

    ReplyDelete
  4. ஆமா பாஸ் நானும் நாளைய இயக்குனர் பார்க்கணும்னு நெனைப்பேன் பட் முடியல்ல எல்லாம் யூ டுப் ல தான் பாக்குறது

    ReplyDelete
  5. சுவையான அலசல்! நன்றி!

    ReplyDelete
  6. Review of various TV programs have been recorded well. Thank you

    ReplyDelete
  7. அன்னக்கொடி இரண்டாம் பாகம் வேறா..... முதல் பாகமே பார்க்க முடியாதுன்னு எல்லாரும் சொல்றாங்க!

    ம்ம்ம்ம்

    ReplyDelete
  8. அன்னக்கொடி - ஐயோ!

    ReplyDelete
  9. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி

    ReplyDelete
  10. www.sadatamil.blogspot.in

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...