ஒரு டயரி குறிப்பாக தான் பல வலைப்பதிவுகள் துவங்கப்படுகின்றன. பின் தம் ரசனை சார்ந்த விஷயங்கள் பகிர துவங்குகிறோம். இவற்றை தாண்டி நிஜமாகவே வலைப்பதிவு மூலம் ஏதேனும் நல்லது செய்ய முடியுமா ?
அரிதாக ஒரு ஓரத்தில் சில நல்ல விஷயங்களும் நடக்கவே செய்கிறது.
*********
தஞ்சையில் தமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் சென்று விட்டு வந்து அது பற்றி ஒரு பதிவு எழுதினேன். எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகள் தரையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்ற தகவல் இப்பதிவில் எழுதப்பட்டிருந்தது.
இப்பதிவு வெளியான அன்றே மெயிலில் தொடர்பு கொண்டார் திரு பாலகுமார். அமெரிக்க வாழ் தமிழரான இவர் தாங்கள் AIMS என்கிற சேவை நிறுவனம் நடத்துவதாகவும் அதன் மூலம் இப்பள்ளிக்கு உதவ விரும்பவதாகவும் தெரிவித்தார்.
பதிவர் நண்பர் ஆதி மனிதனும் நானும் பின் சேவை இல்லம் பள்ளியை தொடர்பு கொண்டு மாணவிகளுக்கு தேவையான பெஞ்ச்கள் எத்தனை என்றும் அதற்கான கொட்டேஷனும் வாங்கி தர - " எங்கள் நிறுவனத்தின் செயற்குழுவில் பேசி முடிவெடுக்கிறோம் " என்றார் பாலகுமார்
ஒரு சில வாரத்தில் செயற்குழுவின் ஒப்புதலும் கிடைக்க, சில வாரங்கள் முன் AIMS சார்பாக திரு ஜீவா என்பவர் மூலம் ரூபாய் 58,000 காண செக் பள்ளியிடம் நேரடியாக தரப்பட்டது. இந்த காசோலை - பெஞ்ச் செய்து தர உள்ள நிறுவனம் பெயரிலேயே இருந்தது. தற்போது பெஞ்ச்கள் தயாராகி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது
58,000 ரூபாய் என்பது பெரிய அளவு பணம் தான் ! முன் பின் தெரியாத ஒரு நண்பர் வலை பதிவில் வந்த ஒரு செய்தியை பார்த்து விட்டு தங்கள் சேவை நிறுவனம் மூலம் உதவியது மிக நெகிழ்வான அனுபவமாய் இருந்தது
பாலகுமார், ஆதிமனிதன், ஜீவா, பள்ளி நிர்வாகிகள் அசோகன் மற்றும் சூபரிண்டண்டன்ட், என பலரின் முயற்சியால் தான் இது சாத்தியம் ஆனது. எந்த ஒரு நல்ல விஷயமும் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் என உணர இன்னொரு சந்தர்ப்பம் இது
மிக அதிக நன்றி சொல்ல வேண்டியது திரு பாலகுமாருக்கு தான். பதிவு வந்த அன்று இரவு 11 மணிக்கு தொலை பேசியில் பேசியது துவங்கி வேலை முடியும் வரை தொடர்ந்து Follow up செய்து கொண்டே இருந்தார் பாலகுமார் !
மிக மிக நன்றிகள் பாலகுமார் ! தரையில் அமர்ந்து படித்த மாணவிகள் இனி பெஞ்ச்சில் அமர்ந்து எழுதும்போது உங்களை நிச்சயம் மனதார வாழ்த்துவார்கள் !
************
ப்ளாக் மூலம் அறிமுகமாகி உதவிய இன்னொரு நண்பர் குறித்த சம்பவம் இது
எங்கள் வீட்டருகே இருக்கும் ஒரு சிறுவன் மற்றும் சிறுமியின் தந்தை சென்ற வருடம் சிறுநீரக கோளாறில் மரணமடைந்தார். அந்த 2 மாணவர்களுக்கும் நண்பர்கள் இவ்வருடம் ஸ்கூல் பீஸ் கட்டினோம்
அப்போது அவர்கள் படித்த மடிப்பாக்கம் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பள்ளிக்கு அடிக்கடி சென்று வந்தேன். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் - அப்பள்ளியில் படிக்கும் ஏராளமான மான மாணவிகள் மிக ஏழை குடும்பத்தை சார்ந்தவர்கள் என்றும் முடிந்தால் இன்னும் சிலருக்கும் உதவுமாறும் கூறினர்
பிரின்ஸ் வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளி. மற்ற ஸ்கூலை விட இங்கு பீஸ் குறைவு தான். நிறைய ஏழை மாணவர்கள் படிப்பதால் அரசாங்கம் மதியம் இலவச சத்துணவு வழங்குகிறது
இந்த நேரத்தில் தான் நண்பர் ஜாக்கி சேகர் மூலம் எனது தொலை பேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார் திரு. முத்து குமாரசாமி என்கிற நண்பர். வீடுதிரும்பல் பற்றி சற்று பேசியவர், " சில வருடங்களுக்கு முன் புழுதி வாக்கம் பள்ளி பற்றி எழுதியிருந்தீர்களே ! அது மாதிரி மாணவர்களுக்கு ஏதும் உதவி தேவையெனில் சொல்லுங்கள் " என்றார்.
பிரின்ஸ் வெங்கடேஸ்வரா மாணவர்கள் பற்றி சொல்ல உடனே உதவலாமே என்று கூறினார்
இதற்கு முன்பு என்னுடன் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு NV மோகன் என்பவர் நண்பர்கள் உடன் சேர்ந்து ஏழை மாணவர்களுக்கு உதவுவதை அறிந்து தானும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவரை இப்போது தொடர்பு கொண்டு சொல்ல, தனது பங்களிப்பாக ரூ. 10,000 உடன் தந்தார் அவர். முத்து குமாரசாமி மேலும் 15,000 தர, 25,000 ரூபாயில் 7 மாணவர்களுக்கான பீஸ் நானும் முத்து குமாரசாமி அவர்களும் சென்று கட்டி விட்டு வந்தோம்.
உதவி பெற்ற குழந்தைகளில் ஒரு சிலரின் பெற்றோரை நேரில் பார்த்து பேச முடிந்தது. நிச்சயம் அவர்கள் உதவி தேவைப்படும் மனிதர்கள் தான் என்ற நிறைவு வந்தது !
போனில் பேசிய இரண்டே நாளில் 15,000 பணத்துடன் பள்ளிக்கே நேரில் வந்த முத்து குமாரசாமி அவர்களை எப்படி பாராட்டுவது ? நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே !
*******
இத்தகைய செயல்களில் ஈடுபடும்போது - நாம் பிறந்ததுக்கு எதோ அர்த்தம் இருக்கிறது என்று புரிகிறது. நம்மை நாமே சற்று மதிக்கவும், நேசிக்கவும் முடிகிறது !

அன்பின் மோகன் குமார் - செய்திகளை உடனுக்குடன் பகிர்தல் நன்று - தேவைப்படுபவர்களுக்கு உதவும் நல்லுள்ளங்கள் நிறைய உள்ளன. நர்செயல்கள் புரியும் நல்லவர்களூக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்களின் இந்த மகத்தான சேவைக்குப் பாராட்டுக்களும் இன்னும் தொடர வாழ்த்துக்களும் தெரிவிக்கிறேன்
ReplyDeleteneenga Blog எழுதுவதில் சிறிதேனும் பலன் இருக்கா ? anna enaku useful aa iruku
ReplyDeleteஉங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDelete800-க்கும். :)
கீப் கோயிங்
Congratulation Mohan Sir !!!
ReplyDeleteI am regularly reading your Blog for last > 1.5 years...
Very informative and needful,useful posts.
Thanks and Keep Rocking,
Arun Prasath J
prasathj@gmail.com
Honeywell, Madurai.
நாம் பிறந்ததுக்கு எதோ அர்த்தம் இருக்கிறது என்று புரிகிறது. நம்மை நாமே சற்று மதிக்கவும், நேசிக்கவும் முடிகிறது ! - super like
ReplyDelete800-க்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஎந்த ஒரு நல்ல விஷயமும் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் என உணர இன்னொரு சந்தர்ப்பம் இது
ReplyDeleteவாழ்த்துகள்..!
Congratulations for your 800th post. Great to know about AIMS India, USA organization help. I was one of the Founder directors of AIMS India, USA organization. On behalf of AIMS India Boston chapter we have completed educational infrastructure projects for around 30 rural schools between 2003 to 2010. Some of our projects:
ReplyDeletehttp://www.aimsindia.net/index.php?option=com_content&view=article&id=942:school-renovation-in-vettikkadu&catid=191:educational-infrastructure&Itemid=87
http://www.aimsindia.net/index.php?option=com_content&view=article&id=941:pullavarayankudikkadu-school-project&catid=191:educational-infrastructure&Itemid=87
http://www.aimsindia.net/index.php?option=com_content&view=article&id=950:school-renovation-in-sakthinayakkanpalayam&catid=191:educational-infrastructure&Itemid=87
http://www.aimsindia.net/index.php?option=com_content&view=article&id=971:dharmapuri-dist-govt-school-library-project&catid=191:educational-infrastructure&Itemid=87
http://www.aimsindia.net/index.php?option=com_content&view=article&id=936:vidiyel-trust-free-coaching-centres-report-for-the-period-june-2007-to-september-2007&catid=191:educational-infrastructure&Itemid=87
Glad to know that AIMS India folks are carrying on educational support projects. Kudos to the team !!!
-Ravi
Good Job done, Mohan Sir,
ReplyDeleteI appreciate whole heartedly..
800 வது பதிவுகள் எழுதுவது என்பது சாதாராண விஷயம் அல்ல... வாழ்த்துக்கள்... வலைபூ மூலம் நடக்கும் நல்ல விசயங்களுக்கும் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎப்படியோ எழுத்துக்கள் அர்த்தப்படுவதில் ஒரு மகிழ்வுதான்...வாழ்த்துக்கள்
ReplyDeleteபயனுள்ள பதிவுகளால் பயன் கிடைத்துள்ளது.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.
எட்டு நூறுக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
விரைவில் ஆயிரம் தொட எங்கள் ஆசிகள்.
என்றும் அன்புடன்,
துளசியும் கோபாலும்.
சில சுயபுராணங்கள் சில சுய ரசனைகள் தாண்டி
ReplyDeleteஇப்படியும் ஓர் நல்லது நடப்பதில் மகிழ்ச்சியே .
வாழ்த்துக்கள் !
சூப்பர்.800 பதிவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete800க்கு வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteஇல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு?
ReplyDelete>>
உங்க ப்ரொஃபைல் வாசகம் இது. நீங்க பகிர்ந்துக்கிட்டது 2 சம்பவங்கள் மட்டுமே! இனி இதுப்போல நிறைஅய் நல்ல விசயங்கள் தேவைப்படுவோருக்கு சென்று சேரனும். அதன் மூஉலம் நீங்க சரித்திரத்தில் ஒரு இடம் பிடிக்க இந்த சகோதரி கடவுளை பிரார்த்திக்குறேன்.
மிகவும் மகிழ்ச்சி. தங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteCongratulations on 800th post. I read your blog daily and I like your simple and lucid writing style.
ReplyDeleteநல்ல முயற்சிகளுக்கு, கூட்டு முயற்சிக்ளுக்குப் பாராட்டுக்கள். 800வது பதிவுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDelete800 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்! உங்கள் பணி தொடரட்டும்! உங்கள் பதிவின் தலைப்பிலுள்ள கேள்வியையும் பதிவையும் படித்த பிறகு நினைவிற்கு வந்த கவிஞர் கண்ணதாசன் வரிகள் ..
ReplyDeleteவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
பயணம் தொடரட்டும். மனமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDelete2008 ல் ஐந்து பதிவுகளில் தொடங்கி இன்று 800 பதிவுகள்...சலிக்காமல் எழுதி பதிவு மட்டுமல்ல நல்ல பல உதவிகளும் செய்து முன் உதாரணமா இருக்கீங்க.. வாழ்த்துகள்!
ReplyDeleteநல்ல விஷயங்கள் தொடரட்டும்...
ReplyDelete800க்கு வாழ்த்துகள்.
பாராட்டுகள்.. மோகன் குமார்... இன்னும் உங்கள் சேவை தொடரட்டும்.
ReplyDelete800வது பதிவிற்கு வாழ்த்துக்கள்! நல்ல செயல்கள் உங்கள் வலைப்பூ வாசகர்களால் நடந்தேறியமை அறிந்து மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteபயனுள்ள பதிவுகளால் பயன் கிடைத்துள்ளது.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி.800க்கு வாழ்த்துகள்.
சூப்பர் ஜி!
ReplyDelete//இல்லாமற் போகுமோ சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு? // என்ற கேள்விக்கு பதி கிடைத்து விட்டது. நிச்சயம் உங்களுக்கு இடம் இருகிறது
ReplyDeleteபகிர்ந்த உங்களுக்கும் உதவிய பெருள்ளங்களுக்கும் நன்றி.
இன்னொரு தகவல் பிரின்ஸ் வெங்கடேஸ்வரா அரசு உதவி பெறும் பள்ளி அல்ல. சுயநிதிப் பள்ளியே. ஆனால் matric பாட திட்டங்களை பின்பற்றாமல் மற்ற அரசு பள்ளிகளில் பாடத்த் திட்டத்தை பின்பற்றியே தொடங்கப் பட்ட பள்ளி.. தமிழ் வழியிலும் கற்பிக்கப் படுவதால் அதற்கு சத்துணவு வழங்கப் படுகிறது.இப்போது எல்லா பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியே கற்பிக்கப் படவேண்டும் என்ற நடை முறை உள்ளது. பிரின்ஸ்பள்ளியிலும், பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பள்ளியிலும் ஒரே பாடத்திட்டமே.
இந்தப் பள்ளியிலும் ஓரளவிற்கு வசதியானவர்களும் படிக்கக் கூடிய பிள்ளைகள் மட்டுமே இடம் பிடிக்க முடியும்.
உதவி தேவைப்படும்அரசு பள்ளி மாணவர்கள் பெற்றோர்களால் சரியாக கவனிக்கப் படாத மாணவர்கள் செம்மஞ்சேரி ,கண்ணகி நகர் பகுதிகளில் அதிகமாக உள்ளனர்.
மற்ற Matric பள்ளிகளை விட prince இல் கட்டணம் குறைவுதான்
எண்ணூறுக்கு வாழ்த்துக்கள் ஆயிரத்தை தாண்டி பயணம் தொடரட்டும்.
Deleteநல்ல விஷயம் நடக்கிறது தெரிந்து மகிழ்ச்சி மோகன். தொடரட்டும் உங்கள் நற்பணிகள்....
ReplyDelete800-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள். மேலும் பல பதிவுகள் தொடரட்டும்!
Very heartening to read this post. My congratulations to you and admiration to those who made the financial contribution in helping the needy - with no expectation in return. - R. Jagannathan
ReplyDeleteNabare Mohan, Please let me know if you have some more plan
ReplyDeleteமிக மகிழ்ச்சி சந்தான கிருஷ்ணன் உங்கள் மெயில் ஐ டி தெரிய வில்லை எனக்கு snehamohankumar@yahoo.co.in என்கிற மெயிலுக்கு உங்கள் மெயில் ஐ. டி தெரிவியுங்கள்; இன்னொரு சந்தர்ப்பத்தில் யாருக்கும் உதவி தேவையெனில் நிச்சயம் தெரிவிக்கிறேன்; முடிந்தால் உதவுங்கள் ! நன்றி.
DeleteMy email id is makesh487@gmail.com, c_santhana_krishnan@yahoo.co.in.
DeleteNandri,
Santhana krishanan
Very impressive. Keep up the good work!
ReplyDeleteபதிவு எழுதி நல்லதும் செய்ய முடியும் என்று காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனாலும், எப்படிங்க இவ்வளவு பதிவுகள் எழுதறீங்க? வருஷத்துக்கு நாலு எழுதறத்துக்கே நாக்கு தள்ளுது!
ReplyDeleteப்ளாக் எழுதுவது நல்லதே . புத்தகம் எழுதுவது போல.
ReplyDeleteநல்ல கருத்துகள் இருக்க மக்கள் தேடி வருவார். பல நற்கருத்துகள் பல புத்தகங்களில் இருக்க தேடி செல்வோருக்கு கிடைக்கும்.
ஆக எதை எழுதுவது என்பதே பிரச்சினை.
மக்கள் இன்னும் மூடத் தனத்திலே இருக்க எழுதுவது சரியல்ல
மனிதனால் இங்குள்ள எல்லா அவலங்களையும் சரி செய்ய முடியும் அறிவின் திறன் கொண்டு என்பதாக இருக்க வேண்டும்
இந்த காலத்திலும் மழை வர யாஹமும் ஹோமமும் நடத்தும் செயல்களை கண்டிக்க வேண்டும்.இன்னொரு மனிதனுக்கு அநீதி நடந்தால் அதை எதிர்த்து எழுத வேண்டும்.
வாழ்த்துகள்
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உண்மையில் மிக மகிழ்ச்சியாக உள்ளது
ReplyDeleteரவிச்சந்திரன் சோமு : AIMS பற்றி தங்கள் அனுபவம் எழுதியமைக்கு மிக நன்றி.
முரளி சார் : பிரின்ஸ் வெங்கடேஸ்வராவிற்கு சில அரசு உதவிகள் தரப்படுவதாக ஆசிரியைகள் சொன்னார்கள் பீஸ் பொறுத்தவரை - மற்ற தனியார் பள்ளிகளை விட இங்கு 50 % க்கும் குறைவு !
CONGRATS MOHAN FOR YOUR 800 POST! WISH YOU ALL THE BEST, AND KEEP IT UP.
ReplyDelete800 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், மோகன்!
ReplyDeleteஉங்கள் ப்ளாக் மூலம் நடைபெற்றுவரும் சமூக சேவைகளுக்கும் வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் சமூக மாற்றங்களுக்கு உதவுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
மேலும் தொடர வாழ்த்துக்கள்!
இன்னும் பல நூறு பதிவுகள் எழுதி நல்லது செய்ய வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல செயல்களுக்கு வித்திட்ட உங்களின் சேவை இன்னும் தொடர் வாழ்த்துக்கள் .
ReplyDeleteதங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நன்பரே
ReplyDeleteவீடு திரும்பல் மூலம் பல்வேறு நலப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவது மகிழ்ச்சியளிக்கும் செய்தியே!
ReplyDelete800 வாழ்த்துகள் சார்!
பிளாக் எழுதுவதால் நல்லது நடக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டியதில்லை. அதில் முக்கியமான ஒன்று நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். எனக்கும் அப்படி இரண்டு நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள். ஊக்கமளிப்பதாகவுள்ளது.
ReplyDeleteஉங்கள் தளத்தின் புள்ளிவிபரங்கள்
Title : வீடு திரும்பல்
Description :
Author : மோகன் குமார்
Total Posts : 801
Total Comments: 20580
First Post on : 2008-03-11
Lastest Post on: 2013-07-13
First comment on : 2008-06-07
Lastest comment on: 2013-07-13
Most Commented Post: எங்க வீட்டு தோட்டம்- பிறந்தநாள் பதிவு +படங்கள் (125)
Age : 5 year 4 month 2 day
பயனுள்ள பதிவு நல்ல விளைவை ஏற்படுத்தும், தொடரட்டும் உங்கள் நல்ல முயற்சிகள்
ReplyDeleteவாழ்த்துகள் திரு மோகன் குமார்.
ReplyDeleteஉங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை.
எனது பக்கத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பதிவு எழுதுவதை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு உங்கள் ப்திவு ஒரு முன்னுதாரணம்.
நன்றி.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteCongrats for your 800!... all your thanks goes to www.aimsindia.net team.
ReplyDelete