Tuesday, July 23, 2013

தட்டத்தின் மறயத்து & சுஜாதாவின் ஆஸ்டின் இல்லம்

வார இறுதியில் பார்த்த ஒரு படமும் படித்த ஒரு புத்தகமும் பற்றி
*********
தட்டத்தின் மறயத்து

காதலுக்கு மரியாதை போல ஒரு காதல் கதை. காதல் மலர்வது நாயர் பையனுக்கும் - முஸ்லீம் பெண்ணுக்கும். பெண் வீட்டில் எதிர்ப்பு; பின் கிளைமாக்சில் - காதலர்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து சேர அனுமதிப்பது தான் இந்த மலையாள படத்தின் கதை.

ஹீரோவாக - நேரம் பட ஹீரோ நிவின் . படம் முழுக்க முழுக்க இவரது தோளில் தான் பயணிக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் இன்னொரு விஜய் சேதுபதி போல பிரகாசிக்க கூடியவர்



ஹீரோயின் - இஷா தல்வார். அட நம்ம தில்லு முல்லுவில் நடித்தவர் தாங்க ! ஆனா இங்கு செம அழகு மற்றும் நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். தில்லு முல்லுவில் மைதா மாவு மாதிரி இருந்தவரை - இங்கு பார்க்க காத்ரீனா கைப் மாதிரி அவ்ளோ அழகு ! கதை இவரையே சுற்றி சென்றாலும் - இவர் வருகிற காட்சிகள் குறைவு தான் . வெரி கியூட்

துவக்க காட்சியில் போலீசில் மாட்டி அடி வாங்குகிறார் ஹீரோ. மனோஜ் கே ஜெயன் உள்ளிட்ட போலிஸ் காரர்கள் இவரது காதல் கதையை கும்பலாய் உட்கார்ந்து ப்ளாஷ் பேக் கேட்க, பின் போலிசே மனம் மாறி இவர் காதலுக்கு உதவுகிறார்கள். சினிமாட்டிக் என்பதை மறந்து விட்டால் ரசிக்கலாம் (நிஜத்தில் எந்த போலிஸ் இப்படி பெரிய மனிதர் வீட்டு பெண்ணை கலியாணம் செய்து கொள்ள உதவுமோ?)

நிற்க. 20 வயதில் காதல் உன்னதமான உணர்வாய் தோன்றா விட்டால் ஆச்சரியம். 40 க்கு மேல் அப்படி தோன்றினால் ஆச்சரியம்.



காதல் கதைகள் இப்போதெல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை

நீங்கள் எந்த வயதை சேர்ந்தவர் என்பதை பொறுத்து இப்படம் உங்களுக்கு பிடிக்கிற அளவு மாறும் !

ஒரு முறை பார்க்க தகுந்த படம் !
**********
சுஜாதாவின் ஆஸ்டின் இல்லம் 

ஆஸ்டின் இல்லம் சுஜாதாவின் குறுநாவல்களில் ஒன்று. 9 அத்தியாயங்கள் மட்டுமே !

ஆஸ்டின் இல்லம் - ஒரு பழமையான கூட்டு குடும்பம் இந்த இல்லத்தில் ஐந்தாறு குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த குடும்பத்தை சார்ந்த நிகில் என்கிற இளைஞன் அமேரிக்கா செல்கிறான். அவனது தம்பி நந்துவை சுற்றி தான் கதை சுழல்கிறது

வெளிநாடு செல்லும் நிகிலுக்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த இல்லத்தை முதலில் வாங்கிய ஆஸ்டின் பெரியப்பா உள்ளிட்ட எல்லா சொந்த காரர்களும் அங்கிருக்க - நிகிலின் தம்பி நந்து அப்போது நிற்க முடியாமல் சரிகிறான் மருத்துவரிடம் அழைத்து சென்று எல்லா சோதனைகளும் செய்த பின், அவனுக்கு இருப்பது குணப்படுத்த முடியாத மஸ்குலர் டைஸ்ட்ராபி நோய் எனவும் நந்து அதிகபட்சம் இருக்க போவது ஒரு சில வருடங்கள் மட்டுமே என்றும் சொல்கிறார்கள்

எதனால் இந்த நோய் வந்தது என ஆராய முற்பட ஆஸ்டின் இல்லம் வாங்கப்பட்டதே தவறான - வழியில் ஒருவரை ஏமாற்றி தான் என தெரிய வருகிறது. இதனால் ஆஸ்டின் இல்லத்தை விட்டு வெளியே செல்ல சில குடும்பங்கள் முடிவெடுக்கின்றன.

ஆஸ்டின் பெரியப்பா அனைவரையும் அழைத்து தான் யாரையும் ஏமாற்றி இந்த சொத்தை வாங்க வில்லை என்று கூறி விட்டு மறுநாள் தூக்க மாத்திரை சாப்பிட்டு செத்து போகிறார்

கதையின் கடைசி பகுதியில் நந்துவை  டாக்டரிடம் செக் அப்பிற்கு செல்லும்போது அவர் " ஆஸ்டின் பெரியப்பா செய்த பாவத்தால் வந்த நோய் அல்ல இது; பல பரம்பரையாக நீங்கள் சொந்தத்துக்குள் திருமணம் செய்து கொண்டதால் தான் வந்தது " என்று - சொல்ல இறக்க போகும் நந்து எழுதிய கவிதையுடன் கதை நிறைவடைகிறது

சுஜாதாவின் டச் தெரியும் சில வரிகள் :

எல்லா பெரிய சொத்துக்களுக்கும் பின்னால் ஒரு குற்றம் இருந்தே தீரும்
*********
மற்றொரு கார் வந்து குதூகலமான உறவினர்களை இறைக்க, அவர்கள் தத்தம் சரிகை பட்டு புடவைகள் கசங்கி ஆங்காங்கே சிதறினார்கள் 
*********
முகுந்தனுக்கு கண்ணை கட்டி அண்ணா சாலையில் விட்டது போலிருந்தது டாக்டர்கள் இருவரும் பேசி கொண்டதில் மனிதாபிமானமோ, இரக்கமோ, கருணையோ இல்லாமல் ஒரு பரிசோதனை பொருளை போல நந்துவை பற்றி பேசினார்கள்
*********
கடவுளாவது ஒண்ணாவது எல்லாம் தற்செயல் கடவுளுக்கு கவனிக்க நேரம் இல்லை. சிவாங்கிறவன் விஸ்கில சோடா ஊத்துறானா இல்லை மூத்திரத்தை ஊத்துறானான்னு பார்த்துகிட்டு இருந்தா அவனை போல முட்டாள் யாரும் இருக்க முடியாது "
*********
ஸ்குலர் டைஸ்ட்ராபி என்கிற நோய் பற்றியும் - அது வந்தால் என்னென்ன டெஸ்ட் எடுப்பார்கள், உடலுக்கு என்ன ஆகும், வெளிநாட்டில் உள்ள சிகிச்சை என விரிவாக ஆனால் எளிமையாக சொல்லி போவது சுஜாதாவால் மட்டும் தான் முடியும்.

ஆஸ்டின் இல்லம் - மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் டிபிகல் சுஜாதா குறுநாவல் !

4 comments:

  1. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. கடவுளுக்கு நேரம் இல்லை என்பதையும் அறிந்து, நம்மில் ஏதோ ஒருவன் கவனித்து, நான் அந்த நேரத்தை தருகிறேன் என்று முன் வருகிறானே அது தான் மனித நேயம்.

    நாம் அல்லல் படுவது எல்லாமே கடவுளால் என்று நினைப்பதும் !!!
    பாவம் கடவுள் !!

    செய்யாத குற்றத்திற்கு ஆண்டவன் மீது எப்.ஐ. ஆர்.?
    சுப்பு தாத்தா.
    subbuthatha72.blogspot.com

    ReplyDelete
  3. இந்த பதிவில் புத்தகத்தை பத்தி மட்டும் நான் எடுத்துக்குறேன்.புத்தகம் படிக்கும் ஆவலை உங்க விமர்சனம் தூண்டுது.

    ReplyDelete
  4. நன்றி சுரேஷ்

    வாங்க சுப்பு தாத்தா மிக்க நன்றி

    ராஜி : ரைட்டு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...