பேச்சிலராக திருவல்லிகேனியில் இருந்த போது ரத்னா கபேயில் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அப்போது சற்று செலவு சுருக்கமாக செய்யவேண்டும் என்பதற்காக அவர்களின் ஸ்பெஷல் உணவான இட்லி சாம்பார் ரெகுலராய் சாப்பிடுவது வழக்கம்.
ரொம்ப வருடங்கள் கழித்து மீண்டும் ரத்னா கபே.. இம்முறை - குடும்பத்துடன்.
காலத்திற்கு தகுந்தபடி இவர்களும் மாறுகிறார்கள். உள்ளே நுழைந்து அமர்ந்ததுமே பல காம்போ பேக்குகள் நம் கருத்தை கவர்கின்றன. குறிப்பாக 5 வித தோசை - மசாலா தோசை, பொடி தோசை , ஆனியன் தோசை உள்ளிட்ட 5 வகைகள் ஒரே ஆர்டரில் தருகிறார்கள். செம சுவாரஸ்யம் !
நம்ம ஆர்டருக்கு வருவோம்.
நாங்கள் ஆர்டர் செய்தது :
சாம்பார் இட்லி
கைமா இட்லி
பரோட்டா (ஹீ ஹீ )
பூரி
பன்னீர் தோசை
***
ரத்னா கபே வந்துட்டு சாம்பார் இட்லி சாப்பிடாமல் போவதா? இரண்டு இட்லிகளை சாம்பாரில் நன்கு முழுக வைத்து எடுத்து வந்தார்கள். சுட சுட சுவையான சாம்பார்.. அடடா ! சாம்பார் இட்லி ரத்னா கபே போல் எங்கும் வராதுங்க சார் !
கைமா இட்லி என்பது வேறொன்றும் இல்லை. குட்டி குட்டி இட்லிகளை நன்கு பிரை செய்து தருகிறார்கள். மொறு மொறு வென crispy - ஆக இருக்கு.
பரோட்டா சிறிய அளவே ஆயினும் முறுகலாக இருந்தது & குருமா மற்ற இடங்களை விட வித்தியாச சுவை. இரண்டுமே அசத்தல்.
பன்னீர் தோசை - மசால் தோசை டைப் தான். மசாலாவிற்கு பதில் உள்ளே பன்னீர் இருக்கும். ஒவ்வொரு சட்னியும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டது
அனைத்து உணவும் முடித்ததும் ஒரு காபி வாங்கி சாப்பிட்டோம். அடடா .. கும்பகோணம், தஞ்சாவூர் காபி போல அவ்வளவு சுவை !
மேலே சொன்ன அனைத்தும் மிகுந்த சுவையுடன் சாப்பிட்டும் பில் - 250 தான் வந்தது !( Non ஏ. சி )
ரத்னா கபே - திருவல்லி கேணி, போரூர், வேளச்சேரி என 4 இடங்களில் இருக்கு. அவசியம் ஒரு முறை சென்று பாருங்கள் !

திருவல்லிகேணியில் உள்ள அளவு அதே சுவையுடன் இட்லி சாம்பார் இருக்கிறதா? நான் அடுத்த மாதம் இந்தியா வரும் போது ரத்னா கபே இட்லி சாம்பார் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். வேளாச்சேரியில் உள்ள உணவகத்தில் அதே சுவையுடன் இருந்தால், அங்கே சாப்பிட்டு விடுவேன்.
ReplyDeleteஅது போல் மிக சிறந்த பரோட்டா (veg) குருமா சென்னையில் எந்த உணவகத்தில் கிடைக்கும்?
நிச்சயம் இங்கு வெஜ் பரோட்டா குருமா அட்டகாசமாய் இருந்தது இங்கேயே நீங்கள் சாப்பிடலாம் !
DeletePorur branch is not good. Kindly avoid it.
ReplyDeletePorur branch is not good. Kindly avoid it.
ReplyDeleteநன்றி ஜகன்னாத்
Delete/ரத்னா கபே - திருவல்லி கேணி, போரூர், வேளச்சேரி என 4 இடங்களில் இருக்கு.//
ReplyDeleteதிருவல்லிக்கேணிய பிரிச்சி ரண்டா போட்டா ஆச்சா. ஒத்துக்க முடியாது. நாலாவது இடம் எங்கே சொல்லுங்க:))
ஆஹா ஆசானே ! அந்த நான்காவது இடம் தி. நகர் :)
Deleteசுவையூறும் தகவல் பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteரத்னா கஃபே - தி.நகர் கிளைக்குச் சென்றதுண்டு....
ReplyDeleteRATNA CAFE KUWAIT BRANCH IS EXCELLENT. NAUSAHD ALI - KUWAIT
ReplyDeleteகோயமுத்தூர் அன்னபூர்ணா இட்லி சாம்பாரை ஒருக்கா சாப்டுப் பாருங்க
ReplyDeleteபாண்டிச்சேரி இந்தியன் காஃபி ஹவுஸ் இட்லி சாம்பார் / வடை சாம்பார் சாப்ட்டு பாருங்க
ReplyDelete