Friday, July 26, 2013

"யாரை பிடிக்கும்?" மாறும் விதம்

சிறு வயது முதல் ஒவ்வோர் காலத்திலும் எந்த உறவு முக்கியம் என்பது நம்மை அறியாமலே மாறி வருகிறது. இந்த சுவாரசிய மாறுதல் எப்படி நடந்து வந்துள்ளது என்று யோசித்தேன். இது எனக்கு மட்டுமல்ல இதை வாசிக்கும் பலருக்கும்  (சிறு மாறுதல்களுடன்) பொருந்தும் என்றே தோன்றுகிறது.



************
பிறந்தவுடன் முதலில் தாயை தான் பிடித்தது. உணவு தரும் அன்னை  .. அக்கறை காட்டுவதிலும் அவரைப் போல் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இது முதல் சில வருடங்களுக்கு மட்டுமே.

பின் அப்பாவை பிடிக்க ஆரம்பித்தது. வெளியே கூட்டி போவார்.கேட்டதை வாங்கி தருவார்.

3 to 5 வயது வரை அப்பா செல்லம் என்றால் அதன் பின் நண்பர்கள் முக்கியமாகி விடுகிறார்கள். Same age group.. ஒரே மாதிரி விளையாட, யோசிக்க, 5 வயது முதலே நட்பு கோலோச்ச ஆரம்பித்து விடுகிறது.

பத்து to பன்னிரண்டு வயதில் உள்ள நட்பு கொஞ்சம் காமெடி ஆக இருக்கும். இந்த வயதில், தான் போட்ட டிரஸ் தான் பெஸ்ட்; தான் பார்த்த சினிமா தான் சூப்பர் என ஆள் ஆளுக்கு தன் பெருமை பேசி பீற்றி கொள்வர்.

எனது பத்து வய்தில் நண்பன் நந்துவும் நானும் இதே போல் தான் இருந்தோம். பெரும்பாலும் சேர்ந்து தான் சினிமா பாப்போம். சில நேரம் ஒருவர் வீட்டில் permission கிடைக்காமல், மற்றொருவர்  மட்டும் சினிமா பார்க்க நேர்ந்தால், தான் பார்த்தது ஒரு சிறந்த சினிமா என்று பீலா விடுவோம். படத்து இயக்குனர் கூட தயாரிப்பாளர் இடம் அந்த அளவு கதையை marketing பண்ணியிருக்க மாட்டார். அடுத்த சில நாட்கள் பார்க்கும் போதெல்லாம் படம் பற்றி சொல்லி வெறுப்பேற்றுவோம்.

எனது பெண் இன்று இந்த பருவத்தில் உள்ளாள். கிட்டதிட்ட அதே கதை தொடர்கிறது. எங்கள் காலத்தில் சினிமா. தற்போது அவளும், தோழிகளும் பீலா விடுவது, தான் வாங்கிய பொருள் அல்லது சென்று வந்த இடம்...

அப்புறம் 15 வயது வாக்கில் opposite sex தான் முக்கியம் என்று ஆகி விடுகிறது. சிலர் கவிதை எழுத ஆரம்பிக்கின்றனர். சும்மா போக வேண்டியது. பார்க்க வேண்டியது. திரும்ப வந்து விட வேண்டியது. அவ்வளவு தான். காதலை நேரில் சொல்லாமல் போக காரணம் "ஏற்று கொள்ளா விட்டால் என்ன செய்வது ?" என்ற பயம் தான். Atleast எங்க generation-ல் பெரும்பாலும் அப்படி தான் இருந்தது. இதயம் படம் எடுத்த போது எங்க கல்லூரியில் நிறைய பேர் இது என் கதை என சொல்லி திரிந்தனர்.

இதில் அடுத்த காமெடி குறிப்பிட்ட காலம் ஒரு பெண் பின் சுற்றி அது set ஆகாது என புரிந்ததும் அடுத்த பெண்ணை பார்க்க ஆரம்பிப்பது தான். எந்த point -ல் முதல் பெண்ணை விட்டு அடுத்த பெண்ணுக்கு போகிறோம் என்பது, தினமும் எந்த கணம் தூங்க ஆரம்பிக்கிறோம் என உணர முடியாத மாதிரி ஒரு புதிர் தான்.

காதலுக்கு சிறந்த மருந்து இன்னொரு காதலே. வசூல் ராஜா பாட்டில் வருவது போல் " ஒரே காதல் ஊரில் இல்லையடா".

காதல் காலங்கள் (Total period) ஒவ்வொருவருக்கும் ஆளை பொறுத்து மாறுகிறது. வாழ்க்கையில் settle ஆகணும் என்ற நினைப்பு சற்று சீக்கிரம் வந்து படிப்பு போன்ற உருப்படி ஆன சமாச்சாரங்களின் பின்னால் சீக்கிரமே வருபவர்கள் கொஞ்சம் பிழைச்சிகுறாங்க.

அப்புறம் கல்யாணம் என்ற ஒன்று நடக்கிறது.. அடுத்த சில மாதங்களுக்கு (கவனிக்க... மாதங்களுக்கு) மனைவி தான் முக்கியம் என்ற நிலை.. புது சந்தோஷம்.. வாழ்க்கை இனிக்கிறது. பின் குழந்தை பிறந்ததும் கதையே மாறி போகிறது.

அந்த குழந்தை வளர்ந்து, படித்து வேலை/ கல்யாணம் என ஆகும் வரை குழந்தையே முக்கியம் என பல ஆண்டுகள் திரிகிறோம்...

பையன்/ பெண் திருமணம் ஆகி போன பின் ஒரு வெறுமை வருகிறது. மறுபடி மனைவி தான் முக்கியம் என எண்ண ஆரம்பிக்கின்றனர்.

பேரன்/ பேத்தி வந்ததும் அது ஒரு தனி சுகம். தன் குழந்தை வளர்க்கும் போது இருந்த டென்ஷன் இன்றி பேரன்/ பேத்தி வளர்ப்பை ஜாலி ஆக எதிர் கொள்கின்றனர் தாத்தா - பாட்டிகள்.

கடைசி காலத்தில் முழுக்க முழுக்க மனைவி மீது தான் dependent ஆக உள்ளனர் பல ஆண்கள்.

யோசித்து பார்த்தால், மிக அதிக காலம் (From 25 years to 70 years) கூட வரும் உறவு மனைவி மட்டும் தான்.

அம்மா நம்மை முதல் 20 அல்லது 25 வருடம் பார்த்து கொண்டார் என்றால் மனைவி 25 முதல் 75 வயது வரை நம்மை பார்த்து கொள்கிறார். நல்லது, கெட்டது அனைத்திலும் கூடவே இருக்கிறார்.

" The most important relationship for every one is the spouse" - இது திருமணம் முடிந்த உடன் நான் வேலை பார்த்த அலாக்ரிட்டி என்ற நிறுவனத்தில் சொல்லி கொடுத்த விஷயம் !

*********
டிஸ்கி : பதிவெழுத வந்த புதிதில் எழுதியது (மீள் பதிவு)

14 comments:

  1. Me the first! நல்ல எதார்த்தமான பதிவு. அனேகமாக எல்லோருக்கும் இது பொருந்தும் என நினைகிறேன். அதிலும் கடைசியில் //கடைசி காலத்தில் முழுக்க முழுக்க மனைவி மீது தான் dependent ஆக உள்ளனர் பல ஆண்கள். // என்ற வரிகள் நிச்சயமாக உண்மை என்றே நானும் என்னுகிறேன்.

    ReplyDelete
  2. Anonymous5:14:00 PM

    Hai

    I read most of the articles posted in your blogs

    Nicely written- simple and honest- most of us would also associate with what you have said.

    Just like yaarai Piddikum- maarum vihdam

    Edhu Pidikum – maarikonde irukum. (like vegetables fruits sweets snacks things books

    people job places the list is endless)

    If there was no change there would be no butterflies

    ReplyDelete
  3. Anonymous5:18:00 PM

    Dear Mohan,

    I just now read yr words on how "who is important to you" changes over a period of time in eveyone's life and really it was very appreciable and it suits almost everyone as you said.

    Life is after all a compromise of give and take and all the best for a happy life to you and yr fly.

    ReplyDelete
  4. நன்றி ஆதி மனிதன். ஆம்... ஆண்கள் இறுதி காலத்தில் பெண்கள் மேல் தான் மிக சார்ந்து வாழ்கின்றனர். இன்னொன்று கவனித்துள்ளீர்களா? கணவன் இறந்த பின் மனைவி நீண்ட நாள் வாழ்வதை அதிகம் பார்க்கிறோம். ஆனால் மனைவி இறந்த பின் கணவர்கள் நீண்ட காலம் வாழ்வதில்லை.

    Anonymous posts இரண்டும் எனக்கு மின் அஞ்சலில் வந்தவை. அவர்கள் privacy கருதி பெயர் போடாமல் பிரசுரம் செய்துள்ளேன். அவர்களுக்கும் என் நன்றிகள்.

    ReplyDelete
  5. வாழ்க்கையை பற்றிய மிக நல்ல ஆழமான சிந்தனை.

    நல்லா இருக்குங்க.
    கலக்குங்க

    தத்துவம் எப்பவுமே எனக்கு இனிக்கும்.

    நம் விருப்ப லிஸ்டில் முதல் என்பது மாறும். அப்பா இஷ்டம் ஒட்டி கொள்ளும் போது, அம்மா இஷ்டம் வெளி செல்வது இல்லை. கொஞ்சம் ஓரம் கட்டி நிற்கும். ஆரம்பத்தில் அம்மா, அப்புறம் சும்மா என்றால் எதுக்கு வம்பா.

    ReplyDelete
  6. //படுக்காளி said...
    வாழ்க்கையை பற்றிய மிக நல்ல ஆழமான சிந்தனை.

    நல்லா இருக்குங்க.
    கலக்குங்க

    தத்துவம் எப்பவுமே எனக்கு இனிக்கும்.

    நம் விருப்ப லிஸ்டில் முதல் என்பது மாறும். அப்பா இஷ்டம் ஒட்டி கொள்ளும் போது, அம்மா இஷ்டம் வெளி செல்வது இல்லை. கொஞ்சம் ஓரம் கட்டி நிற்கும். ஆரம்பத்தில் அம்மா, அப்புறம் சும்மா என்றால் எதுக்கு வம்பா.//

    உங்க‌ள் ப‌திவும், ப‌டுக்காளியின் ப‌திலும் ப‌ட்டையை கிள‌ப்பும் ர‌க‌ம்... அதிலும் ப‌டுக்காளியின் ப‌திலில் அந்த‌ க‌டைசி வ‌ரி....ம்ம்ம்... ம‌னுஷ‌ர் பின்றார்...

    ReplyDelete
  7. படுக்காளி,

    திடிரென வந்தீர்கள், சில பல பின்னுட்டம் போட்டு அசதி விட்டீர்கள். தொடர்ந்து இப்படியே அசத்துங்கள். நானும் கொஞ்சம் சந்தோஷப்பட்டு கொள்கிறேன்.

    கோபி,

    வாங்க. வாங்க. நீங்க வந்ததில் ரொம்ப சந்தோசம், புயல் மாதிரி கமெண்டுகளில் பின்னுற ஆளு நீங்க. கமெண்டுகளில் மட்டுமா? தங்கள் blog -ம் கூட ஒரே வருஷத்துக்குள் நல்லா கொண்டு வந்துடீங்க.

    I expect a lot of inputs from both of you in future.

    ReplyDelete
  8. நல்லா எழுதியிருக்கீங்கp

    ReplyDelete
  9. //பேரன்/ பேத்தி வந்ததும் அது ஒரு தனி சுகம். தன் குழந்தை வளர்க்கும் போது இருந்த டென்ஷன் இன்றி பேரன்/ பேத்தி வளர்ப்பை ஜாலி ஆக எதிர் கொள்கின்றனர் தாத்தா - பாட்டிகள்//

    நூறு சதவிகித உண்மை. அருமையான பதிவு.

    ரேகா ராகவன்.

    ReplyDelete
  10. மனைவி இறந்தப் பின் வாழும் கணவனின் நிலை
    வயதான காலத்தில் ரொம்பவே சிரமம்தான். கவனிக்க ஆள் இன்றி கவலையிலேயே இருப்பார்கள்.

    ReplyDelete
  11. Anonymous8:58:00 AM

    யதார்த்தமான பதிவு. நல்ல வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டால் அவரே வாழ்நாளின் பெரும்பகுதியை பங்கெடுக்கின்றார். பெற்றோர் நம்மை வளர்க்கும் வரை, பிள்ளைகள் நாம் வளர்க்கும் வரை, ஆனால் கணவன்/மனைவியோ இறக்கும் வரை.. !

    ReplyDelete
  12. மீள் பதிவானாலும் சிந்திக்க வேண்டிய பதிவுதான்.

    ReplyDelete
  13. ஆண்கள் ஒரு தந்தையாக இருந்தபோது தங்களுடைய பிள்ளைகளுக்கு செய்ய முடியாததை செய்ய விரும்புவது பேரன் பேத்திகளுக்குத்தான். நீங்கள் கூறியதுபோலவே தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கும் காலத்தில் அவர்கள் தங்களுடைய அலுவலக வேலைகளில், அங்குள்ள பொறுப்புகளில் மூழ்கிப்போய்விடுகின்றனர். என்னைப்போன்று அடிக்கடி மாற்றல்களுக்குள்ளாகிறவர்கள் தங்களுடைய குடும்பத்தை விட்டே பிரிந்திருக்க வேண்டியுள்ளது. அந்த இழப்பை ஈடுகட்ட இப்போது பேரக் குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க விரும்புகின்றனர். ஆனால் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் காணோம் என்கிற கதைதான். தாத்தா பாட்டிக்கு நேரம் கைநிறைய... ஆனால் பேரக் குழந்தைகளுக்கு? அன்று நமக்கிருந்த அதே நேரமின்மைதான்.

    என்ன செய்ய... சக்கர சுழற்சிதான்..

    இறுதிவரை கூடவே வருவது மனைவி மட்டுந்தான் என்பது எத்தனை சரியான உண்மை! வயதான காலத்தில் பல ஆண்களும் தங்களுடைய மனைவி மீதே முழுவதுமாக சார்ந்திருக்கின்றனர் என்பதும் உண்மை. எனக்கு தெரிந்து ஒரு குடும்பத்தில் 75 வயதில் மனைவி திடீரென மரித்துவிட அடுத்த மாதமே கணவரும் மாரடைப்பால் இறந்துபோனார். உடல்நலக் குறைவை விட மனைவியை இழந்து தனிமரமாய் நின்ற சோகம்தான் அவரை கொன்றது எனலாம்.

    இன்றுதான் முதன் முறையாக உங்களுடைய தளத்திற்கு வருகிறேன். நீங்கள் பதிவுலகத்திற்கு வந்த புதிதில் எழுதிய கட்டுரை என்கிறீர்கள். ஆனால் கட்டுரையை படிக்குமோது அது தெரியவில்லை. அத்தனை சரளம்! உங்களுடைய சரளமான நடை பல இடங்களில் உணர்ச்சிவசப்பட வைத்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...