Friday, July 5, 2013

இளவரசனுக்கு அஞ்சலி...

நேற்று மாலையிலிருந்து மனதே சரியில்லை..இளவரசன் மரணம் மனதை என்னவோ செய்கிறது. இரவு நிம்மதியான உறக்கம் இல்லை.. முன் பின் அறியாத ஒரு இளைஞனுக்காக இவ்வளவு வருந்தி ரொம்ப காலம் ஆகிறது.

கொலையா தற்கொலையா என்பதை போலிஸ் கண்டறிந்து சொல்லட்டும் அது தற்கொலையே ஆயினும், இந்த நிலைக்கு தள்ளியது யார் ??

"தீண்டாமை - பெருங்குற்றம் பாவ செயல்" என பள்ளி பாட புத்தகங்களில் படிக்கிறார்கள். ஆனால் நிஜம் கொடூரமாய் மிரட்டுகிறது. தமிழனாய் வாழ வெட்கப்படும் தருணங்களில் இதுவும் ஒன்று ....











http://www.frontline.in/social-issues/stoking-caste-flames/article4705528.ece








http://www.thehindu.com/news/national/tamil-nadu/dalit-boy-ilavarasan-found-dead-near-railway-tracks/article4881007.ece

                 Grieving relatives of Ilavarasan surround his body near the railway track in Dharmapuri on Thursday. Photo:N.Bashkaran


இளவரசனுக்கு அஞ்சலி:((((((((((((

15 comments:

  1. தமிழனாய் வாழ வெட்கப்படும் தருணங்களில் இதுவும் ஒன்று .... //உண்மைதான் நானும் வருந்துகிறேன்

    ReplyDelete
  2. கனவுகளைச்சுமந்து காதலித்துச் சாகிறார்கள்.

    ReplyDelete
  3. தான் வாழும் சமுதாயத்தைப் புரிந்து கொள்ளாததால் வந்த வினை.

    ReplyDelete
  4. எனக்கும் இந்த விசயத்தை முகநூலில் படிச்சதிலிருந்து மனசை பிசையுது. இனி திவ்யாவின் நிலை?! அந்த பொண்ணை நல்ல முறையில் கண்காணிக்கனும். இல்லாட்டி இன்னொரு உயிரை இழக்க வேண்டி வரும்.

    ReplyDelete
  5. கொடுமை! ஆழ்ந்த அஞ்சலிகள்!

    ReplyDelete
  6. ஆமாம் நேற்றிலிருந்து இந்த பையனின் முகமே ஞாபகமாய் உள்ளது.என் மகன்களின் வயதில் இருக்கும் இளவரசனை பெற்றவர்களுக்கு யாரு ஆறுதல் கூறுவது.

    ReplyDelete
  7. மிகுந்த கவலைதருகின்றது.

    ReplyDelete
  8. இந்த இளைஞனின் மரணத்துக்கு வருத்தபடுவது நியாமே. ஆனால் தனது பெண்ணை இருபது வயது வளர்த்து படிக்க வைத்து பிறகு அவருக்கு சொல்லாமல் அந்த பெண்ணை ஒரு மைனர் சட்ட விரோதமாக போலீஸ் நிலையத்திலே திருமணம் செய்து கொண்டதும் , அந்த அவமானத்தால் அவள் தகப்பன் தன்னை மாய்த்து கொண்டது பற்றி ஏன் எல்லோரும் மறுந்து விட்டீர். பெண்ணை பெற்றவர்கள் தான் அந்த கஷ்டத்தை உணர்வார்கள். நான் காதலையோ சாதியோ மனதில் வைத்து எழுதவில்லை. குழந்தைகள் தாய் தந்தையின் உணர்வுக்களுக்கு மதிப்பு கொடுத்து பொறுத்து இருந்து அவர்களின் சம்மத்தை பெற்று திருமணம் செய்வதே நல்லது.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான கருத்து........

      Delete
  9. ராஜி சொல்வது திவ்யா குடும்பத்தார் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

    ReplyDelete
  10. இதையும் அரசியல் ஆக்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  11. எத்தனை மரணங்கள் இந்த காதலால்...

    ReplyDelete
  12. 2 உயிரைக் குடித்த காதல்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...