Wednesday, January 4, 2012

வானவில்: தமிழ் மண டாப் 100-லிஸ்ட் சரியா ? புத்தாண்டு சோகங்கள் !!

தமிழ் மணம் டாப் - 100 லிஸ்ட் சரியா?

தமிழ் மணத்தின் ௦இந்த வருட சிறந்த 100 ப்ளாகுகள் லிஸ்ட் அனைவரும் பார்த்திருப்பீர்கள். சென்ற வருடம் 100-வது இடத்தில இருந்த வீடுதிரும்பல் இந்த வருடம் 44-ஆவது இடம் ! நல்ல முன்னேற்றம் தான். ஆயினும் இந்த ரேங்கிங் குறித்த சில கேள்விகள் உள்ளன.

கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மை தமிழன், CP செந்தில் குமார், சசி குமார் இவர்கள் தான் அலெக்சா ரேங்கிங்கில் மிக முன்னே உள்ள பதிவர்கள். இதில் CP செந்தில் குமார், சசி குமார் இருவருக்கும் உரிய இடம் தந்தாலும் மற்ற மூவருக்கும் தமிழ் மணம் சரியான இடம் தர வில்லை. ஜாக்கி சேகர் மற்றும் உண்மை தமிழன் முதல் இருபதுக்குள் வருகிறார்கள். கேபிள் சங்கர் 25-ஆம் இடம் !!

கேபிள் மற்றும் ஜாக்கி கிட்டத்தட்ட தினம் பதிவு எழுதும், மிக மிக அதிகம் பேர் வாசிக்கும் பதிவர்கள் !!

ஹிட்ஸ் முதன்மையாகவும் பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் அடுத்த அளவிலும் எடுத்து கொள்ள பட்டதாக  தமிழ் மணம்  சொன்னாலும், மூன்றுக்கும் சம அளவு weightage-தான் தந்துள்ளார்கள் என தெரிகிறது.

இன்னும் சில  சர்ச்சைகள் : கார்க்கிக்கு இந்த நூறில் இடமே இல்லை ! கார்க்கி வாரம் ரெண்டு அல்லது மூணு பதிவு எழுதினாலும் மிக அதிகம் பேரால் அவை வாசிக்க படும். இதே போல் நிறைய பேரால் வாசிக்க படும் ராம லட்சுமி மேடம் பதிவும் சென்ற முறை நூறுக்குள் வர  வில்லை என நினைக்கிறேன். இப்படி சில முக்கிய ப்ளாகுகள் கடந்த இரு வருடங்களில் டாப் 100-ல் வராதது , there is fundamentally wrong with the system என்பதையே காட்டுகிறது.

தமிழ் மணம் நிர்வாகிகள் இதை வேண்டுமென்றே செய்கிறார்கள் என சொல்ல வில்லை. ஆனால் இந்த சிஸ்டத்தில் என்ன தவறு என கவனித்து சரி செய்ய வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு.

என்னை பொறுத்த வர இந்த குறை சரி செய்ய படாத வரை, அதன் ரேங்கிங்குகளை முழுமையாக ஏற்று கொள்ள போவதில்லை. நமது பதிவுகளை நிறைய பேரிடம் சேர்க்க உதவும் திரட்டி என்கிற அளவில் மட்டுமே அதனை ரசிப்பேன்.

எனது இந்த வருத்தம் எந்த குறிப்பிட்ட பதிவர் மீதோ அல்லது என் பெயர் பத்துக்குள் வந்திருக்க வேண்டும் என்பதிலோ இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள் என நம்புகிறேன். தமிழ் மணம் நான் மிக விரும்பும் ஒரு திரட்டி..  எனவே என் வருத்தத்தை பகிர்கிறேன்.. அவ்வளவே !

இந்த லிஸ்ட் குறித்த உங்கள் கருத்தென்ன? என்னுடைய கருத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டாலும் கூட நிச்சயம் சொல்லுங்கள் !

டிவியில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 


கோவையில் நடந்த நண்பன் திரை பட பாடல் வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பினர். " என் பிரண்டை போல யாரு மச்சான்" பாட்டு "முஸ்தபா முஸ்தபா" போல கல்லூரி மாணவர்களிடையே மிக பிரபலம் ஆக போவது உறுதி. அடுத்த வருடம் கல்லூரியின் அனைத்து கலை விழாக்களிலும் இந்த பாட்டும் அதுக்கு டான்சும் நிச்சயம் ஒலிக்கும் ! 3 இடியட்ஸ் பார்க்காதோர், இந்த படத்தை நிறையவே ரசிப்பார்கள் என நினைக்கிறேன்.

விஜய் டிவியில் பயணம் ஓரளவு பார்த்தேன். அருமையான படம். செம இன்டரஸ்டிங் ஆக எடுத்துள்ளனர். திரைக்கதை, இயக்கம், வசனம், காமெடி என அனைத்து ஏரியாக்களிலும் அசத்திய படம். இது வரை பார்க்காவிடில் அடுத்த முறை விஜய் டிவியில் போடும் போது பாருங்கள். (அடிக்கடி போடுறாங்க !!)

கலைஞரில் முதல் நாள் இரவு பத்து மணிக்கு அஜீத் நடித்த கிரீடம் படம் போட்டார்கள். அந்த படத்தின் செகண்ட் ஹாபில் அஜித் வில்லன்களை கொன்று விட்டு, நொந்து போவார். புத்தாண்டு பிறக்கும் தருணத்தில் அல்லது நல்ல பண்டிகையின் போது இப்படி ரத்தம் தெறிக்கும் அருவாள் படம் தான் காட்ட வேண்டும் என்பதை கலைஞர் டிவியில் ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர். ஹும் :((

விஜய் டிவியில் நீயா நானாவில் 2012ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என ஜோசியர்களை பேச வைத்தார்கள். ஒருவருக்கொருவர் முரண் பாடாக ஜோசியர்கள் பேசியது செம காமெடியாக இருந்தது. இதற்காகவே நிகழ்ச்சி பார்த்தேன்.

இந்த புத்தாண்டு அன்று கலைஞரில் தான் செம படம் போட்டார்கள்.. கார்த்தி காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல. முதல் பாதி செம காமெடி. அடுத்த பாதி நிறைய கத்தி + ரத்தம் என்றாலும் திரை கதையால் சுவாரஸ்யமா தான் இருக்கும். கிளைமாக்சில் அவர்களே கொஞ்சம் சென்சார் பண்ணி வெட்டிட்டாங்க. படத்தில் கார்த்தி எங்கு போகும் போதும் சிறு குழந்தைகளை பார்த்து சிரிப்பது, கண் சிமிட்டுவது என செய்து கொண்டே இருப்பதை படம் முழுதும் அழகாய் காட்டுவார்கள். காஜல் (நம்ம Philosophy பிரபாகரனின் விருப்ப நாயகி) கண்கள் மட்டும் தான் அழகு. மற்ற படி முகத்தில் வேறெதுவும் என்னை ஈர்க்கலை. நிறத்திலும் உருவிலும் கோதுமை மாவு போல் இருக்கும் நாயகிகள் எப்போதும் என்னை ஈர்ப்பதில்லை.

கலைஞர், சன், விஜய் என மூன்று சேனலிலும் டாப் 10 படங்களும், டாப் 10 பாடல்களும் ஒளிபரப்பினார்கள். நாமும் டாப் 10- என ப்ளாகில் எழுதினோமே என அவற்றை பார்த்தேன். நம் ப்ளாகில் சொன்ன பல பாடல்களும், படங்களும் அவற்றில் இருந்தன. இருந்தாலும் இவர்களின் நேர்மை எப்படி இருந்தது என சொல்லித்தான் ஆகணும். சன் மற்றும் கலைஞரில் தி.மு.க குடும்ப உறுப்பினர்கள் எடுத்த படங்கள் மற்றும் பாடல்களே பெரும்பாலும் டாப் 10-ல் வந்தன. இவர்கள் தான் இப்படி என்றால், விஜய் டிவியும் நாங்கள் மட்டும் சளைத்தவர்களா என சிறுத்தை, அவன் இவன், பயணம், வெப்பம் என அவர்கள் எந்தெந்த படங்களின் உரிமை பெற்றனரோ அவற்றையே பெரும்பாலும் காட்டினர். நடுநிலை என்பதற்கு ஸ்பெல்லிங் கூட இவர்களுக்கு தெரிவதில்லை :(((

புத்தாண்டு சோகங்கள்


புத்தாண்டு பிறக்கும் அந்த நேரத்தில் நன்றாக குடித்து விட்டு சாலைகளில் வேகமாக வண்டி ஓட்டி கொண்டு போவது இளைய தலைமுறையிடம் ஒரு வழக்கமாக உள்ளது. இப்படி வேகமாக டூ வீலர் ஓட்டி புத்தாண்டு அன்று இறந்தவர்கள் சென்னையில் மட்டும் : ஆறு பேர். திருச்சியில் எம். எல். ஏவின் தம்பி ஒருவர் உட்பட மூவர் ! இன்னும் மற்ற ஊர்களில் எத்தனை அசம்பாவிதங்களோ? இறந்தவர்களுக்கு துன்பமில்லை . பெற்றவர்கள் மனது எத்தனை வருத்தப்படும்? எப்போது தான் இவர்களெல்லாம் திருந்துவார்களோ?

My Bad; I forgot it !!

அமெரிக்கர்கள் ஆங்கிலத்தை சற்று வித்யாசமாக உபயோகிக்கிறார்கள்.

நாம் ஏதும் மறந்து விட்டால் "Sorry, I forgot it " என்போம் அல்லவா? இதையே ஒருவர் "My bad; I forgot it " என்று சொல்லுவார். நான் கூட இந்த நபர் தான் இப்படி தவறாக ஆங்கிலம் பேசுகிறார் என நெடு நாள் நினைத்திருந்தேன். அப்புறம் தான் வேறு சிலரும் இதே போல (" My bad" ) பேச, அவர்கள் ஆங்கிலத்தில் இது சகஜம் என தெரிந்தது. ஆதி மனிதன் போல அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இது பற்றி மேலும் சொல்லலாம்.

போஸ்டர் கார்னர்



வீடு திரும்பலுக்கு சிறு அங்கீகாரம் 

பதிவர் அப்பா துரை சென்ற வருடத்தில் தன்னை பெரிதும் கவர்ந்த பத்து ப்ளாகுகள் என இங்கு பட்டியலிட்டுள்ளார். அதில் வீடு திரும்பலும் இடம் பெறுகிறது. அப்பா துரை மிக அருமையான சிறுகதைகள் எழுதுபவர். அவரது பின்னூட்டங்கள் எப்போதும் மிக ஹெல்தி ஆக, சில நேரம் பெரும் விவாதத்தை உண்டு பண்ணும் அளவில் இருக்கும். இந்த முறை வம்சி பதிப்பக சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். அவரது ரசனை மற்றும் இலக்கிய அறிவு தள்ளி நின்று வியந்துள்ளேன். இந்த முறை நன்றி சொன்னதை தவிர அவருக்கு பின்னூட்டம் கூட இட்டதில்லை ! அவர் நம் ப்ளாகை சென்ற வருடத்தில் தான் ரசித்த ப்ளாகுகளில் ஒன்றாக சொன்னது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது !



QUOTE CORNER

Life will knock us down, but we have the choice to get up and move along or stay down.

27 comments:

  1. தமிழ்மணம், அத்திரட்டி மூலம் வரும் ஹிட்ஸ்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்று அவர்களின் பக்கத்தில் முன்பே சொல்லியுள்ளார்கள். அதனால் fundamental wrong என்று சொல்வதைவிட இதுதான் நடைமுறை என்று கொள்ளலாம்.

    அதேப்போல அலெக்சா மதிப்பு என்பதும் அலெக்சா பட்டை பொருத்தப்பட்ட பயனர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆகவே தளத்தின் உரிமையாளரைத் தவிர மற்றவர்களால் ஹிட்ஸ்கணக்கை துல்லியமாக கணிக்க தொழிற்நுட்பம் வளரவில்லை என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. நன்றி நீச்சல் காரன். நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ் மணம் வழியே செல்லும் ஹிட்சை தான் அவர்கள்
    கணக்கில் எடுக்கிறார்கள். ஆனால் கேபிள் மற்றும் ஜாக்கி தினம் பதிவு எழுதுபவர்கள். அத்தோடு அவர்கள் எழுதும் பெரும்பாலான பதிவுகள் " தமிழ் மண சூடான இடுகைகளில்" எப்போதும் வந்து விடுகிறது. அப்படி வருகிறது எனில் தமிழ் மணம் மூலம் நிறைய பேர் சென்று அவர்கள் ப்ளாகை வாசிக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?

    இந்த விஷயத்தில் எங்கோ ஒரு தவறு உள்ளது. தமிழ் மண நிர்வாகிகள் நினைத்தால் அதை கண்டு பிடிக்கலாம் !

    ReplyDelete
  3. நீங்கள் கூறுவதிலும் அர்த்தம் இருப்பதாகத் தான் தெரிகிறது. இல்லை என்றால் எப்படி "கேபிள் சங்கருக்கு" 25 ம் இடமும் எனக்கு (ஆதி மனிதன்) 150 வது இடமும் கிடைக்கும் (நமக்கு கிடைப்பதோ இரண்டு மூன்று கமெண்ட்ஸ் மற்றும் 100 / 200 ஹிட்ஸ் மாக்ஸிமம்)!

    //ஆதி மனிதன் போல அமெரிக்காவில் இருக்கும் நண்பர்கள் இது பற்றி மேலும் சொல்லலாம்//

    சும்மாவே அமெரிக்கா பற்றி எழுதும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு! கரும்பு தின்ன கூலியா?

    My Bad - இந்த சொற்தொடரை (என்ன என் தமிழ் சரியா?) பல இடங்களிலும் உபயோகிப்பார்கள். பொதுவாக நீங்கள் ஒரு தவறு செய்து விட்டீர்கள் என்றால் அதை மிக டீசண்டாக நீங்களே ஒதுக்க கொள்ளும் ஒரு வாக்கியம். My Bad சற்று bad ஆக தெரிந்தாலும் sorry சொல்வதை காட்டிலும் இது சற்று கவுரவமாக எனக்கு படும்.

    இங்கு உபயோகிக்கப்படும் வேறு சில வார்த்தைகளை வேறொரு சமயத்தில் தருகிறேன்.

    ReplyDelete
  4. எல்லாம் படிச்சுட்டு கடைசி போட்டோ பார்த்து சிரிப்போ சிரிப்பு முடியல ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  5. " My bad" குறித்த விளக்கத்துக்கு நன்றி ஆதி மனிதன்
    **

    ReplyDelete
  6. நன்றி நாஞ்சில் மனோ
    **
    நண்பர்கள் பலர் இந்த பதிவால் காயப்படுத்தி விட்டேனோ என நினைக்கிறேன். வழக்கமாய் கருத்து சொல்லும் நண்பர்கள் பலரும் தமிழ் மணம் டாப் 100-ல் வந்தவர்களே. அவர்கள் யாரும் இப்பதிவுக்கு இதுவரை கருத்து சொல்ல வில்லை. எனவே தான் அவர்களை காயப்படுத்தி விட்டேனோ என தோன்றுகிறது. That was not my intention certainly and that is why I hesitated to write this part.

    ReplyDelete
  7. 'பிரபலத்துவம்' சற்று சுவாரசியமான சமாசாரம். கேபிள் போன்றவர்களின் ப்லாக்குகளை அதிகம் பேர் படிக்கக் காரணங்கள் இரண்டு என்று நினைக்கிறேன். முதலாவது staying power. இரண்டாவது broad canvasல் விடாமல் எழுதுவது. நீங்கள் சொல்வது போல் கேபிள் ஜேக்கி போன்றவர்களின் பிரபலம், தினம் எழுதுவதோடு மட்டுமில்லாமல் பரவலாக எழுதுவதும் ஒரு காரணம். அதற்காக தினம் எழுதுவதால் மட்டுமே பிரபலமாவதுமில்லை. சமீபத் தமிழ்மண நட்சத்திரமான வை.கோபால்கிருஷ்ணன் நட்சத்திர நேரத்தில் எழுதிக் குவித்தார். recordஆக இருக்கலாமென்று நினைக்கிறேன். boxoffice success அடுத்த வாரத்தில் drop ஆவது போல் sustain செய்யமுடியாமல் இறங்கிவிடுகிறது. இப்போது வைகோவின் ப்ளாக் ரேங்க் தெரியாது, but i suspect it has dipped. ராமலட்சுமியின் ப்லாக் எனக்கு மிகவும் படிக்கும். மூன்று வருடங்கள் போல் மேலாகப் படித்து வருகிறேன். தொடர்ந்து படித்து வந்தால் இவருடைய niche புரிந்து விடும். அதற்குப் பிறகு niche பிடித்தவர்கள் மட்டுமே பெரும்பாலும் படிக்கிறார்கள். தரத்திற்கும் பிரபலத்துக்கும் தொடர்பு உண்டு என்றாலும் தரம் பிரபலத்தைத் தக்கவைக்க ஓரளவுக்கு உதவும் என்றாலும், இரண்டும் வெவ்வேறு உந்தல்களினால் இயங்குகின்றன என்று நினைக்கிறேன். கேபிள் ப்லாக்குகளை ஐந்து வருடங்கள் போல் படித்து வருகிறேன். சினிமா என்று தோன்றினாலும் இவருடைய niche இதுதான் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. அதுவும் அவருடைய பிரபலத்துக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன். நிறைய எழுதும் staying power உள்ளவர்களும் இருக்கிறார்கள் - கீதா சாம்பசிவம், குமரன் போன்றவர்களின் தளங்களை முடியும் பொழுது பாருங்கள். குமரன் கிட்டத்தட்ட 20 ப்லாகுகள் எழுதியிருக்கிறார்/வருகிறார். இருபது!! கீதா சாம்பசிவம் ஆறு ப்லாக்குகள் எழுதுகிறார். முன் சொன்ன காரணமே - வெகு விரைவில் இவர்களுடைய niche புரிந்து விடுகிறது. அதற்குப் பிறகு ஒரு வட்டத்திலேயே உலா வரவேண்டியிருக்கிறது. (நம்பல் கேசும் அதே). இவற்றுக்கு மேல் sincere promotion என்று ஒரு லாகிரித் தந்திரம். அதைக் கேபிள் ஜேக்கி போன்றவர்கள் அருமையாக செயல்படுத்துகிறார்கள் என்றும் நினைக்கிறேன். அதனால் தமிழ்மணம் போன்ற aggregator இணைப்புகளை sustain செய்ய முடிகிறது. சோதனைக்காகச் செய்தாரா தெரியாது, சென்னை பித்தன் இதை நிரூபித்துக் காட்டினார் என்று தோன்றியது. சமீபமாக RVS இந்தத் தந்திரத்தில் மின்னத் தொடங்கினார் - திடீரென்று நின்றுவிட்டார். யுடான்ஸ் போன்ற வளரும் aggregatorல் சேர்ந்து sincere promotion கடைபிடிக்கும் பதிவர்கள் அடுத்த பிரபல அலையில் நனையச் சாத்தியம் என்றும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  8. 'my bad' என்பதற்கு 'என்னுடைய தவறு' என்று பொருள். கறுப்பரின் தெரு வழக்கு. வெள்ளையர்கள் பிடித்துக் கொண்டார்கள். உடனே எல்லாரும் பிடித்துக் கொண்டார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் mc hammer போன்றவர்கள் இதைத் தங்கள் பாடல்களில் புகுத்திப் பரவச்செய்த slang. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வருடக்கணக்கில் பயன்படுத்திவருவது.

    ReplyDelete
  9. என் ப்லாகில் நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை வலைப்பூக்களும் தரமானவை - என்னைப் பொறுத்தவரையில். சமுத்ரா என்று ஒருவர் எழுதும் ப்லாக் பற்றியும் முன்பு குறிப்பிட்டிருந்தேன். என்னை வியக்க வைத்த பிலாக்குகள் இவை. ஆனாலும் இவற்றுள் ஒன்றிரண்டைத் தவிர மற்றவை popularity meterல் பின் தங்கியே இருக்கின்றன. உங்களைப் போல் நானும் முடியைப் பிய்த்துக் கொள்கிறேன் (at least முடி இருந்த இடத்தில் பிய்ப்பது போல் பாவனை செய்து கொள்கிறேன்). moreover, உங்கள் வலைப்பூவைக் குறிப்பிட்டதால் எனக்கு அங்கீகாரம் கிடைத்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள், மோகன் குமார்.

    ReplyDelete
  10. வானவில் பகிர்வுகள் வண்ணமயாய் ரசிக்கவைத்தன...பாராட்டுக்கள்..

    ReplyDelete
  11. நல்ல வண்ணங்களோடு கூடிய வானவில் மோகன்....

    எனக்கும் ஆச்சரியம்தான் தமிழ்மண டாப் 100 லிஸ்ட் பார்த்து.... எனக்கு எப்படி 18-ஆவது இடம் என்று இன்னமும் வியப்பு தான் - ஏதோ என் பக்கத்தில் போட்டுக்கொண்டேனே தவிர எனக்குள்ளே ஒரு குரல் - ”இது சரியானதுதானா?” - என்று இப்போதும் ஒலிக்கிறது.....

    ஏனெனில் நான் அவ்வப்போது பதிவுகள் எழுதும் ஆசாமி - பயணிக்கும் தளங்களும் மிகவும் குறைவு... என்பதால் தான் இந்த சந்தேகம்....

    கடைசியில் கொடுத்த படம்... :)

    ReplyDelete
  12. தமிழ்மணம் - இதிலெல்லாம் இப்போ ஆர்வமே இல்ல மோகன். பதிவு எழுதும்போது இணைப்பதோடு சரி. எவ்வளவு ஹிட்ஸ், ஓட்டு, கமெண்ட்ஸ் என்பதையெல்லாம் அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் கேபிள், ஜாக்கி ஆகியோர் டாப் 10ல் இல்லையென்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    'நடுநிலை' என்பது எந்த சேனலிலும் இருப்பதில்லை, கட்சி சார்பற்ற சேனல்கள் உட்பட!

    ReplyDelete
  13. Anonymous4:19:00 AM

    //கேபிள் சங்கர் 25-ஆம் இடம் !!//

    சில்வர் ஜூப்ளி டைரக்டர்!

    ReplyDelete
  14. மான‌த்த‌ வாங்காதீங்க‌ பாஸ்.. :)))))

    என்ன‌தான் ட்விட்ட‌ரிலே அதிக‌ நேர‌ம் இருந்தாலும் பிலாக் என‌க்கு மிக‌வும் பிரிய‌மான‌ ஒன்று. த‌மிழ்ம‌ண‌மும்..


    இதிலெல்லாம் என‌க்கு ந‌ம்பிக்கையில்லை / பிடிக்க‌வில்லை என்று சொல்லாம‌ல் ச‌ற்று வருத்த‌மாக‌த்தான் இருக்கிற‌‌து என்ப‌தை ஒப்புக் கொள்கிறேன்.

    அவ‌ர்கள் சிஸ்ட‌மில் த‌வ‌று இருக்கிற‌தோ, இல்லையோ... அடுத்த‌ வௌட‌ம் 100க்குள் வ‌ர‌ முய‌ற்சிக்கிறேன் :))

    ReplyDelete
  15. நாம எப்பவுமே லாஸ்ட்ல பர்ஸ்ட்டுதான்.. இதுக்கெல்லாம் மன்னன் படத்துல ரஜினி சொல்றதுதான்...

    ஒன்னு பெருசா... ரெண்டு பெருசா.... ஹா...ஹா..ஹா.... (இது ரஜினி சிரித்தது)

    ReplyDelete
  16. வாவ். சூப்பர். வாழ்த்துகள் மோகன்.

    ReplyDelete
  17. விரிவான கருத்துக்களுக்கு மிக நன்றி அப்பா துரை. தங்கள் அலசல் பிரமாதம் !

    ReplyDelete
  18. இராஜராஜேஸ்வரி said...
    வானவில் பகிர்வுகள் வண்ணமயாய் ரசிக்கவைத்தன...பாராட்டுக்கள்..

    நன்றி ராஜ ராஜேஸ்வரி

    **

    ReplyDelete
  19. நன்றி வெங்கட் . உங்களை போல வெளிப்படையாக இதனை சொல்பவர்கள் மிக அரிது !!

    ReplyDelete
  20. நன்றி ரத்னவேல் ஐயா

    ReplyDelete
  21. நன்றி ரகு. நீங்கள் சொல்வது சரிதான்

    ReplyDelete
  22. சிவகுமார்: இந்த கேபிள் இருக்காரே,சரி வேணாம் விடுங்க

    ReplyDelete
  23. கார்க்கி :100-குள்ளா? தொடர்ந்து எழுதினால் நீங்க பத்துக்குள் வர வேண்டிய ஆள் பாஸ்.

    ReplyDelete
  24. வாங்க RVS: மகிழ்ச்சி Thanks !

    ReplyDelete
  25. கடந்த வருடம் 100 இந்த வருடம் 44.
    உங்களுடைய எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துகள்!

    ReplyDelete
  26. //வித்யா said...

    வாவ். சூப்பர். வாழ்த்துகள் மோகன். //

    நன்றி வித்யா

    ReplyDelete
  27. அமைதி அப்பா said...
    கடந்த வருடம் 100 இந்த வருடம் 44.
    உங்களுடைய எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். வாழ்த்துகள்!

    **

    நன்றி அமைதி அப்பா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...