அழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் "ஏறக்குறைய சொர்க்கம்" சொல்ல வருவது இதனை தான்
கதை
ராம்சந்தர் என்கிற 27 இளைஞனின் பார்வையில் கதை சொல்ல படுகிறது. காமாட்சி (காமு) என்கிற பெண்ணை, பெண் பார்த்து திருமணம் செய்கிறான். திருமணமான அன்றே ராமின் தாயார் மரணமடைகிறார். "பெண் ராசி அற்றவள் " என பலரும் சொல்ல, அதையெல்லாம் காதில் வாங்காமல் அவள் அழகில் மயங்கி கிடக்கிறான் ராம். வங்கியில் பணி செய்யும் ராமின் நண்பன் சந்துரு, ராமின் மேனஜர் என பலருக்கும் காமுவின் மீது ஒரு கண். " உங்க நண்பன் சந்துரு என்னிடம் தப்பாக நடந்து கொள்ள முயற்சித்தார்" என்கிறாள் காமு. சந்துருவை பார்க்க போனால், அவன் " உன் மனைவி நடத்தை சரியில்லை. என்னிடம் தப்பா நடந்து கொள்ள பார்த்தாள்" என்கிறான். சந்துரு சொன்ன வேறு சில விஷயங்கள் சரியாக இருக்க அவனை திட்டாமல் திரும்புகிறான் ராம்.
ராமின் மேனஜர் மூலம் ஒரு சினிமா டைரக்டர் காமுவை வந்து பார்த்து விட்டு காமுவை தன் படத்தில் நடிக்க சொல்லி அழைக்கிறார். ராம் இதை மறுக்கிறான்.
காமுவின் நடவடிக்கைகள் ராமுக்கு தொடர்ந்து சந்தேகம் தர, வேலைக்கு செல்லாமல் அவளை உளவு பார்த்து கொண்டு திரிகிறான். கர்ப்பமாகும் காமுவை அபார்ஷன் செய்ய சொல்லி விடுகிறான். இதன் பின் தன் வீட்டுக்கு போகும் காமு திரும்பவே இல்லை. நீண்ட நாள் அலைந்து காமு அவள் சித்தப்பா மூலம் சென்னை சென்று நடிகை ஆகி விட்டதை அறிகிறான். இந்நிலையில் அவன் வேலையும் இழந்து இருக்க, "எந்த தொந்தரவும் தராமல் வீட்டில் இருந்தால், உன்னை இங்கு இருக்க அனுமதிக்கிறோம்" என்கிறார்கள் சித்தப்பாவும், காமுவும். தினம் தண்ணி அடித்து கொண்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கி ஒரு நடிகையின் கணவன் வேலையை பார்க்க துவங்குகிறான் ராம். இந்த வாழ்க்கையை பொறுத்து கொண்டால் "ஏறக்குறைய சொர்க்கம்" என ராம் சொல்வதுடன் கதை முடிகிறது
எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்ட நாவல் இது. ஒவ்வொரு வாரம் முடிக்கும் போதும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் உடன் முடிக்க, வாசகர்கள் நிச்சயம் அடுத்த அத்தியாயத்தில் என்ன நடக்கும் என்கிற ஆவலுடன் இருந்திருப்பார்கள்.
கதை முழுக்க முழுக்க காமு என்கிற அழகிய பெண்ணை சுற்றியே சென்றாலும் கூட, அவள் அழகை பற்றி தான் பேசுகிறதே ஒழிய, அவள் உணர்வுகள் அல்லது அவள் என்ன நினைக்கிறாள் என்பதை எங்குமே சொல்ல வர வில்லை. சொல்ல போனால் இது தான் கதையின் மிக பெரிய புதிரே.
ராம் தன் மனைவி மேல் சந்தேகப்படும் போது நாம் எந்த நிலை எடுப்பது என தடுமாறுகிறோம். ராமுக்கு உள்ளது சந்தேகம் என்கிற நோயா அல்லது அவன் சந்தேகப்படுவதில் உண்மை இருக்குமோ என்று குழம்புகிறோம். சுஜாதா விரும்பவதும் இதையே என்று தோன்றுகிறது.
இறுதி பகுதியில் சந்துரு இப்படி சொல்கிறான்.
" யோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது".
உலகத்தில் நடக்கிற எல்லாம் உனக்கு தெரிந்தா நடக்கிறது? அதுக்கெல்லாம் கவலை பட முடியுமா என அறிவுரை சொல்கிறான் நண்பன். கடைசியில் ராம் அந்த வாழ்க்கைக்கு ஒப்பு கொள்வதும் இதன் அடிப்படையில் தான்.
இந்த நாவலை 90-களில் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். இப்போது நினைத்தாலும், ஏறக்குறைய சொர்க்கம் என்றதும் உடனே நினைவுக்கு வருவது "அழகான மனைவி- நடிகையாகும் கதை" என்பது தான்.
சுஜாதாவின் பெஸ்ட் என்று சொல்ல முடியா விட்டாலும் சுஜாதா ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் இந்த நாவலை.
திண்ணை டிசம்பர் 18 இதழில் வெளியான கட்டுரை
Me the first.
ReplyDeleteChandru's advice applicable for everyone.
கதை அந்த காலத்திற்கு மட்டுமல்ல, எந்த காலத்திற்கும் பொருந்தும்ணே.
ReplyDeleteஅத்தியாயத்திற்கு ஒரு மேட்டர் வைத்து அசால்ட்டாக நகர்த்துவது வாத்தியாரால் மட்டும்தான் முடியும்.
ReplyDeleteவிரும்பிச்சொன்ன பொய்கள் படிச்சுப்பாருங்க... எடுத்தா கீழ வைக்கமாட்டீங்கண்ணா! :-)
வணக்கம் பாஸ் நானும் சுஜாதாவின் ரசிகன் தன் பகிர்வுக்கு நன்றி பாஸ்
ReplyDeleteதமிழ் மணம் சூடான இடுகையில் இப்பதிவு...
ReplyDelete*********
இன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்
« previous 123next »
சுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம் மோகன் குமார் | 0 மறுமொழி | | புத்தக விமர்சனம் | திண்ணை | சுஜாதாஅழகான மனைவி அமைய பெறுவது வரமா அல்லது சாபமா? துவக்கத்தில் வரம் போல் தோன்றினாலும் பின்னாளில் சாபமாகும் வாய்ப்பும் நிறையவே உண்டு. சுஜாதாவின் "ஏறக்குறைய ...0 மறுமொழிகள்
ம்ம்...கதைய வெச்சு பார்க்கும்போது வாசிக்கணும்னு தோணல. ஆனா ஃப்ளோல கலக்கியிருப்பார்னு மட்டும் தோணுது
ReplyDeleteயோசிச்சு பார்த்தன்னா உலகத்தில் எல்லா செயல்களும் தனிப்பட்டது; உலகத்தில் எத்தனையோ தெரிஞ்சும் தெரியாமலும் பாதங்கங்கள் நடக்குது. அது ஒவ்வொன்னையும் நம்மை பாதிக்க விட்டா நம்மால உயிர் வாழவே முடியாது".
ReplyDeleteஎந்த காலத்திற்கும் பொருந்தும்!
சுஜாதா ஒரு சிறந்த பல்கலைகழகம், பதிவுலகம் அவரை இழந்தது காலத்தின் கோலம்...!!!
ReplyDeleteபுக்க அப்படியே எனக்கு பார்சல் பண்ணிடுங்க:))
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
ReplyDeleteவாழ்த்துகள்.
படிக்க படிக்க திகட்டாத காவியங்கள் அவரது நாவல்கள் ! நல்ல விமர்சனம் ! நன்றி நண்பரே !
ReplyDeleteஅன்புள்ள மோகன் குமார்,
ReplyDeleteஏறக்குறைய சொர்க்கம் பற்றி மற்றொரு விமர்சனம்...
http://balhanuman.wordpress.com/2011/08/12/%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9C/
//ஆதி மனிதன் said...
ReplyDeleteMe the first.
Chandru's advice applicable for everyone//
நன்றி ஆதி மனிதன் !
ஆரூர் மூனா செந்தில் said...
ReplyDeleteகதை அந்த காலத்திற்கு மட்டுமல்ல, எந்த காலத்திற்கும் பொருந்தும்ணே.
*********
நன்றி செந்தில்.
RVS said...
ReplyDeleteவிரும்பிச்சொன்ன பொய்கள் படிச்சுப்பாருங்க... எடுத்தா கீழ வைக்கமாட்டீங்கண்ணா! :-)
****
விரும்பிச்சொன்ன பொய்கள் புக் இப்போ தான் வாங்கிருக்கேன். படிக்கணும் நன்றி RVS
K.s.s.Rajh said...
ReplyDeleteவணக்கம் பாஸ் நானும் சுஜாதாவின் ரசிகன் தன் பகிர்வுக்கு நன்றி பாஸ்
********
நன்றி ராஜா
ரகு said...
ReplyDeleteம்ம்...கதைய வெச்சு பார்க்கும்போது வாசிக்கணும்னு தோணல. ஆனா ஃப்ளோல கலக்கியிருப்பார்னு மட்டும் தோணுது
**
நன்றி ரகு
நன்றி ரிஷபன் சார்
ReplyDeleteMANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசுஜாதா ஒரு சிறந்த பல்கலைகழகம், பதிவுலகம் அவரை இழந்தது காலத்தின் கோலம்...!!!
***
உண்மை தான் நன்றி மனோ
வித்யா said...
ReplyDeleteபுக்க அப்படியே எனக்கு பார்சல் பண்ணிடுங்க:))
**
நன்றி வித்யா. ஏதாவது பதிவர் சந்திப்புக்கு வந்தா சொல்லுங்க. எடுத்து வருகிறேன்
Rathnavel said...
ReplyDeleteஅருமையான விமர்சனம்.
வாழ்த்துகள்.
***
நன்றி ஐயா
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteபடிக்க படிக்க திகட்டாத காவியங்கள் அவரது நாவல்கள் ! நல்ல விமர்சனம் ! நன்றி நண்பரே !
****
நன்றி தனபாலன்
BalHanuman said...
ReplyDeleteஅன்புள்ள மோகன் குமார்,
ஏறக்குறைய சொர்க்கம் பற்றி மற்றொரு விமர்சனம்...
******
நன்றி பால ஹனுமான். வாசிக்கிறேன்
எல்லா வகையிலும் முயற்சித்திருக்கும் சுஜாதாவின் கதைகள் படிப்பது ஏறக்குறைய சொர்க்கம்தான். அதைப் பதிவிட்டால் ஹிட்டுகள் கூடாமல் இருக்குமா என்ன!
ReplyDelete