கதை
( 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் இந்த பகுதியை ஸ்கிப் செய்து விடலாம்)
விமானத்தில் உள்ளே அமர்ந்துள்ள ஸ்ரீகாந்தை அவர் நண்பர் சத்யன் போன் செய்து கூப்பிடுகிறார். "விஜய் இருக்கும் இடம் தெரிந்து விட்டது " என்றதும் விமானத்தில் இருந்து உடம்பு சரியில்லாத மாதிரி நடித்து நைசாக இறங்கி விடுகிறார் ஸ்ரீகாந்த். சத்யனும் ஸ்ரீகாந்தும் கூடவே ஜீவாவும் சேர்ந்து விஜய்யை பார்க்க காரில் செல்கிறார்கள். Flashback-ல் படம் விரிகிறது.
முதலாம் ஆண்டு இன்ஜினீயரிங் மாணவர்கள் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த். இவர்களின் கல்லூரி பிரின்சிபால் சத்ய ராஜ் . வழக்கமான கல்லூரி குறும்புகளுடன் வாழ்க்கை நகர்கிறது. மூவரும் படிக்காமல் கொட்டம்
அடிக்கிறார்கள். மனப்பாடம் செய்து படிக்க கூடாது என்றும் கல்வி முறைக்கு எதிராகவும் பேசும் விஜய் முதல் மார்க் வாங்குகிறார். ஸ்ரீகாந்த் ஜீவா இருவரும் கடைசி இரு இடம் பெறுகிறார்கள். ஸ்ரீகாந்தை அவர் விரும்பும் புகைப்பட துறையில் சேர வைக்கிறார் விஜய். ஏழையான ஜீவா படித்து முடித்து கேம்பஸில் வேலைக்கு சேர்கிறார்.
இதனிடையே உடன் படிக்கும் சத்யனுடன் சண்டை வருகிறது. அதில் பத்தாண்டுகள் கழித்து அனைவரும் சந்திப்போம், அப்போது யார் பெரிய நிலையில் உள்ளார்கள் என பார்ப்போம் என சவால் விடுகிறார் சத்யன்.
பத்தாண்டுகள் கழித்து சந்திக்கும் போது யார் யார் எந்த நிலையில் உள்ளார்கள் என்பது இடைவேளைக்கு பின் சிரிக்கவும் அழவும் நெகிழவும் வைத்து சொல்கிறார்கள் .
*********
3 இடியட்ஸ் படம் பார்த்து விட்டு நம் ப்ளாகில் நான் இப்படி பகிர்ந்திருந்தேன் :
" படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை.
அமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் " ஆல் இஸ் வெல்" ...அருமை ! வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு !!இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் !! "
***********
பிரபலமான படங்கள் ரீ மேக் செய்யும் போது ஒரிஜினளுடன் ஒப்பிட்டு " இது சரியில்லை அது சரியில்லை" என சொல்வார்கள். இங்கு அப்படி சொல்ல முடியாத படி எடுத்து அசத்தி விட்டார்கள் அசத்தி !!
என் மனைவியும் மகளும் " இந்தி படத்தை விட இது தான் மிக பிடித்தது" என்றார்கள். இத்தனைக்கும் 3 இடியட்ஸ் நாங்கள் பல முறை பார்த்த படம். போர் அடித்தாலே DVD-யில் 3-இடியட்ஸ் போட்டு பார்ப்போம். " வசனம் முழுக்க புரிஞ்சிது. அதில் சப் டைட்டில் பார்க்கிரதிலேயே இருப்போம்" என்பது தான் அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.
98 சதவீதம் 3 இடியட்ஸ் படத்தை விட்டு கேமிரா ஆங்கில வரை எதையும் மாற்ற வில்லை (மாதவன் தன் கதை சொல்ல ஆரம்பிக்கும் போது அப்பா தொட்டில் அருகே நின்று குனிந்தபடி " இஞ்சினியர் பிறந்திருக்கான்" என்பது ஓர் உதாரணம்). மேலும் ஹிந்தி போலவே விஜய் எப்போதும் ரவுண்ட் நெக் டி ஷர்ட் போட்டிருப்பார். ஸ்ரீகாந்த் எப்போதும் காலர் வைத்த டி ஷர்ட்டும், ஜீவா ஜிப்பா மாதிரி ஒரு முழு கை சட்டையும் அணிந்திருப்பார்.
பாடல்கள் ஏற்கனவே சூப்பர் ஹிட். அஸ்க லஸ்கா பாட்டு தான் படம் போகும் முன் எனது favourite. சின்மயி மற்றும் விஜய் பிரகாஷ் என்ற இரு செம பாடகர்கள் பாடியது. பாட்டின் மெட்டு எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
இதனை படமாக்கிய விதம் டிபிகல் ஷங்கர் ஸ்டைல் என நாம் சொல்லும் முன் அந்த பாட்டில் ஷங்கரே வந்து " Foreign லொகேஷன் " " குத்து பாட்டு " என்றெல்லாம் கார்ட் காட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது. இந்த பாட்டின் கடைசியில் ரயிலுக்கு பெயின்ட் அடித்து வயல் நடுவே ஓட விட்டிருக்கும் ஷாட், ஷங்கர் ஸ்டைல் எனினும் செம அழகு !!
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த என மூன்று ஹீரோ இருக்கும் போது இன்னொரு நபருக்கு (வசந்த் டிவி ஓனர் பையன்- அவர் பேரும் விஜய் என ஞாபகம் ) பாட்டு வைத்திருப்பது ஆச்சரியம் !!
CASTING
நடிப்பில் முதலிடம் விஜய் சத்யராஜ் இருவருமே தட்டி செல்கிறார்கள். விஜய் அமீர் அளவு செய்ய மாட்டார் என முதலிலேயே நினைத்திருந்தேன். ஆனால் அவருடன் ஒப்பிட எண்ண முடியாத படி தன் பாணியில் அசத்தி விட்டார். அந்த காரக்டர் மிக சரியாக பொருந்துகிறது என்பதுடன் டான்சில் அசத்தி இருக்கிறார். காமெடி, செண்டிமெண்ட் என கலந்து கட்டி அடிக்கும் லட்டு மாதிரி காரக்டர். சத்ய ராஜிடம் அவர் ஸ்டைலில் " டைம் அப்! டைம் அப் " என தகடு தகடு மாதிரி சொல்வது cute. மற்ற அனைவருக்கும் நடிக்க வாய்ப்பு தந்ததுடன் எந்த விதத்திலும் இயக்குனரின் வேலையில் தலையிடாதது தெளிவாய் தெரிகிறது. விஜய் படத்தில் சண்டை ஒன்று கூட இல்லை என்பது எத்தனை பெரிய ஆச்சரியம் !!
விஜய், நடிகர் சூர்யா போல படங்களை பொறுமையாய் தேர்வு செய்து இது போன்ற படங்களில் நடித்தால் தான் என்ன? வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படம் ரிலீஸ் ஆகணுமா என்ன? வேலாயுதம், திருமலை போன்ற படங்கள் வெற்றி என்றாலும் அவற்றை விடுத்து meaningful படங்களில் நடிப்பது மட்டுமே அவரை உயர்த்தும் !
சத்யராஜ்... அடடா. அசத்தல் ! நடிக்க வந்த புதிதில் வில்லன் காரக்டரில் வெற்றி கொடி நாட்டியவர் தானே ! நெகடிவ் காரகடரில் நிச்சயம் நன்கு நடிப்பார் என ஊகித்து அவரை பிடித்துள்ளார் இயக்குனர். பின்னி விட்டார் மனிதர். திருச்சி ஜோசப் கல்லூரியில் இதே மாதிரி ஒரு eccentric புரபசர் இருப்பார். அவர் பேப்பர் திருத்தினால் ரெண்டு மூணு பேர் பாஸ் செய்வதே கஷ்டம். ஒவ்வொருவரும் இது போன்ற காரக்டரை நிச்சயம் சந்தித்திருப்பார்கள் ! சத்தியராஜுக்கு ஹீரோ பாத்திரம் கிடைக்க விடில் நாசர் (முந்தைய) ரகுவரன் போல இத்தகைய காரக்டரில் அவரால் முடியும் வரை நடிக்கலாம் !!
ஜீவா- தற்போதைய இளம் நடிகர்களில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர். அருமையாக செய்துள்ளார்.
ஸ்ரீகாந்த்- படமே இவர் பார்வையில் தான் விரிகிறது. எவ்வளவு பெரிய Opportunity! நன்கு பயன் படுத்தியுள்ளார்.
இலியானா - சில காட்சிகளில் அசத்தலாகவும் சில காட்சிகளில் சொதப்பலாகவும் செய்தாலும் மொத்தத்தில் பாஸ் செய்து விடுகிறார். தொடர்ந்து தமிழில் நடித்தால், இடுப்பழகி சிம்ரன் இடத்தை பிடிக்க வாய்ப்புண்டு. கிளைமாக்சில் நண்பர்கள் விஜய் யார் என அறிந்து கொண்டு ஆச்சரியமாக பேச, இவர் ஒரு பக்கம் " என்ன உன் பேரு? கொச கொசன்னு.. எனக்கு பிடிக்கலை. அந்த பேரை என் பேர் பின்னாடி போட்டுக்க மாட்டேன் " என பேசி கொண்டிருப்பது நைஸ்
சத்யன் : என்ன சொல்லி பாராட்டுவது ! இத்தனை important காரக்டர் இது வரை இவர் செய்ததில்லை. ஒரு பெரிய starcast உள்ள படத்தில் ஷங்கர் இவ்வளவு முக்கிய பாத்திரம் எப்படி நம்பி கொடுத்தார் என தெரிய வில்லை. ஆனால் அதனை முழுதும் சரி என நிரூபித்து விட்டார். குறிப்பாய் கல்லூரி விழாவில் இவர் மைக்கில் பேசும் ஐந்து நிமிடமும் தியேட்டர் விடாமல் குலுங்கி குலுங்கி சிரிக்கிறது. தொடர்ந்து ஐந்து நிமிடம், கொஞ்சமும் நிறுத்தாமல் எந்த படத்தில் சிரித்தோம் என நிஜமாய் தெரிய வில்லை. அதே போல இவருக்கு இன்னொரு அருமையான சீன் லைப்ரரி சீன். ஸ்ரீ காந்த் மற்றும் விஜய் போனில் இவருடன் " நீங்க தான் பாம்ப் போடுரீங்கலாமே" என போலிஸ் போல பேசும் டையலாக் செம காமெடி. சத்யனுக்கு இது Lifetime Character ! . இதை விட பெட்டர் காரக்டர் இவர் இனி செய்வது நிச்சயம் கஷ்டம் !
ரின்சன்: விஜய் டிவியில் டான்ஸ் ஆடும் ரின்சன் மில்லி மீட்டர் என்கிற காரக்டரில் நன்கு நடித்துள்ளான். முதல் படம் மாதிரியே தெரியலை.
டைரக்டர் ஷங்கர் :
தொடர்ந்து தன் கதைகளையே எடுத்த ஷங்கர் இந்த படத்தை மிக relaxed ஆக எடுத்திருப்பார் என நினைக்கிறேன். இந்த கதை தோற்காது என அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஒரிஜினல் படம் பார்க்காதோர் ரொம்ப ரொம்ப ரசிப்பார்கள். அதனை பார்த்தவர்களும் ஏமாற மாட்டார்கள். அந்த விதத்தில் படம் எடுத்தது பெரிய விஷயம் !
சரியான ஆட்களை தேர்ந்தெடுத்ததில் பாதி வேலை முடிந்து விட்டது. ஒரு ரீ மேக் படத்தை மிக சரியாக தெளிவாக அதன் -soul - குலையாத படி எப்படி எடுப்பது என்பதை இந்த படம் பார்த்து நிச்சயம் தெரிந்து கொள்ளலாம்.
கல்லூரி கதை என்றாலே காதல் பக்கம் தான் அதிகம் போய் விடுவார்கள். அதை விடுத்து அவர்கள் career என்பதை மட்டுமே பேசும் கதை இது. இந்தி culture-க்கும் நமக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். ஆனால் ஆச்சரியமாய் இந்த படம் முழுதும் நமக்கும் பொருந்துகிறது
ஒரு சில ஸ்லிப்ஸ் இருக்கின்றன. படம் 98-ல் நடப்பதாக காட்டுகிறார்கள். மாதம் ரெண்டாயிரம் சம்பாதிக்கும் ஜீவா தந்தை அப்போதே செல்போன் வைத்திருப்பாரா என்ன ? "இருக்கான்னா..இடுப்பிருக்கான்னா " பாடல் கொட்டாவி வர வைத்து விடுகிறது. படம் தொய்வடையும் ஒரே இடம் அது தான். அந்த பாடலை வெட்டி இருக்கலாம்.
தியேட்டர் சிப்ஸ் :
வேளச்சேரி ராஜ லட்சுமியில் தான் பார்த்தோம். பாக்ஸ் ஏ. சி செய்து நல்ல சவுண்ட் எபக்ட் தந்துள்ளனர். பாக்ஸ் மட்டும் நீட் ஆக உள்ளது. மற்றபடி சுமாரான தியேட்டர் தான்.
டிக்கெட் புக் பண்ண போகும் போது ஏழாம் அறிவு படம் ஓடி கொண்டிருந்தது. பாக்ஸ் எப்படி இருக்கு என பார்க்கலாமா என கேட்க, " வாங்க சார் பாருங்க" என்றனர். திரையில் ஏழாம் அறிவு வில்லன் போலிசை சுட்டு கொன்று கொண்டிருக்க, பாக்ஸ் உள்ளே நுழைந்து சற்று நேரம் பார்த்தேன். நல்ல ஏ. சி. சவுண்ட் எபக்ட்டும் ஓகே என்ற பிறகு தான் நண்பன் டிக்கட் வாங்கினேன். இப்படி ஒ. சி யில் ஒரு தியேட்டரில் படம் ஓடும் போது நுழைந்து பார்த்தது வேடிக்கையான அனுபவமாக இருந்தது.
நண்பன் படம் தியேட்டர் எபக்ட் நிச்சயம் நன்றாகவே இருந்தது
3 பைனல் பன்ச்:
1. படம் கிட்ட தட்ட மூன்று மணி நேரம் ஓடுகிறது. இது ஒரு குறையா? படம் பார்க்க போவதே மகிழ்ச்சியாக இருக்க தானே ! இப்படி ஒரு படம் மூன்று மணி நேரம் சிரிக்கவும் அழவும் வைக்கிறதென்றால் அந்த நேரம் முழுக்க செம enjoyment தான் !
2. படம் பார்த்து ஒரு மணி நேரமாக நாங்கள் மூவரும் செம மகிழ்ச்சியாக எந்த இடம் பிடித்தது, எங்கு சிரித்தோம் என பேசி கொண்டிருந்தோம். குடும்பத்தோடு பார்த்து மகிழ கூடிய படம். எனக்கு தெரிந்த வரை one of the best movies of Vijay !
3. படம் தயாரிப்பாளருக்கு லாபம் தர கூடிய ஹிட் என்பது நிச்சயம். எவ்வளவு பெரிய ஹிட் என பொறுத்திருந்து பார்க்கலாம்
நண்பன் - இவன் அனைவரும் ரசிக்கிற நண்பன் !
எஸ் ஜே சூர்யா மற்றும் லாரான்ஸ் ராகவா நடித்துள்ளார்கள் என கேள்விப்பட்டேன் உண்மையா?
ReplyDeleteஹிந்தியில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் ஆர்வம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. வேட்டைதான் ஹை ப்ரையாரிட்டி! :)
ReplyDeleteஎனக்கு வெள்ளத்தின் பொது பிரசவம் பார்க்கும் காட்சி அவ்வளவாக பிடிக்கவில்லை. படு சினிமாத்தனமாய் இருந்தது. கேப்டன் மொபைல் லைட்டில் ஆபரேஷன் செய்தது போல.
ராஜலட்சுமியில் நான் ஏற்கனவே படம் பார்த்திருக்கிறேன். பாக்ஸ் ஏசி இருந்தது. ஆனால் சவுண்ட் எஃபக்ட் செம சொதப்பல். நீங்க DTSன்னு சொல்றீங்க. இப்போ மாத்தியிருக்காங்களோ?
சிறப்பான விமர்சனம் பாஸ்
ReplyDeleteஇலியானா பற்றி நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே சொல்லியிருக்கிறீங்க அருமை
விஜய் சுமாரான கதையில் நடித்தாலே படம் ஓடி விடும். /// chink chaang ching chaang
ReplyDeleteedhai suraa-va? illai kuruvi-a???
சினிமா விமர்சனம் சிறப்பாக இருக்கு.
ReplyDelete3 இடியட்ஸ் பார்த்து விட்டதால் இதை பார்ப்பதில் அத்தனை ஆர்வமின்றி இருந்தது. பார்க்கத் தூண்டுவதாக உள்ளது உங்கள் விமர்சனம்.
ReplyDeleteவாசகன்: SJ சூர்யா சின்ன பாத்திரத்தில் நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடிக்கலை. டான்ஸ் கோரியோ கிராபி செய்தாரா என தெரியலை
ReplyDeleteரகு: நிச்சயம் படம் நான் எதிர் பார்த்ததை விட நல்லா இருக்கு. முடிஞ்சா பாருங்க.
ReplyDeleteராஜ லட்சுமி சவுண்ட் எபாக்ட் இப்போ ஓகேன்னு தான் தோணுது. ரெண்டு நாள் முன் நான் டிக்கட் வாங்க போன போது DTS ஆள் வந்து சிஸ்டம் சரி செய்து கொண்டிருந்தார்.
நன்றி KSS. ராஜா. நீங்களும் படம் பார்த்து விட்டீர்களா?
ReplyDelete:))))
ReplyDeleteSweet
ReplyDeleteநான் விஜய் ரசிகன் அல்ல. திருமலை, சிவகாசி போன்ற படங்கள் எனக்கு சுத்தமா பிடிக்கலை. ஆனாலும் அவை ஓடின. அவற்றை பற்றி தான் சுமாரான கதை இருந்தாலே விஜய் படம் ஓடிடும் என சொன்னேன். சுறா விஜய் படம் என்பதில் மட்டுமல்ல இது வரை நான் பார்த்ததிலேயே மோசமான ரம்ப படம் என்று சொல்லலாம்
நன்றி ராம்வி
ReplyDeleteமகிழ்ச்சி + நன்றி ராமலட்சுமி
ReplyDeleteகார்க்கி : You must be very happy to know about Vijay film's result now.
ReplyDelete// இப்படி ஒ. சி யில் ஒரு தியேட்டரில் படம் ஓடும் போது நுழைந்து பார்த்தது வேடிக்கையான அனுபவமாக இருந்தது. //
ReplyDeleteஇதென்ன பிரமாதம்..
ஸ்வீட் கடையில சாம்பிள் பீஸ் சாபிடுவது போலத்தான..
& Where do I get this movie online download ?
மாதவா: அதுக்குள்ளே டவுன்லோடு லிங்க் கேக்குறியே ! கொஞ்ச நாலாவது ஆகும். மேலும் நான் டவுன்லோட் செய்து பார்ப்பதில்லை
ReplyDeletenice review!
ReplyDelete3 idiots one of my top 5 hindi film
எங்க ஊரு தியேட்டருல இந்தப் படம் வராதே.. அதனாலத்தான்.
ReplyDeleteமத்தபடி ஏற்கனவே த்ரீ இடியட்ஸ் பாத்துட்டேன்.. .. ஒரு கம்பெரிசனுக்குத்தான்.. இப்படி..
//டிக்கெட் புக் பண்ண போகும் போது ஏழாம் அறிவு படம் ஓடி கொண்டிருந்தது. பாக்ஸ் எப்படி இருக்கு என பார்க்கலாமா என கேட்க, " வாங்க சார் பாருங்க" என்றனர்//
ReplyDeleteஇப்படியும் டிக்கட் புக் பண்ணலாமா?
****
நல்ல மாதிரி எழுதியிருக்கீங்க. படம் பார்த்துட்ட வேண்டியதுதான்.
நன்றி சர்புதீன். எனக்கும் 3 இடியட்ஸ் மிக பிடித்த படம்
ReplyDeleteநன்றி மாதவா !!
ReplyDeleteஅமைதி அப்பா: நிச்சயம் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்
ReplyDeleteநல்ல விமர்சனம் மோகன்.... ஹிந்தியில் பார்த்து விட்டு இப்போது தமிழில் பார்க்க யோசனையாகத்தான் இருக்கிறது. உங்கள் விமர்சனம் பார்த்தபிறகு படம் பார்க்கலாம் என தோன்றுகிறது. தில்லியில் படம் திரையிட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை....
ReplyDeleteபார்க்கிறேன்...
//அமைதி அப்பா: நிச்சயம் படம் பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்//
ReplyDeleteஒரு நல்ல படத்ததைப் பார்க்க சிபாரிசு செய்த உங்களுக்கு நன்றி.
நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டியப் படம்.
This comment has been removed by the author.
ReplyDeletesemma padam athuvum vijay anna chance illa kaakkittaru nanban really really super & awesome movie
ReplyDelete