Thursday, January 19, 2012

வானவில் : விகடன் விருதுகளும் மம்பட்டியானும்

விகடன் விருதுகளும் வீடுதிரும்பல் விருதுகளும்

விகடன் விருதுகள் அறிவிக்கப்படும் முன்னரே வீடுதிரும்பல் ப்ளாகில் விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இவற்றில் நம் ப்ளாகில் சொன்ன பல விஷயம் விகடனிலும் அங்கீகரிக்க பட்டிருந்தது.

சிறந்த இயக்குனர் - வெற்றி மாறன்

சிறந்த நாயகி- அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

சிறந்த இசை அமைப்பாளர் - GV பிரகாஷ் குமார்

சிறந்த படம் - ஆடுகளம்

சிறந்த நகைச்சுவை நடிகர் -சந்தானம்

சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் -சிவ கார்த்திகேயன்

என நாம் சொன்ன விருதுகளுடன் நிறைய ஒற்றுமைகள் ! ஆயினும் விகடன் சிறந்த நடிகர் விருதை தெய்வ திருமகள் விக்ரமுக்கு தந்தது தான் அநியாயம் ! விகடன் விருது குழுவில் ஒருவர் கூடவா ஐயம் சாம் பார்க்க வில்லை? நடை, உடை என அனைத்தும் காப்பி அடித்து நடித்ததற்கு விருது எனும் போது சற்று கோபம் வருகிறது

பார்த்த படம்- மம்பட்டியான்

எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் நான் படம் பார்க்கும் போது தூங்க மாட்டேன். இந்த படம் பார்க்கும் போது பாதிக்கும் மேல் தூங்கி விட்டேன். அதிலேயே தெரிந்து கொள்ளுங்கள் படம் எப்படி இருக்கும் என !! வடிவேலுவின் Comeback எதிர்பார்த்த மாதிரி சிறப்பா இல்லை ! பழைய காலத்து கதை இன்றைய சூழலுக்கு ஒத்து வரும் என எப்படி நினைத்து எடுத்தார்களோ? திரை உலகில் திறமை மட்டுமே இருந்தால் போதாது என்பதற்கு உதாரணம் பிரசாந்த். வேறென்ன சொல்வது?

காணும் பொங்கலும் குடியும்

அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போகும் வழியில் அந்த காட்சியை கண்டேன். டாஸ்மார்க் கடை அருகே ஏழெட்டு பேர் செமையாக அடித்து புரண்டு கொண்டிருந்தார்கள். பின் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் நான் பெட்ரோல் போட்டு கொண்டு நிற்கும் போது இரண்டு பேர் அங்கே ஓடி வந்தனர். ஒருவன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டுகிறது. வெள்ளை டி ஷர்ட் முழுக்க ரத்தம் ! கையால் தலையை அழுத்தி பிடித்து கொண்டிருந்தான்.

மற்றொருவன் பெட்ரோல் பங்கில் இருப்போரிடம் " சார்.. பஸ்ட் ஐயிட் ஏதும் இருந்தா குடுங்க. அடிச்சிட்டாங்க" என கேட்டு கொண்டிருந்தான். பெட்ரோல் பங்கில் அவர்களை தவிர்க்க மாட்டாமல் ஏதோ பழைய துணி எடுத்து கொடுத்தார்கள். அதை தலையில் கட்டி கொண்டார் அடிபட்ட பையன். போன் செய்து நண்பர் யாருக்கோ இருவரும் பேசினார்கள். " டேய் உடனே வேளச்சேரி கைவேலிக்கு வாடா. ராஜை அடிச்சிட்டாங்க" இதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தனர். எதிர் முனை ஆள் வர விருப்பம் இல்லை போலும். மிக வற்புறுத்தி கூப்பிட்டனர். தலையில் அடிபட்ட ஆள், போதையிலோ ரத்த இழப்பிலோ தள்ளாடினான். இவ்வளவு அடிபட்டும் டாக்டரிடம் கூட போகாமல், தங்களை அடித்தவர்களை திரும்ப அடிக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக இருந்தது. அருகில் போய் " டாக்டர் வீட்டுக்கு முதலில் போங்க" என சொல்லலாமா என்கிற எண்ணத்தை அவர்கள் எப்படி ரீ-ஆக்ட் செய்வார்களோ என்கிற எண்ணம் தடுக்க, என் வண்டியை கிளப்பினேன்.

சமீபத்தில் எடுத்த போட்டோ

தாம்பரம் மாமனார் வீடு சென்ற போது எடுத்த Sunset

QUOTE CORNER

I hear- I forget.
I see- I remember
I do - I understand
Action is more important than words.

தமிழ் மணம் வாராந்திர ரேங்கிங்கில் வீடு திரும்பல் ஆறாம் இடம்


என்ன தான் தமிழ் மணத்தை விமர்சித்தாலும், அதன் வாரந்திர ரேங்கிங்கில் அவ்வப்போது நம் ப்ளாக் பெயர் வரும் போது மகிழ்ச்சியாக தான் உள்ளது. வருட இறுதி பதிவுகள் (2011 ஸ்பெஷல்) எழுதிய வாரம் வீடுதிரும்பலுக்கு 13-ஆம் இடம் வந்தது. இந்த வாரம் ஆறாம் இடம் !

அவ்வப்போது முதல் இருபதுக்குள் வந்தாலும், ஆறு என்பது தான் இதுவரை எடுத்ததில் மிக குறைந்த இடம் ! சென்ற வாரம் ஐந்து பதிவுகள் (ஒரு புது பட விமர்சனம் உட்பட) எழுதியதால் இது நடந்திருக்கலாம். ஆயினும் ரேங்கிங் பின்னால் ஓட போவதில்லை. எழுத்து ஒரு ஹாபி தான். இதை தவிர செய்ய வேண்டிய வேலை ஏராளம் இருக்கு !!

Mrs.அய்யாசாமியின் லஞ்ச் பேக்

அய்யாசாமி தினமும் வீட்டில் செய்யும் வேலைகளில் ஒன்று : அனைவருக்கும் சாப்பாடு கட்டி எடுத்து வைப்பது. இதில் Mrs.அய்யாசாமி சாப்பாட்டு பையில் மட்டும் குளறுபடி செய்து, ஏதாவது ஒன்றை வைக்க மறந்து விடுவார். குழம்பு அல்லது காய் வைக்க மறந்து விட்டு, அதன் பின் கண்டு பிடித்து Mrs.அய்யாசாமி அலுவலகம் வரை போய் பவ்யமாக கொடுத்து வருவதும் உண்டு. சில நேரம் அப்படி வைக்க மறந்ததே சாயங்காலம் தான் தெரிய வரும். அப்புறம் என்ன நடக்கும் என கல்யாணம் ஆனவர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. கல்யாணம் ஆகாதோருக்கு? வேணாம் விடுங்க.. அவங்க ஏதேதோ கனவில் இருப்பாங்க. அதை ஏன் கெடுக்கணும்?

இப்போல்லாம் அய்யாசாமி உஷாராகி Mrs.அய்யாசாமி பையை வைக்கும் போது மட்டும் பள்ளி மாணவன் தன் புத்தக பையில் எல்லா புத்தமும் சரியாக இருக்கா என சரி பார்ப்பது போல், " சாதம் இருக்கு; குழம்பு இருக்கு" என தனக்கு தானே பேசி கொண்டு சரி பார்ப்பார். காலை எட்டரை மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தால் இந்த காட்சியை பார்த்து ரசிக்கலாம் !

23 comments:

 1. நல்ல தொகுப்புக்கள் பாஸ்

  ReplyDelete
 2. //எவ்வளவு மொக்கை படமாக இருந்தாலும் நான் படம் பார்க்கும் போது தூங்க மாட்டேன். இந்த படம் பார்க்கும் போது பாதிக்கும் மேல் தூங்கி விட்டேன்//

  அப்ப பாதி வரைக்கும் பார்க்கலாமா?

  //வீடுதிரும்பலுக்கு 13-ஆம் இடம் வந்தது. இந்த வாரம் ஆறாம் இடம் ! //


  ஆறு ஒன்னாக வாழ்த்துக்கள்.

  //அருகில் போய் " டாக்டர் வீட்டுக்கு முதலில் போங்க" என சொல்லலாமா என்கிற எண்ணத்தை அவர்கள் எப்படி ரீ-ஆக்ட் செய்வார்களோ என்கிற எண்ணம் தடுக்க, என் வண்டியை கிளப்பினேன்.//

  நல்ல வேலை அதை நீங்கள் செய்யவில்லை. இதே போல் ஒரு சம்பவத்தில் நான் பரிதாபப்பட்டு தலையிட்டு எனக்கு பிரச்சனை ஆகி விட்டது.

  ReplyDelete
 3. மம்பட்டியான் பார்க்கிற அளவுக்கு மனதைரியம் இருக்க ஆளா நீங்க???!!! ரைட்டு.

  லஞ்ச் பாக்ஸ் மேட்டர் :)))))))))))

  ReplyDelete
 4. ஆர் வி எஸ் ப்ளாக்ல ஒரு போட்டோ...இங்கயும் அதே போல ஒரு போட்டோ...
  கொண்டாடுவது என்றாலே குடிப்பதுதான் என்று எண்ணுபவர்களுக்கு அறிவுரை எதற்கு?
  எப்படிப் பொறுமையாக மம்பட்டியான் போன்ற படங்களுக்குச் செல்கிறீர்கள்?!

  ReplyDelete
 5. உங்களோட லஞ்ச் பாக்ஸுக்கு "ட்ரான்ஸ்பேரன்ட் மூடி" தான ?
  (அப்பத்தான ஆபீசுக்கு போறமா, வீட்டுக்கு போறமானு உங்களுக்கு ஈசியா தெரியும்..)

  ReplyDelete
 6. வானவில் சுவாரசியமாக இருக்கு.

  குடித்து விட்டு அடித்துக்கொள்வது மிக வேதனை தருகிறது.

  தமிழ் மணத்தில் ஆறாவது இடத்திற்கு வாழ்த்துக்கள்.

  அய்யாசாமி விழித்துக்கொண்டது பற்றி சந்தோஷம்.

  ReplyDelete
 7. //நடை, உடை என அனைத்தும் காப்பி அடித்து நடித்ததற்கு விருது எனும் போது சற்று கோபம் வருகிறது//

  படத்தை ப்ரொமோட் பண்ணும்போது விக்ரம் & விஜய் குடுத்த பில்டப்புகள்தான் ஞாபகம் வருகிறது

  மம்பட்டியான் - நோ கமெண்ட்ஸ் :)

  குடித்துவிட்டு இப்படி ____ மாதிரி அடித்துகொள்கிறவர்கள் மீது நான் ஒருபோதும் பரிதாபப்படுவதில்லை. நீங்கள் போய் ஏதாவது சொல்லியிருந்தால், உங்களுக்கு ஏதாவது அர்ச்சனை கிடைத்திருக்கும்.

  சன்செட் ஃபோட்டோ சூப்பர் மோகன். Like it!

  அய்யாசாமி லஞ்ச் பேக் - மைண்ட்ல வெச்சுக்கறேன் :))

  ReplyDelete
 8. //விகடன் விருது குழுவில் ஒருவர் கூடவா ஐயம் சாம் பார்க்க வில்லை?//
  விடுங்க ஸார் விருது குழுவில் ஒருவர் கூட 3 இடியட்ஸ் பாத்திருக்கமாட்டாங்க... 2012 சிறந்த நடிகர் விருது விஜய்க்கே


  //சில நேரம் அப்படி வைக்க மறந்ததே சாயங்காலம் தான் தெரிய வரும். அப்புறம் என்ன நடக்கும் என கல்யாணம் ஆனவர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை.//
  சொல்வார்கள் உண்மை பொய் தெரியாது :-) .... உங்கள் மனைவியின் பிறந்தநாளை மறக்காமல் ஞாபகம் வைத்திருக்க ஒருவழி, ஒரே ஒருமுறை மறப்பதுதான்.....

  ReplyDelete
 9. K.s.s.Rajh said...

  நல்ல தொகுப்புக்கள் பாஸ்
  **
  நன்றி ராஜா
  *******

  ReplyDelete
 10. ஆதி மனிதன். பாதி படம் செம அறுவையாக தாலாட்டியதால் தானே மீதி படம் தூங்கியாச்சு.

  //ஆறு ஒன்னாக வாழ்த்துக்கள்//

  நீங்க வேற..என்னை வச்சு காமெடி பண்ணாதீங்க :))

  ****

  ReplyDelete
 11. கார்க்கி : நன்றி
  **

  ReplyDelete
 12. வித்யா: நன்றி. லஞ்ச் பாக்ஸ் கதை உங்க ரங்கமணியை நினைவு படுத்திடுச்சு போல

  **

  ReplyDelete
 13. ஸ்ரீராம்: ஆமாம். RVS-ம் நானும் இன்னிக்கு ஒரே மாதிரி போட்டோ போட்டிருக்கோம் நீங்க சொன்ன பிறகு தான் தெரிந்தது

  **

  ReplyDelete
 14. Madhavan Srinivasagopalan said...


  உங்களோட லஞ்ச் பாக்ஸுக்கு "ட்ரான்ஸ்பேரன்ட் மூடி" தான ?(அப்பத்தான ஆபீசுக்கு போறமா, வீட்டுக்கு போறமானு உங்களுக்கு ஈசியா தெரியும்..)
  *********
  மாதவா: டியூப் லைட்டான அய்யாசாமிக்கு நீங்கள் சொல்வது புரியலை
  ***

  ReplyDelete
 15. ராம்வி: விரிவான கமண்டுக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 16. ரகு: நன்றி சீக்கிரம் நீங்க லஞ்ச் பாக்ஸ் ரெண்டு வாங்க கடவுது :))

  ReplyDelete
 17. வாசகன்: வாங்க

  நன்றி.

  உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ? ஹாப்பியா இருக்கீங்கன்னு நினைக்கிறேன் :))

  ReplyDelete
 18. அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. விகடன் வியாபாரம் நடிகர்கள் தயவு தேவை. அதான்.

  ReplyDelete
 20. ரத்னவேல் ஐயா: நன்றி

  ReplyDelete
 21. //தாம்பரம் மாமனார் வீடு சென்ற போது எடுத்த Sunset//

  ஏதோ சிம்பாலிக்காச் சொல்ல வர்றீங்க போல!! :-))))

  //நம் ப்ளாகில் சொன்ன பல விஷயம் விகடனிலும் அங்கீகரிக்க பட்டிருந்தது.//
  வானவில் சொன்னா விகடனே சொன்ன மாதிரின்னு புதுமொழி சொல்லிடலாம்போல இனி!! வாழ்த்துகள்.

  //" சாதம் இருக்கு; குழம்பு இருக்கு" என தனக்கு தானே பேசி கொண்டு //
  I can imagine that scene!! Keep it up!! :-))))

  இந்த ஐயாசாமி மேட்டர்களை மட்டுமே ஒரு புக்காப் போடுங்க, (அல்லது தொகுத்து ஒரே பதிவாக)...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...