காஞ்சிபுரம் கோயில்களின் நகரம். கோயில்கள் அதிகம் உள்ள ஊர் குடந்தையா.. காஞ்சிபுரமா என பட்டி மன்றமே வைக்கலாம்.
காஞ்சிபுரத்தில் மட்டும் 200 கோயில்களுக்கும் மேல் உள்ளன ! நாங்கள் மிக புகழ்பெற்ற பத்து கோயில்கள் மட்டும் பார்த்தோம். அவற்றின் சிறப்பு பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் இருக்கும். மேலும் காஞ்சி சென்றால் நீங்கள் எங்கு பட்டு புடவை வாங்கலாம், எங்கு சாப்பிடலாம், எங்கு தங்கலாம் என்கிற தகவல்களும் ஆங்காங்கு பகிரப்படும்.
ஏகாம்பரேஸ்வர் கோவில்
காஞ்சிபுரம் சென்று இறங்கியதும் நாங்கள் சென்ற முதல் கோயில் இதுவே. போய் இறங்கிய பின்னும் ஒரு நாள் தங்கி பார்க்கலாமா அன்றே திரும்பி விடலாமா என தயக்கமும் யோசனையும் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் முதல் கோயிலான இதனை பார்த்த உடனேயே இன்று காஞ்சியில் தங்கி விட்டு இரண்டு நாட்களில் நாங்கள் பார்க்க நினைத்த முக்கிய கோயில்களை பார்க்கலாம் என தோன்றி விட்டது.
ஏகாம்பரேஸ்வர் கோவில் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ளது. காஞ்சியின் மிக பெரிய மற்றும் முக்கிய கோயில்களுள் ஒன்று.
மிக பெரிய பரப்பளவில் ஏக்கர் கணக்கில் விரிந்து பிரம்மாண்டமாய் உள்ளது இக்கோயில். வெளியில் வழக்கத்தை விட மிக அதிகமான அளவில் வயதானவர்கள் பிச்சை கேட்டவாறு அமர்ந்திருப்பதை காண முடிந்தது. அதன் காரணம் தினம் கோயிலில் மதியம்நடக்கும் அன்ன தானம் என்று பின்பு தெரிந்தது.
நுழையும் போதே அதன் பிரமாண்டமான கதவு ஆச்சரியபடுதுகிறது. நீங்களே பாருங்கள்.. எவ்வளவு உயரமான பெரிய கதவு என !!
கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாடுகள் சர்வ சுதந்திரமாக சுற்றி வருகின்றன. மிக அதிக புல்வெளி இருப்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம்
நுழையும் போதே நம்மை அதிசயிக்க வைக்கும் இன்னொரு
விஷயம் கோயிலில் கரிகால் சோழனுக்கு சிலை இருப்பது !! காஞ்சி என்பது பல்லவர்களின் தலை நகரம்.. இங்கு எப்படி கரிகால் சோழனுக்கு சிலை என்கிற கேள்வி எழுகிறது. கரிகால் சோழன் தனது ராஜ்யத்தை இங்கு வரை விரிவு படுத்தியிருக்க வேண்டும் ! கோயிலில் ராஜாவிற்கு சிலை சற்று ஆச்சரியம் தான் !!
ஏகாம்பரேஸ்வர் கோவிலில் மூலவர் அருகே உள்ள லிங்கம் மணலில் செய்தது. எனவே வழக்கமான லிங்கம் போலன்றி இது வித்யாசமான வடிவில் (குழந்தைகள் செய்து விளையாடும் மணல் வீடு போல்) இருக்கும்.
இங்கு வரிசையாக இருக்கும் 1008 லிங்கங்கள் நம்மை ஆச்சரிய படுத்துகின்றன. 1008 லிங்கங்கள்!!!!
கண் குறைபாடு இருப்போர் இந்த கோயிலுக்கு பிரார்த்தனை செய்து சரியான பின் நேர்த்தி கடனுக்கு இங்கு வருகின்றனர்.
கோயில் நடுவே உள்ள மாமரம் மிக புகழ் பெற்றது. சிவன் பார்வதிக்கு காட்சி தந்த இடம் என நம்பப்படுகிறது. சிவனை காண வேண்டி பார்வதி தவம் செய்ததாகவும், பின் சிவன் அவருக்கு காட்சி தந்தார் என்பதும் ஐதீகம். இங்கிருந்த 3500 வருட பழமையான மரம் பின் விழுந்து விட்டதால் பாடம் செய்து வைத்துள்ளனர். அந்த மரத்தையும் அருகில் உள்ள போர்டையும் கீழே பார்க்கலாம்
இப்போது உள்ள மரம் அதன் பின் வைக்கப்பட்டது. இந்த மரத்தின் நான்கு கிளைகளும் வெவ்வேறு அமைப்பில் உள்ளது என்பதோடு அவை ஒவ்வொன்றிலும் உள்ள மாங்காய்களும் வெவ்வேறு சுவையில் இருக்குமாம் !!குழந்தை பேறு இல்லாதோர் மற்றும் சில வேண்டுதல்கள் உள்ளோர் இந்த மரம் அருகே வந்து பிரார்த்திக்கின்றனர்.
இங்கு மரம் அருகே சிவன்-பார்வதி சிலை உள்ளது. பொதுவாக கடவுளை படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இங்கு அதற்கு அனுமதித்தார்கள். இங்கு இருந்த குருக்கள் பரீட்சைக்கு படிக்கிற மாதிரி சீரியசாக புத்தகம் பார்த்து சுலோகம் சொல்லி கொண்டிருந்தார். அவரிடம் போட்டோ எடுக்கலாமா என கேட்ட போது. " எடுத்துக்கோ ! " என சைகையில் காட்டி விட்டு சுலோகம் சொல்வதை தொடர்ந்தார்.
கோயிலில் மிக நீண்ட பிரகாரங்கள். சுற்றிலும் நிறைய கதைகள். இங்கு இரு வெளிநாட்டு பெண்களை ஒரு கைட் உடன் பார்க்க முடிந்தது. நடக்க முடியாத நிலையில், வீல் சேரில் ஒரு வெளிநாட்டு பெண். அவரை மற்றொரு பெண் தள்ளியவாறு வந்து கொண்டிருந்தார்
கைட் மிக expressive ஆக இருந்தார் !! கைகளை பெரிதாக விரித்து விரித்து, அவர்களுக்கு கதை சொல்லி கொண்டிருந்தார்.
கடவுள் சன்னதியில் வெளி நாட்டவரை அனுமதிப்பதில்லை. அம்மனை வணங்கி விட்டு வந்த ஒரு கிராமத்து பெண்மணி நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்த வெளிநாட்டு பெண்ணுக்கு தானாகவே குங்குமம் வைத்து விட்டார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு புன்னகைத்தது நெகிழ்வாக இருந்தது. அன்பை சொல்ல, அதனை பெற்று கொள்ள மொழி தேவை இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை சொன்ன தருணம் அது !
காஞ்சிபுரம் முழுவதுமே கிளிகள் மிக மிக அதிகமாக இருக்கின்றன. அநேகமாக எல்லா கோயில் கோபுரத்திலும் கிளிகளை பார்க்க முடிந்தது. மரங்களிலும் கிளிகளின் சத்தம். முன்பாக இருந்தால் இதை கவனிதிருக்கவே மாட்டோம். இப்போது நாங்களும் கிளி வளர்ப்பதால் இவற்றை ஆசையுடன் பார்த்தோம் !
தமிழக முதல்வர் தை மாதத்தில் இங்கு 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க போவதாக அறிவித்துள்ளார்.
இங்கு மதியம் நடக்கும் அன்னதானத்துக்கு கோயில் உள்ளேயே இலை போட்டு ஐம்பது முதல் நூறு பேர் வரை உண்கின்றனர். நாங்கள் சென்ற தினத்தன்று அன்னதானம் நாங்கள் ஸ்பான்சர் செய்தோம் .. இறைவனின் அருள் !!
ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் மதிய அன்ன தானம் நம் பேரில் நடக்கிறது. பணம் மட்டும் கட்டிவிட்டு அன்னதானம் முடிவதற்குள் கிளம்பி விட்டோம்.
****
கொசுறு :
காஞ்சியில் நல்ல காட்டன் புடவைகள் மற்றும் சுடிதார் மெட்டீரியல் வாங்க சிறந்த கடை இது தான். கிட்ட தட்ட ஹோல் சேல் போல நடக்கிறது. சென்னையை விட நிச்சயம் சுடிதார் மெட்டீரியல் விலை குறைவாக இருந்தது. காஞ்சிபுரம் காந்தி ரோடு அருகே உள்ள ஒரு தெருவில் உள்ளது ராஜ மாணிக்க முதலியார் அண்ட் சன்ஸ் கடை !நீங்கள் காஞ்சிபுரம் சென்றால் இந்த கடைக்கும் ஒரு விசிட் அடியுங்கள் !
அடுத்த பதிவில்
காஞ்சியில் தங்க (Cheap and Best) சிறந்த இடம்
யானைகளுடன் அய்யா சாமியின் மயிர் கூச்செறியும் (!!!??) அனுபவம்
படங்களையும் ஸ்தலத்தின் சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்.
ReplyDeleteபிரமாண்டக் கதவு மிக அழகு.
//காஞ்சி என்பது சேரர்களின் தலை நகரம்//
ReplyDeleteI think pallava's capital.
நல்ல தகவல்களுடன் அருமையான படங்களும் பதிவும்.
ReplyDeleteஆமாம்...காஞ்சிக்கு சேரர்கள் எப்போ வந்தாங்க????????
சில ஆண்டுகளுக்கு முன் நாலுவரி நானும் எழுதி இருக்கேன். நேரம் கிடைச்சால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_09.html
உங்க மூணாவது பகுதிக்காக மீ த வெயிட்டிங்:-)
Initially temple was built by Pallavas .The existing structure then, was pulled down and rebuilt by the later Chola Kings. The Cholas, who came later, also made a few contributions to the temple. Vallal pachiyappa mudaliar used to go regularly from chennai to kanchi to worship in this temple, he spend significant money he amazed during British rule on the temple renovation, pachiyappa mudaliar seated at horse back can be seen in the temple pillar. At the later stage a similar temple with same name Ekambareswarar was constructed in Parrys corner, chennai by pachiappa mudaliar inorder to avoid travelling time to kanchi.
ReplyDeleteகிளி வளர்க்கறீங்களா? அதப் பத்தியும் எழுதுங்க பாஸ் :))
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteபடங்களையும் ஸ்தலத்தின் சிறப்புகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் விதம் சுவாரஸ்யம். தொடருங்கள்.
பிரமாண்டக் கதவு மிக அழகு.
**
நன்றி ராமலட்சுமி. ஏதோ எனக்கு தெரிந்த அளவில் படங்கள் எடுத்துள்ளேன். நீங்கள் photoes எடுக்கிற மாதிரி வருமா?
Siva said...
ReplyDelete//காஞ்சி என்பது சேரர்களின் தலை நகரம்//
I think pallava's capital.
*****
நன்றி சிவா. மாற்றி விட்டேன்
துளசி கோபால் said...
ReplyDeleteஆமாம்...காஞ்சிக்கு சேரர்கள் எப்போ வந்தாங்க????????
சில ஆண்டுகளுக்கு முன் நாலுவரி நானும் எழுதி இருக்கேன். நேரம் கிடைச்சால் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2007/03/blog-post_09.html
உங்க மூணாவது பகுதிக்காக மீ த வெயிட்டிங்:-)
**
ஆஹா துளசி மேடம். வருக வருக. தவறை சரி செய்து விட்டேன். உங்கள் பதிவு நிச்சயம் வாசிக்கிறேன்.
உங்களின் " என் செல்ல செல்வங்கள்" புத்தகம் தற்போது வாசித்து வருகிறேன். பின்னர் புத்தக விமர்சனம் நிச்சயம் எழுதுவேன்
**
இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...
ReplyDeleteமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும்.
**
இந்த கமண்டை எல்லா ப்ளாகுக்கும் போய் Paste பண்றது தான் "Online" வேலையா? ரொம்ப ஈசி ஆச்சே :))
மேலதிக தகவல்களுக்கு நன்றி ஷங்கர்
ReplyDelete//ஷங்கர் said //
கிளி வளர்க்கறீங்களா? அதப் பத்தியும் எழுதுங்க பாஸ் :))
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி ; நீங்க நம்ம ப்ளாக் பக்கம் வருவதே இல்லைன்னு தெரியுது. தனி பதிவு எத்தனை எழுதியாச்சு. அப்பப்போ வேற வானவில்லில் ஒரு பகுதியா எழுதிட்டு இருக்கேன். :))
பாஸ் உங்க செல்லக் கிளி பற்றி படிச்சாச்சு. :)) எங்க வீட்டச் சுற்றி தினமும் பறந்து போகிறது. வீட்டுத் தோட்டத்தில் தேன் சிட்டு, தவிட்டுக் குருவி, இரட்டை வால் குருவி, சில சமயம் மீன் கொத்தி இதெல்லாம் வந்து போவதால் ரசிப்பதோடு சரி. கிளியை வீட்டில் வளர்க்கப் போய் அதற்கு எதாவது ஆகி மனது சங்கடப் படும், போக அதனுடைய சுதந்திரத்தை நாம் ஏன் கெடுப்பானேன் என்று அந்த ஆசையெல்லாம் துடைத்துவிட்டேன் :))
ReplyDeleteநாய் வளர்க்க ஆசைதான். பார்க்கலாம் :)
முதலமைச்சரின் அந்த அறிவிப்பு நல்லா இருக்கே...!!!
ReplyDeleteNice pathivu , waiting for your next pathivu ,
ReplyDeletevery importantly about cotton saree shop(!)
but kanchi endral pattu pudavai than nyabagam varum athai patriya thagaval kidaikuma ?
இருக்கும் இடத்திலிருந்து நல்ல தரிசனம் கிட்ட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ReplyDeleteஎளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்
ReplyDeleteகோவிலை பற்றிய குறிப்புகள் அருமை. மணல் லிங்கம் அம்பாள் செய்துவைத்துக் காத்தது. வெள்ளம் வந்தபோது கூட லிங்கத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க அதை அணைத்துக் கொண்டபோதுதான் இறைவன் வந்தாராம்.
My Most Favourite Temple!
ReplyDeleteசித்திரை மாதத்தில் நடக்கும் திருவிழா இங்கு ரொம்ப விசேஷம்.
காஞ்சிபுரத்தில் இருப்பதிலேயே மிக உயர்ந்த கோபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில்தான் இருக்கு. வீட்டு மாடியில் இருந்து பார்க்கும்போது, இந்த கோவில் கோபுரம் மட்டுமே தெளிவாகத் தெரியும்.
பிரதோஷ நாட்களிளும், குறிப்பாக திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்கள்...கூட்டம் கட்டுக்கடங்காது!
முதல் கோபுர நுழைவு வாயிலை கடந்த பின் இடது பக்கம், ஆயிரம் கால் மண்டபம் இருக்கு. ஆனா ஏன்னு தெரியல, இப்பல்லாம் பூட்டியே வெச்சிருக்காங்க :(
//கடவுள் சன்னதியில் வெளி நாட்டவரை அனுமதிப்பதில்லை//
இதைத்தான் இன்னும் என்னால் ஏத்துக்கவே முடியல. வேற்று மதம்ங்கறது காரணமான்னு தெரியல. ஆனா நான் பார்த்தவரைக்கும் வெளிநாட்டவர் யாரும் கோயிலின் புனிதத்தன்மையை எந்தவிதத்திலும் கெடுப்பதில்லை. ஷூ போட்டுக்கொண்டு கோவிலுக்குள் வரும் ஒரு வெளிநாட்டவரைக்கூட இதுவரை பார்த்ததில்லை.
கோயிலில் எடுத்த சில ஃபோட்டோஸை இங்கு பகிர்ந்திருக்கிறேன்.
http://flickr.com/photos/raghuclicks
கண்டிப்பாக இது சுயவிளம்பரத்திற்காக அல்ல, தவறாக நினைக்கவேண்டாம்.
தகவலுக்கு நன்றி. இதுபோல் தாங்கள் செல்லும் கோவில்களை பற்றி எழுதுங்கள் எங்களைபோல் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். எனது புத்திரர்களுக்கும் இந்த இணைப்பு அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். எனது புத்திரர்களுக்கும் இந்த இணைப்பு அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.
இது டெம்ப்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் உண்மை தான்ணே. அருமையான ஆன்மீக பதிவு.
ReplyDeleteபோட்டோக்கள் எல்லாம் பதிவுக்காகவே திட்டமிட்டு எடுத்தது போல் தெரிகிறதே
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை.
ReplyDeleteபடங்களும் கட்டுரையும் அருமை மோகன்.... ஸ்வாரசியமாகச் செல்கிறது கட்டுரை.... தொடருங்கள்....
ReplyDeleteபிரம்மாண்டக் கதவு படம் அழகு.
ReplyDeleteகடைக்கு போனீங்க சரி. புடவை வாங்கித்தரலையா:)))
ReplyDeleteபடங்கள் நல்லாருக்கு. நான் சனியன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.
ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ReplyDeleteநாய் வளர்க்க ஆசைதான். பார்க்கலாம் :)
**
அவசியம் வளருங்க ஷங்கர். தனி வீடு என்பதால் வளர்க்கலாம். உங்கள் பசங்களுக்கும் பொழுது நன்கு கழியும்
**
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteமுதலமைச்சரின் அந்த அறிவிப்பு நல்லா இருக்கே...!!!
**
ஆமாம் மனோ. அதனால் தான் படம் எடுத்து பகிர்ந்தேன்.
sarav said...
ReplyDeleteNice pathivu , waiting for your next pathivu ,
very importantly about cotton saree shop(!)
but kanchi endral pattu pudavai than nyabagam varum athai patriya thagaval kidaikuma ?
**
நன்றி சரவ். பட்டு புடவை பற்றி நிச்சயம் எழுதுகிறேன். மிக விரிவாய் இல்லா விட்டாலும் ஓரளவு எழுதுவேன்
ரிஷபன் said...
ReplyDeleteஇருக்கும் இடத்திலிருந்து நல்ல தரிசனம் கிட்ட நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
****
மகிழ்ச்சியும் நன்றியும் ரிஷபன் சார்
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஎளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில்
கோவிலை பற்றிய குறிப்புகள் அருமை. மணல் லிங்கம் அம்பாள் செய்துவைத்துக் காத்தது. வெள்ளம் வந்தபோது கூட லிங்கத்துக்குப் பாதுகாப்பு கொடுக்க அதை அணைத்துக் கொண்டபோதுதான் இறைவன் வந்தாராம்.
**
மிக மகிழ்ச்சி மேடம். லிங்கம் குறித்த additional தகவல்களுக்கு மிக நன்றி
ரகு : நீங்கள் விளம்பரம் செய்கிற ஆள் இல்லை என தெரியாதா என்ன? எனக்கும் இந்த கோயில் மிக பிடித்தது
ReplyDeletesekar said...
ReplyDeleteதகவலுக்கு நன்றி. இதுபோல் தாங்கள் செல்லும் கோவில்களை பற்றி எழுதுங்கள் எங்களைபோல் மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும்.
**
நன்றி சேகர்
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். எனது புத்திரர்களுக்கும் இந்த இணைப்பு அனுப்பியிருக்கிறேன்.
வாழ்த்துகள்.
**
மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா
ஆரூர் முனா செந்திலு said...
ReplyDeleteஇது டெம்ப்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் உண்மை தான்ணே. அருமையான ஆன்மீக பதிவு.
*****
நன்றி செந்தில்.
**
ஆரூர் முனா செந்திலு said...
ReplyDeleteபோட்டோக்கள் எல்லாம் பதிவுக்காகவே திட்டமிட்டு எடுத்தது போல் தெரிகிறதே
***********
உண்மை தான் ! பதிவு எழுதும் எண்ணத்துடன் செல்வதால் நிறைய விசாரிக்கிறோம், நிறைய தெரிந்து கொள்ள முடிகிறது.
**
ஆதி மனிதன் said...
ReplyDeleteபடங்களும் தகவல்களும் அருமை.
********
நன்றி ஆதி மனிதன்
**
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteபடங்களும் கட்டுரையும் அருமை மோகன்.... ஸ்வாரசியமாகச் செல்கிறது கட்டுரை.... தொடருங்கள்....
**********
நன்றி + மகிழ்ச்சி வெங்கட்
**
ஸ்ரீராம். said...
ReplyDeleteபிரம்மாண்டக் கதவு படம் அழகு.
*****
நன்றி ஸ்ரீராம்
வித்யா said...
ReplyDeleteகடைக்கு போனீங்க சரி. புடவை வாங்கித்தரலையா:)))
படங்கள் நல்லாருக்கு. நான் சனியன்று காமாட்சியம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.
*****
வித்யா: சுடிதார் மெட்டேரியல் நிறைய வாங்கினாங்க. வாங்காம விடுவாங்களா ? :)) நன்றி
பயணம் ரொம்ப சுவாரசியமாக இருக்குங்க. தகவல்களும் அருமை.
ReplyDeleteதொடர்கிறோம்.....
கோவை2தில்லி said...
ReplyDeleteபயணம் ரொம்ப சுவாரசியமாக இருக்குங்க. தகவல்களும் அருமை.
******
நன்றி கோவை2தில்லி Madam