கோயிலில் நுழைந்தவுடன் அழகிய இரு யானைகள் நம்மை பெரிதும் கவர்கிறது. குளித்து முடித்து அழகாக மேக் அப் செய்து கொண்டு நம்மை வசீகரிக்கிறது இந்த யானைகள் இரண்டும்.
அய்யாசாமி யானைகளை தூரத்தில் இருந்து ரசிப்பார் ! கிட்டே போய் காசு தரவே சற்று பயப்பட தான் செய்வார். காசு தரும் போது பல முறை கீழே போட்டு விடுவார். இப்படி கீழே போட்டால் யானைக்கு தன்னை ஏமாற்றுகிறார்கள் என கோபம் வந்து, தன்னை மிதித்து விடுமோ என சின்ன வயது முதல் கொஞ்சம் பயம் !! எப்படியோ பயந்து கொண்டு காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கினார்.
காசு கொடுத்து விட்டு தூரம் நின்று ஆசீர்வாதம் பெறும் அய்யா சாமி |
அய்யா சாமி இரண்டு பழம் வைத்திருந்தார். ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொண்ணு குடுக்கலாம் என ! முதல் யானை ஒரு பழம் வாங்கி விட்டு அடுத்த நொடியே " இன்னொரு பழமும் எனக்கே குடு " என தும்பிக்கை நீட்ட, அய்யாசாமி பயந்து போய் பழத்தை கொடுத்து விட்டார்.
இன்னொரு யானை எமாந்திருக்க்குமே பாவம் ஆச்சே" என மறுபடி போய் இரண்டு பழம் வாங்கினார். அப்போது கடைக்கார அம்மா, " என்ன.. ஒவ்வொரு யானைக்கு ஒரு பழம் குடுக்க பாத்தீங்களா? அதுங்க ஒரே நேரத்தில் ஒரு டஜன் சாப்பிடும்" என அய்யாசாமிக்கு பல்பு கொடுத்தார்.
குட்டி யானையாக இருந்தாலும் பயந்தவாறே ரெண்டு பழங்களும் தந்து முடித்தார் அய்யாசாமி !
யானைகள் காசு தந்தால் மட்டும் தான் ஆசீர்வாதம் செய்கின்றன. பழம் தந்தால் சாப்பிட்டு விட்டு "ம்ம் அப்புறம் ?' என்கிற மாதிரி பார்க்கின்றன. ஆசீர்வாதம் செய்வதில்லை !!
****
சரி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோம் !
எப்போதும் மிக அதிக கூட்டம் இருக்கும் கோயில் இது. சாமி பார்க்க சிறப்பு தரிசனம் எதுவும் இல்லை. அனைவரும் பொது வழியில் தான் பார்க்க வேண்டும். வி. ஐ. பி. களும், கோயில் ஆட்களை தெரிந்தவர்களும் கியூவில் நிற்காமல் குறுக்கு வழியில் சென்றாலும், மற்ற படி அனைவரும் கியூவில் தான் நிற்கணும்.
மதுரை மீனாட்சி கையில் கிளி இருக்குமாம். காமாட்சி அம்மன் கையிலோ கரும்பு இருக்குமாம். எங்களுக்கு அது சரியே தெரிய வில்லை. (செம கூட்டம் !!)
இரண்டு மணி நேரத்துக்கும் மேல் கியூவில் நிற்கும் கூட்டம் |
காஞ்சியில் சிவனுக்கும் பெருமாளுக்கும் எவ்வளவோ கோயில் இருந்தும் அம்மனுக்கு என்று இருக்கும் கோயில் இது மட்டும் தானாம் ! அதனால் சுற்று வட்டத்தில் உள்ள எந்த கோயில் விசேஷம் என்றாலும், அதன் உற்சவர் ஊர்வலம், காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களை வலம் வரும் என்று கூறினார்கள்.
இங்கு அம்மனுக்கு அல்லி மலர் மாலை விசேஷமாக சாத்துகிறார்கள். அல்லி மலர் மாலை சில இடங்களில் மட்டும் தான் பார்க்க முடியும். கீழே உள்ள படத்தில் அல்லி மலர் மாலை நீங்கள் பார்க்கலாம் !
அல்லி மலர் மாலை |
காஞ்சியில் பொதுவாய் மதியம் 12 முதல் மாலை 4 வரை எந்த கோயிலும் போக முடியாது. ஆனால் நீங்கள் மதியம் 12 மணிக்கு காமாட்சி அம்மனை பார்க்க வந்து விட்டால், தரிசனம் முடிந்து வெளியே வரவே ரெண்டு அல்லது ரெண்டரை மணி ஆகிடும். பின் மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான்கு மணி முதல் மற்ற கோயில்கள் பார்க்க ஆரம்பிக்கலாம் !
***********
அடுத்து நாங்கள் தங்கிய இடத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். காஞ்சியில் நல்ல ஹோட்டல் எது என்று கேட்டபோது பலரும் MM Hotel-ஐ தான் கூறினர். போனில் அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய போது ஏ. சி ரூம் இருக்கு; ஒரு நாள் வாடகை 1500 ரூபாய் என்றனர். இந்த குளிரில் ஏ.சி தேவை இல்லை என்றாலும், வேறு வழி இல்லை என நினைத்து கொண்டு சென்றிருந்தோம்.
ஆனால் துவக்கத்திலேயே காமாட்சி அம்மன் கோயில் செல்ல, அங்கு அருகில் இந்த யாத்ரி நிவாஸ் பார்த்தேன். காஞ்சி மடம் சார்பில் நடத்தப்படும் இந்த இடத்தில் மொத்தம் 25 ரூம்கள் உள்ளன. வாடகை ஏ. சி. 600 மற்றும் நான் ஏ சி. : 300 ரூபாய் தான் !! முதலில் ரூம் இல்லை என்றார்கள். காஞ்சி மடத்திலிருந்து முன்பே சொன்னால் தான் ரூம் கிடைக்குமாம் ! நான் " லக்கேஜ் இங்கு வைத்து விட்டு செல்கிறோம். மாலை வரும் போது ரூம் இருந்தால் தாருங்கள். இல்லா விடில் வேறு ஹோட்டல் சென்று விடுகிறேன்" என்றேன். ஒத்து கொண்டார்கள். பின் மாலை, நாங்கள் வரும் முன்னே எங்களுக்கு போன் செய்து ரூம் இருப்பதை உறுதி செய்தார்கள்.
மிக டீசன்ட்டான ரூம். மூந்நூறே ரூபாய் !! இன்னொரு படுக்கை வேண்டுமானால் அதற்கு நூறு ரூபாய் ! அவ்வளவு தான் செலவு !
நாங்கள் சென்ற போது கீழே உள்ள ஹாலில் இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. அதன் பேனர் மாட்டப்பட்டுள்ளது |
கண் மருத்துவ முகாம் குறித்து யாத்ரி நிவாஸ் வெளியே மாட்ட பட்ட பேனர் |
காஞ்சிபுரத்தில் ஆங்காங்கு சில குதிரை வண்டிகளை காண முடிந்தது. கிளம்பும் முன் ஒரு முறையாவது குதிரை வண்டி சவாரி செய்ய வேண்டும் என நினைத்தோம் (போய் ரொம்ப நாள் ஆச்சு !!) முடிய வில்லை !
குதிரை வண்டி சவாரி |
காஞ்சி கோயில் கோபுரங்களும் அதன் முன்னே பறக்கும் பறவைகளும் |
தங்க வேண்டுமெனில் நிச்சயம் இங்கு தங்கலாம். சம்பந்த பட்ட நபர் மொபைல் எண் தந்து உங்கள் நண்பர்கள் வேண்டுமானால் முன்பே சொல்லி விட்டு வர சொல்லுங்கள் என்றார். மொபைல் எண் பொதுவில் பகிர முடியாது. நீங்கள் செல்வதாக இருந்தால், அவர் பெயர், போன் நம்பர் என்னிடம் பெற்று கொள்ளலாம்.
அடுத்த பதிவில்
காஞ்சியில் அவசியம் செல்ல வேண்டிய மெஸ்
வீட்டுக்கு தேவையான Very very tasty அரிசி அப்பளம் உள்ளிட்டவை கிடைக்கும் இடம்
இந்த படத்தில் யாருக்கு மாலை போடுகிறார் அய்யா சாமி ?
இந்த கேள்விகளுக்கு விடை அடுத்த வெள்ளியன்று வெளியாகும் பதிவில் தெரிய வரும் !
*****
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!
இந்த படத்தில் யாருக்கு மாலை போடுகிறார் அய்யா சாமி ?
ReplyDeleteகிருபானந்த வாரியார்??
அருமையான பகிர்வு.. அழ்கான படங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteசாதாரணமாக காஞ்சிபுரத்திற்கு அதிகாலையில் கிளம்பிப்போய் கோவில்களை தரிசித்துவிட்டு இரவு திரும்பிவிடுவோம்.
ReplyDeleteஉங்க பதிவை படித்ததும் இது போல ஒரிரு நாட்கள் அங்கும் தங்கி நிதானமாக கோவில்களுக்கு செல்லலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது. மிக்க நன்றி மோகன்.
மிகச்சிறப்பாக உங்க பயணத்தை பற்றி எழுதுகிரீர்கள், தொடருங்கள் படிக்க காத்திருக்கிறேன்.
“ஆனைகளுக்கு அய்யாசாமி பழம் கொடுத்த கதை” சுவாரஸ்யம்:)!
ReplyDeleteதகவல்களும் பகிர்வும் நன்று.
அருமையான பதிவு.
ReplyDeleteஒரு சுற்றுலா பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'இலக்கணம்' இது தான்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அருமையான பகிர்வு... காஞ்சி சென்று வந்த உணர்வு...
ReplyDeleteஇந்தமுறை நாங்கள் சென்றபோது யானைகள் குளியலில் இருந்தனவாம். ஜூனியர் ரொம்ப மிஸ் பண்ணான்:(
ReplyDeleteகட்டுரை நல்லா வந்திருக்கு.
நல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கு பதிவு. அய்யா, சாமி, சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க!
ReplyDeleteரொம்பவும் சுவாரஸ்யமான, நல்ல தகவல்கள்! தங்குமிடம் பற்றி எழுதியிருந்தது அங்கு பயணிப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்!!
ReplyDeleteநம்ம ஆளுங்க ஆஸ்ரேலியாவில் வாங்கு வாங்கு என வாங்கிக்கட்டுகின்றார்களே.. அது பற்றி பிளீஸ்
ReplyDeleteகிருபானந்த வாரியார்.
ReplyDeleteமற்ற கோவில்களுக்கு விட காமாட்சி அம்மன் கோவிலுக்கு சங்கர மடத்தில் நிறைய முக்கியத்துவம் தருவார்கள், யானைகளின் பராமரிப்பு உட்பட. நானும் இதுவரை யானைக்கு பழமோ காசோ கொடுத்ததில்லை. பயமில்ல, only fear :))
யாத்ரி நிவாஸ் பார்த்திருக்கிறேன். ஆனால் கட்டணம் பற்றிய செய்தி எனக்கு புதிது.
கோவிலுக்கு சென்று வந்த திருப்தி, படங்களும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்! இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி! அன்புடன் அழைக்கிறேன் : "பாராட்டுங்க! பாராட்டப்படுவீங்க!"
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஇந்த படத்தில் யாருக்கு மாலை போடுகிறார் அய்யா சாமி ?
கிருபானந்த வாரியார்??
***
ஆம் சரியா சொல்லிட்டீங்க நன்றி
இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅருமையான பகிர்வு.. அழ்கான படங்கள்.. பாராட்டுக்கள்..
***
நன்றி இராஜராஜேஸ்வரி !!
RAMVI said...
ReplyDeleteஉங்க பதிவை படித்ததும் இது போல ஒரிரு நாட்கள் அங்கும் தங்கி நிதானமாக கோவில்களுக்கு செல்லலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
மிகச்சிறப்பாக உங்க பயணத்தை பற்றி எழுதுகிரீர்கள், தொடருங்கள் படிக்க காத்திருக்கிறேன்.
***
நன்றி ராம்வி. ஆம். நிச்சயம் தங்கி பார்த்தால் பொறுமையாய் நன்கு பார்த்து விட்டு வரலாம்
ராமலக்ஷ்மி said:
ReplyDelete“ஆனைகளுக்கு அய்யாசாமி பழம் கொடுத்த கதை” சுவாரஸ்யம்:)!
தகவல்களும் பகிர்வும் நன்று.
**
நன்றி ராமலட்சுமி
Rathnavel said...
ReplyDeleteஅருமையான பதிவு.
ஒரு சுற்றுலா பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'இலக்கணம்' இது தான்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
***
தங்கள் வார்த்தைகளும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ஐயா
சங்கவி said...
ReplyDeleteஅருமையான பகிர்வு... காஞ்சி சென்று வந்த உணர்வு...
***
நன்றி சங்கவி
This comment has been removed by the author.
ReplyDeleteவித்யா said...
ReplyDeleteஇந்தமுறை நாங்கள் சென்றபோது யானைகள் குளியலில் இருந்தனவாம். ஜூனியர் ரொம்ப மிஸ் பண்ணான்:(
கட்டுரை நல்லா வந்திருக்கு.
***
அடடா குட்டி பையன் யானையை பாக்கலையா ? :(((
This comment has been removed by the author.
ReplyDeleteகே. பி. ஜனா... said...
ReplyDeleteநல்ல இன்ட்ரஸ்டிங்கா இருக்கு பதிவு. அய்யா, சாமி, சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க!
**
ஜனா சார் மிகுந்த மகிழ்ச்சி. நன்றி. வாரா வாரம் வெள்ளியன்று இந்த பதிவு வருது
மனோ சாமிநாதன் said...
ReplyDeleteரொம்பவும் சுவாரஸ்யமான, நல்ல தகவல்கள்! தங்குமிடம் பற்றி எழுதியிருந்தது அங்கு பயணிப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்!!
***
மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்
This comment has been removed by the author.
ReplyDeleteஒரு வாசகன் said...
ReplyDeleteநம்ம ஆளுங்க ஆஸ்ரேலியாவில் வாங்கு வாங்கு என வாங்கிக்கட்டுகின்றார்களே.. அது பற்றி பிளீஸ்
***
நம்மை பெரிய ஆள் என்றோ கருத்து கந்தசாமி என்றோ கேக்குறீங்க. ரைட்டு. சொல்றேன்
**
இங்கிலாந்தில் வாங்கிய அடி தான் பெரிய அடின்னு நினைச்சோம். இப்போ ஆஸ்திரேலியாவில் கிடைப்பது மரண அடியா இருக்கு ! இத்தனைக்கும் அனைத்து பெருந்தலைகளும் ஆடுறாங்க ! இம்முறையும் 4-0௦ என தோற்பது உறுதி.
இங்கிலாந்திலாவது டிராவிட் நிறய செஞ்சுரி அடித்தார். அதை பார்த்து ஆறுதல் அடைந்தோம், இந்த முறை டோட்டல் டேமேஜ்.
மூன்றாவது டெஸ்ட் மூன்றாம் நாளே முடிஞ்சிடும்னு நினைக்கிறேன். முதல் ரெண்டு டெஸ்ட்டும் கடைசி (5 வது) நாள் கூட போகலை.
இங்கிலாந்தில் ஒரு மேட்ச்சும் ஜெயிக்காம திரும்பினோம். ஆனால் இங்கு ஒரு நாள் மேட்சில் கொஞ்சமாவது ஜெயிப்போம் என நினைக்கிறேன்
மேலதிக தகல்வளுக்கு நன்றி ரகு
ReplyDeleteநன்றி தனபாலன் அவர்களே
ReplyDeleteசில கமெண்டுகள் ஒரு முறைக்கு மேல் வந்ததால் அவற்றை டெலிட் செய்துள்ளேன் !!
ReplyDeleteகாஞ்சி செல்லும் போது தங்கள் பதிவில் தந்த தகவலக்ள் உபயோகமாக இருக்கும் சார்.
ReplyDeleteயானைக்கு காசாவது, பழமாவது அருகில் செல்லவே பயம்....:))
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
ஒரு முறை அலுவல் விஷயமாக வந்து காஞ்சியில் இரண்டு நாட்கள் தங்கி இருக்கிறேன். அந்த நாட்களில் ஓரிரு இடங்கள் மட்டுமே செல்ல முடிந்தது. இன்னும் ஒரு முறை செல்ல வேண்டும்.... தாங்கள் தந்த விவரங்கள் பயன்படும் மோகன்.....
ReplyDeleteஅட! தங்கும் இடம் நல்லா இருக்கே! தெரிஞ்சுருந்தால் ரெண்டு நாள் தங்கி நிதானமாப் பார்த்திருக்கலாம். சுத்து வட்டாரத்தில் ஏகப்பட்ட கோவில்கள் இருக்காம்!
ReplyDeleteசெப்டம்பர் மாசம் ஒரு விஸிட் இருக்கு.
உங்களிடம் இருந்து தொலைபேசி எண் வாங்கிக்குவேன். முன்கூட்டிய நன்றி.
தங்குமிடம் குறித்த விவரம் கண்டிப்பா பயனுள்ளதா இருக்கும்.
ReplyDeleteபயணம் சுவாரஸ்யமா போகுது..
நன்றி கோவை டு தில்லி மேடம். யானைன்னா உங்களுக்கு(ம்) பயமா?
ReplyDeleteநன்றி வெங்கட். மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி துளசி டீச்சர். தொலை பேசி எண் நீங்கள் செல்லும் போது வாங்கி கொள்ளுங்கள்
ReplyDeleteநன்றியும் மகிழ்ச்சியும் அமைதி சாரல் மேடம்
ReplyDeleteஅருமையான பகிர்வு.. அழ்கான படங்கள்.. பாராட்டுக்கள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete