**********
நீயா நானா நிகழ்ச்சியில் பங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதிலிருந்து துவங்குவோம்.
நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விரும்புவோர் உங்களை குறித்த தகவல்களை nnshow@gmail.com என்கிற அவர்கள் மெயில் ஐ.டி.க்கு அனுப்ப வேண்டும். கூடவே போட்டோவும் அனுப்பினால் நலம்.
இப்படி அனைவரும் அனுப்பும் தகவல்களை எல்லாம் அவர்கள் தங்கள் டேட்டா பேசில் பதிந்து விடுகிறார்கள். பின் அவரவரும் குறிப்பிட்டுள்ள ஆர்வத்தை பொறுத்து அது சம்பந்தமான தலைப்பு வந்தால் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வார்கள். அப்போது நீயா நானா டீமில் இருந்து பேசுகிறோம் என தெரிவித்து விட்டு, தலைப்பை சொல்லி கருத்தை கேட்பார்கள். நீங்கள் முதலில் எந்த அணியில் (For or against) பேச விரும்புகிறீர்கள் என சொல்ல வேண்டும். சில நேரம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரிவில் பேச ஏற்கனவே நிறைய பேர் இருப்பார்கள். அப்போது நீங்கள் " சரி நான் அதற்கு எதிர் தலைப்பில் பேசுகிறேன்" என்றால், " இல்லீங்க. நீங்க முதலில் சொன்னது தான் உங்க உண்மையான வியூ. அதற்கு எதிர் அணியில் பேசினால், சரியாக இருக்காது " என சொல்லி விடுவார்கள் !!
தலைப்பு பொருந்தி, போனில் நீங்கள் சொன்ன கருத்துகளும் பிடித்தால், மீண்டும் தொடர்பு கொண்டு என்றைக்கு படப்பிடிப்பு, நீங்கள் எத்தனை மணிக்கு வர வேண்டும் போன்ற தகவல்கள் தருவார்கள். இப்படி பேசுவது பெரும்பாலும் Visual Communication படிக்கும், அல்லது அப்போது தான் படித்து முடித்து கல்லூரி பெண்களாக இருக்கும் !
நீங்கள் பெரிய சொற்பொழிவு அல்லது உரை நிகழ்த்துவது போல் தயார் செய்து கொண்டு செல்வது சரிப்படாது. அந்த தலைப்பு குறித்து உங்கள் கருத்துகள், உங்கள் அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்கும் நிகழ்ந்த நிஜ அனுபவங்கள் ஒரு தாளிலோ மனதிலோ குறித்து வைத்து கொள்ளலாம். மற்றபடி பேசுவது அங்கு நடக்கும் விவாதத்தை ஒட்டியே அமையும்.
**********
நான் பேசியபோது எடுத்த சில வீடியோக்கள்.. புத்தகம் வாசிக்கும் பழக்கம் தேவையா என்கிற தலைப்பில் பேசிய போது எடுத்தது ! நம்ம கை காமிராவில் எடுத்ததால் quliaty சுமாராக இருக்கும். பொருத்தருள்க !
கோபி பாராட்டுகிற க்ளிப்பிங் கீழே
நீயா நானா ஒரு நாளைக்கு மூன்று ஷோ ஷூட்டிங் நடக்கிறது ! முதல் ஷோ காலை பதினோரு மணிக்கு துவங்கி மதியம் மூன்று மணி போல் முடிப்பார்கள். பின் ஓரிரு மணி நேரம் ப்ரேக் விட்டு மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்கு அடுத்த ஷோ துவங்குவார்கள். இது முடிய ஒன்பதரை அல்லது பத்து மணி ஆகும். அடுத்த ஷோ இரவு பதினோரு மணிக்கு துவங்கி நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணிக்கு முடியும் ! (என்ன கண்ணை கட்டுதா?)
ஒரு முறை செட் போட்டால், குறைந்தது ஏழு முதல் பத்து நாள் வரை ஷூட்டிங் நடக்கிறது.. தினம் மூன்று ஷோவாக...இப்படி ஒரே வாரத்தில் 20 , 25 பகுதிகளை எடுத்து முடித்து விட்டு அதைதான் அடுத்த சில மாதங்களுக்கு ஒளி பரப்புகிறார்கள் !!
நீங்கள் இரண்டாவது ஷோவில் பேசுகிறீர்கள் என்றால் மதியம் ஒரு மணிக்கு வாருங்கள் என்பார்கள். நீங்கள் அலறி அடித்து ஒரு மணிக்கு போனால் முதல் ஷோ வில் பாதி கூட முடிந்திருக்காது. ஒரு விதத்தில் ஷோ எப்படி நடக்கிறது, பேசும் வாய்ப்பு எப்படி கிடைக்கிறது என்பதை வெளியே உட்கார்ந்து பார்த்தால், நீங்கள் பேச உதவியாக இருக்கும் தான் !
ஒரு மணிக்கு சென்ற நீங்கள் மூன்று மணி வரை முதல் ஷூட்டிங் வேடிக்கை பார்ப்பீர்கள். பின் இரண்டு மணி நேரமாவது ப்ரேக் விடுவார்கள். (தொடர்ந்து பேசும் கோபிநாத் குரலுக்கு ரெஸ்ட் தேவை !!) நான்கு மணி நேர காத்திருப்புக்கு பின் செட்டில் உங்களை உட்கார வைப்பார்கள்.
பின் அசிஸ்டண்டுகள் நீங்கள் எப்படி பேச வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்லுவார்கள். மைக்கை அடுத்தவரிடமிருந்து பிடுங்காதீர்கள் என்பது முக்கிய குறிப்பாய் இருக்கும்.
அப்புறம் கோபி வருவார். அவருக்கு ஒருவர் கோட் மாட்டி விடுவார். (ஆம் சினிமா நடிகர் போல் இன்னொருவர் கோட் மாட்டி விடுவது, மேக் அப் போடுவது நடக்கும் !)
துவக்கத்தில் தலைப்பு குறித்து கோபி 15 நிமிடமாவது பேசுவார். (அதில் முக்கால் வாசி எடிட் ஆகி கொஞ்சம் தான் ஒளி பரப்பாகும் !) பின் ஏதேனும் ஒரு கேள்வி + அதற்கான பதில்களை கேட்டு நிகழ்ச்சி ஆரம்பிப்பார். இப்படி கேள்விகள் கேட்கும் போது உங்களுக்கு அது பற்றி கருத்து இருந்தால் கையை தூக்கினால் மைக் உங்களுக்கு வரலாம். ஆனால் நிறைய பேர் இப்படி பேச விரும்புவதால் மைக் எப்போது வரும் என சொல்ல முடியாது. மைக் உங்கள் கைக்கு வர சிறந்த வழி உங்கள் இரு பக்கமும் அமர்ந்துள்ளோர் பேசி முடித்ததும் அவரிடமிருந்து நீங்கள் மைக் வாங்கி பேசுவது தான்.
குறிப்பிட்ட சில கருத்துக்கள் ஒட்டி விவாதம் நகரும் போது உங்களுக்கு அது பற்றி சொல்ல நிச்சயம் நல்ல பாயின்ட் இருக்கும். மைக் மைக் என்று கேட்டாலும் அப்போது கிடைக்காது. பின் உங்கள் அருகில் இருப்பவர் மூலம் மைக் வரும்போது உங்களுக்கு அதிக ஈடு பாடு இல்லாத விஷயம் போய் கொண்டு இருக்கும். நீங்கள் பழைய கேள்வியை நினைவு படுத்தி பேச ஆரம்பித்தால் " அந்த டாபிக் முடிஞ்சுடுச்சு. இப்போ உள்ளதை பேசுங்க" என்பார்கள். இது தான் பேசுவதில் உள்ள பெரிய சிரமம் ! சரியான நேரத்தில் மைக் உங்களுக்கு வரா விடில் உங்கள் கருத்துகளை நன்கு சொல்ல முடியாது !
தலைப்பு குறித்த கேள்விகளாக கேட்டு அனைவர் கருத்தும் கேட்கும் ரவுண்டுகளே நான்காவது இருக்கும் என்பதால் நீங்கள் நான்கு முறை பேச வாய்ப்பு வரலாம். ஒவ்வொரு ரவுண்டிலும் பேச முயன்றால்தான் சில எடிட் ஆனால் கூட மீதம் சில வரும். நீங்கள் பேசியதே இரு முறை தான் எனில் அதில் ஒன்று எடிட் ஆகி ஒரு முறை மட்டும் வர வாய்ப்பு உண்டு. ஓரிரு முறை மட்டுமே பேசினால், உங்கள் நண்பர்கள் "நீ பேசுனியா என்ன? நான் பார்க்கவே இல்லியே " என துக்கம் விசாரிக்கும் நிலைமை வந்து விடும் !
அடுத்து மைக் கிடைத்து பேசும் போது ஒரு சில நிமிடங்களாவது பேசுகிறது போல் பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் பேச ஆரம்பித்து 15 வினாடிகள் கழித்து தான் கேமரா உங்கள் க்ளோஸ் அப் காட்டும். 30 வினாடிக்கு குறைவாக பேசினால் நீங்கள் தான் பேசினீர்கள் என்பது டிவியில் பார்த்தால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களை கிட்டே காண்பிப்பதற்குள் அடுத்த நபரிடம் கேமரா சென்று விடும் !
டிவியில் வருகிற மாதிரி ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ப்ரேக் விட மாட்டார்கள். ஓரிரு மணி நேரம் விவாதம் தொடர்ந்து நடக்கும். கடைசியில் பரிசெல்லாம் குடுத்து முடித்த பிறகு தான் ப்ரேக்குக்கும், பிரேக் முடிந்து திரும்ப வருவதற்கும் கோபி ஒரே நேரத்தில் பேசுவார். (அடுத்தடுத்து அவர் இதை பேசுவதை பார்க்க வேடிக்கையாக தான் இருக்கும் !)
லாஸ்ட் பட் நாட் தி லீஸ்ட்: அவர்கள் ஒவ்வொரு முறை ப்ரேக் விடும் போதும் ரெஸ்ட் ரூம் சென்று வந்து விடுவது நல்லது. ஒரு முறை அய்யாசாமி கலந்து கொண்ட போது ஏசி குளிரில் இது பெரிய பிரச்சனை ஆகி விட்டது. " இதோ பிரேக் விட்டுடுவாங்க. போயிடலாம், போயிடலாம் " என பொறுத்து பொறுத்து பார்த்து " டேய் நிறுத்துறீங்களா? இல்லியா? டேன்க் வெடிச்சிடும்பா " என அய்யா சாமி கத்தும் முன் நல்ல வேளையாக ப்ரேக் விட, மிகுந்த கோபத்துடன் முதல் ஆளாக அய்யாசாமி செட்டை விட்டு வெளியேறினார் ..ரெஸ்ட் ரூமுக்கு !
தங்களின் அனுபவத்தை அழகாக அருமையாக சொல்லி உள்ளீர்கள்! பாராட்டுக்கள் ! நன்றி நண்பரே!
ReplyDeleteகுறிப்பிட்ட சில கருத்துக்கள் ஒட்டி விவாதம் நகரும் போது உங்களுக்கு அது பற்றி சொல்ல நிச்சயம் நல்ல பாயின்ட் இருக்கும். மைக் மைக் என்று கேட்டாலும் அப்போது கிடைக்காது. பின் உங்கள் அருகில் இருப்பவர் மூலம் மைக் வரும்போது உங்களுக்கு அதிக ஈடு பாடு இல்லாத விஷயம் போய் கொண்டு இருக்கும். நீங்கள் பழைய கேள்வியை நினைவு படுத்தி பேச ஆரம்பித்தால் " அந்த டாபிக் முடிஞ்சுடுச்சு. இப்போ உள்ளதை பேசுங்க" என்பார்கள்.
ReplyDelete...... என்ன கொடுமை சார், இது!!!!
என்ன கொடுமை சார், இது!!!!//
ReplyDeleteஜனநாயகக் கொடுமை டீச்சர் :))
This comment has been removed by the author.
ReplyDeleteசுவையான அனுபவம்.
ReplyDeleteவிரிவாக, ரசிக்கும்படியாக தொகுத்து சொல்லியிருக்கீங்க.
கடைசியில் அய்யாசாமி அனுபவம்.. ஹாஹா...
பகிர்ந்தமைக்கு நன்றிங்க..
பல டிவி நிகழ்ச்சிகள் முன்கூட்டியே ரிகர்சல் பார்த்து, என்ன பேசவேண்டும் என்பது உட்பட செட் செய்து செயற்கையாக எடுப்பார்கள்.
ReplyDeleteநீங்க சொன்னதுபோல இந்த நிகழ்ச்சி அவ்வப்போது விவாதம் செய்து ஷூட் செய்வது ஆரோக்யமானதாக இருக்கிறது.
thx for sharing
ReplyDeletethx for sharing
ReplyDeleteஅருமையாக பேசியிருக்கிறீர்கள்!!!
ReplyDeleteஹா ஹா ஹா ஹா நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்...!!!
ReplyDelete//மைக்கை அடுத்தவரிடமிருந்து பிடுங்காதீர்கள் என்பது முக்கிய குறிப்பாய் இருக்கும். //
ReplyDelete:))!
இந்த நிகழ்ச்சி வெளியான போது பார்த்திருக்கிறேன் தங்கள் ப்ளாகில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம். எப்படி கலந்து கொள்வது என குறிப்புகள் வழங்கியிருப்பது சிறப்பு.
அழகான அனுபவம்...
ReplyDeleteஇப்போதைக்கு டிவியில் நான் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி நீயா நானாதான். ஆனால் பங்கேற்கும் ஆர்வமெல்லாம் இல்லை :)
ReplyDeleteநிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது..... பங்கேற்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும்...
ReplyDeleteகலந்துக்கொண்டதோடு இல்லாமல் எப்படி பங்குபெறுவது, எப்படி பேசுவது என்று அ முதல் ஃ வரை க்ளாஸ் எடுத்திருக்கிறீர்கள். சூப்பர்!
ReplyDeleteஅனைவருக்கும் பயன் படும்படியாக மிக அழகாக
ReplyDeleteதங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி
// பேசும் போது ஒரு சில நிமிடங்களாவது பேசுகிறது போல் பார்த்து கொள்ள வேண்டும். நீங்கள் பேச ஆரம்பித்து 15 வினாடிகள் கழித்து தான் கேமரா உங்கள் க்ளோஸ் அப் காட்டும். 30 வினாடிக்கு குறைவாக பேசினால் நீங்கள் தான் பேசினீர்கள் என்பது டிவியில் பார்த்தால் உங்களுக்கு மட்டும் தான் தெரியும். உங்களை கிட்டே காண்பிப்பதற்குள் அடுத்த நபரிடம் கேமரா சென்று விடும் ! //
ReplyDeleteமிக்கவும் நல்ல ஆலோசனை. பங்கேற்பவர்கள் அனைவரும் தன்னுடைய கருத்தும் முகமும் டிவியில் தெரிய வேண்டும் என்கிற ஆசையில் தான் பல்வேறு சிரமங்களைத் தாண்டிக் கலந்துக் கொள்கிறார்கள். அப்படி கலந்துக் கொள்பவர்கள் ஒன்றிரண்டு முறையாவது டிவியில் தெரிந்தால் தான் கலந்துக் கொண்டவர்களுக்கும் அவரின் பேச்சைக் கேட்க/பார்க்க டிவியின் முன் அமர்ந்திருக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இப்படியே தொடர்ந்து ஷூட்டிங் நடந்தால் கோபிநாத் எப்போது ரெஸ்ட் எடுப்பார்? எப்போது விஜய் ரிவியைப் போட்டாலும் கோபிநாத்தே எதாவது ஒரு நிகழ்ச்சியில் தெரிகிறார்....
ReplyDelete//அப்புறம் கோபி வருவார். அவருக்கு ஒருவர் கோட் மாட்டி விடுவார்//
விஜயின் "பிரண்டை போல யாருமச்சான்" நிகழ்ச்சியில் ஜீவா இவரின் கோட்டைப்பற்றி கலாத்ததைப் பார்த்தீர்களா?
அப்புறமா அஸ்ரேலியாவில் நம்மவர்கள் வாரி வழங்குகின்றார்கள் பார்தீர்களா?....
மன்னிக்கவும் பதிவிற்க்கு சம்பந்தமில்லாத பின்னூட்டம் போட்டதிற்க்கு, என்னசெய்வது நான் படிக்கும் பிளாக்குகளில் உங்களைத் தவிர வேறு யாரும் கிரிக்கட் பற்றி எழுதுவதில்லையே.....
கிரிக்கட் பற்றி ஏதாவது தமிழ் பிளாக் இருக்கின்றதா? அறிமுகப்படுத்தமுடியுமா?
நீயா நானா குறித்து மிகவும் சிறப்பான பதிவை எழுதி, தமிழ்மணம் சூடான இடுகையில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டுக்கள் சார்!
ReplyDeleteஅட! அப்பிடியா??
ReplyDeleteஅட! அப்பிடியா??
ReplyDeleteஉங்கள் அனுபவங்கள் - நிஜமாகவே நன்றாக இருக்கிறது :))))
ReplyDeleteஒரு முறை தில்லியில் நடந்த ஒரு “அரட்டை அரங்கம்” படப்பிடிப்பு பார்த்தபோது முதல் 30 நிமிடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வெளியே வந்தவர்கள் நிறைய பேர்....
நல்ல பகிர்வு உங்கள் சுவையான நடையில்... அய்யாசாமியின் அட்டகாசம்... ஹய்யோ ஹய்யோ...
ReplyDeleteஎன்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது.. விலாவரியா சொல்லிட்டிங்க..
ReplyDeleteஅனுபவப் பகிர்வு நல்லாருக்கு. வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி தனபாலன்
ReplyDeleteசித்ரா: ஆமாங்கோ. அப்டி தான் நடக்கும் !
ReplyDeleteசங்கரு: சித்ரா ரொம்ப நாள் கழிச்சு வந்து கமன்ட் போடுறாங்க. விடுங்கப்பா. !
ReplyDeleteஇந்திரா said...
ReplyDeleteபல டிவி நிகழ்ச்சிகள் முன்கூட்டியே ரிகர்சல் பார்த்து, என்ன பேசவேண்டும் என்பது உட்பட செட் செய்து செயற்கையாக எடுப்பார்கள்.
********
ஆமாம் இந்திரா. அரட்டை அரங்கம் உள்ளிட்டவை அப்படி தான் எடுப்பாங்க. இந்த நிகழ்ச்சியின் சிறப்பே Spontaneous reaction தான்
karurkirukkan said...
ReplyDeletethx for ஷேரிங்
***
நன்றி karurkirukkan !
Payanulla Pathivu. Arumai Sir!
ReplyDeleteTM 11.
உங்கள் அனுபவக் குறிப்புகளையும் பகிர்ந்துருக்கறது கண்டிப்பா இதுல கலந்துக்க நினைக்கிறவங்களுக்கு பிரயோசனமா இருக்கும்.
ReplyDelete"மேக்கிங் ஆஃப் நீயா நானா"ன்னு ஒரு எபிசோட் ஒளிபரப்புனாக் கூட செமயாத்தான் இருக்கும் :-)
சரவணகுமரன் said...
ReplyDeleteஅருமையாக பேசியிருக்கிறீர்கள்!!!
***********
நன்றி சரவண குமரன்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஹா ஹா ஹா ஹா நல்ல அனுபவம் வாழ்த்துக்கள்...!!!
*******
நன்றி மனோ
**
//ராமலக்ஷ்மி said: இந்த நிகழ்ச்சி வெளியான போது பார்த்திருக்கிறேன் தங்கள் ப்ளாகில் வெளியிட்ட அறிவிப்பின் மூலம். எப்படி கலந்து கொள்வது என குறிப்புகள் வழங்கியிருப்பது சிறப்பு.//
ReplyDeleteஉங்களுக்கு நல்ல நியாபக சக்தி. நன்றி ராமலட்சுமி
**
சங்கவி said...
ReplyDeleteஅழகான அனுபவம்...
********
நன்றி சங்கவி
ரகு said...
ReplyDeleteஇப்போதைக்கு டிவியில் நான் விரும்பி பார்க்கும் ஒரே நிகழ்ச்சி நீயா நானாதான். ஆனால் பங்கேற்கும் ஆர்வமெல்லாம் இல்லை :)
***********
ரகு: ரைட்டு :)) நன்றி
கோவை2தில்லி said...
ReplyDeleteநிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது..... பங்கேற்க நினைப்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும்...
***
நன்றி கோவை டு தில்லி மேடம்
யுவகிருஷ்ணா said...
ReplyDeleteகலந்துக்கொண்டதோடு இல்லாமல் எப்படி பங்குபெறுவது, எப்படி பேசுவது என்று அ முதல் ஃ வரை க்ளாஸ் எடுத்திருக்கிறீர்கள். சூப்பர்!
**
மிக மகிழ்ச்சி நன்றி லக்கி
Ramani said...
ReplyDeleteஅனைவருக்கும் பயன் படும்படியாக மிக அழகாக
தங்கள் அனுபவங்களை பதிவு செய்துள்ளீர்கள்
பகிர்வுக்கு நன்றி
********
நன்றி ரமணி அவர்களே
அமைதி அப்பா said...
ReplyDeleteநீயா நானா குறித்து மிகவும் சிறப்பான பதிவை எழுதி, தமிழ்மணம் சூடான இடுகையில் முதலிடம் பெற்றமைக்கு பாராட்டுக்கள் சார்!
**
நன்றியும் மகிழ்ச்சியும் அமைதி அப்பா
வாசகன்: கிரிகெட் பற்றி மட்டுமே நிறைய எழுதும் பதிவர்கள் உள்ளனர். தனி மெயிலில் உங்களுக்கு பின் தெரிவிக்கிறேன் (உடனே நினைவில் வரலை)
ReplyDeleteஅருணா மேடம்: ஆமாங்கோ நன்றி
ReplyDeleteவெங்கட்: நீங்க அரட்டை அரங்கம் படப்பிடிப்பு பார்த்துருக்கீங்களா? ரைட்டு. வருகைக்கு நன்றி
ReplyDeleteRathnavel said...
ReplyDeleteஅருமை.
வாழ்த்துகள்.
********
நன்றி ஐயா
BalHanuman said...
ReplyDeleteநல்ல பகிர்வு உங்கள் சுவையான நடையில்... அய்யாசாமியின் அட்டகாசம்... ஹய்யோ ஹய்யோ...
**********
நன்றி பால ஹனுமான். ஆமாம் இந்த அய்யாசாமி லூட்டி தாங்க முடியலை
ரிஷபன் said...
ReplyDeleteஎன்னதான் நடக்குதுன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்தது.. விலாவரியா சொல்லிட்டிங்க..
****
நன்றி ரிஷபன்
வித்யா said...
ReplyDeleteஅனுபவப் பகிர்வு நல்லாருக்கு. வாழ்த்துகள்..
***
நன்றி வித்யா
துரைடேனியல் said...
ReplyDeletePayanulla Pathivu. Arumai Sir!
*****
நன்றி துரை டேனியல்
***
அமைதி சாரல்: நன்றி. மகிழ்ச்சி
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்பப் பொறுமை வேணும்போல!! :-)))))
ReplyDeleteஉங்களுடைய ஸ்பெஷாலிட்டி இந்தப் பதிவிலும் தெரிகீறது. எந்த நிகழ்ச்சி/பயண அனுபவம் என்றாலும், அதை மட்டும் பகிராமல், அதற்கு எப்படி மற்றவர்கள் தயாராவது என்பதையும் விளக்கமாகச் சொல்லி ஆர்வத்தைத் தூண்டுகிறீர்கள். குட் அப்ரோச்!!
ஹுசைனம்மா said
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்பப் பொறுமை வேணும்போல!! :-)))))
***
சரியா சொன்னீங்க ஹுசைனம்மா. முதல் முறை ஷூட்டிங் பார்க்கிறோம் என்றால் அந்த ஆச்சரியத்தில் நேரம் போகும். இரண்டாம் முறை போனால் அலுத்து போய் விடும்
நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி விமலன்
ReplyDelete**
எனது பதிவுகளில் மூவாயிரம் பேருக்கும் மேல் படித்த ஒரே பதிவு இப்போது வரை இது மட்டும் தான் !ப்ளாக் உள்ளே புதிதாய் நுழைவோர் இந்த பதிவை வாசிக்காமல் போவதில்லை என நினைக்கிறேன்.
நீயா நானாவின் ரீச் ஆச்சரியமாய் உள்ளது
வணக்கம்
ReplyDeleteதெளிவான கட்டுரை , நன்றி
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....
This comment has been removed by the author.
ReplyDeleteநீங்கள் குறிப்பிட்டது போல என் முதல் வருகையில் நான் படித்த முதல் பதிவு இதுதான்.
ReplyDeleteசினிமா ஒளிப்பதிவு போலத் தான் இதுவும் போலிருக்கிறது. எல்லாவற்றையும் எடுத்துவிட்டு, வெட்டி ஒட்டி சுவாரஸ்யமாகக் கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.
பாவம் எடிட்டர். அவருக்கு எத்தனை மணி நேர வேலையோ?
பாராட்டுக்கள்.
பாவம் எடிட்டர். அவருக்கு எத்தனை மணி நேர வேலையோ?
ReplyDelete