Monday, January 9, 2012

வானவில் : ராஜபாட்டையும் இந்திய கிரிக்கெட் அணியும்

பார்த்த படம்: ராஜபாட்டை

"சூர மொக்கை" அப்படின்னா அர்த்தம் தெரியுமா? தெரியாட்டி இந்த படம் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். எத்தனயோ பேர் எப்படி எல்லாமோ சொன்னாங்க. கேக்கணுமே !! சுசீந்திரம் அப்படிங்கிறவர் நல்ல டைரக்டர். மூணு படம் சூப்பரா எடுதுருக்கார் அப்படின்னு நம்ம்ம்பி பாத்தேன். கொடுமை !

இந்த படம் வரும் முன்பே, 2011 டாப் - 10 மொக்கை படங்கள் லிஸ்ட் போட்டுட்டேன். இல்லாட்டி நிச்சயம் இந்த படம் அதில் இடம் பிடிச்சிருக்கும்.

எல்லா தமிழ் படங்களின் கிளிச்சேக்களும் ஒருங்கே உள்ளடக்கிய இந்த படம் "spoof " வகையில் வந்திருக்கலாம்.

ஹீரோயினை இவ்வளவு மோசமா யாரும் பயன் படுத்தியிருக்க மாட்டார்கள் ! துணை நடிகை போல் அவ்வப்போது வந்து போகிறார் ! பல காட்சிகளில் வந்து பேசாமல் நிற்கிறார் ! ஷூட்டிங்கில் பல நாள் சும்மா தான் வந்து போயிருப்பார் போலும்.

விக்ரம் விஜய்யை பீட் பண்ற மாதிரி அந்தரத்தில் பறந்து அங்கேயே சில நிமிடம் நிற்கிறார். பாட்டு- பைட் , பாட்டு- பைட் என மாறி மாறி இம்சை பண்றாங்க.

ஓசியில் DVD கிடைத்தாலும் சரி, இந்திய தொலை காட்சிகளில் முதல் முறை போட்டாலும் சரி இந்த படம் பார்த்துடாதீங்க. அவ்ளோ தான் சொல்ல முடியும் !
 
சென்னை ஸ்பெஷல்

நளாஸ் ஆப்ப கடை வேளச்சேரி மற்றும் அண்ணா நகரில் ஒரு டிஸ்கவுன்ட் மேலா நடக்கிறது. நீங்கள் சாப்பிடும் மதிய சாப்பாடு (லஞ்ச்)க்கு பாதி பில் தொகை தந்தால் போதுமாம் !! சனி, ஞாயிறு இது கிடையாது.. பார்சலுக்கும் கிடையாது. அதாவது மதியம் இங்கு வந்து சாப்பிடும் சாப்பாட்டுக்கு மட்டும்  50% டிஸ்கவுன்ட் !  வேளச்சேரி அல்லது அண்ணா நகரில் அலுவலகத்தில் வேலை செய்வோர் மதிய லஞ்ச் கொண்டு வராட்டி, இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம்

பதிவர் சந்திப்பு (கேபிள், லக்கி, உலக்ஸ் புத்தக வெளியீட்டில்)

உ பதிப்பக புத்தக வெளியீடு புதன் அன்று சென்றேன். மிக சுவாரஸ்யமாக நண்பர்களோடு உரையாடியது மகிழ்வாக இருந்தது. ராமசாமி கண்ணன் வெளியூரில் இருந்து வந்திருந்தார். பார்த்ததும் அடையாளம் தெரிய வில்லை. அறிமுக படுத்தியவுடன் தான் தெரிந்தது. இப்போதெல்லாம் எல்லா விழாக்களுக்கும் சினிமா இயக்குனர்களை புத்தகம் வெளியிட கேபிள் அழைத்து வந்து விடுகிறார்.

தராசு முன்பு நம் ப்ளாகில் எழுதிய புழுதிவாக்கம் பள்ளி குறித்த பதிவு பற்றி பேசினார். மேலும் அந்த பள்ளிக்கு எப்படி உதவலாம் என்று கேட்டு கொண்டிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது.

நம்ம பதிவர்கள் நிறைய பதிவு எழுதுபவர்களை " என்னாப்பா வேலை இல்லியா? நிறைய பதிவு எழுதுரே?" என்கிறார்கள். பதிவு அதிகம் எழுதாதவர்களையும் " எதோ ப்ளாகர் அப்படிங்கிற பேர்ல ஒரு ப்ளாக் வச்சிருக்கார்" என்று ஓட்டுறாங்க. ம்ம் எப்படியும் ஓட்டுறதுன்னு முடிவோட இருக்காங்க

சுரேகா, லக்கி, அதிஷா, ஆதி, மயில் ராவணன், சுகுமார், ரோமியோ, அதியமான் உள்ளிட்ட ஏராளமான நண்பர்களை சந்திக்க உரையாட முடிந்தது. மகிழ்ச்சியான ஒரு சந்திப்பாக இருந்தது இது.

புத்தக கண்காட்சி போய் வந்தாச்சு. விரிவான பதிவு " என்னென்ன ஸ்டாலில் என்ன விசேஷம்; எந்த புத்தகங்கள், எங்குகம்மி விலையில் கிடைக்கின்றன " போன்ற தகவலுடன் நம் ப்ளாகில் வரும் புதன் அன்று வெளியாகும்.

இந்திய கிரிக்கெட் அணி

இங்கிலாந்தில் அடி வாங்கிய போதாவது " முக்கிய புள்ளிகள் injury" என சொல்லி தப்பிக்க முடிந்தது. இப்போது என்ன காரணம் சொல்ல முடியும்? ஹும்...

சில வீரர்கள் பற்றி சுருக்கமாக ...

சச்சின்: செஞ்சுரி அடிக்காட்டியும், இந்த சீரிஸில் தொடர்ந்து ஒழுங்கா ஆடுவது இவர் மட்டும் தான்.

டிராவிட்: Wall-க்கு என்ன ஆச்சு?

அஷ்வின்: பேட்டிங் நம்பிக்கை ஓட்டுது. பவுலிங் வெறுப்பூட்டுது

விராத் கோலி: கோழி போல் அமுக்கிடுறாங்க. இவர் மக்களை பார்த்து நடு விரல் காண்பித்தது நிச்சயம் தப்பு. (அதுக்கு என்ன அர்த்தம் என அப்புறம் தான் கேட்டு தெரிந்து கொண்டேன். அதை இங்கு எழுத முடியாது !!) இதுக்கு என்ன அர்த்தம் என மேட்ச் பார்க்கும் சிறுவர்களும் கேட்டு தெரிந்து கொண்டிருப்பார்கள் அது தான் கொடுமை !

இந்த சீரிஸில் 4- 0 என அடி வாங்குவது ஏறக்குறைய உறுதி !! எதிர் பார்க்கும் ஒரே விஷயம் சச்சின் செஞ்சுரி மட்டுமே !

போஸ்டர் கார்னர்


ரசித்த கவிதை

சும்மாவுக்காக ஒரு கவிதை

உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்

நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்
முழித்த முழி முழியையே முழுங்கும் போல
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்

எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள். - ஆத்மா நாம்

அரசியல்/ டிவி கார்னர்


ஜெயா டிவியில் கடலூர் புயல் பற்றி ரவி பெர்னாட் ஒருவரை பேட்டி கண்டார். அதில் புயலுக்கு பின் உடனே நடவடிக்கை எடுக்க முடியாததற்கு முந்தைய தி.மு.க அரசே காரணம் என அவர் பேசி கொண்டிருந்தார் ! "அவங்க கேபிள் ஒழுங்கா போடலை. அவங்க இது சரியா செய்யலை அது சரியா பண்ணலை"

ரைட்டுங்க ! அதுனால தான உங்களை கொண்டு வந்தோம் !! ஒரு வருஷம் ஆக போவுது ! இன்னும் இப்படியே பேசிக்கிட்டு இருந்தா எப்படி? அவங்களை குறை சொல்ற நேரத்தில் உருப்படியா ஏதாவது செய்யலாம் !

விஜய் டிவியில் அப்பா-மகன் பற்றிய நீயா- நானா ரொம்ப நாளுக்கு பிறகு சற்று நல்ல நீயா- நானா பார்த்த திருப்தி தந்தது. நீங்கள் யாராவது பாத்தீங்களா?

ஜெயா டிவியில் வார நாட்களில் இரவு பத்து மணிக்கு ஒளி பரப்பாகும் "திரும்பி பார்க்கிறேன்" நிகழ்ச்சியில் ராம ராஜன் ஒரு வாரமா தன் படங்கள் பத்தி பேசிட்டு இருக்கார். செம காமெடியா இருக்கு. முடிஞ்சா பாருங்க.

31 comments:

  1. arumai nanbare

    http://ambuli3d.blogspot.com/
    http://ambuli3d.blogspot.com/2012/01/ambuli-new-year-celebrations.html

    ReplyDelete
  2. Anonymous11:15:00 AM

    ராஜபாட்டை...நீங்களும் அந்த கொடுமையை அனுபவிச்சது கொடுமை.

    ReplyDelete
  3. வானவில் ரசிக்கவைத்தது..

    ReplyDelete
  4. Anonymous11:33:00 AM

    அண்ணே, ராஜபாட்டை படத்தை முதல் நாளே பார்த்து விட்டு மூணு பக்கத்துக்கு ஒப்பாரி வச்சோமே, மறுபடியுமா. அண்ணே புத்தக கண்காட்சியை பற்றி எழுதும் போது வாங்கிய புத்தகங்களின் விவரங்களை குறிப்பிடவும். எனக்கு மேலும் புத்தகங்களை வாங்க வசதியாக இருக்கும்.

    ReplyDelete
  5. தொகுப்பு நன்று. பகிர்ந்த கவிதை அருமை. புத்தகக் கண்காட்சிப் பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  6. ஓசியில் DVD கிடைத்தாலும் சரி, இந்திய தொலை காட்சிகளில் முதல் முறை போட்டாலும் சரி இந்த படம் பார்த்துடாதீங்க. அவ்ளோ தான் சொல்ல முடியும் !//

    அய்யய்யோ சூனியம் வச்சுட்டாங்களா....!!!

    ReplyDelete
  7. ஆப்புன்னு தெரிஞ்சும் அது மேல வல்கரா எதுக்குய்யா போயி ஏறி உக்காருதீங்க ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  8. பகிர்ந்த கவிதை அருமை

    ReplyDelete
  9. வண்ணங்களாய் வானவில் ஜொலிக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ambuli 3D said...
    arumai nanbare

    ****
    நன்றி அம்புலி
    **

    ReplyDelete
  11. சிவகுமார் ! said...

    ராஜபாட்டை...நீங்களும் அந்த கொடுமையை அனுபவிச்சது கொடுமை.

    **
    ஆமாங்கண்ணா :))

    ReplyDelete
  12. இராஜராஜேஸ்வரி said...
    வானவில் ரசிக்கவைத்தது..

    **
    ****
    நன்றி ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  13. ஆரூர் முனா செந்திலு said...
    அண்ணே, ராஜபாட்டை படத்தை முதல் நாளே பார்த்து விட்டு மூணு பக்கத்துக்கு ஒப்பாரி வச்சோமே, மறுபடியுமா. அண்ணே புத்தக கண்காட்சியை பற்றி எழுதும் போது வாங்கிய புத்தகங்களின் விவரங்களை குறிப்பிடவும். எனக்கு மேலும் புத்தகங்களை வாங்க வசதியாக இருக்கும்.
    ****
    நன்றி தம்பி. லிஸ்ட் போட முடியுமான்னு தெரியலை. பார்க்கலாம்

    ReplyDelete
  14. ராமலக்ஷ்மி said...
    தொகுப்பு நன்று. பகிர்ந்த கவிதை அருமை. புத்தகக் கண்காட்சிப் பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

    ***
    நன்றி ராமலட்சுமி

    ReplyDelete
  15. MANO நாஞ்சில் மனோ said...

    ஆப்புன்னு தெரிஞ்சும் அது மேல வல்கரா எதுக்குய்யா போயி ஏறி உக்காருதீங்க ஹா ஹா ஹா ஹா...

    **
    மனோ;; ஆமாம் ஞாயிறு பொழுது போகாம மாட்டிகிட்டாச்சு

    ReplyDelete
  16. மாலதி said...

    பகிர்ந்த கவிதை அருமை
    **
    முதல் வருகைக்கு நன்றி மாலதி

    ReplyDelete
  17. Ramani said...
    வண்ணங்களாய் வானவில் ஜொலிக்கிறது
    தொடர வாழ்த்துக்கள்
    ********
    மகிழ்ச்சி நன்றி Ramani!!

    ReplyDelete
  18. // விஜய் டிவியில் அப்பா-மகன் பற்றிய நீயா- நானா ரொம்ப நாளுக்கு பிறகு சற்று நல்ல நீயா- நானா பார்த்த திருப்தி தந்தது. நீங்கள் யாராவது பாத்தீங்களா? //

    ஹ்ம்ம்..பார்த்தோம். நன்றாக இருந்தது.

    //நீயா- நானா ரொம்ப நாளுக்கு பிறகு சற்று நல்ல நீயா- நானா பார்த்த திருப்தி தந்தது//

    ரிபீட்டூ...

    ReplyDelete
  19. அருமை மோகன்...

    கிரிக்கெட்... - சச்சின் பற்றி நிறைய கார்ட்டூன்கள் வந்து கொண்டு இருக்கின்றன... :)

    ReplyDelete
  20. தகவல்கள் அனைத்தும் நன்று.

    நீயா நானா எனக்கும் பிடித்திருந்தது.

    கிரிகெட் பற்றிய உங்கள் கருத்து சரியே!

    ReplyDelete
  21. ஓசியில் DVD கிடைத்தாலும் சரி, இந்திய தொலை காட்சிகளில் முதல் முறை போட்டாலும் சரி இந்த படம் பார்த்துடாதீங்க. அவ்ளோ தான் சொல்ல முடியும் !


    ....... Super warning!!!! ha,ha,ha,ha,ha....

    ReplyDelete
  22. HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!

    ReplyDelete
  23. வானவில் ரொம்பவும் அழகு!

    ராஜபாட்டை பற்றி முன்பே கேள்விப்பட்டதால், போக வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்டேன். உங்கள் விமர்சனம் ' தப்பித்தேன்' என்று நினைக்கத் தோன்றியது.

    ReplyDelete
  24. வானவில் ....ரசித்தோம்.

    ReplyDelete
  25. ராஜபாட்டை - பட், உங்க தைரியம் எனக்கு பிடிச்சிருக்கு :))

    நளாஸ் - வாரயிறுதியா இருந்தா ஒரு கலக்கு கலக்கலாம். ஹும்ம்ம் :(

    ஆஸ்ட்ரேலியாவோட ஆடி தோக்கறது கூட பிரச்சனை இல்ல. ஒரு tough பைட் குடுக்க தடுமாறுவதுதான் கஷ்டமா இருக்கு. எதிரணியின் 20௦ விக்கெட்டுகளை consistentஆக வீழ்த்தாத வரை, டெஸ்டில் நம்பர் 1 ரேங்கை எதிர்பார்ப்பது நியாயமே இல்லை.

    ReplyDelete
  26. Rathnavel said...

    நல்ல பதிவு.நன்றி.

    ****
    நன்றி ஐயா
    ****

    ReplyDelete
  27. Chitra said...
    HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!

    *********
    நீண்ட நாளுக்கு பின் வருகை தந்துள்ளீர்கள். தங்களுக்கும் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் !

    ReplyDelete
  28. மனோ சாமிநாதன் said...

    வானவில் ரொம்பவும் அழகு!

    ராஜபாட்டை பற்றி முன்பே கேள்விப்பட்டதால், போக வாய்ப்பு கிடைத்தும் மறுத்து விட்டேன். உங்கள் விமர்சனம் ' தப்பித்தேன்' என்று நினைக்கத் தோன்றியது.

    **
    நன்றி மனோ மேடம். நல்ல வேளை தப்பிச்சிடீங்க

    ReplyDelete
  29. மாதேவி said...

    வானவில் ....ரசித்தோம்.
    **
    நன்றி மாதேவி

    ReplyDelete
  30. ரகு said:
    எதிரணியின் 20௦ விக்கெட்டுகளை consistentஆக வீழ்த்தாத வரை, டெஸ்டில் நம்பர் 1 ரேங்கை எதிர்பார்ப்பது நியாயமே இல்லை.
    *******
    ரகு: சில நேரம் 20 விக்கெட்டு கூட எடுத்துடுறோம். ஆனால் வெளி நாட்டில் வர வர பேட்டிங் நம்ம ஆட்கள் தொடர்ந்து சொதப்புறாங்க :((

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...