Friday, March 2, 2012

சூர்யாவின் "ஒரு கோடி" நிகழ்ச்சி- விரிவான அலசல்

ஒரு வழியாய் விஜய் டிவியில் துவங்கி விட்டது நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி. இது  குறித்த விரிவான அலசல் இதோ:
முதல் நாள் ஷூட்டிங் சுதா ரகுநாதன் பாட்டு பாட, நடிகை ருக்மணி டான்ஸ் ஆட, மங்கள கரமாக ( சினிமாடிக் என்றும் சொல்லலாம்) துவக்கினார்கள் . சூர்யா வந்ததும் ஹாட் சீட், "மணி அண்ணன்" (நேர காப்பாளர்), ஜீனியஸ் (" கம்பியூட்டர்ஜி"- அமிதாப் சிங்க குரல் நினைவிருக்கா?) போன்றோரை அறிமுக படுத்தினார்.

நிகழ்ச்சிக்கான செட், இடை வேளைக்கு செல்லும் போது வரும் மியூசிக், விதிகள் , கோட், "உங்களை நேரில் பார்த்ததே போதும்" என்று கலந்து கொள்வோர் சொல்லும் வார்த்தைகள் என அப்படியே கோடீஸ்வரனை உரித்து வைத்துள்ளது நிகழ்ச்சி.

முதல் வாரம் கலந்து கொண்டோரில் பல வகை மனிதர்களும் இருந்தனர். குறிப்பாய், சுனாமியை நேரில் பார்த்த, பாதிக்க பட்ட ஒருவர்,  கிராமத்திலிருந்து வரும் பெண், 13 டிகிரி வாங்கிய நபர் (இவரால் பல முயற்சியிலும் ஹாட் சீட்டுக்கு வர முடியலை), சாப்ட்வேர் இஞ்சினியர் பெண், IAS aspirant ,  இரு குழந்தைகளுக்கு தாயான, சற்று வயதான பெண்  (இவருக்கு சூர்யா "வாரணம் ஆயிரம் ஸ்டைலில் " I love you "சொல்லணுமாம்; அடுத்த வாரம் வருது; பாருங்க ) இப்படி கலவையான மக்களாய் பார்த்து எடுத்திருக்காங்க.

இவர்களில் ஒவ்வொருவராய் ஹாட் சீட் வந்து அவுட் ஆக, மீண்டும் "Fastest Finger " ஆடுகிறார்கள். நான்கு நாளில் ஆறு பேருக்கு வாய்ப்பு வர, மீதம் நான்கு பேருக்கு கல்தா தான். அடுத்த வாரம் புதிதாய் பத்து பேர் வருவார்கள்.

துவக்கத்தில் அனைவரையும் சூர்யா அறிமுக படுத்தும் போது அனைவர் பற்றிய குறிப்பையும் பார்க்காமல் பேசுகிறார். "எப்படி அப்பா எல்லாம் நியாபகம் வச்சிக்கிறார்?" என்றாள் என் மகள். அநேகமாய் எதிரில் ஸ்கிரீனில் அவர் பேச வேண்டியது ஓடும்; அதை பார்த்து தான் படிக்கிறார் என்றேன்.

ஹாட் சீட்டில் கேள்வி ஆரம்பிக்கும் போது சரியாக " நல்ல ஆரம்பம் ஆக இருக்கட்டும்" என சூர்யா சொல்ல, அப்போது Cadburys-ன் " நல்ல ஆரம்பம்" விளம்பரம் திரையில் ஒளிருகிறது. இப்படி மிஸ் பண்ணிடாமல் சரியாக சொல்ல அவருக்கு நினைவூட்டல் கூட கம்பியூட்டர் திரை மூலம் தான் வரும் என நினைக்கிறேன்.

முதலில் கேட்கும் கேள்விகள் மிக எளிதாய் உள்ளது சற்று உறுத்தவே செய்கிறது. ஆனால் யோசித்து பார்க்கையில், லட்ச கணக்காய் கலந்து கொண்டோரில், இறுதி வரை தேர்வாகி ஹாட் சீட் வரும் நபர் ஓரிரு
ஆயிரங்களோடு போனால் அவருக்கும் அசிங்கம்; பார்க்கும் நமக்கும் என்னவோ போல் இருக்கும் என்பதால் தான் இந்த "ஏற்பாடு" என தோன்றுகிறது !


இத்தகைய எளிய கேள்விக்கே சிலர் குழம்பி விடுவது ஆச்சரியமாக உள்ளது. முதல் ஆளாக வந்தவருக்கு ஒரு கேள்வி:

இது ஒரு சினிமா படத்தின் பெயர் ___________ சொதப்புவது எப்படி? ஆப்ஷன்ஸ் : A. படிப்பில் B. சாப்பாட்டில் C. காதலில் என்று சொன்னால், அவர் இதுக்கு போய் ஆடியன்ஸ் ஒபினியன் Poll-  எடுத்தார் ! (இந்த படம் வெளியாகும் முன் ஷூட்டிங் நடந்திருக்கலாம் ! )

ஒவ்வொரு பிரேக்கிலும் விளம்பரங்கள் மிக அதிகம் தான். பிரேக் வரும் போது ஐந்து நிமிடம் டிவியை ஆப் செய்வதை வழக்கமாக்கி விட்டோம் (இதே நேரம் மற்ற சானல்களில் சீரியல் போட்டு கொல்லுவாங்க !) ஐந்து நிமிடம் கழித்து வந்தால் சரியா இருக்கு !

சூர்யா நிச்சயம் இடது கை பழக்கம் உள்ளவர் இல்லை (கை எழுத்து வலக்கையில் தான் போடுகிறார்); ஆனால் பேசும் போது நிறைய இடக்கை ஆட்டி பேசுகிறார். இடது கை பழக்கம் உள்ளவர் தான் இப்படி அந்த கை ஆட்டி பேசுவார்கள். கஜினியில் பாத்திரத்துக்காக ரெண்டு கையிலும் வேலை செய்யும் பழக்கம் வந்ததால் இப்படி ஆகியிருக்கும் என பேசி கொண்டோம்.

அந்த பார்வை
சூர்யா சிரிப்பு மற்றும் அழகு பெண்களை இந்த நிகழ்ச்சி பார்க்க வைப்பதை அலுவலக லஞ்ச் டிஸ்கஷன் மூலம் (" செம ஸ்மார்ட் இல்ல?") அறிய முடிகிறது. இன்னொரு பெண்ணோ சூர்யா பார்வையை மட்டுமே ரொம்ப நேரம் வியந்து பேசி கொண்டிருந்தார். (நமக்கு அவர் பார்வையை பார்த்தால் அப்படி எல்லாம் தோண வில்லை. ஆனால் ஆண்கள் பெண்களை ரசிப்பதும், பெண்கள் ஆண்களை ரசிப்பதும் தானே இயல்பும், இயற்கையும் !)

ஒரு போட்டியாளர் வெளியேறியதும், அமிதாப் போலவே வேகமாக நடந்து சென்று நடுவில் நின்று கொண்டு பேசுகிறார் சூர்யா.

சூர்யா போன்ற பிரபலம் வருவதால் உள்ள பலன்: என் மகள் போன்ற சிறுமிகளும் நிகழ்ச்சி பார்த்து அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முயற்சிக்கின்றனர். ஏதோ இப்படி கொஞ்சம் பொது அறிவு வளர்ந்தால் சரிதான் !

Facebook-ல் இந்த நிகழ்ச்சியை திட்டி நிறைய பேர் எழுதி கொண்டிருக்கின்றனர். எனக்கு என்னவோ தற்சமயம் பிடிக்கவே செய்கிறது. கூடிய விரைவில் எனக்கும் அலுக்கலாம். குடும்பத்தில் அனைவருக்கும் சூர்யாவை நடிகராக மட்டுமன்றி அகரம் மூலம் செய்யும் நற் செயலகளால் பிடிப்பதாலும் நிகழ்ச்சியை ரசிக்கிறோம் என நினைக்கிறேன்

முதல் வாரம் ஹாட் சீட்டுக்கு வந்த நான்கு பெண்களில் அந்த அழகான இளம் பெண்ணிடம் மட்டும் சூர்யா சற்று வழியவே செய்தார். அவர் தந்த Flying-கிஸ்ஸை ரீப்பீட்டு என சொல்லி மீண்டும் (மீண்டும் ) கேட்டு வாங்கினார். மொத்தம் மூணு தடவை மை லார்ட் ! ஜோதிகா நிகழ்ச்சி பார்த்திருந்தா, வீட்டுக்கு வந்ததும் நிச்சயம் சூர்யாவை மொத்தி இருப்பாங்க. நிற்க. அந்த பெண் அழகாகவே இருந்தார். (இதுக்கு உனக்கு மொத்து நிச்சயம் உண்டுடி ! வீட்டுக்கு போ அப்புறம் இருக்கு சங்கதி!))

சூர்யா அகரம் குறித்து நிகழ்ச்சியில் பேச வில்லை. ஆனால் Participants-ல் சிலர் அகரம் பற்றி குறிப்பிட்டனர். சூர்யா அகரம் குறித்த செய்தி நிறைய பேருக்கு சேர, அவ்வப்போதாவது பேசலாம் என தோன்றுகிறது.

ஹாட் சீட் வருவோர் பற்றி க்ளிப்பிங் காட்டுகிறார்கள். நிஜ கோடீஸ்வரனிலும் இப்படி க்ளிப்பிங் காட்டினார்களா என்ன? நினைவில்லை. சில க்ளிப்பிங் சற்று நெகிழ்வாக இருந்தது. இப்படி ஹாட் சீட் வருவோர் பற்றி, வெவ்வேறு மனிதர்கள்/ அவர்கள் வாழ்க்கை குறித்து நாம் அறிய இது ஒரு வாய்ப்பு தான் !

ஆனால் நம்ம விஜய் டிவி இதை எதற்கு யூஸ் பண்ணுவார்கள் என தெரியும். அவர்களை ஒரே அழுகாச்சியா காட்டி எல்லாரையும் கர்சீப் தேட வைப்பார்கள். அடுத்த வாரம் கூட இத்தகைய அழுகை உள்ளதை இப்பவே கிளிப்பிங்கில் காட்ட ஆரம்பித்து விட்டார்கள். (அழும் போது ஸ்லோ மோஷன் உறுதி ! விஜய் டிவி-டா !)

நிஜ கோடீஸ்வரனில் " லாக் பண்ணிடலாமா?" என்பது மாதிரி இங்கு "பிக்ஸ் பண்ணிடலாமா?" என சூர்யா கேட்க, எல்லோரும் " பிக்ஸ் பண்ணிடுங்க" என்கின்றனர்.

மின்னல் விரல்கள் மூலம், ஹாட் சீட்டுக்கு தேர்வாகி விட்டார்கள் என்று சொன்னதும், எல்லாரையும் இரு கையை உயர்த்தி குதிக்கணும் என சொல்லி கொடுத்திருக்கிறார்கள் என்பது நன்கு தெரிகிறது. தேர்வாகும் ஒவ்வொருவரும் இப்படி செயற்கையாய் கையை உயர்த்தி குதிப்பது நெருடுகிறது.

கலந்து கொள்ளும் பலர் சூர்யாவிற்கு " சர்ப்ரைஸ் கிப்ட்" என்று சொல்லி தருகிறார்கள். ஹாட் சீட்டுக்கு வரும் எல்லோரும் கிப்ட் தரும் பழக்கும் துவங்கி விடும் ! இனியும் சர்ப்ரைஸ் கிப்ட் என்று சொல்லாதீர்கள் !

கிடைக்கும் பணம் குறித்து சில கேள்விகள்: நிஜமாவே எவ்வளவு பணம் ஜெயித்தவர் கையில் கிடைக்கும் என தெரியலை. நிச்சயம் TDS (Tax Deducted at source) என சொல்லி ஒரு பகுதி (கிட்டதட்ட 20 %) பிடித்து விடுவார்கள் என்பது உறுதி ! மீதமாவது அவர்களுக்கு கிடைத்தால் நன்றாய் இருக்கும் !

எப்படி சூர்யா செக்கில் கையெழுத்து போடுகிறார்? விஜய் டிவி,  சூர்யாவுக்கு செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் தந்திருக்கும் என தோன்றலை. நாம் பார்க்கும் செக் நிச்சயம் கொடுக்கப்படாது. அது டம்மி செக். TDS -ம் பிடித்து விட்டு, சரியான தொகை போட்டு, சரியான Signatory கையெழுத்துடன், பின்னர் தருவார்கள் என நினைக்கிறேன்

சூர்யா ஆங்காங்கு சில நல்ல Quote சொல்கிறார். கடைசியாய் பேசும் போது " ஆரம்பத்தில் வந்த படங்களில் எனக்கு நடிக்க மட்டுமல்ல, ஒழுங்காய் டான்ஸ் ஆட, சண்டை போட, நடக்க கூட தெரியாது. அங்கிருந்து இவ்வளவு தூரம் வளர்ந்து, உங்கள் அன்பை எல்லாம் பெற்று இந்த இடத்துக்கு வந்திருக்கேன் என்றால் அதுக்கு காரணம் உழைப்பு தான். நீங்களும் உழையுங்கள். இது அறிவுரை அல்ல. அனுபவம்" என்றார். Very True !

நிறைவாய்: சிற்சில குறைகள் இருந்தாலும், நிகழ்ச்சி இப்போதைக்கு ஓகே. விரைவில் அலுக்க ஆரம்பிக்கலாம் !

வார இறுதியில் Viwers-ஐ, தங்கள் கிரியேட்டிவ் நிகழ்ச்சிகளால் தன் வசம் வைத்திருந்த விஜய் இப்போது வார நாட்களிலும் தூள் கிளப்ப, சன் டிவிக்கு கிலியை கிளப்பி விட்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
இதற்கு போட்டி நிகழ்ச்சி சன்னில் இருந்து விரைவில் எதிர் பார்க்கலாம் !

சமீபத்திய பதிவு:


அரவான் Must Watch Movie : விமர்சனம் இங்கே !

46 comments:

 1. //ஆனால் நம்ம விஜய் டிவி இதை எதற்கு யூஸ் பண்ணுவார்கள் என தெரியும். அவர்களை ஒரே அழுகாச்சியா காட்டி எல்லாரையும் கர்சீப் தேட வைப்பார்கள். //

  இந்த இத்துப்போன ட்ரெண்டை மாற்றாதவரை விஷயம் தெரிந்த ஆடியன்சை விஜய் டி. வி. தொடர்ந்து இழந்து வரும். சில்லி செண்டிமெண்ட்ஸ்!!

  ReplyDelete
 2. மிகச்சுலபமான கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் யோசனை செய்யும் போது கஷ்டமாக இருக்கு. சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் நிறைய கேட்பதை தவிர்க்க வேண்டும் எனத்தோன்றியது.

  // நிஜ கோடீஸ்வரனிலும் இப்படி க்ளிப்பிங் காட்டினார்களா என்ன? //

  அப்ப இது என்ன நிஜக்கோடிஸ்வரன் இல்லையா?

  ReplyDelete
 3. பதிவர் ஹாஜாவின் இந்த நிகழ்ச்சி பற்றிய பதிவை (http://nkshajamydeen.blogspot.com/2012/03/blog-post.html) இப்போது தான் படித்தேன். இன்னும் ஒரு முறை கூட இந் நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. அமிதாப்பின் கோடீஸ்வரன் கூட கொஞ்சம் ரசிக்கும் படி இருந்தது. கேள்விகள் கூட கொஞ்சம் கஷ்டமாக கூட இருக்கும். ஆனால், இந் நிகழ்ச்சியில் கேட்கப் பட்ட கேள்வியை நினைத்தாலே பத்திகிட்டு வருது. எல்லாம் காசு பண்ற வேலை.

  இதுவரை நான் ஒரு முறை கூட (இந்தியாவில் இருந்தபோது) இம்மாதிரி போட்டிகளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியதில்லை. இன்னும் சொல்லப் போனால் பணக்காரர்களை விட சாதாரண மக்கள் தான் இம்மாதிரி விளம்பர/மோசடி நிகழ்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அரசு இம்மாதிரியான நிகழ்சிகளுக்கும் எஸ் எம் எஸ் வருமானத்திற்கும் நிறைய வரி விதிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. ! சிவகுமார் ! said...

  //ஆனால் நம்ம விஜய் டிவி இதை எதற்கு யூஸ் பண்ணுவார்கள் என தெரியும். அவர்களை ஒரே அழுகாச்சியா காட்டி எல்லாரையும் கர்சீப் தேட வைப்பார்கள். //

  இந்த இத்துப்போன ட்ரெண்டை மாற்றாதவரை விஷயம் தெரிந்த ஆடியன்சை விஜய் டி. வி. தொடர்ந்து இழந்து வரும்.
  **

  எஸ் சார் !

  ReplyDelete
 5. RAMVI said...


  மிகச்சுலபமான கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் யோசனை செய்யும் போது கஷ்டமாக இருக்கு. சினிமா சம்பந்தப்பட்ட கேள்விகள் நிறைய கேட்பதை தவிர்க்க வேண்டும் எனத்தோன்றியது.
  **
  ஆம். முழுவதும் உடன் படுகிறேன்.
  *****
  //அப்ப இது என்ன நிஜக்கோடிஸ்வரன் இல்லையா?//


  ராம்வி: நான் அமிதாப் நிகழ்ச்சியை நிஜக்கோடிஸ்வரன் என்று mean செய்திருக்கிறேன் !

  ReplyDelete
 6. ஆதி மனிதன்: உங்கள் கோபம் நியாயமானதே. SMS-க்கு அதிக வரி விதிப்பு நல்ல யோசனை !

  ReplyDelete
 7. நான் இன்னும் ஒரு எபிசோட் கூட பார்க்கல. ஹிந்தியிலும் ஆரம்பத்தில் நான்கு ஐந்து கேள்விகள் கொஞ்சம் ஈஸியாகவே இருக்கும்.

  ஸீரோ டூ ஹீரோ - இதுக்கு சூர்யா சரியான உதாரணம்தான் :)

  ReplyDelete
 8. நல்லதொரு விமர்சனம் சார்.

  விழுப்புரத்திலிருந்து வந்திருந்தவர் சமீபத்தில் தமிழ்நாட்டை தாக்கிய புயலின் பெயரைக் கேட்டால் பதில் தெரியவில்லை. லைஃப்லைன் உபயோகித்தார்....

  அதுபோல் வறுமையில் வாடும் பெண்மணிக்கு பணம் கிடைத்தது நல்ல விஷயம்.

  சூர்யா சொல்லும் (ஊசி கண்டுபிடித்த கதை) சின்னச் சின்ன விஷயங்கள் நன்று.இப்போதைக்கு நன்றாக செல்கிறது நிகழ்ச்சி.

  ReplyDelete
 9. idhuvoru nalla podhuarivu nigazhchchi alla verum kanththudaippu yemaligal irukkumvarai yemattrubavargal irrukkaththane seivar makkal thirundhdhinaal nandri

  ReplyDelete
 10. //இது ஒரு சினிமா படத்தின் பெயர் ___________ சொதப்புவது எப்படி? ஆப்ஷன்ஸ் : A. படிப்பில் B. சாப்பாட்டில் C. காதலில் என்று சொன்னால், அவர் இதுக்கு போய் ஆடியன்ஸ் ஒபினியன் Poll- எடுத்தார் !//

  அட இது கூட பரவாயில்லை. தானே புயலின் பெயர் தெரியாமல் தடுமாறினாரே. அது தான் மிகப் பெரிய கேவலம்.

  ReplyDelete
 11. நீங்க சொல்லியிருக்கும் நிறைய விடயங்கள் உண்மை. செயற்கையாக YES YES என துள்ளுவது, அழுகாச்சி சீன்கள் எல்லாம் ரொம்ப ஓவர்.

  நேத்து கூட ரெண்டு பெண்கள் வந்து ஸ்டேஜில் அழுதுகிட்டு இருந்தாங்களே. ஹய்யோ ஹய்யோ ...

  ReplyDelete
 12. நல்ல அலசல் மோகன்...

  எனக்கு என்னவோ பிடிக்கவில்லை.... வீட்டில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்... சில விஷயங்கள் ரொம்பவே செயற்கையாய் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது....

  ReplyDelete
 13. சில சந்தேகங்கள், தனி eMail அனுப்பியுள்ளேன், நேரமிருந்தால் பதில் அளிக்கவும்

  ReplyDelete
 14. மிகச் சரியான அலசல்
  நீங்கள் குறிப்பிடுவது போல முதல் மூன்று கேள்விகள் இவ்வளவு
  மோசமாக இருக்கவேண்டாம்
  ரசித்துப் படித்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. \\நிகழ்ச்சிக்கான செட், இடை வேளைக்கு செல்லும் போது வரும் மியூசிக், விதிகள் , கோட், "உங்களை நேரில் பார்த்ததே போதும்" என்று கலந்து கொள்வோர் சொல்லும் வார்த்தைகள் என அப்படியே கோடீஸ்வரனை உரித்து வைத்துள்ளது நிகழ்ச்சி. \\ உண்மை. சூர்யா பேசும்போதெல்லாம் அப்படியே அமிதாப்பை மிமிக் செய்வது போலவே இருக்கிறது. சில இடங்களில் தன்னுடைய பாணியிலும் பேசுகிறார், விரைவில் அமிதாப் நிழலில் இருந்து வெளியே வந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 16. \\முதலில் கேட்கும் கேள்விகள் மிக எளிதாய் உள்ளது சற்று உறுத்தவே செய்கிறது. ஆனால் யோசித்து பார்க்கையில், லட்ச கணக்காய் கலந்து கொண்டோரில், இறுதி வரை தேர்வாகி ஹாட் சீட் வரும் நபர் ஓரிரு ஆயிரங்களோடு போனால் அவருக்கும் அசிங்கம்; பார்க்கும் நமக்கும் என்னவோ போல் இருக்கும் என்பதால் தான் இந்த "ஏற்பாடு" என தோன்றுகிறது ! \\ பத்தாயிரம் ஜெயிக்கும் வரை எதையாவது செய்து தோற்க்கவிடாமல் பார்த்துக் கொள், லட்சம் தாண்டும் வரை நடப்பது நடக்கட்டும், லட்சத்துக்கு மேலே பொய் விட்டால் எப்படியாவது ஆட்டத்தை க்ளோஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடணும்- என்று பிளான் பண்ணி செய்வது போல உள்ளது. [அதுக்கு மேல போன கம்பெனி தாங்காதுங்கன்னோவ்...!!]

  ReplyDelete
 17. \\இத்தகைய எளிய கேள்விக்கே சிலர் குழம்பி விடுவது ஆச்சரியமாக உள்ளது.\\ எனக்கும் இன்று பொய் நாளை வா என்ற பாக்கியராஜ் படத்தின் பாடல் வரிகள் தெரியவில்லை!!

  ReplyDelete
 18. \\ஒவ்வொரு பிரேக்கிலும் விளம்பரங்கள் மிக அதிகம் தான். பிரேக் வரும் போது ஐந்து நிமிடம் டிவியை ஆப் செய்வதை வழக்கமாக்கி விட்டோம் (இதே நேரம் மற்ற சானல்களில் சீரியல் போட்டு கொல்லுவாங்க !) ஐந்து நிமிடம் கழித்து வந்தால் சரியா இருக்கு !\\ நாமெல்லாம் அப்படி இல்லீங்கண்ணா.... நம்ம ரூட்டே தனி....

  ReplyDelete
 19. \\சூர்யா அகரம் குறித்து நிகழ்ச்சியில் பேச வில்லை. ஆனால் Participants-ல் சிலர் அகரம் பற்றி குறிப்பிட்டனர். சூர்யா அகரம் குறித்த செய்தி நிறைய பேருக்கு சேர, அவ்வப்போதாவது பேசலாம் என தோன்றுகிறது. \\ காசு வாகிகிட்டு நடிக்க வந்த இடத்துல சொந்த விருப்பு, வெறுப்புகளை காட்ட வேண்டாமே என நினைக்கிறார் போலும்.

  ReplyDelete
 20. \\ஹாட் சீட் வருவோர் பற்றி க்ளிப்பிங் காட்டுகிறார்கள். நிஜ கோடீஸ்வரனிலும் இப்படி க்ளிப்பிங் காட்டினார்களா என்ன? நினைவில்லை. \\ இந்த நிகழ்ச்சி பல முறை நடத்தப் பட்டிருக்கும் போல, நான் பார்த்த சிலவற்றில் காட்டுகிறார்கள்.
  http://www.youtube.com/watch?v=HSeiIH2hX-s&feature=relmfu

  ReplyDelete
 21. \\எப்படி சூர்யா செக்கில் கையெழுத்து போடுகிறார்? விஜய் டிவி, சூர்யாவுக்கு செக்கில் கையெழுத்து போடும் அதிகாரம் தந்திருக்கும் என தோன்றலை. \\ஒரு நிறுவனத்தின் சார்பில், அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நபருக்கு காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை கொடுக்க முடியும். TDS பற்றி நீங்கள் சொல்வது சரியே. அவர்களால் முழு தொகையையும் கொடுக்க முடியாது.

  ReplyDelete
 22. \\வார இறுதியில் Viwers-ஐ, தங்கள் கிரியேட்டிவ் நிகழ்ச்சிகளால் தன் வசம் வைத்திருந்த விஜய் இப்போது வார நாட்களிலும் தூள் கிளப்ப, சன் டிவிக்கு கிலியை கிளப்பி விட்டிருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இதற்கு போட்டி நிகழ்ச்சி சன்னில் இருந்து விரைவில் எதிர் பார்க்கலாம் !\\ சரத்குமாரை வைத்து "நான் ரெடி, நீங்க ரெடியான்னு" பண்ணினாங்க. அது அமிதாப்பின் நிகழ்ச்சியைப் போல இல்லை. சரத்குமார் தொகுத்து வழங்கியதும் அவ்வளவாக நன்றாக இருக்கவில்லை. விஜய் நிகழ்சிகளை ஒவ்வொன்றாக அபேஸ் செய்துவிட்டு அதை நாங்கள்தான் முதலில் செய்தோம் என்று புளுகுவது சன் காரர்களுக்கு கைவந்த கலை. என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!!

  ReplyDelete
 23. நண்பர்களே, இப்பதிவை நீங்கள் ரசித்து படித்தமைக்கும், தங்கள் அனைவர் கமன்டுக்கும் நன்றி. நாளை உங்கள் அனைவருக்கும் பதில் தருவேன்

  இன்று அரவான் பார்த்து விட்டு அசந்து போய் உட்கார்ந்துள்ளேன். நாளை அப்பட விமர்சனம் எழுதி வெளியிடுவேன்.

  ReplyDelete
 24. நிகழ்ச்சி பற்றிய விரிவான அலசல் என்பது உண்மையே!

  ஒன்றிரண்டு மாதங்களுக்கு பிறகுதான் நிகழ்ச்சியின் போக்கை கணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 25. // நான் அமிதாப் நிகழ்ச்சியை நிஜக்கோடிஸ்வரன் என்று mean செய்திருக்கிறேன் ! //

  That's called as 'KBC' Koun Banega Karorpathi, meaning 'Who will become Crorer (anologous to Multi-Millionaire).

  Ur doubt Regd. the cheque signed by Surya.. ---- I had similar doubt whan I saw (13 yrs back) Bachchan Saaheb signing the winner's cheque. I think that's just for the show..

  ReplyDelete
 26. (நமக்கு அவர் பார்வையை பார்த்தால் அப்படி எல்லாம் தோண வில்லை. ஆனால் ஆண்கள் பெண்களை ரசிப்பதும், பெண்கள் ஆண்களை ரசிப்பதும் தானே இயல்பும், இயற்கையும் !)

  :)

  ReplyDelete
 27. இருட்டுக் கடையில் லட்டு, ஜிலேபியா:)? எளிய கேள்விகள் எனும் குற்றச்சாட்டை நியாயப்படுத்துகிறது இதற்கு விடை தெரியவில்லை எனும் விஷயம்.

  நிகழ்ச்சி இன்னும் பார்க்கவில்லை.

  ReplyDelete
 28. ர‌கு said...
  நான் இன்னும் ஒரு எபிசோட் கூட பார்க்கல. ஹிந்தியிலும் ஆரம்பத்தில் நான்கு ஐந்து கேள்விகள் கொஞ்சம் ஈஸியாகவே இருக்கும்.

  ****
  அப்படியா ரகு ? தகவலுக்கு நன்றி !

  //ஸீரோ டூ ஹீரோ - இதுக்கு சூர்யா சரியான உதாரணம்தான் :) //

  **

  Very Well said Ragu !

  ReplyDelete
 29. கோவை 2தில்லி மேடம்: சரியாய் சொன்னீர்கள் நன்றி. தானே புயல் கேள்வி லட்சம் ரூபாய்க்கு மேல் வந்தது. அதற்கு பதில் தெரியாதது ஆச்சரியம் !

  ReplyDelete
 30. ***
  விழித்து கொள் : தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !
  ***

  ReplyDelete
 31. ஹாலிவுட்ரசிகன் said...
  நீங்க சொல்லியிருக்கும் நிறைய விடயங்கள் உண்மை. செயற்கையாக YES YES என துள்ளுவது, அழுகாச்சி சீன்கள் எல்லாம் ரொம்ப ஓவர்.

  நேத்து கூட ரெண்டு பெண்கள் வந்து ஸ்டேஜில் அழுதுகிட்டு இருந்தாங்களே. ஹய்யோ ஹய்யோ ...

  *******
  நன்றி ஹாலிவுட்ரசிகன். விஜய் டிவி ஸ்பெஷல் அழுகை என புதிதாய் ஒரு அழுகை டைப் வந்துடும் என நினைக்கிறேன் :))

  ReplyDelete
 32. வெங்கட் நாகராஜ் said...

  எனக்கு என்னவோ பிடிக்கவில்லை.... வீட்டில் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்... சில விஷயங்கள் ரொம்பவே செயற்கையாய் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது.

  *******
  Taste always differ Venkat. I like it as of now. Thanks

  ReplyDelete
 33. ஒரு வாசகன் said...
  சில சந்தேகங்கள், தனி eMail அனுப்பியுள்ளேன், நேரமிருந்தால் பதில் அளிக்கவும்

  **

  வாசகன்: பதில் அனுப்பி விட்டேன்

  ReplyDelete
 34. ரமணி: மிக நன்றி மகிழ்ச்சி

  ReplyDelete
 35. தாஸ் said:

  //காசு வாகிகிட்டு நடிக்க வந்த இடத்துல சொந்த விருப்பு, வெறுப்புகளை காட்ட வேண்டாமே என நினைக்கிறார் போலும்.//

  அகரம் பற்றி இத்தகைய நிகழ்ச்சி மூலம் பலருக்கும் சென்று சேர்வது நல்ல விஷயம் தானே ! அகரம் நிச்சயம் நல்ல முறையில் செயல்படுவதாக கேள்வி படுகிறேன்
  ********
  //ஹாட் சீட் வருவோர் பற்றி க்ளிப்பிங் காட்டுகிறார்கள். நிஜ கோடீஸ்வரனிலும் இப்படி க்ளிப்பிங் காட்டினார்களா என்ன? நினைவில்லை. \\ இந்த நிகழ்ச்சி பல முறை நடத்தப் பட்டிருக்கும் போல, நான் பார்த்த சிலவற்றில் காட்டுகிறார்கள்.//

  அப்படியா? தகவலுக்கு மிக்க நன்றி. சுட்டி பிறகு பார்க்கிறேன்
  ********
  //ஒரு நிறுவனத்தின் சார்பில், அவர்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நபருக்கு காசோலைகளில் கையொப்பமிடும் அதிகாரத்தை கொடுக்க முடியும். //

  தெரியும் தாஸ். இந்த வேலை தானே நான் நிறுவனத்தில் செய்கிறேன் ! ஊழியர் அல்லாத ஒருவருக்கு தர கூடாது என்றில்லை. ஆனால் அப்படி தருவது மிக அரிது !
  ********
  //விஜய் நிகழ்சிகளை ஒவ்வொன்றாக அபேஸ் செய்துவிட்டு அதை நாங்கள்தான் முதலில் செய்தோம் என்று புளுகுவது சன் காரர்களுக்கு கைவந்த கலை. //

  ஆமாங்கோ.

  ReplyDelete
 36. அமைதி அப்பா said...
  ஒன்றிரண்டு மாதங்களுக்கு பிறகுதான் நிகழ்ச்சியின் போக்கை கணிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

  **

  ஆம் அப்போதும் இதே அளவு ஈர்ப்பு இருக்கான்னு பாக்கணும் !

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. மாதவா: KBC குறித்தும் செக் குறித்தும் விளக்கம் தந்தமைக்கு மிக நன்றி

  ReplyDelete
 39. ரிஷபன் சார்:இலக்கிய வாதி ஆயிற்றே நீங்கள் ! சரியான வரியை தான் ரசிதுள்ளீர்கள்!
  ****

  ReplyDelete
 40. ராமலக்ஷ்மி said...
  இருட்டுக் கடையில் லட்டு, ஜிலேபியா:)? எளிய கேள்விகள் எனும் குற்றச்சாட்டை நியாயப்படுத்துகிறது இதற்கு விடை தெரியவில்லை எனும் விஷயம்.

  *****
  ஆமாங்கோ !Thanks for the comment.

  ReplyDelete
 41. சரியான பார்வை, சரியான விமரிசனம். எல்லாவற்றையும் மிகச்சரியாகவே கணித்துள்ளீர்கள். பங்கேற்பவர்களின் அதிக பட்ச அலட்டல்கள் வெறுப்பையே ஏற்படுத்துகிறது. அப்படிச்செய்யும்படி விஜய் டிவியே சொல்லியிருக்கும் என்றே தோன்றுகிறது. பொதுஅறிவு பற்றிய நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் வாழ்க்கை வரலாறு எதற்கு என்று தெரியவில்லை.

  ReplyDelete
 42. சரியான பார்வை, சரியான விமரிசனம். எல்லாவற்றையும் மிகச்சரியாகவே கணித்துள்ளீர்கள். பங்கேற்பவர்களின் அதிக பட்ச அலட்டல்கள் வெறுப்பையே ஏற்படுத்துகிறது. அப்படிச்செய்யும்படி விஜய் டிவியே சொல்லியிருக்கும் என்றே தோன்றுகிறது. பொதுஅறிவு பற்றிய நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் வாழ்க்கை வரலாறு எதற்கு என்று தெரியவில்லை.

  ReplyDelete
 43. அமுதவன் சார்: அரிதாக வந்த தாங்கள் சொன்ன வார்த்தைகள் பதிவை எழுதியவருக்கு மகிழ்ச்சி தருகிறது நன்றி !

  ReplyDelete
 44. அருமையான பதிவு.
  business like ஆக இருக்கிறது.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. Rathnavel Natarajan said...
  அருமையான பதிவு.
  business like ஆக இருக்கிறது.
  வாழ்த்துகள்.
  **
  மகிழ்ச்சி நன்றி ஐயா

  ReplyDelete
 46. ஒரு கோடி ஜெயிச்சா சூப்பர் டேக்ஸெல்லாம் போக 42 லட்சம் கைக்கு கிடைக்குமாண்ணே....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...