Thursday, February 23, 2012

சென்னை வங்கி கொள்ளையர் என்கவுண்டர் : சில கோணங்கள்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு வங்கிகள் கொள்ளை போயின. முதலில் பெருங்குடி பாங்க ஆப் பரோடா...!  பணம் மட்டுமல்லாது லாக்கர்களில் இருந்து நகைகளும் இதில் கொள்ளை போனது. வங்கிகளில் பணம் தொலைந்தால் அதற்கு இன்சூரன்ஸ் கவர் இருக்கும், அதனால் அந்த பணம் திரும்ப கிடைக்கும் என நினைக்கிறேன். ஆனால் லாக்கரில் உள்ள நகை திருடு போனால் அவ்ளோ தான் ! அதற்கு வங்கியில் நாம் எதுவும் கேட்க முடியாது. உங்கள் லாக்கரில் எவ்வளவு நகை உள்ளது என வங்கிக்கு எப்படி தெரியும்? லாக்கர் துவக்கும் போது வாங்கும் கை எழுத்திலேயே " நகைகள் தொலைந்தால் வங்கி பொறுப்பல்ல" போன்ற கண்டிஷன்கள் அடங்கி விடும்.

அடுத்து கீழ் கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் பான்க் கொள்ளை அடிக்கப்பட்டது. சரியாக கரண்ட் போகும் நேரத்தில் வந்து இங்கு கை வரிசை காட்டினர் கொள்ளையர்கள்.

இரண்டு வங்கிகளும் பொது துறை வங்கிகள் என்பதோடு, அங்கு CCTV காமிரா இல்லை என்பதும் குறிப்பிட தக்கது. இனி வங்கிகளில் CCTV காமிரா அவசியம் கட்டாயமாக்க வேண்டும் என்பதை இரு கொள்ளைகளும் உணர்த்தின. (சென்னையில் மட்டும் CCTV இல்லாது 300 வங்கிகள் இருக்காம் !)

இந்த இரு கொள்ளை சம்பவத்திலும் சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை குறித்து துப்பு சொன்னால் ஒரு லட்சம் பரிசு அறிவிக்க பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு வேளச்சேரி பகுதியில் தங்கியிருந்த கொள்ளையர் ஐவரை போலிஸ் வளைத்து பிடிக்க முயன்றதாகவும், அவர்கள் சுட்டதில் போலிஸ் இருவருக்கு காயம் ஏற்பட, கொள்ளையர் அனைவரும் சுட்டு கொல்ல பட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது

இறந்த அனைவரும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பெயர்கள் வினோத் குமார், வினய் குமார், ஹரீஷ் பிரசாத், சகி கரே, அபே குமார் என்றும் போலிஸ் கூறியுள்ளது. இவர்களின் தலைவன் SRM கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்த மாணவனாம் !

வங்கி கொள்ளையர் சுட்டு கொல்ல பட்டதை கேட்கும் போது முதலில் தோன்றிய உணர்வு: நிம்மதி தான் ! கூடவே " அம்மா ஆட்சியில் மட்டுமே இப்படி அதிரடிகள் நடக்கும் ! போலிசுக்கு இப்படி செய்யும் தைரியம் வரும் " என்றும் தோன்றியது.

சற்று யோசிக்கும் போது வேறு சில கேள்விகள் வர தான் செய்கின்றன.

எதனால் கொள்ளையர் ஐந்து பேரும் சுட்டு கொல்ல பட வேண்டும்? நிச்சயம் ஒரு குண்டில் ஒவ்வொருவரும் இறக்க போவது இல்லை. அட்லீஸ்ட் ஒரு கொலையாளி உயிருடன் இருந்தாலாவது, வேறு யாரும் கூட்டாளிகள் இருந்தனரா என தெரியும். ஏன் இவர்கள் அனைவரையும் ஒருவர் விடாது இறக்கும் வரை சுட்டு தள்ள வேண்டும்?

அவர்கள் ஒருவரிடமும் பேசாது போலிஸ் எப்படி அவர்கள் தான் வங்கி கொலையாளிகள் என முடிவு செய்தது? அவர்கள் போலிசை நோக்கி சுட்டது உண்மை எனில் அவர்கள் தீவிர வாதிகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் வங்கி கொள்ளையர்கள் அவர்கள் தான் என அவர்களுடன் பேசாமலே எப்படி தெரிந்தது ?

தினமலர் வெப்சைட்டில் இந்த நியூஸ் வெளியாகி, அது பற்றி எண்பதுக்கும் மேற்பட்ட காமன்டுகள் வந்துள்ளன. அதில் சிலர் " அம்மா ஆட்சியில் விலை ஏற்றம், மின்சார தடை உள்ளிட்ட விஷயங்களை அமுக்கவே இப்படி செய்தி வந்துள்ளது; அவர்கள் தான் உண்மை கொள்ளை காரர்களா?" என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

அவர்களிடமிருந்து நிறைய பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த பணமும் வங்கியில் கொள்ளை போன பணமும் ஒன்று தான் எனில் அவர்கள் தான் வங்கி கொள்ளையர்கள் என நம்பலாம்.

சமீபத்தில் ஜூவியில் வாசித்த போலிஸ் குறித்த செய்தி ஒன்று: தன் கணவனை கொன்ற பெண் ஒருத்தியை போலிஸ் FIR கூட பதிவு செய்யாமல் விடுதலை செய்துள்ளது ! இந்த கொடூர கணவன் மனைவியை மிக கொடுமை படுத்தியதாக போலிஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் வந்து, " இனி அப்படி செய்ய மாட்டேன்" என எழுதி தந்து விட்டு சென்றவராம்; இருந்தும் மீண்டும் மீண்டும் மனைவியை கொடுமை படுத்தி உள்ளார். குறிப்பிட்ட நாளன்று தன் மகளுடனே தவறாக நடக்க முயற்சிக்க, மனைவி தலையில் தாக்கி அவரை கொன்றுள்ளார். போலிஸ் இந்த பெண்ணை கைது செய்து விசாரிக்க, விஷயம் தெரிந்து " தற்காப்புக்காக கொன்றார்" என முடிவெடுத்து அவர் மீது FIR கூட பதிவு செய்யாமல் அனுப்பி விட்டது ! வழக்கமாய் இத்தகைய வழக்குகளில் கோர்ட் தான் விசாரித்து விட்டு "நிரபராதி" என அறிவிக்கும். ஆனால் அதற்குள் சம்பந்தப்பட்டவர் சில வருடங்களாவது ஜெயிலில் இருந்திருப்பார் ! அநேகமாய் இந்தியாவிலேயே முதல் முறையாக போலிஸ் கொலையாளி என தெரிந்தும் ஒருவரை கைது செய்யாமல் விடுதலை செய்துள்ளது !

இந்த பதிவின் துவக்கத்தில் சொன்ன மாதிரி இத்தகைய சுதந்திரமான போலிஸ் நடவடிக்கை அ. தி,மு.க ஆட்சியில் தான் சாத்தியம் !

வங்கி கொள்ளையர்கள் கொலையை பொறுத்த வரை நிச்சயம் விடை தெரியா கேள்விகள் நிறையவே உள்ளன. அவர்கள் தான் நிஜ கொள்ளையர்கள் என்பதை போலிஸ் சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவ வேண்டும்.

"என்கவுன்டர்கள் என்பவை தனி மனித உரிமை மீறல்; அவை முற்றிலும் தவிக்கப்பட வேண்டும் " என எப்போதும் சொல்வோரும் இருக்கிறார்கள்.

கொல்லப்பட்டது வங்கி கொள்ளையர்கள் தான் எனில், இது போன்று கொள்ளைகளை யோசிக்கும் பிற கூட்டத்துக்கு நிச்சயம் மனதில் கிலியையும், தயக்கத்தையும் இந்த என்கவுண்டர் ஏற்படுத்தும் என்பது மட்டும் நிஜம் !

திரிபாதி சார்: அப்படியே குழந்தைகளை கடத்தும் கும்பலுக்கும் ஒரு என்கவுண்டருக்கு ஏற்பாடு செய்யுங்க ! குழந்தை கடத்தல் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் !

இந்த என்கவுண்டர் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் சொல்லலாம் !

27 comments:

  1. அவர்கள் தான் உண்மையான குற்றவாளி எனில் இந்த என்கவுண்டர் சரியே....

    இன்று பீகார், உபியில் இருந்து இங்கு வருபவர்கள் ஏராளம் அவர்கள் இங்கு வந்து திருடிவிட்டு அவர்கள் ஊருக்கு சென்றால் நாம் கண்டுபிடிப்பது மிக கடினம்...

    இந்த என்கவுண்டர் அவர்களுக்கு ஒரு பாடம் என்பது என் நிலை...

    குழந்தைகளை கடத்துபவர்களையும் என்கவுண்டர் செய்தால் நிச்சயம் வரவேற்க வேண்டிய ஒன்று...

    ReplyDelete
  2. இந்த என்கவுண்டர் போலி என்கவுன்டர் போல தெரியவில்லை , கொள்ளையர்கள் வங்கிகளில் கொள்ளை அடிக்கும் போது துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளனர் இவர்களிடம் மோதல் இல்லாமல் கைது செய்வது இயலாத காரியம் , பொதுமக்களுக்கு பாதகம் இல்லாமல் ஒரு குடியுருப்பு பகுதியில் என்கவுன்டர் செய்த தமிழக போலீஸ் பாராட்டத்தான் தூண்டுகிறது .

    ReplyDelete
  3. ஒட்டுமொத்தமாக 5 பேரையும் சுட்டு கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்று தான் புரியவில்லை.
    காவல்துறையும் அரசும் எதையோ மூடி மறைக்கவும் அல்லது மக்களை திசை திருப்பவும் தான் எந்த படுகொலைகள்..
    மன்னிக்கவும் சகோ.. நீங்கள் சொல்லும் என்கவுண்டர் என்ற வார்த்தையில் கூட எனக்கு உடன்பாடு இல்லை.
    இந்த படுகொலைகள் மூலமாக நமது ஒட்டு மொத்த சமுதாயத்தின் மனநிலையை தான் அறிய முடிகிறது..
    ஒரு பள்ளி மாணவன் உணர்ச்சி வசப்பட்டு செய்த கொலையும் காவல்துறை செய்த இந்த கொலைகளுக்கும் பெரிய வித்தியாசம் எதும் இருப்பதாக தெரியவில்லை.

    ReplyDelete
  4. // கூடவே " அம்மா ஆட்சியில் மட்டுமே இப்படி அதிரடிகள் நடக்கும் ! போலிசுக்கு இப்படி செய்யும் தைரியம் வரும் " என்றும் தோன்றியது. //

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அப்போ மற்ற ஆட்சி நடக்கும் போது போலீஸ் தங்கள் கடமையை செய்ய தவறி விடுகிறது என கூற வருகிறீர்களா? அப்படி என்றால் நான் போலீசைதான் குற்றம் சொல்வேன். ஆட்சி நடத்தும் அரசியல் வாதிகளை அல்ல. அவர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை மாறுவார்கள். ஒரு டி.ஜி.பி யோ, ஐ, ஜி யோ அப்படி மாற வேண்டியதில்லையே! வேளையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் ஐ.பி.எஸ். ஐ. ஏ. எஸ் தானே?

    ஒரு கசாபை உயிருடன் பிடிக்க முடிந்த போது பிசாத்து இந்த வங்கி கொள்ளையர்கள் (அவர்கள் கொள்ளை இடும் போது கட்டிய துப்பாக்கி கூட போலியானது என்று தான் சொல்லுகிறார்கள்) உயிருடன் பிடிக்க முடியாதா? நம்பும்படி சொல்லுங்கப்பா? அம்மா ஆட்சி சரியில்லை என பேச்சு வந்துடக் கூடாதே என வந்த அனைத்து கறைகளையும் துடைத்து போட ஐந்து பேரை போட்டு தாக்கி விட்டார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

    உண்மையான கொள்ளையர்கள் என நிரூபித்து விட்டு பின் என்கவுண்டரில் போட்டிருந்தால் எல்லோருக்கும் சந்தோசம். மற்றவர்களுக்கும் கிலியை ஏற்படுத்தும். இது பொது மக்களுக்கு தான் கிலியை ஏற்படுத்துகிறது. எனக்கு என்னமோ அவர்களுக்கு வேறு வெளியே சொல்ல முடியாத இடத்தில் சம்பந்தம் இருந்து அது தெரிந்து விடுமோ என்ற காரணத்தால் போட்டு தள்ளப் பட்டு விட்டார்களோ என தோன்றுகிறது.

    ReplyDelete
  5. என்கவுன்ட்டர் சரி என்றே கருதுகிறேன். ஓரிருவரை கைது செய்து சிறையில் அடைத்தால், இன்னொரு கும்பலுக்கு, "மாட்டினால் ஜெயில்ல சோறு போடுவாங்க, மாட்டலன்னா அடிச்ச பணத்தை வெச்சு என்ஜாய் பண்ணலாம்" என்ற எண்ணம்தான் வரும். ஒரு என்கவுன்ட்டர் நடந்தால்தான் உயிர் மீது பயம் வரும்.

    மனித உரிமை மீறல் அது இதுன்னு சொல்றவங்க, அந்த கேஷியர் சீட்ல உட்கார்ந்திருக்கறவரை பற்றி யோசிக்க மாட்டேங்கறாங்க.

    ReplyDelete
  6. அவர்கள்தான் கொள்ளையர்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை....ஏனெனில் கொள்ளையன் ஒருவனின் புகைபடத்தை நேற்றுதான் போலீஸ் வெளியிட்டது...இந்த என்கவுண்டர் முற்றிலும் சரியே....

    ReplyDelete
  7. இவர்கள் கொள்ளையர்கள் என்பது நிரூபணமானால்.... அரசு செய்தது சரியே. (நிரூபிக்க பாடுபடுவாங்களோ?)

    கஸாபை வச்சுக் கோடிகோடியா மக்கள் வரிபணத்தை செலவு செஞ்சுக்கிட்டு இருக்கறதைப்போல இவுங்களுக்கும் உபசாரம் பண்ணி இருக்கணுமோ!

    குழந்தைகளை கடத்துபவர்களையும் கட்டாயம் போட்டுத்தள்ளத்தான் வேணும்.

    என்னமோ போங்க....

    ReplyDelete
  8. NOT ONLY IN THIS CASE, BUT IN EVERY ENCOUNTER CASE IN TAMILNADU "JUSTICE IS PROVED". IS IT DMK OR ADMK GOVERNMENT THE ENCOUNTERS ARE RIGHT SOLUTION FOR THE CULPRITS.THIS IS MY PERSONAL OPINION

    ReplyDelete
  9. மரண தண்டனைதான் இதற்குச் சரியானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர்களில் ஓரிருவரையாவது உயிருடன் வைத்திருந்து, இதன் ஆதிஅந்தங்களைக் கண்டறிந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை இவர்கள் வெறும் அம்பாக மட்டும் இருந்தால்??

    ReplyDelete
  10. To control crime, encounters are the best solution. I agree.

    If this is accepted as a valid criminal justice system point, we may do the following:

    We may fill up our police forces only with those police personel who are good at shooting a person to death correctly while he is on the run.

    We must alllow all criminals to run away, just as we saw in a Kamal film, and then shoot him down.

    I say this, because, we generally catch criminals and bring them to justice by due process of law. Death sentence, if at all, is awarded only by the hon'ble Judge. This gives a comfy life to the criminals in jail, who enjoy their lives there eating chicken biriyanai, as one Tulsi here and some others have noted. In order to avoid it, we must release all such under-trials at once, or any criminal if caught, and allow them to run away, and shoot them down while they are on the run, using our specially recruited gun men police.

    At present, law does not allow encounter killing. So, the police lies to say they killed for self defence. We must help the police for which the inconvenient law should be rewritten whereby no one will be put under trial or brought before the Judge. All criminals will face encoungers only for which we must allow them go scot free first.

    The human- right wallahs will eat crow because the law has already allowed killings of criminals :-))))

    This solution will render courts, judges and lawyers obsolete and we can save enormous public money. We may close down law colleges because the law has been simplified to one sentence: Catch a criminal, allow him to run, and shoot him down. Simplest law, isn't?

    I place this simple law point befroe all those hon'ble blogger and commenters here and request them to support my point. Thank you.

    ReplyDelete
  11. என்கவுன்டர்கள் மரணங்கள் சட்டப்படி சரியல்ல! இருந்தபோதிலும் பெரும்பாலான என்கவுன்டர்களுக்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு தொடர்ந்து வருகிறது! ஒருவேளை தர்மப்படி சரியென்று மக்கள் நினைக்கின்றனரோ!

    சட்டத்தின் ஆட்சிதான் நடக்கின்றது!

    ReplyDelete
  12. சங்கவி: ஏறக்குறைய நம் இருவருக்கும் ஒரே கருத்து தான். அனைவரையும் கொண்டிருக்க வேண்டுமா என்கிற கேள்வியில் மட்டும் மாறுபடுகிறோம்

    ReplyDelete
  13. கமலக்கண்ணன்: நீங்கள் சொல்வது உண்மை எனில் மகிழ்ச்சியே

    ReplyDelete
  14. பயணி: தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  15. ஆதிமனிதன்: என்ன தான் இருந்தாலும் போலிஸ் துறை ஆட்சியை பொறுத்தே சுதந்திரமாக இயங்குவதும், இயங்காததும் இருக்கும். மற்ற அரசு துறைகளை விட போலிஸ் துறையில் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை, வேலை நீக்கம், சஸ்பெண்டு இவை மிக அதிகம் நடக்கும். எனவே அரசியல் வாதிகள் சைகை பொறுத்தே தான் அவர்களால் இயங்க முடியும். பொதுவாகவே ADMK ஆட்சிக்கு வரும் போது அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி தைரியமாக நடப்பார்கள் என, போலிஸ் குறித்து நன்கு அறிந்த ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார் !

    ReplyDelete
  16. ரகு said //ஓரிருவரை கைது செய்து சிறையில் அடைத்தால், இன்னொரு கும்பலுக்கு, "மாட்டினால் ஜெயில்ல சோறு போடுவாங்க, மாட்டலன்னா அடிச்ச பணத்தை வெச்சு என்ஜாய் பண்ணலாம்" என்ற எண்ணம்தான் வரும். //

    நான் மாறுபடுகிறேன் ரகு. இத்தகைய கொள்ளைகளை வேரோடு அழிக்க ஒருவரையாவது உயிரோடு பிடித்து விசாரித்திருக்க வேண்டும். கசாப் கேசை இங்கு உதாரணமாக நினைப்பது சரியல்ல. அது சென்சிடிவ் கேஸ் என்பதால் கசாபை பார்த்து பார்த்து கவனித்தனர். சாதா கொள்ளையர்களை ஜெயிலுக்குள் நைய புடைத்து உண்மையை வர வைத்திருப்பார்கள்

    ReplyDelete
  17. தங்கள் கருத்துக்கு நன்றி ஹாஜா

    ReplyDelete
  18. துளசி மேடம் : தங்கள் கருத்துக்கு நன்றி. பிள்ளைகளை கடத்துவோருக்கு இதே மாதிரி லாடம் கட்டினால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  19. மோகன் Vista : தங்கள் கருத்துக்கு நன்றி

    ReplyDelete
  20. ஹுசைனம்மா: உங்கள் கருத்து தான் என்னுடையதும் !

    ReplyDelete
  21. வித்யாசமான முறையில், தெளிவான ஆங்கிலத்தில் தங்கள் கருத்தை சொன்னமைக்கு நன்றி Passerby.

    ReplyDelete
  22. ரமேஷ் வேங்கடபதி: என்கவுண்டர் பற்றி தங்கள் கருத்து சரி தான் சார் !

    ReplyDelete
  23. தமிழ் மணம் சூடான இடுகையில் இன்று No :1-ஆக இப்பதிவு..

    //வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட
    சூடான இடுகைகள் //
    இன்று
    சென்னை வங்கி கொள்ளையர்கள் என்கவுண்டர் : சில கோணங்கள்

    மோகன் குமார்

    ReplyDelete
  24. //அட்லீஸ்ட் ஒரு கொலையாளி உயிருடன் இருந்தாலாவது, வேறு யாரும் கூட்டாளிகள் இருந்தனரா என தெரியும்.//

    See how much expense we face for one man Kasab. public money is wated.

    I welcome this type of encounter.

    Mr Aadimanithan.. You prove that you are in US not in India. In India.. this is the best punishment they could get. I have pity on ur naiveness.. asking for the police to prove those 5 guilty first.. then to do the encounter. Do you think that is practical ? Even if they are proved guilty in local court. then sessions court special court.. ultra special court.. HC.. Supreme.. then after several years.. they may ask (wait) for presidents mercy... .---- Enuf is Enuf..

    I heartly welcome this encounter.


    1) ஒருவரைக்(கெட்டவன்) கொன்றால் ஒரு குடும்பம் நன்றாக வாழுமேன்றால் அவரைக் கொள்வதே நல்லதாகும்.
    2) ஒரு குடும்பத்தை(கெட்டக் குடும்பம்) கொன்றால் ஒரு கிராமம் நன்றாக வாழுமேன்றால் அந்தக் குடும்பத்தை கொள்வதே நல்லதாகும்.

    3)ஒரு கிராமத்தை(கெட்டக் கிராமம்) கொன்றால் ஒரு நாடே விளங்குமேன்றால் அந்தக் கிராமத்தை கொள்வதே சரியாகும்..

    I may look arrogance.. I am sorry to say that our country in such a bad shape according to me.

    ReplyDelete
  25. போட்டுத்தள்ளியது சரியான செயல். இவர்களை நம்மூர் நீதிமன்றத்தில் நிறுத்தி தணடனை வாங்கிக் கொடுப்பதற்குள் 25 வருடங்கள் ஓடிவிடும். திருடர்கள் பெருகிக்கொண்டே இருப்பார்கள். இப்போது களவாணிகளுக்கு பயம் இருக்கும்.
    ஆனால் அரசியல் திருடர்களுக்கு எப்போது இவ்வாறான தண்டைனை கிடைக்கும்?

    ReplyDelete
  26. சரியான பதிவு.

    ReplyDelete
  27. 'நியாயமான' என்கவுன்டரை 100% ஆதரிக்கிறேன். தன் குடும்பத்தாரை சில நொடிகளில் கத்தியால் அறுத்து கொல்ல சிலர் எத்தனிக்கும் சமயம்..கையில் துப்பாக்கி இருந்தால் மனித உரிமை பேசும் தியாகிகள் என்ன செய்வார்கள்? அவ அவனுக்கு வந்தாதான் தெரியும் வாந்தியும் பேதியும். போட்டு தள்ளுங்க போலீஸ். இல்லாதவனுக்கு பாதுகாப்பு கவலை பெருசா இல்லை. இருக்கறவனுக்கு ப்ரைவேட் செக்யூரிட்டி. நடுத்தர மக்கள் உசுருக்கு ஆபத்து வந்தா எந்த மனித உரிமை ஆர்வலரும் வரப்போறதில்ல. டுமீலுதான் சரி!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...