2009ல் அமெரிக்காவில் நடந்த உண்மை சம்பவம்...
நியூ யார்க்கில் இருந்து புறப்பட்ட விமானம் சில நிமிடங்களிலேயே பறவைகள் மோத - 2 என்ஜின்களும் செயல் இழக்கிறது. கிளம்பி கொஞ்ச நேரமே ஆயினும் திரும்ப விமான நிலையம் வர முடியாமல் ஆற்றில் விமானத்தை இறக்குகிறார் கேப்டன் Sully.. !!

155 பேர்.. ஒருவர் கூட இறக்காமல் - அத்தனை பேரும் தப்பிக்கின்றனர்.
ஆற்றில் இறக்கியது சரியா .. ஏன் விமான தரை இறங்கும் இடத்திற்கு திரும்ப வில்லை என விசாரணை நடக்கிறது; அதன் முடிவில் ஆற்றில் இறங்கியது தான் சரியான முடிவு என தெரிய வருகிறது
கேப்டன் சல்லி பின் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட படம்.. இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வயது 86 !!
நடிகர் டாம் ஹாங்ஸ் கேப்டன் ஆக மிக இயல்பான நடிப்பு; சற்று இறுக்கமாக படம் முழுதும் வர வேண்டிய நிலை. மிகை இல்லாத நடிப்பு
எல்லோரும் இறங்கிய பின்னும் நம்பிக்கை இன்றி விமானத்தில் சுத்தி வருவது; 155 பேரும் தப்பி விட்டனரா என விடாமல் கேட்டு கொண்டே இருப்பது....அது தெரிந்த பின் வரும் பெரும் ரிலீப்; விசாரணை இறுதியில், சக பைலட்டிடம் " பெரிய விஷயத்தை தான் செய்திருக்கோம்; பெருமையா இருக்கு " என சொல்வது; தன்னை எப்போதும் முன்னிறுத்தாத தன்மை என அற்புதமான பாத்திரம் !
விமானம் பழுதான பின் 4 நிமிடத்தில் ஆற்றில் இறங்கி விட்டது.. எனவே கதை அந்த 4 நிமிடம் மட்டுமின்றி - விசாரணை குறித்தும் சுழல்கிறது
படம் பார்க்கும்போது தோன்றா விடினும்
அப்புறம் டைட்டானிக் படத்துடன் ஒப்பிட தோன்றியது; இரண்டு படங்களும் பெரும் விபத்தை பேசினாலும் - சில முக்கிய வித்யாசங்கள் உள்ளன.
டைட்டானிக்- பாதி பேர் இறக்க, பாதி பேர் தப்புவர். இங்கு அனைவரும் தப்பிக்கின்றனர். அது பாதி கற்பனை கதை (குறிப்பாக காதல் காட்சிகள்); இது முழுக்க உண்மைக்கு அருகில்..
மெலோ டிராமா ஆக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும், அளவோடு நிறுத்தி கொள்கிறார்கள்.
தியேட்டர் நொறுக்ஸ்
முதன் முறை ஐ மேக்சில் பார்த்தோம். ஒரு டிக்கெட் விலை 360 ரூபாய்; பெரும்பாலும் 3 D படங்கள் தான் இங்கு திரையிடப்படும்; இது 3 D படம் அல்ல

மிக பெரிய திரை; அருமையான இசை அமைப்பு.. இப்படம் பொறுத்தவரை சத்யம் போன்ற எந்த நல்ல தியேட்டரிலும் காணலாம்; நாங்கள் சென்றது ஐ மேக்ஸ் அனுபவம் ஒரு முறை தெரிந்து கொள்ளவே !
Sully - நிச்சயம் திரையில் காண வேண்டிய அருமையான படம் !

நிஜ Captain - Sully ! |

No comments:
Post a Comment