ஆச்சரிய துவக்கம்.. அதிர வைக்கும் இன்டர்வெல்.. ஊகிக்க முடியாத முடிவு.. 24 !!
சார்லி மலையாள படம் பார்த்த போது தமிழில் ஏன் வித்தியாச கதைகள் யோசிக்க மாட்டேன் என்கிறார்கள் என இங்கு எழுதியிருந்தேன்..
சர்வ நிச்சயமாக இது ஒரு வித்யாச படம் !
கதை மற்றும் படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் எதையும் நான் சொல்ல போவதில்லை.. அது படம் பார்க்கும் உங்களின் சுவாரஸ்யத்தை குறைத்து விடும்..
முடிந்த வரை ஸ்பாயிலர்கள் இல்லாமல் ஏன் 24 படம் பார்க்க வேண்டும் என்ற காரணங்கள் மட்டுமே இங்கு..
1. இதுவரை தமிழில் பார்க்காத ஒரு கதைக்களன் .. படு வித்யாசமான திரைக்கதை ..
படம் தரும் டுவிஸ்ட்களுக்காகவே நிச்சயம் பார்க்கவேண்டும் (மிக சில மட்டுமே நாம் ஊகிக்க முடியும்; அது இயக்குனர் வேண்டுமென்றே நாம் ஊகிக்க வேண்டும் என்றே விடுகிற விஷயங்கள். மற்றபடி 90 % சர்ப்ரைஸ் அண்ட் ஷாக் தான் !)
2. என்ன மாதிரி ஒளிப்பதிவு ! சான்சே இல்லை.. வெளிநாடு மற்றும் இந்தியாவின் அழகை காமிரா அள்ளி கொண்டு வருகிறது..
3. கிராபிக்ஸ்... தமிழில் மிக உயர்வான தரத்தில் கிராபிக்ஸ்..
மிக சில இடங்கள் மட்டும் கிராபிக்ஸ் என்பது தெரிகிறது; மற்ற படி படு துல்லியம்.
4. கலை இயக்குனர்.. நிச்சயம் இந்த வருடம் தேசிய விருது வாங்குகிறாரோ இல்லையோ நாமிநேஷனில் அவர் பெயர் இருக்கும் அற்புதமான உழைப்பு.. !!
சூர்யா தவிர்த்து காமிரா மேன் மற்றும் கலை இயக்குனர் தான் இந்த படத்திற்கு ஹீரோக்கள் !
5. சூர்யா.. இந்த படத்தை தயாரிக்க ஒப்பு கொண்டமைக்கே அவரை பாராட்ட வேண்டும்.. மிக ரிஸ்கி விஷயம். எப்படி க்ளிக் ஆகும் என்பது பெரும் கேள்விக்குறி. செலவும் மிக அதிகம் என்று தெரியும். இருந்தாலும் நம்பி ரிஸ்க் எடுத்துள்ளார்..
இதுவரை நல்ல படங்கள் மட்டுமே தயாரிக்கிறார் என்ற நம்பிக்கை தான் விமர்சனம் பார்க்காமால் எங்களை புக் செய்ய வைத்தது. அந்த நம்பிக்கையை இது வரை காப்பாற்றி வருகிறார் தயாரிப்பாளர் சூர்யா !
நடிகராகவும் 3 பாத்திரங்களையும் அட்டகாசமாக செய்துள்ளார். விக்ரம் அல்லது சூர்யா மட்டுமே நடிக்க கூடிய ரோல் இது. அதிலும் ரொமான்ஸ் போர்ஷன் அதிகம் இருப்பதால் சூரியா தான் சரியான தேர்வு. அட்டகாசமாக செய்துள்ளார் (அவர் அடிக்கடி சொல்லும் ஒரு டயலாக் .. ஒரு அளவுக்கு மேல் மிக போர் அடிக்கிறது; இயக்குனர் அண்ட் டீம் அங்கு கொஞ்சம் கத்திரி வைத்தால் நல்லது)
6. இயக்குனர் விக்ரம் குமார்.. இந்த படம் அவரது குழந்தை.. வேறு ஆங்கில படத்தின் தழுவல் என இதுவரை செய்திகள் வரவில்லை. Inspire ஆகாமல் அவரே செய்த கதை என்றால் மிக மிக பெருமை படத்தக்க விஷயம் !
சயின்ஸ் பிக்ஷன் அனைவருக்கும் புரியும் விதத்தில் சொன்னது.. ஹாலிவுட் பாணி கதையை தமிழுக்கு தகுந்த காதல், காமெடி, பாட்டு சேர்த்து தந்தது, ஆங்காங்கு வைத்துள்ள சில வெயிட்டான காட்சிகள், AR ரகுமான் தவிர்த்து மற்ற அனைவரிடமும் "தி பெஸ்ட் பெர்பார்மேன்ஸ்" வாங்கியது என ஏராள விஷயங்களுக்கு இவரை பாராட்டலாம்..
இந்த படம் இவரை வேறு லீகுக்கு அழைத்து போய்விடும்.. இது ஒரு ஷங்கர் டைப் படம். இயக்கம் ஷங்கர் என போட்டிருந்தால் நம்பியிருக்கலாம். தமிழில் இத்தகைய பிரம்மாண்டங்களை தொடர்ந்து செய்பவர் அவர் தான். ஷங்கர் நிச்சயம் இப்படத்தை பார்த்து விட்டு பாராட்டி எழுதுவார்.
7. அவசியம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் வெளிவரும்; டப்பிங்கா ரீ மெக்கா என்பது தெரியாது. தனி ஒருவனுக்கு பிறகு வந்த படங்களில் மிக ஈர்த்த படம் இதுவே.. அந்த படம் தந்த இனிய அனுபவம் இப்படமும் தந்தது
*****************
குறைகளே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது..
அவை பற்றி இப்போது அதிகம் பேச விரும்பவில்லை.. மிக பெரும் உழைப்பு, வித்யாச முயற்சிக்கு முன் அந்த சிறு குறைகளை இக்னோர் செய்யலாம்..
நல்ல சினிமா விரும்புவோர் அவசியம் தியேட்டரில் பாருங்கள். இத்தகைய சுவாரஸ்ய முயற்சிகள் வெற்றி பெறா விடில் தமிழில் தொடர்ந்து நல்ல சினிமா வரவே வராது !
24- Go for it !! Don't miss this Unique entertaining experience !!
*********
அண்மை பதிவு :
வானவில்: கேப்டன் பேச்சு - வோட்டுக்கு காசு- கருத்து கணிப்புகள்

No comments:
Post a Comment