Saturday, November 3, 2012

நீங்கள் கைதானால் உங்கள் உரிமைகள் என்ன?




நீங்கள் கைது செய்யப்பட்டால் உங்கள் உரிமைகள் என்ன?

1. உங்கள் கைதுக்கான காரணங்கள் உங்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

2. பிடிப்பாணையின் (Warrant) பேரில் நீங்கள் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு

3. உங்கள் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு

4. 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நீங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும்

5. பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது உங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்

விலங்கிடலாமா?

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோ அல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது. கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது

கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்

கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை. 

குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.
*******

கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள்


1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரம் 8  முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்

6. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.

7. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.

8. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும்.

******
நிற்க. இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ?

முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும் ! இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும். அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம். சில நேரங்களில் சில நடைமுறைகள் பின்பற்றா விட்டால் அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம் !

இந்த புத்தகத்தில் பெயில் ( பிணை- ஜாமீன்) உள்ளிட்ட இன்னும் சில செய்திகள் கூட உள்ளது. அவை பற்றி அவசியம் இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்.

இப்புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கி வாசியுங்கள் !
*****
நன்றி : மக்கள் கண்காணிப்பகம்
6, வல்லபாய் சாலை சொக்கிகுளம், மதுரை - 2
மின்னஞ்சல் : info@pwtn.org
தொலை பேசி:0452-2531874

46 comments:

  1. நல்ல புத்தகம் பற்றிய தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட்

      Delete
  2. நல்ல புத்தகம்... தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்புமணி

      Delete
  3. Anonymous12:11:00 PM

    வீக்கெண்ட்ல அரஸ்ட் பண்ணுவாங்களா?

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் செய்வார்கள் அப்போது அவர்களை பெயிலில் எடுக்க இரண்டு நாள் ஆகிடும் சில நேரங்களில் இது திட்டமிட்டு வேண்டுமென்றே செய்வதாகவும் ஒரு கருத்து உண்டு

      Delete
  4. நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நடனசபாபதி ஐயா

      Delete
  5. காவல்துறை இப்படியெல்லாம் செய்கிறதா என்ன? நீங்கள் சொல்வது போல ரெகார்ட் வேண்டுமானால் அப்படி இருக்கும்.

    ReplyDelete
  6. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  7. உங்களின் அளிமுகபதிவு பயனுள்ளதாக இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொழிற்களம் குழு

      Delete
  8. அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் சார்.. ஏதேனும் ஒரு நேரத்தில் நமக்கோ அல்லது அதன் மூலம் பிறருக்கோ உதவா இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பகிந்ததர்க்கு நன்றிகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் சமீரா; நன்றி

      Delete
  9. சட்ட உரிமைகளுக்கும் நடைமுறைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் அதிகம் என்பதை புத்தகம் உணர்த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ராஜ நடராஜன்: நீங்கள் சொல்வது ஒரு கோணம் எனினும் அவர்கள் புத்தகம் போட்டது பொதுவாய் இது பற்றிய அறிவு (Knowledge) மக்களுக்கு வரவேண்டும் என்கிற எண்ணத்தில் தான்

      Delete
  10. பதிவர்கள் கைதாகி வரும் வேளையில் நல்ல தொரு புத்தக பகிர்வு! அவசியமான ஒன்றும் கூட! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நானும் இதையே சொல்ல நினைத்தேன்! :-)
      பதிவர்கள் அனைவரும் படித்துப் பயனுறுவார்களாக!

      Delete
    2. நன்றி சுரேஷ் & சேட்டைக்காரன் சார்

      Delete
  11. வூட்டுக்காரரை பூரிக்கட்டைல பொளக்கும்போது திடீர்னு ரோசம் வந்து கம்ப்ளைண்ட் பண்ணிட்டா உதவும். பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. ராஜி: அவரு பாவம் :)

      Delete
  12. அறியாத தகவல்கள். தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  13. தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றி பாஸ்.. வங்கி படிக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி அகல் படியுங்கள்

      Delete
  14. டுவிட்டர் உலகத்தில் இதெல்லாம் அவசியம்தானுங்கோ

    ReplyDelete
    Replies
    1. நன்றி வேல்முருகன்

      Delete
  15. பதிவர்களுக்கு தேவையான புத்தகம்

    ReplyDelete
    Replies
    1. கதிர் ராத்: நன்றி

      Delete
  16. அவசியமான நேரத்தில் சரியான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமலட்சுமி மேடம்

      Delete
  17. நன்கு பயன் படும் பதிவு.எல்லோரும் சட்டத்தை பின் பற்றினால் அதிகமான குற்றம் நடைப்பெற வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  18. கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் நன்றீ

    ReplyDelete
    Replies
    1. அன்பு தம்பி: நன்றி

      Delete
  19. Anonymous11:51:00 PM

    Timely post for bloggers like me...and not you...Mohan...:)

    ReplyDelete
  20. இவ்வளவு விஷயம் இதுல இருக்கா? தமிழன் படத்தில் விஜய் செய்தது போல் மக்கள் உரிமைகளை புத்தகமாகப் போட்டவருக்கு நன்றி சொல்லலாம். உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து புத்தகம் வாங்கி படித்து பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆம் முரளி சார் நன்றி

      Delete
  21. ஆச்சரியமாகத்தான் உள்ளது சினிமாப்படங்களில் முற்றிலும் எதிர்மறையாக அல்லவா காட்டுகிறார்கள்...இப்படியெல்லாம் நடக்கின்றதே என்று நினைத்தேன் நல்ல தகவல்

    ReplyDelete
  22. பேப்பரில் சொல்லப்பட்டுள்ள நடைமுறை யதார்த்தத்தில பின்பற்றப்பட்டால் நலம். அப்படி இல்லை என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.

    அனைவருக்கும் அவசியமான தகவல்கள்.

    ReplyDelete
  23. மிக பயனுள்ள தகவல்... நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...