Tuesday, April 26, 2016

தெறி படம் எப்டி பேபி ?சினிமா விமர்சனம்

மூன்று பாத்திரங்களில் விஜய் என்கிற மாதிரி ட்ரைலர்.. மேலும் ட்ரைலரில் சிறு குழந்தை குறித்தான காட்சிகள் நிச்சயம் படம் மீது லேசான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது..  எதிர்பார்ப்பு நிறைவேறியதா?கதை 

நேர்மையான போலிஸ் ஆபிசர்.. அவருக்கு சிக்கல் தரும் வில்லன்... எல்லா தமிழ் படம் போல் மனைவி வில்லனால் கொல்லப்பட.   குழந்தையுடன் ஒதுங்கி வாழ்கிறார் ஹீரோ. மீண்டும் வில்லன் என்ட்ரி.. ஹீரோ கிளை மாக்சில் வெற்றி பெற்றார் என்பதை சொல்லவேண்டுமா என்ன?

விஜய் மற்றும் பலர் 

விஜய்க்கு டைலர் மேட் பாத்திரம்.. காமெடி, செண்டிமெண்ட், காதல் அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார்.. 45 வயது என்றாலும் செம பிட் உடல் ...

குட்டி பெண் வயதுக்கு மீறிய ஓவர் பேச்சு. இந்த ஒரே காரணத்தால் ட்ரைலரில் ரசித்த மாதிரி - படத்தில் ரசிக்க முடியவில்லை;

சமந்தா குட்டி பாத்திரம் என்றாலும் கிடைத்த வாய்ப்பை அழகாய் செய்துள்ளார்.. விஜய்- சமந்தா காதல் காட்சிகள் கியூட்

காமெடி சற்று குறைவு தான். ராஜேந்திரன் - காமெடி மட்டுமல்லாது கேரக்டர் ரோலும் சேர்த்து செய்கிறார்..

சுனைனா வரும் 5 நிமிடம் நன்கு சிரிக்க வைக்கிறார்கள் (ப்ரதர்ர்ர்.....)

உதிரி பூக்கள் தந்த இயக்குனர் மகேந்திரன் வில்லனாக... ! வித்யாசமான புது வில்லன் என  எண்ணம் ஓகே; ஆனால் அவரது நடிப்பில் இயல்பை விட செயற்கை தன்மை சற்றே கூடுதல்முதல் பாடலும், சமந்தாவுடனான ஓரிரு பாடல்களும் குட். மாறாக தேவா பாட்டு + குரல் விஜய்க்கு சுத்தமாய் பொருந்தலை  !

அட்லி

ராஜா ராணியில் சிக்சர் அடித்தவர் இங்கு பவுண்டரி அடித்து பாஸ் ஆகியுள்ளார்.

தேவையற்ற சம்பவங்கள் சிறிதும் இன்றி கதை எழுதிய விதம்.. சமூக அக்கறை சார்ந்த சில விஷயங்களை திரைக்கதையில் தொட்ட புத்திசாலித்தனம் ....விஜய் என்கிற மாஸ் ஹீரோவை மிக சரியாக பயன்படுத்திய விதம்.. இவற்றுக்கு ஷொட்டு

சத்ரியன் பாதிப்பில் கதை எழுதியது.. இரண்டாம் பாதியில் கொட்டாவி வர வைத்தது. அதிக பிரசங்கி குட்டி பெண்  மற்றும் எமி ஜாக்சன் - கெட் அப் இவை உறுத்தல்

படம் கமர்ஷியலாய் எப்படி ?? 

சொல்ல தேவையில்லை.. நிச்சயம் தெறி ஹிட் தான்.

தயாரிப்பாளர்- டிஸ்ட்ரி பியூட்டர் பிரச்சனையால் - காசி தியேட்டர் துவங்கி - மடிப்பாக்கம்,   தாம்பரம், செங்கல்பட்டு வரை படம் ரிலீஸ் ஆகலை; உண்மையில் இந்த ஏரியா மிக அதிக பணம் வர கூடிய ஏரியாவாம்.. இது நிச்சயம் படக்குழுவுக்கு ஒரு இழப்பு..

இன்னொரு பக்கம் இந்த ஊர் மக்கள் சென்னை தியேட்டர்கள் - மால்களில் சென்று தான் படம் பார்க்கணும் என்பதால் - மால் -களில் வார நாட்களும் படம் நிரம்பி விடுகிறது.. மேலும் முழு ஆண்டு விடுமுறையும் துவங்கி விட்டதால் - படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்..

அட்லி மற்றும் விஜய்க்கு இன்னொரு ஹிட் படம்

தெறி பைனல் வெர்டிக்ட் - கத்திக்கு மேலே; துப்பாக்கிக்கு கீழே !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...