தோழா - சினிமா விமர்சனம்
ஆங்கில படத்தை காப்பி அடித்து சொதப்பியவர்கள் தான் மிக அதிகம்; இங்கு ஆங்கில படத்தை நமக்கு ஒத்து போகும் வகையில் மிக சரியாக எடுத்துள்ளனர் !!
வீல் சேரிலேயே வாழ்க்கையை கழிக்கும் பணக்காரர் நாகார்ஜுனா - அவரை பார்த்து கொள்ள வரும் லோக்கல் திருடன் - கார்த்தி... இவர்களின் நட்பே தோழா..
கதை - திரைக்கதை அமைக்கப்பட்ட விதத்திற்கு தான் முதல் பாராட்டு; குறிப்பாக காமெடி நீக்கமற நிறைந்திருக்கிறது. சீரியஸ் - செண்டிமெண்ட் சீனை கூட சர்வ நிச்சயமாக காமெடியுடன் தான் முடிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரைக்கதை அமைத்துள்ளனர்.. சிற்சில லாஜிக் மீறல்கள் நிச்சயம் இருந்தாலும் காமெடி தான் அவற்றை மறக்கடிக்கிறது..
காஸ்டிங்.. ஜஸ்ட் பெர்பக்ட்... !! வீல் சேரில் இருக்கும் பணக்காரர் பாத்திரத்துக்கு நாகார்ஜுனா செம பொருத்தம். ரிச்னெஸ், இயலாமை இரண்டையும் துல்லியமாக பிரதி பலிக்கிறார்.. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நாகார்ஜுனா பாத்திரம் அனைவரையும் கவர்ந்து விடும்.
நாகார்ஜுனா மாதிரி அனுபவம் வாய்ந்த நடிகர் முன்பு கார்த்திக்கும் - அட்டாகாசமான ரோல் தந்து அவரிடமும் நல்ல நடிப்பை பெற்றுள்ளனர். கார்த்தி பாத்திரத்தில் சில லாஜிக் மீறல்கள் இருப்பினும் (பணக்காரரை அவர் ஹாண்டில் செய்யும் விதம் + தமன்னாவுடன் காதல்) - மொத்தத்தில் அந்த பாத்திரம் மற்றும் அவரது நடிப்பு - ரசிக்கும் விதமே உள்ளது.
தமன்னா விற்கு கதையில் அதிக ஸ்கோப் இல்லை என்றாலும் - அவர் இல்லாவிடில் காட்சிகள் நிச்சயம் Dry ஆகி விடும்; எனவே அப்படி ஒரு பாத்திரம் அமைத்தது - திரைக்கதைக்கு உதவவே செய்கிறது..
படத்தை மிக அழகாக முடிக்கிறார்கள்.. Poetic !!
படம் ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்கிறது..
நாகார்ஜுனாவிற்கு வாழ்வில் என்ன தேவை என அவருக்கே தெரியவில்லை.. அவருக்கு என்ன தேவை என புரிந்து கொண்ட ஒரு நண்பன் தான் உரிமையுடன் அதை சரி செய்கிறான்..
போலவே, கார்த்தியின் வாழ்வில் எது முக்கியம்; அவருக்கு எது சந்தோஷம் தரும் என்கிற விஷயத்தை நாகார்ஜுனா தான் உணர்த்தி வேறு வழிக்கு திருப்புகிறார்..
நட்பின் பலத்தையும், வலுவையும் இதை விட அழகாக சொல்ல முடியாது.
தோழா.. அனைவருக்கு பிடித்தவன்.. அவசியம் பாருங்கள் !
தியேட்டர் நொறுக்ஸ் :
தஞ்சை சென்ற போது - அப்பாவிற்கு ரிலாக்சேஷன் ஆக இருக்கும் என படத்துக்கு அழைத்து சென்றோம்.. கூடவே 11 முதல் 20 வயது வரை உள்ள எங்க வீட்டு நெக்ஸ்ட் ஜெநரேஷன் பசங்க.. நால்வர்.. படம் ஆறு பேருக்குமே மிக பிடித்திருந்தது..
ஜூபிடர் தியேட்டர்.. ஒரு காலத்தில் ரொம்ப சுமாராய் இருக்கும்; இப்போது ஏ. சி பொருத்தியதுடன் நல்ல சவுண்ட் சிஸ்டத்துடன் - தயக்கமின்றி படம் பாக்கிற வகையில் உள்ளது.. !!
**********
பிச்சைக்காரன் - விமர்சனம்
அட்டாகாசமான படம் ! மிக விதயாசமான கான்செப்ட்; செண்டிமெண்ட், காமெடி, நல்ல வசனம் என அனைத்தும் அசத்துகிறது.
உண்மையில் இது ஒரு மாஸ் ஹீரோவிற்கான கதை .. விஜய் ஆண்டனி நடித்து ஓடி விட்டது.. ஓகே. ஆனால் 10 வருடம் முன்பு ரஜினி நடித்திருந்தால் (இப்போது அவர் இந்த பாத்திரத்தில் நடிக்க முடியுமா தெரிய வில்லை ) - இப்படம் ரஜினியின் அண்ணாமலை, பாஷா உள்ளிட்ட ஆல் டைம் ஹிட் வரிசையில் சேர்ந்திருக்கும் !!
இதுவும் ஒரு பணக்காரரின் கதை தான். அம்மாவிற்காக 48 நாள் வேண்டுதலுடன் பிச்சை எடுக்கிறார்.. அந்த 48 நாள் அவர் சந்திக்கும் மனிதர்கள் + அனுபவங்கள், அந்த காலத்திலேயே வரும் ஒரு காதல், 48 நாள் முடியும் முன்னே அவர் தனது நிஜ பெயரை வெளிகாட்டியே தீர வேண்டி வரும் நிர்ப்பந்தம்.. என படு சுவாரஸ்யம்..
தமிழ் சினிமா நிறைய நேர் மற்றும் எதிர் நம்பிக்கைகள் கொண்டது; குறிப்பாக நெகடிவ் பெயரில் படம் எடுக்க மாட்டார்கள். ஆனால் அண்மையில் சில படங்கள் நெகடிவ் தலைப்புடன் வந்து நன்கு ஓடி உள்ளன.. இறுதி சுற்று மற்றும் பிச்சைக்காரன் (இப்படத்திற்கு இதை விட சிறந்த பெயர் இருக்க முடியாது !) இதுவே ஒரு ராசி என நினைத்து நிறைய படங்கள் இதே மாதிரி தலைப்பில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை !!
பிச்சைக்காரன.. நல்ல பீல் குட் மூவி.. தவற விடாதீர்கள் !

தோழா பார்த்தேன். உண்மையாகவே 'poetic'.
ReplyDeleteபிச்சைக்காரன் பார்க்க வேண்டும்.