Saturday, April 6, 2013

தடை செய்யப்பட டேம் 999 -கதை + விமர்சனம்

2012 ல் ரிலீஸ் ஆகி, தமிழில் வெளியாவதற்கு முதல் நாள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட படம் டேம் - 999 . ஒரிஜினல் பிரிண்ட் ஆக இப்போது தாராளமாக எல்லா இடத்திலும் கிடைக்கிறது

கதை

வினய் (உன்னாலே - உன்னாலே/ ஒன்பதுல குரு) தனது மகன் சாம் உடன் தனது சொந்த ஊருக்கு வருகிறார். சாமுக்கு ஜூவனைல் டயபாடிக்ஸ் (சர்க்கரை நோய் ) உள்ளது. வினய்யின் தந்தை உள்ளூர் மருத்துவர் மற்றும் ஜோசியர்.



இடையே வினய் பற்றிய ஒரு பிளாஷ் பேக் சொல்லப்படுகிறது. இளம் வயதில் வினய் மற்றும் விமலா ராமன் காதலிக்கின்றனர். ஆனால் இருவர் ஜாதகத்தை பார்த்த வினய் தந்தை " இருவரும் இணைந்தால் - அல்லது அப்படி நினைத்தாலே - ஊருக்கு நல்லது இல்லை (!!!??) என்கிறார் ! அதனால் வினய் இன்னொரு பெண்ணை மணந்து இப்போது மகனுடன் ஊருக்கு வந்துள்ளார். மனைவி உடன் இல்லை என்பதால் மீண்டும் விமலா ராமன் மீது அன்பு துளிர்க்கிறது

இதற்கிடையே ஊரில் உள்ள அரசியல் வாதி ஆஷிஷ் வித்யார்த்தி ஊழல் செய்து டேமை மோசமாக கட்டியுள்ளார் என்பது சொல்லப்படுகிறது.

வினய் - விமலா ராமன் அன்பு மீண்டும் மலர்ந்த வேளை - அணை உடைகிறது. ஆயிரகணக்கான மக்கள் இறக்கிறார்கள் ஆனாலும் ஹீரோ ஹீரோயின் மற்றும் குழந்தை தப்பித்து விடுகிறார்கள். நாட்டின் நலன் கருதி (!!) ஹீரோ - ஹீரோயின் பிரிய படம் நிறைவுறுகிறது

*************
( ண்ணா .. தடை செய்யப்பட இந்த படம் நீங்க பார்க்க வாய்ப்பே இல்லை என்பதால் மட்டும் முழு கதை சொல்லிருக்கேங்கண்ணா .. )

கதை - திரைக்கதை - நடிப்பு என ஒரு டிபார்ட்மெண்ட்டும் ஒழுங்காய் இல்லை. படத்தின் நிறைவில் அணை உடையும் போர்ஷனை நம்பியே படம் எடுத்துள்ளனர். படத்தில் அதிக பட்சம் 10 நிமிஷம் அந்த காட்சி வருகிறது. ஆனால் ஆதற்கான முஸ்தீபு மட்டும் அவ்வப்போது வந்து போகிறது.

அட அந்த காட்சியாவது ஒழுங்காய் எடுத்தார்களா என்றால்.. முழு இருட்டில் மட்டுமே அணை உடைவதை காட்டுகிறார்கள். வெளிச்சம் வருவதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது. ஒரிஜினல் பிரிண்ட் என்றாலும் ஒண்ணும் ஒழுங்காய் புரியலை.

அந்த காட்சிகள் மட்டும் சற்று பரபரப்பை தருகிறது என்பதை மட்டும் ஒப்பு கொள்ள வேண்டும். அதற்காக மற்ற காட்சிகளை எந்த விதத்திலும் கண்டு கொள்ளாமல் விட்டது கொடுமை !

வினய் நடித்து எந்த படம் தான் ஹிட் ஆனது என்று தெரிய வில்லை. வெள்ளையாய் ஜம்முன்னு இருந்தா மட்டும் போதுமா? நடிக்க வேண்டாமா?

விமலா ராமனின் சுமாரான அழகு மட்டுமே ஓரளவுக்கு ஆறுதல்

மோசமான அரசியல் வாதியா? கூப்பிடு ஆஷிஷ் வித்யார்த்தியை என அழைத்துள்ளனர். விசேஷமா அவர் ஏதும் செய்யலை

படம் தமிழில் தியேட்டரில் வெளி வந்திருந்தால் அது எந்த அளவு பிரச்சனை ஆகியிருக்கும் என தெரிய வில்லை. முல்லை பெரியாறு அணை குறித்து சில பிரச்சனைகள் வலுத்திருக்க கூடுமோ என்னவோ. .. அந்த அரசியலுக்குள் செல்ல விரும்ப வில்லை.

ஒரு திரை படமாக, டேம் 999 - மிக பெரும் ஏமாற்றமே !

இந்த படம் தமிழர்கள் பார்க்காமல் போனதில் இழக்க ஒன்றுமே இல்லை !

3 comments:

  1. Anonymous11:03:00 PM

    Eppadiyo thamizhagam kappatra pattuvittathu.thamizhaga arasukku nanri

    ReplyDelete
  2. அட! இவ்வளவுதான் கதையா?இதுகுத்தான் இம்புட்டு ஆர்பாட்டம் பண்ணாங்களா? பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. தப்பித் தவறி கூட பாக்க வேண்டாம்னு சொல்லறீங்க. இந்தப் படத்தோட இசையைத்தான் நம்ம இசைப் புயல் ஆஹா ஓஹோன்னு பாராட்டினாராமே! மியூசிக்கும் சொதப்பல்தானா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...