ஒரு மாறுதலுக்கு இவ்வார தொல்லை காட்சியில் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மட்டுமே ! அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு டிவி களுக்கு இப்படி ஸ்பெஷல் எடிஷன் வராது கவலை வேண்டாம் :)
*****
விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.
கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் - பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது படமான கௌரவம் பாடல் வெளியீட்டை ஒரு விவாதமும் வைத்து நீயா நானாவில் நடத்தினார்.
சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து, உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி மாறி திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.
நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.
" கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது"
" Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது "
நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை - அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் " எக்சலண்ட் " " சூப்பர்ப்" என சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.
எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.
விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.
ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்
ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் " ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் - கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வென்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு டிவி சீரியல் நடிகைகள்.
கடைசி நிலைகளில் சற்று கடினமான வார்த்தைகள் இருந்தாலும், நிதானமாய் ஆடி ஜெயித்தது ஆச்சரியமாய் இருந்தது.
சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !
அசத்தும் காம்பியர்கள்
விஜய் டிவியில் மட்டும் எப்படிதான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.
சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றைய மா. கா. பா ஆனந்த் என பலரும் காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.
இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்
இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..
வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம, முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !
சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..
புதிய நிகழ்ச்சி - ஜோடி சீசன் - 4
விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் - 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுகமாகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்.
ரசிக்கும் படி யாரேனும் இருந்தால், எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லும்போது சானல் மாற்றிவிடுவது நல்லது :)
சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்
சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.
இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) வும் உண்டு. அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு.
ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அதிகம் திட்டலை.
இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை
*****
விஜய் டிவியின் பெரும் பலம்: அதன் கேம் ஷோக்கள் தான். குறிப்பாக வார இறுதியில் வரும் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகள் பெரிதும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு ஸ்லாட்டிலும் தான் தான் நம்பர் 1- ஆக இருக்க வேண்டுமென நினைக்கும் சன்னை கூட வார விடுமுறையில் விஜய் டிவி முந்தி விடும் என்றே தோன்றுகிறது.
கேம் ஷோக்கள் அதன் பலம் என்றால் - பயணம், சிறுத்தை, வாகை சூடவா, சாட்டை என 10 படங்களை மட்டுமே மாற்றி மாற்றி ஒவ்வொரு வாரமும் போட்டு ஜல்லியடிப்பது சூர மொக்கை. இந்த விஷயத்தில் ஏன் தான் விஜய் டிவி இப்படி இருக்கோ தெரியலை !
************
நீயா நானாவில் கௌரவ கொலைகள் பிரகாஷ் ராஜ் கௌரவ கொலைகள் குறித்த தனது படமான கௌரவம் பாடல் வெளியீட்டை ஒரு விவாதமும் வைத்து நீயா நானாவில் நடத்தினார்.
சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து, உறவினர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட பலரும் தங்கள் கதையை கூறினர். குறிப்பாக ஒரு பெண் சாதி மாறி திருமணம் செய்ததால் தனது கணவர் கொல்லப்பட்டதாகவும், தான் இப்போது குழந்தையுடன் சாப்பாட்டுக்கே வழியின்றி தவிப்பதாகவும் சொன்னது பரிதாபம்.
நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் சொன்ன தகவல் சிந்திக்கத்தக்கது.
" கி.மு 2000 முதல் சாதி இருந்துள்ளது. ஆனால் தீண்டாமை கி. பி 500 -ல் தான் வந்தது. அதாவது முதலில் சாதி இருந்தது. ஆனால் தீண்டாமை இல்லை. சாதி வந்து 2500 ஆண்டுகளுக்கு பின் தான் தீண்டாமை வந்தது"
" Scheduled Caste என்று சொல்ல எவரும் தயங்க தேவையில்லை; பிற்படுத்தப்பட்டவர்கள் என்று சொல்லும் போது தான் மேலே, கீழே என ஏற்ற தாழ்வு வருகிறது. Scheduled Bank என்று சொல்வது போல தான் Scheduled Caste.. அரசு இவர்களை குறிப்பிட்ட பட்டியலில் வைத்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது "
நிற்க. கௌரவம் பட டிரைலர் பெரிதாய் கவரவில்லை. கிராமத்தில் ஒரு கௌரவ கொலை - அதை எதிர்த்து போராடும் கல்லூரி மாணவர்கள் என போகிறது கதை..
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. பிரகாஷ் ராஜ் என்னதான் " எக்சலண்ட் " " சூப்பர்ப்" என சூபர்லேடிவ்களை மட்டுமே வைத்து பாராட்டினாலும் நிகழ்ச்சி நிச்சயம் செல்ப் எடுக்கலை.
எளிமையாய் சொல்லுணும் என்றால் முன்பெல்லாம் சூர்யா வரும்போது நிகழ்ச்சி தவற விடாமல் பார்க்கணும் என தோன்றும். இப்போது அநேகமாய் பார்ப்பதே இல்லை.
விஜய் டிவி விழித்து கொள்ளா விட்டால் இதன் TRP அதள பாதாளத்தில் தான் இருக்கும்.
ஒரு லட்சம் வென்ற ஜோடிகள்
ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் " ஒரு லட்சம் பரிசு போட்டியில் இதுவரை மூவர் தான் - கடைசி லெவல் வரை வென்று ஒரு லட்சம் பரிசு வென்றுள்ளனராம். மறு ஒளிபரப்பில் அப்படி ஜெயித்த 3 க்ரூப்பையும் காண்பித்தனர். வேணு அரவிந்த்- அபிஷேக், வடிவுக்கரசி- சின்னத்திரை இயக்குனர் ஆனந்த், இரு டிவி சீரியல் நடிகைகள்.
1 லட்சம் ஜெயித்த டிவி சீரியல் நடிகைகள் |
சில நேரம் எதிரணிக்கு மிக கஷ்டமான வார்த்தைகளும் மற்றொரு அணிக்கு சற்று இலகுவான வார்த்தைகளும் வருவதை கவனித்து சரி செய்தால் நன்றாயிருக்கும் !
அசத்தும் காம்பியர்கள்
விஜய் டிவியில் மட்டும் எப்படிதான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள்.
சந்தானம், சிவகார்த்திகேயன், இன்றைய மா. கா. பா ஆனந்த் என பலரும் காமெடி அல்லது காம்பியரிங் செய்து பின் பெரிய திரைக்குள் நுழைந்தவர்கள் தான்.
இன்னொரு பக்கம் கோபிநாத் தினம் ஒரு மகளிர் ஷோவும் வார கடைசியில் ரெண்டு ஷோவும் அலுக்காமல் நடத்துகிறார். ஒரு வார்த்தை ஒரு லட்சம் நடத்தும் ஜேம்ஸ் வசந்தனாகட்டும், தமிழ் பட்டி மன்றம் நடத்தும் இளைஞர் ஆகட்டும் பெரும்பாலானோர் ரசிக்க வைக்கிறார்கள்
இப்படி சரியான காம்பியர் கிடைப்பது அதிர்ஷ்டமா அல்லது இங்கு யாரோ சரியான ஆள் தேர்வு குழுவில் இருக்கிறாரா தெரியலை !
சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி
படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு "சரவணன் மீனாட்சி " சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி - தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.
குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ! ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !
சீரியல் பக்கம் சரவணன் மீனாட்சி
படிக்குற வேலை, சமையல் வேலை எல்லாம் முடிஞ்சு 9 மணிக்கு டிவி போடுவோம். அப்படி தான் சூப்பர் சிங்கர் ரொம்ப காலம் பார்த்தது. இப்போ சூப்பர் சிங்கரை ஒன்பதரைக்கு தள்ளிட்டு ஒன்பது மணிக்கு "சரவணன் மீனாட்சி " சீரியல் வருது. மனைவியும் மகளும் பார்ப்பதால் கருமமே என கொஞ்சம் பார்த்து தொலைக்க வேண்டியிருக்கு. சரவணன் & மீனாட்சி - தங்கள் பெற்றோரை விட்டுட்டு அதே ஊரில் தனிக்குடித்தனம் போறாங்க. அந்த கதை தான் சில வாரமா ஓடிகிட்டு இருக்கு.
குயிலி மாதிரி தளுக்கி மினுக்கி எந்த பெண் பேசுறாரோ ! ஓவர் ஆக்டிங்கின் இலக்கணம் இந்த சீரியலில் வரும் குயிலி தான். முடியல !
இந்த மீனாட்சி பொண்ணு இருக்கே.. ரொம்ப நாளா சொல்ல வேணாம்னு பார்த்தேன். சரி இன்னிக்கு சொல்லிடலாம்..
வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம, முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !
சின்னத்திரையில் இருந்தாலும் அம்மணி அநியாய ஆர்த்தடாக்ஸ் போல..
புதிய நிகழ்ச்சி - ஜோடி சீசன் - 4
விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் - 4 துவக்கி இருக்கிறார்கள். இப்போதைக்கு சனிக்கிழமை இரவு 7.30 முதல் எட்டரை வரை ஒளிபரப்பாக உள்ளது. ரம்யா கிருஷ்ணன் சரோஜா தேவி ஆகியோர் நடுவர்களாக இருக்க, ஏழெட்டு புது ஜோடிகள் அறிமுகமாகிறார்கள். மீண்டும் திவ்ய தர்ஷினி தொகுப்பாளினி ஆக வருகிறார்.
ரசிக்கும் படி யாரேனும் இருந்தால், எட்டி பார்க்கலாம் மற்றபடி நடுவர்கள் கருத்து சொல்லும்போது சானல் மாற்றிவிடுவது நல்லது :)
சூப்பர் சிங்கர் பாண்டிச்சேரி விஜயம்
சூப்பர் சிங்கரில் இப்போ டாப் 30 க்கு வந்துள்ளனர். பாடகர்கள் அனைவரையும் வேனில் போட்டு பாண்டிச்சேரி கூட்டி சென்று, எலிமினேஷன் இன்றி ஜாலியாய் பாடவைத்து ஒரு வாரம் ஓட்டினர்.
இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) வும் உண்டு. அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு.
ஆள் ஆளுக்கு தேவனை திட்டுவது அவர் காதில் விழுந்துச்சோ என்னவோ.. இவ்வாரம் பாடியவர்களை அதிகம் திட்டலை.
இனி ஒவ்வொரு எலிமிநேஷனாக ஆரம்பிப்பார்கள். பத்தரை வரை செல்வதால் தொடர்ந்து பார்க்க முடிவதில்லை
அது இது எது
இவ்வாரம் அது இது ஏதுவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா - டீம் வந்திருந்தது. விமல், சிவகார்த்திகேயன் மற்றும் பிந்து மாதவி.
சிவாவுக்கு இது வித்யாச ஹோம் கம்மிங். பல வருடங்கள் இந்நிகழ்ச்சி நடத்தியவர் இன்று அதில் ஒரு போட்டியாளராக... மா. கா. பா - சிவா இருப்பதால் அடக்கி வாசித்து அவரை நிறைய பேச விட்டார்.
பிந்து மாதவி முடியெல்லாம் வெட்டி கொண்டு பையன் மாதிரி இருந்தார் அதை வைத்து அவரை நன்றாக ஓட்டி தள்ளி விட்டார் சிவா. விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். 3 ரவுண்டிலும் ஜெயித்தது பிந்து மாதவி மட்டுமே ! இவ்வாரம் சிரிச்சா போச்சு ரவுண்டு செம கலக்கல். முடிஞ்சா இணையத்தில் தேடி கண்டு களியுங்கள் !

Enjoyed oru vaarthtai oru latcham & athu ethu ethu. It appeared that siva karthikeyan lost it on purpose and bindhu madhavi was made to win! ;-))
ReplyDeleteNeengalum vellalam... Surya niraiya homework pannittu vanthiruppar - rasikkumpadi mudinthathu! Thavira, Surya mel nalla manitharnu oru abipraayamum irukku! Ivai kaaranama irukkalam, ippothaiya program edupadaamal iruppatharku.
நீங்களும் இது எது பார்த்து ரசித்தீர்களா ? ரைட்டு மாதவி
Deleteநீங்கள் ஜனரஞ்சக பதிவுகளை இடுவதோடு அல்லாமல் அது சகலரும் கருத்து எழுதக்கூடிய எளிமையான களமாக அமைந்து விடுவதால் முதலில் பாராட்டு பின் நன்றி.
ReplyDeleteநீ வெ ஒ கோ ஆரம்ப எபிசோடுகளில் பிரகாஷ்ராஜ் தொடர்ச்சியாக நல்ல தமிழில் பேசுவதற்கு திண்டாடியது நன்றாகவே தெரிந்தது. இப்போதும் போட்டியாளர்கள் வட்டார வழக்கு சொல்களை பயன் படுத்தும் போது தடுமாறி போய் விடுகிறார். இவரை விட சத்தியராஜ் நல்ல host ஆக இருந்திருப்பாரோ என்று தோன்றுகிறது.
காம்பியர்களில் திருஷ்டி பரிகாரம் பாவனா. வெத்தலையை வாயில் போட்டு குதப்பி வைத்து கொண்டு பேசுவது போல் பேசுவது சமயங்களில் நாராசமாய் இருக்கிறது.
முதல் பாராவிற்கு மகிழ்ச்சி + நன்றி நிஷா
Deleteகடைசி பாரா உண்மை தான் :)
வணக்கம் தல நீங்களும் நம்ம இனம் தான் போல
ReplyDeleteசனி ஞாயிறு முழுவதும் விஜய் டீவிய மட்டும் தான் பார்த்து இருப்பிங்க போல... வாழ்த்துக்கள்...
உண்மையிலேயே ரசிகர்கள புரிஞ்சிக்கிட்டு நிகழ்ச்சி தயாரிக்கிறது விஜய் மட்டும் தான் என்னா ஒரு பொழுதுபோக்கு..
அப்புறம் புதிசா ஒரு கேம் ஷோ 60 நொடி ஆர் யூ ரெடி அத பத்தி சொல்லவே இல்ல...
பொறம்போக்கு கரண்ட் காரன் நேத்துனு பாத்து சாய்ந்திரம் 3 மணி நேரம் கரண்ட் நிறத்திட்டான்....
பகல்ல வர 4 மணி நேர இன்ஸ்டால்மெண்ட் கரண்ட வச்சி நான் அது இது எது அதுவும் மாத்தியோசில கரண்ட் போயி,,, சாட்டை கொஞ்சம்,, ஜோடி லாஸ்ட் 1 ஹவர்,,என் தேசம் என் மக்கள் அவ்ளோ தான் பார்த்தேன்..
சரவணன் மீனாட்சியை நான் தினமும் பார்ப்பேன் ஒரு நாள் கூட தவர விடமாட்டேன் ஏன்னா குயிலியோட அந்த ஒவர் ஆக்டிங் ஒரு ஓரமா உக்காந்து பாத்தா சிரிப்பு சிரிப்பா வரும்.. எங்கப்பா தவிர அனைவரும் இந்த சீரியலில் மட்டும் ஒற்றுமையாய் பார்த்து சிரிப்போம்..சரவணன் புது வீட்டுக்கு போகும் போது குயிலி முகம் பார்க்கும் போது எநக்கு கல்யாணம் ஆனா நிச்சயம் இந்த தப்ப செய்யக்கூடாது என்ற எண்ணத்தை வர வைத்தார்கள்..
வாங்க கார்த்தி நன்றி
Deleteநீயா நானா கோபியை (நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி) யில் போட்டு இருக்கலாம். அவர் தான் அதை நடத்த சரியான நபர்.
ReplyDeleteஅவர் ஏற்கனவே ஏகப்பட்ட நிகழ்ச்சி நடத்துறார் நண்பா; ஒருவேளை பொருந்தியிருக்க கூடும்
Deleteவிஜய் டிவியில் முன்பெல்லாம் 15 நாட்களுக்கு ஒருமுறை 'தம்பிக்கு எந்த ஊரு' போடுவார்கள். இப்போது போடுவதில்லை போல!
ReplyDeleteஅப்படிங்களா? இப்போ சில வருஷமா கொஞ்சம் புது படங்கள் வாகிருக்காங்க அதையேதான் மறுபடி மறுபடி போடுறாங்க
Delete//வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம, முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !
ReplyDelete//
நல்ல கவனிப்பு தொடருங்கள்
//விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் - 4 //
ReplyDeleteசீசன் -6 அன்பரே
அப்படியா ? நன்றி நண்பரே
Delete//எடுத்தவுடன் ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்: சூர்யா இருந்த போது இருந்த ஜோஷ் இப்போது சுத்தமாக இல்லை. // சூர்யாவே தவறான தேர்வுதான். மென்மையான குரலுடையா சூர்யாவை ரெம்ப கத்த விட்டுவிட்டார்கள். அமிதாப்பை விட வேறு யாரும் ஆளுமையுடன் இந்தநிகழ்ச்சியை நடத்தியதாக தோணவில்லை . கார்த்தி மாதிரி கலகலப்பான ஆளுங்கள ட்ரை பண்ணலாம் .
ReplyDelete// ஜேம்ஸ் வசந்தன் நடத்தும் " ஒரு லட்சம் பரிசு போட்டி // மிக அருமையான நிகழ்ச்சி . ஜேம்ஸ் ரெம்ப தன்மையாவும் , கலகலப்பாவும் கொண்டுபோறாரு .
//விஜய் டிவியில் மட்டும் எப்படிதான் நல்ல நல்ல காம்பியர் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. சற்று கவனித்து பாருங்கள். மற்ற தமிழ் டிவி காம்பியர்கள் எத்ததனை பேரின் முகமோ, பெயரோ நினைவுக்கு வருகிறது? ஆனால் விஜய் டிவி காம்பியர்கள் சிலர் சினிமா நட்சத்திர ரேஞ்சுக்கு புகழோடு உலா வருகிறார்கள். //
சந்தானம் , சிவா , ஜேம்ஸ் , dd , கோபி அவ்ளோதான் பாஸ் . மா.கா.பா , பாவானா ல்லாம் அப்டி ஒன்னும் சொல்ரமாதிரி இல்ல .
//வீட்டில் இருக்கும்போதும் சரி, புருஷனோட தனி அறையில் இருக்கும்போதும் சரி இடுப்பில் துளியூண்டு கூட தெரியாம, முழுக்க மறைச்சு புடவை கட்டுது. வீட்டில் கூட - அதுவும் கணவனுடன் தனியறையில் இருக்கும்போதுமா? இது அநியாயத்துக்கு லாஜிக் மீறலா இருக்கு யுவர் ஆனர் !//
சேம் தாட் போன வாரம் தான் இத பத்தி வீட்டுல பேசிட்டு இருந்தோம்
//விஜய் டிவி யில் மீண்டும் ஜோடி நம்பர் சீசன் - 4 துவக்கி இருக்கிறார்கள். //
கும்கி படத்தின் சொய்ங் சொய்ங் பாடலுக்கு ஆடிய பெண்ணும் ,ரோபோ சங்கரும் இதில் ஒரு ஜோடி. ரோபோ சங்கர் சில சமயங்களில் சிரிக்கவும் . பல சமயங்களில் நெளியவும் வைக்கிறார்.
//இந்த டாப் 30-ல் சென்ற சீசனில் இறுதி நிலை வரை வந்த சவுந்தர்யா (சவுண்டு சவுந்தர்யா என்பார் DD ) வும் உண்டு. அவர் அளவுக்கு மற்றவர்கள் நிச்சயம் பாடலை. சவுந்தர்யா பைனல் வரை வரவும், பரிசு வெல்லவும் கூட வாய்ப்பு உண்டு. //
பாஸ் நல்லா பாருங்க . ச்வுந்தர்யாவுக்கு சான்சே இல்ல . திவாகர் , கணேஷ் இன்னும் ஒருசில பொண்ணுங்க, பசங்க பெயர் தெரியல ... சும்மா பட்டைய கிளப்புறாங்க .
//விமல் சிவாவுக்கு நேர் எதிர் போலும். மனுஷன் சுத்தமா பேசவே மாட்டேங்கிறார். //
வேண்டா வெறுப்பா உக்காந்த மாதிரி இருந்தாப்புல .
அட்டகாசமான நிகழ்ச்சியான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு விரைவில் வரப்போகிறதாம் . ஆவலோடு காத்திருப்போம் .
விரிவான கருத்துக்கு நன்றி சார்
Deleteஎனக்குகூட NVOK பிடிக்கவேயில்லை. விஜய் டிவி காம்பியரர்களுக்கு வேலையோடு நல்ல சுதந்திரமும் தருகிறார்கள் என நினைக்கிறேன்..
ReplyDeleteஅதுசரி.. அந்த மீனாட்சி பொண்ணைப் பார்த்து ஜொள்ளுவிடாத ஆண்களே இல்லை போலிருக்கு..
அது இது எது கலக்கல்!
கோபிநாத் நடத்தும் மகளிர் நிகழ்ச்சி எது. உங்கள் பதிவு மிகவும் அருமை
ReplyDelete