Monday, April 22, 2013

தொல்லைகாட்சி: விஜய் அவார்ட்ஸ்- கலைஞர் செய்திகள்- குறும்பட போட்டி

விஜய் அவார்ட்ஸ் - ரீ வைண்ட்

சென்ற 2012 வருடத்துக்கான விஜய் அவார்ட்ஸ் - நிகழ்ச்சி விரைவில் நடக்க உள்ளது அதற்கு முன் சென்ற வருடங்களில் நடந்த "பெஸ்ட் மொமன்ட்ஸ்" என்று தேர்ந்தெடுத்து ஒளிபரப்பினர்.



கடந்த 3 வருடங்களாக சிறந்த நகைச்சுவை நடிகராக விருது வாங்கியது சந்தானம் மட்டுமே ! ஒவ்வொரு முறையும் மேடையில் அவர் கலாய்ப்பதை மீண்டும் பார்த்து சிரிக்க முடிந்தது அதிலும் விண்ணை தாண்டி வருவாயா கணேஷை - அவர் குரலை சந்தானம் கலாய்ப்பது வருடா வருடம் தொடர்கிறது

அஞ்சலி கடந்த 3 வருடத்தில் 2 முறை (அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும்) விருது வாங்கியுள்ளார். ஒரு பக்கம் பெர்பார்மன்ஸ்சில் கலக்கினாலும், கிளாமர் ரோலிலும் அவர் இன்னொரு பக்கம் அசத்தி வருவது ஆச்சரியமாய் இருந்தது

ஸ்ரேயா உள்ளிட்டோரின் சில நல்ல டான்ஸ்கள் - சிவ கார்த்திகேயனின் அட்டகாச ஒன் லைனர் என வார இறுதியில் ஜாலியாய் இருந்தது இந்த நிகழ்ச்சி.

கேப்டன் டிவியில் யோகா நிகழ்ச்சி

கேப்டன் டிவி பக்கம் அநேகமாய் போவதே இல்லை. இருந்தாலும் ஒரு நாள் காலை நேரம் பார்த்த போது, யோகா நிகழ்ச்சி மிக பொறுமையாக நன்கு சொல்லி தருவதை காண முடிந்தது. ஒரு பெண் அமர்ந்து தானும் யோகா செய்த படி மற்றவர்களுக்கு சொல்லி தர, இன்னும் சில பெண்கள் அவருடன் சேர்ந்து செய்தனர். இதை பார்த்ததும் நம் வீட்டில் உள்ள சில ஆட்கள் செய்ய முயற்சித்து பார்த்தனர். அடுத்தடுத்த நாள் அந்த பக்கம் போகவே இல்லை !

கலைஞர் செய்திகள்

செய்திகளில் விவாதம் என்று வந்தால் - பொதுவாக வெளியிலிருந்து விருந்தினர் அழைத்து வந்து அவர்களின் கருத்துகளை அறிவார்கள். கலைஞர் செய்திகளில் செய்தி வாசித்து கொண்டே இருப்பவர்கள், திடீரென தங்களுக்குள் பேசி கருத்து பரிமாற்றம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். எழுதி வைத்து கொண்டு படிக்கிற மாதிரி இல்லாமல் சுயமாய் பேசுகிற மாதிரி இயல்பாய் இருக்கிறது இந்த விவாதம்.

ஆனால் கலைஞர் டிவி - மத்தியில் காங்கிரஸ் அல்லது பா. ஜ.க என யாரை ஆதரிக்க போகிறார்கள் என புரியாமல் கொஞ்சம் நடு செண்டராய் பேசுகிறார்கள்

கலைஞர் செய்திகள் பற்றி சொல்ல இன்னொரு விஷயமும் உண்டு: மாவட்ட செய்திகள் என்ற தலைப்பில் செய்திகள் வெளியிடும் போது கழுதை அறுத்து கொலை; ரயில் முன் பாய்ந்து பலி என்று செய்திகள் சொல்லி விட்டு, அத்தகைய சடலங்களை வேறு detailed -ஆக காட்டுவதை தவிர்க்கலாம் !

ஜோடி சீசன்

விஜய்யில் மீண்டும் துவங்கியுள்ள ஜோடி சீசன் - அவ்வப்போது பார்த்து வருகிறோம். ரம்யா கிருஷ்ணன் மற்றும் அலைகள் ஓய்வதில்லை ராதா நடுவர்களாக இருக்கின்றனர்

இருவருமே கமல் மற்றும் ரஜினியிடம் நடித்தவர்கள் என்று அவர்களை பற்றி கேட்க, "ரஜினி மிக சிம்பிள்; இயக்குனர் சொன்ன பேச்சை மீறவே மாட்டார் " என புகழ்ந்து தள்ளினர் அதுவே கமல் பற்றி பேசும் போது "பஞ்ச தந்திரத்தில் நான் எப்படி நடிக்கணும் என நடித்து காட்டியது அவர் தான்; இயக்குனர் வைத்துள்ள காட்சியை கமல் பல மடங்கு மாற்றி விடுவார் அவர் மாற்றிய பின் தான் அந்த காட்சி பல மடங்கு அருமையாய் இருக்கும் என்று புகழ் பாடினர்

ரோபோ ஷங்கர் இதில் டான்ஸ் ஆடுகிறார் ! டான்சை அவிட அவர் அடிக்கும் ஜோக்கிற்காக அவரை ஒரு அணியில் வைத்துள்ளனர் போலும் அதுக்கு DD -யுடன் சேர்ந்து அவரை காம்பியரிங் செய்ய சொல்லிருக்கலாம் !

சிறந்த குறும்படம் + படம் இயக்கம் வாய்ப்பு

விஜய் அவார்ட்சின் ஒரு பகுதியாக சிறந்த குறும்படம் ஒன்று தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளனர். கவுதம் மேனன், ராஜேஷ் , ராம் என 3 இயக்குனர்கள் சிறந்த படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளனர். மே - 2 க்குள் படம் எடுத்து அனுப்பனுமாம்

சிறந்த படமாக தேர்வாகும் பட இயக்குனருக்கு விஜய் டிவி மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் இயக்கம் வாய்ப்பும் கூட கிடைக்கலாம் என்று அறிவித்துள்ளனர்

அந்த ப்ரோமோ இதோ உங்கள் பார்வைக்காக :



ஐ. பி. எல் கார்னர்



சென்னை அணி வெளியூரில் சென்று வென்றாலும் - உள்ளூரில் பல முறை தோற்கிறது. மாறாக பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகள் எப்போதும் தங்கள் ஊரில் வென்று விடுகின்றன. அடுத்த சுற்றுக்கு செல்லவும் முதல் 2 இடங்களில் வரவும் - தங்கள் கிரவுண்டில் தொடர்ந்து வெல்வது மிக முக்கியமானது. (அங்கு தான் அதிக பட்ச மேட்ச்கள் விளையாடுகிறார்கள் )

இம்முறை அர்ச்சனா போன்ற அழகிய காம்பியர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றமாய் உள்ளது. இப்போதுள்ள ஒரு பெண்ணின் முகமும் நினைவில் கொள்கிற அளவில் இல்லை...................நியாயமாரே !

7 comments:

  1. குறும்பபட இயக்குனர்களுக்கு மற்றும் ஒரு பொன்னான வாய்ப்பு.. என்னை போன்ற குறும்பட பிரியர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது :-)

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. குறும் படங்களை காண ஆவலாய் இருகின்றேன்

    ReplyDelete
  4. அவர் கலாய்ப்பதை மீண்டும் பார்த்து சிரிக்க முடிந்தது அதிலும் விண்ணை தாண்டி வருவாயா கணேஷை - அவர் குரலை சந்தானம் கலாய்ப்பது வருடா வருடம் தொடர்கிறது...

    I think Santhanam has to stop creating fun with VTV Ganesh in the award shows.. pretty sure VTV ganesh family will not like this... mey be he can do this in cinemas...

    ReplyDelete
  5. குறும்பட இயக்குனர்களின் சில படைப்புகள் நன்றாகவே இருக்கிறது. கலைஞர் டி.வி எல்லாம் பார்க்கறீங்களா? அட போங்க பாஸ்.

    ReplyDelete
  6. குறும்படங்கள் வெளி வந்தால் அது பற்றியும் சொல்லுங்க மோகன். பார்க்க வசதியா இருக்கும்....

    ReplyDelete
  7. இம்முறை அர்ச்சனா போன்ற அழகிய காம்பியர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றமாய் உள்ளது. இப்போதுள்ள ஒரு பெண்ணின் முகமும் நினைவில் கொள்கிற அளவில் இல்லை...................நியாயமாரே ! #பத்த வச்சிட்டியே பரட்ட .......... கடைய அடைங்கடா பஸ்ஸ கொளுத்துங்கடா ... கூட இன்னும் பத்து தெலுங்கு பட டையலாக்குகளை சேத்துக்குங்க்கடா ..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...