கிருஷ்ணா புரம்
திருநெல்வேலி அருகில் உள்ளது கிருஷ்ணா புரம் ! இந்த வெங்கடாசலபதி கோவில் சிற்பக்கலைக்கு மிக புகழ் பெற்றது.
நமது நண்பன் வேங்கடப்பன் மிக வித்யாசமானவன். இந்த இடத்துக்கு செல்லும் வரை இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்றோ அதன் சிறப்பு பற்றியோ எதுவும் மூச்சு விட வில்லை.
நவதிருப்பதி கோவில்களை ஒரே நாளில் சுற்றி வர கிளம்பிய எங்களின் கார் சைலன்ட்டாக இந்த இடத்துக்கு வந்தது.
இங்குள்ள சிற்பங்கள் அளவு அழகான சிற்பங்கள் மிக சில கோவில்களில் தான் நீங்கள் பார்க்க முடியும். நேரு, இந்திரா ராஜீவ் என 3 பிரதமர்கள் வந்து ரசித்த சிற்பங்கள் இவை.
25க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருவேங்கடம் விஷ்ணுவரம் பெருமாள். விக்னேஸ்வரி - மேலே பெண்ணாகவும் கீழே ஆணாகவும் இருக்கும் பிள்ளையார்.
நீல கண்ட விநாயகர் - என்கிற இன்னொரு கடவுளும் மிக விசேஷமானவர். சிவன் ரூபத்தில் இருக்கும் பிள்ளையார் இவர் என்கிறார்கள்
பல இடங்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதை காண முடிந்தது
விளக்கு பரிகாரம் என்பது இங்கு நிறையவே நடக்கிறது. பலரும் 9 முதல் 108 விளக்குகள் வைத்து பரிகாரம் செய்கிறார்கள். நவகிரக மூர்த்திகள் மேலே விளக்குடன் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம் 12 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் இங்கு பரிகாரம் செய்ய வருகிறார்கள்
சுசீந்தரத்தின் சங்கீத தூண்கள் மிக புகழ் பெற்றவை. ஒரே கல்லில் செய்யப்பட மிக உயரமான 7 தூண்கள் அலங்கார மண்டபத்தில் உள்ளன. ஆனால் நாம் தட்டினால் அவற்றில் எந்த சத்தமும் வருவதில்லை. அவற்றை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட விதத்தில் தட்ட வேண்டும். கோவிலில் இருக்கும் பெரியவர் ஒருவர் தட்டி சத்தம் வர வைத்து காட்டினார்
நாங்கள் சென்ற நேரம் வருடாந்திர கோவில் திருவிழா நடப்பதால் அந்த ஏரியாவே களை கட்டியிருந்தது. வீடியோவில் சுசீந்திரம் கோவில் வெளிப்புறத்தை நீங்கள் ரசிக்கலாம்
22 அடி உயரத்தில் இங்கிருக்கும் ஆஞ்சேநேயர் மிக பிரபலமானவர். பலரும் அவருக்கு வெண்ணை வாங்கி சாற்றுகிறார்கள்.
*********
தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:
சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்
திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை
நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்
வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை
கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்
*********
நமது நண்பன் வேங்கடப்பன் மிக வித்யாசமானவன். இந்த இடத்துக்கு செல்லும் வரை இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்றோ அதன் சிறப்பு பற்றியோ எதுவும் மூச்சு விட வில்லை.
நவதிருப்பதி கோவில்களை ஒரே நாளில் சுற்றி வர கிளம்பிய எங்களின் கார் சைலன்ட்டாக இந்த இடத்துக்கு வந்தது.
இங்குள்ள சிற்பங்கள் அளவு அழகான சிற்பங்கள் மிக சில கோவில்களில் தான் நீங்கள் பார்க்க முடியும். நேரு, இந்திரா ராஜீவ் என 3 பிரதமர்கள் வந்து ரசித்த சிற்பங்கள் இவை.
சிற்பங்களில் நாங்கள் ரசித்த சில விஷயங்கள் :
ஒரு சிலையில் குறவன் ஒருவன் - ராஜகுமாரியை கடத்தி செல்கிறான். இன்னொன்றில் குறத்தி ராஜகுமாரனை கடத்தி செல்கிறாள். இரண்டும் காதல் வயப்பட்டு தான். 2 சிலைகளும் உடைகள், முகத்தில் தெரியும் உணர்வுகள்.. என அவ்வளவு தத்ரூபமாய் இருந்தன. தோல் பட்டையில் தெரியும் எலும்பு, இடுப்பில் உள்ள எலும்பு எல்லாம் அற்புதமாய் வடிவமைத்துள்ளனர்.
கடத்தி செல்லும் ராஜகுமாரி முகம் அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. குறவன் முகத்தில் உள்ள தொங்கு மீசை பார்க்க காமெடியாக உள்ளது. பெரிய தலைமுடி வைத்து பின்னல், கொண்டை போட்ட ஆண்கள், ஜடை பின்னிய பெண்கள், ஆண்கள் தாடியில் உள்ள முடிச்சு என.. அந்த கால உடை மற்றும் சிகை அலங்காரங்களை அறிய முடிகிறது
இன்னொரு சிலையில் பெரிய வில் ஒன்று உள்ளது. அதன் ஒரு புறம் துவங்கி மறுபுறம் மிக மெல்லிய துளை செல்கிறது. ஊசியை ஒருபுறம் போட்டால் மறுபுறம் வழியே அந்த ஊசி வருமாம். ஆனால் இப்போது அந்த சிலை மற்றும் வில் உடைந்துள்ளது பெரும் சோகம் :(
இப்படி பல்வேறு அரிதான சிலைகள் உடைவதால், இப்போதெல்லாம் சிலைகளை சுற்றி இரும்பு வலை போட்டு மூடப்பட்டுள்ளது
சில சிலைகளில் நகைகளின் டிசைன்கள் கூட பெண்களை பெரிதும் ஈர்க்கிறது. இப்போதெல்லாம் நகை கடை காரர்கள் இத்தகைய டிசைன்களை பார்த்து தான் ஆண்டிக் என்று நகை செய்கிறார்கள் போலும்.
அந்த காலத்து இசை கருவிகள் கூட ( யாழ், தவில் ) சிலைகளில் காண முடிகிறது
மிக சிறப்புடன் இருந்த இக்கோவில் - பின்னர் வந்த காலத்தில் சரியான கண்காணிப்பின்றி, கவனிப்பின்றி இருந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தான் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது.
இங்கிருக்கும் ஒரு ராஜா சிலை பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற சிற்பி ஒரு ராஜாவை உயிருடன் இருக்கும் போது நேரில் பார்த்து சிலை வடித்துள்ளார். சிலை முடியும் முன் ராஜா இறந்து விட, அடுத்த ராஜாவாக வந்த அவரது மகன் அந்த சிற்பியை அழைத்து " வேண்டுமானால் மீதம் சிலை வடிக்க என்னை பார்த்து கொள்ளுங்கள் " என்று கூறியுள்ளார். சிற்பியோ " வேண்டாம். நீ அம்மா ஜாடை; அரசர் முகம் எனக்கு சரியே நினைவில் இருக்கிறது. பார்க்காமலே வடித்து விடுவேன் " என்று சொல்லி விட்டு அதே போல் சிலையை முடித்தாராம்.
இப்படி இங்குள்ள சிலைகள் பற்றி ஏராள கதைகள் உலவுகின்றன !
சிலைகளை ரசிக்கவும் ஒரு மனது / பார்வை வேண்டும். உண்மையில் எனக்கு அந்த அளவு ரசனை இல்லை. ஆனால் உடன் வந்த வெங்கடப்பன் தம்பதியினர் ஒவ்வொரு சிலையின் அழகையும் பொறுமையாய் விளக்கி கூறும்போது வியந்து பார்த்தேன். உடன் இருந்த நம்ம வீட்டம்மாவுக்கு இதிலெல்லாம் ரொம்பவே ஈடுபாடு !
மனிதர்களின் உடலில் ஓடும் நரம்புகள் முதல் கட்டை விரல் நகம் வரை அற்புதமாய் வடித்த இந்த சிலைகளை அவசியம் ஒரு முறை நேரில் கண்டு களியுங்கள் !
உண்மையில் இந்த கோவிலுக்கு செல்வது இறைவனை வணங்க என்பதை விட, அந்த சிலைகளை காண என்பது தான் சரியாய் இருக்கும் !
********
சுசீந்திரம்
சுசீந்திரம் தமிழகத்தின் மிக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தாணுமாலயன் கோவில் என்று இதனை சொல்கிறார்கள். தாணு என்றால் சிவன்; மால் - பெருமாள் ;
பிரம்மா - சிவன்- பெருமாள் என மூவரும் இணைந்து இருக்கும் கோவில் இது !
அகலிகை மேல் இந்திரன் காதல் கொள்ள, அதனால் சாபம் பெற்று மிக துயருகிறார். பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இந்திரனுக்கு பாவ விமோசனம் இங்கு தான் தந்தனர் என்று நம்பப்படுகிறது. (ஊரின் பெயரிலேயே இந்திரனுக்கு இடமுண்டு கவனித்தீர்களா?)
ஒரு சிலையில் குறவன் ஒருவன் - ராஜகுமாரியை கடத்தி செல்கிறான். இன்னொன்றில் குறத்தி ராஜகுமாரனை கடத்தி செல்கிறாள். இரண்டும் காதல் வயப்பட்டு தான். 2 சிலைகளும் உடைகள், முகத்தில் தெரியும் உணர்வுகள்.. என அவ்வளவு தத்ரூபமாய் இருந்தன. தோல் பட்டையில் தெரியும் எலும்பு, இடுப்பில் உள்ள எலும்பு எல்லாம் அற்புதமாய் வடிவமைத்துள்ளனர்.
கடத்தி செல்லும் ராஜகுமாரி முகம் அவ்வளவு மகிழ்ச்சியாய் உள்ளது. குறவன் முகத்தில் உள்ள தொங்கு மீசை பார்க்க காமெடியாக உள்ளது. பெரிய தலைமுடி வைத்து பின்னல், கொண்டை போட்ட ஆண்கள், ஜடை பின்னிய பெண்கள், ஆண்கள் தாடியில் உள்ள முடிச்சு என.. அந்த கால உடை மற்றும் சிகை அலங்காரங்களை அறிய முடிகிறது
இன்னொரு சிலையில் பெரிய வில் ஒன்று உள்ளது. அதன் ஒரு புறம் துவங்கி மறுபுறம் மிக மெல்லிய துளை செல்கிறது. ஊசியை ஒருபுறம் போட்டால் மறுபுறம் வழியே அந்த ஊசி வருமாம். ஆனால் இப்போது அந்த சிலை மற்றும் வில் உடைந்துள்ளது பெரும் சோகம் :(
இப்படி பல்வேறு அரிதான சிலைகள் உடைவதால், இப்போதெல்லாம் சிலைகளை சுற்றி இரும்பு வலை போட்டு மூடப்பட்டுள்ளது
சில சிலைகளில் நகைகளின் டிசைன்கள் கூட பெண்களை பெரிதும் ஈர்க்கிறது. இப்போதெல்லாம் நகை கடை காரர்கள் இத்தகைய டிசைன்களை பார்த்து தான் ஆண்டிக் என்று நகை செய்கிறார்கள் போலும்.
அந்த காலத்து இசை கருவிகள் கூட ( யாழ், தவில் ) சிலைகளில் காண முடிகிறது
மிக சிறப்புடன் இருந்த இக்கோவில் - பின்னர் வந்த காலத்தில் சரியான கண்காணிப்பின்றி, கவனிப்பின்றி இருந்துள்ளது. இந்த கால கட்டத்தில் தான் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது.
இங்கிருக்கும் ஒரு ராஜா சிலை பற்றி ஒரு சின்ன கதை சொல்கிறார்கள். ஒரு புகழ் பெற்ற சிற்பி ஒரு ராஜாவை உயிருடன் இருக்கும் போது நேரில் பார்த்து சிலை வடித்துள்ளார். சிலை முடியும் முன் ராஜா இறந்து விட, அடுத்த ராஜாவாக வந்த அவரது மகன் அந்த சிற்பியை அழைத்து " வேண்டுமானால் மீதம் சிலை வடிக்க என்னை பார்த்து கொள்ளுங்கள் " என்று கூறியுள்ளார். சிற்பியோ " வேண்டாம். நீ அம்மா ஜாடை; அரசர் முகம் எனக்கு சரியே நினைவில் இருக்கிறது. பார்க்காமலே வடித்து விடுவேன் " என்று சொல்லி விட்டு அதே போல் சிலையை முடித்தாராம்.
இப்படி இங்குள்ள சிலைகள் பற்றி ஏராள கதைகள் உலவுகின்றன !
சிலைகளை ரசிக்கவும் ஒரு மனது / பார்வை வேண்டும். உண்மையில் எனக்கு அந்த அளவு ரசனை இல்லை. ஆனால் உடன் வந்த வெங்கடப்பன் தம்பதியினர் ஒவ்வொரு சிலையின் அழகையும் பொறுமையாய் விளக்கி கூறும்போது வியந்து பார்த்தேன். உடன் இருந்த நம்ம வீட்டம்மாவுக்கு இதிலெல்லாம் ரொம்பவே ஈடுபாடு !
மனிதர்களின் உடலில் ஓடும் நரம்புகள் முதல் கட்டை விரல் நகம் வரை அற்புதமாய் வடித்த இந்த சிலைகளை அவசியம் ஒரு முறை நேரில் கண்டு களியுங்கள் !
உண்மையில் இந்த கோவிலுக்கு செல்வது இறைவனை வணங்க என்பதை விட, அந்த சிலைகளை காண என்பது தான் சரியாய் இருக்கும் !
********
சுசீந்திரம்
சுசீந்திரம் தமிழகத்தின் மிக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று. கன்யாகுமரி மற்றும் நாகர்கோவிலுக்கு இடையே 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
தாணுமாலயன் கோவில் என்று இதனை சொல்கிறார்கள். தாணு என்றால் சிவன்; மால் - பெருமாள் ;
பிரம்மா - சிவன்- பெருமாள் என மூவரும் இணைந்து இருக்கும் கோவில் இது !
அகலிகை மேல் இந்திரன் காதல் கொள்ள, அதனால் சாபம் பெற்று மிக துயருகிறார். பின் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் ஒன்றாக இந்திரனுக்கு பாவ விமோசனம் இங்கு தான் தந்தனர் என்று நம்பப்படுகிறது. (ஊரின் பெயரிலேயே இந்திரனுக்கு இடமுண்டு கவனித்தீர்களா?)
25க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. மூலவர் திருவேங்கடம் விஷ்ணுவரம் பெருமாள். விக்னேஸ்வரி - மேலே பெண்ணாகவும் கீழே ஆணாகவும் இருக்கும் பிள்ளையார்.
நீல கண்ட விநாயகர் - என்கிற இன்னொரு கடவுளும் மிக விசேஷமானவர். சிவன் ரூபத்தில் இருக்கும் பிள்ளையார் இவர் என்கிறார்கள்
பல இடங்களில் தமிழில் அர்ச்சனை நடப்பதை காண முடிந்தது
விளக்கு பரிகாரம் என்பது இங்கு நிறையவே நடக்கிறது. பலரும் 9 முதல் 108 விளக்குகள் வைத்து பரிகாரம் செய்கிறார்கள். நவகிரக மூர்த்திகள் மேலே விளக்குடன் சுற்றி வருவதாக ஒரு ஐதீகம் 12 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் இங்கு பரிகாரம் செய்ய வருகிறார்கள்
நாங்கள் சென்ற நேரம் வருடாந்திர கோவில் திருவிழா நடப்பதால் அந்த ஏரியாவே களை கட்டியிருந்தது. வீடியோவில் சுசீந்திரம் கோவில் வெளிப்புறத்தை நீங்கள் ரசிக்கலாம்
22 அடி உயரத்தில் இங்கிருக்கும் ஆஞ்சேநேயர் மிக பிரபலமானவர். பலரும் அவருக்கு வெண்ணை வாங்கி சாற்றுகிறார்கள்.
22 அடி என்பதால் கூட்டம் அதிகமிருந்தாலும் தூரத்திலிருந்தே அவரை ரசிக்க முடிகிறது
தமிழரின் அற்புத சிற்ப கலை, சிவா- விஷ்ணு- பிரம்மா இணைந்த கோவில் - 22 அடி ஆஞ்சேநேயர் - சங்கீத தூண்கள் என உங்களை கவர பல விஷயங்கள் இக்கோவிலில் உண்டு. நாகர் கோவில் அல்லது கன்யாகுமரி பக்கம் செல்லும் போது தவறாமல் சென்று வாருங்கள் !
தொடர்புடைய திருநெல்வேலி / கன்யாகுமரி பயணக்கட்டுரைகள்:
சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் நேரடி அனுபவம்
திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை
நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்
வாவ் மறக்க முடியாத முட்டம் கடற்கரை
கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்
*********
சிந்தனைக்கும் சிற்பம் செய்யும் திறமைக்கும் நம்மவங்களைவிட திறமைவாய்ந்தவர்கள் உண்டோ?
ReplyDeleteகிருஷ்ணாபுரம் கோவில் இன்னும் பார்க்கலை. சிலைகள் ர்ப்ம்பவே அழகுன்னு பதிவுலக நண்பர்கள் பலரும் சொல்லக் கேட்டதுதான்.
ReplyDeleteநவதிருப்பதி போனபோதும் கூட இங்கே போக வாய்க்கலை:(
உங்க பதிவு பார்த்ததும் அடடா...கோட்டை விட்டுட்டோமேன்னு இருக்கு.
ஆமாம்..... ரொம்ப அவசரமா தட்டச்சுனீங்களா?
//சில வலைகளில் பெண்கள் அணிந்துள்ள நகைகளின் டிசைன்கள் கூட பெண்களை பெரிதும் ஈர்க்கிறது. //
டீச்சர் : மறுபடி படிச்சு சரி பண்ணிட்டேன் கிருஷ்ணாபுரம் முடிஞ்சா அவசியம் பாருங்க. ரொம்ப லைக் பண்ணுவீங்க
Deleteஉங்கள் பதிவின் மூலம் படிப்பதோடு சரி . என்னால் எங்கு சென்று பார்க்கும் அளவுக்கு இது வரை வாய்ப்பு வரவில்லை . கிடைத்தால் கெட்டியாக பிடித்துகொண்டு ஒரு எட்டு சென்று பார்த்துவிடுவேன் ..
ReplyDeleteநன்றி கார்த்தி
Deleteஅயன் - பிரம்மா
ReplyDeleteஆம்; நன்றி பாலன்
Deleteவாவ்!
ReplyDeleteநன்றி சிவா
Deleteமுதலில் சொன்னவை பார்த்துல்லை கேள்வி பட்டு இருக்கிறேன் இவ்வளவு அழகான எடுத்துகாட்டுடன் நீங்கள் காண்பித்து அருமை
ReplyDeleteமகிழ்ச்சி பூவிழி நன்றி
Deleteஎப்படி பாஸ் உங்களால மட்டும் முடியுது..நான் இன்னும் தென்மாவட்டங்களுக்கு அதிகம் சென்றதில்லை..இந்த வருடம் எப்படியாவது சதுரகிரி போகலாம்னு ப்ளான் பண்ணிருக்கன்..பார்க்கலாம்
ReplyDeleteநான் தமிழ்நாட்டுச் சிற்பக்கலைகளுக்காகவே நிறைய தமிழ்நாட்டுக் கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஒருமுறை ஒருமாத விடுமுறையில் நாங்கள் 70 கோயில்களுக்குப் போனோம். தமிழ்நாட்டுக் கோயில்கள் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு பல வருடங்களாகும் போலிருக்கிறது. சுசீந்திரம் அழகான கோயில் தான் ஆனால் வெறும் மலையாள வாடை. தமிழ்நாட்டுக் கோயில்கள் முதலில் தமிழாக்கப்பட வேண்டும், தமிழுக்கு முன்னுரிமை தரவேண்டும். ஏனென்றால் தமிழ்நாட்டுக் கோயில்கள் தமிழர்களின் வரலாற்றின், கலாச்சாரத்தின், கட்டிட, சிற்பக் கலையின் அடையாளங்கள். குமரிமாவட்டக் கோயில்களில் தமிழ்நாட்டிலிருப்பது போல் நாங்கள் உணரவில்லை. உதாரணமாக கும்பகோணத்திலுள்ள கோயில்களிலும், தொண்டைமண்டலக் கோயில்களிலும் தமிழ்நாட்டில் இருப்பது போன்ற உணர்வும், சுசீந்திரத்தில் கேரளத்திலிருப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது. உதாரணமாக, தமிழ்நாட்டிலுள்ள ஐயர் தனது கரத்தாலேயே மற்றவர்களின் நெற்றியில் திருநீற்றை இடுவார்கள், ஆனால் சுசீந்திரத்திலுள்ள ஐயர் கை படாதவாறு திருநீற்றை எடுத்து எறிவது போல் கையில் போடுவார். பக்தர்களும் அவர்களுக்குப் பயப்படுகிறார்கள்.அதை விட மலையாள வாடை தாங்க முடியவில்லை. :)))
ReplyDeleteகிருஷ்ணாபுரம் சென்றதில்லை மோகன். பார்க்கலாம் எப்போது போக முடிகிறதென.....
ReplyDeleteகிருஷ்ணாபுரம் சிலைகளை இரும்பு வலை போடாத காலத்தில் மிக அருகில் சென்று பார்த்து தொட்டு பார்த்து வியந்திருக்கிறேன். கால் நரம்புகளும் தெரியும் வண்ணம் சிலை வடித்தவன் மிகவும் பாராட்டுக்குரியவன்
ReplyDeleteகிருஷ்ணாபுரம் சிலைகள் புதியதகவல்.
ReplyDeleteசுசீந்திரம் சங்கீதத் தூண்கள் கைட் தட்டிக்காட்டினார் கேட்டு மிகவும் ரசித்தோம்.