Thursday, April 25, 2013

சம்மர் ட்ரிப்? தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி !

புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகம் - தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி. கிழக்கு பதிப்பக வெளியீடு. தமிழ் சுஜாதா எழுதியது.

தமிழகத்தில் உள்ள நூறு சுற்றுலா தளங்களை அறிமுகம் செய்கிறது புத்தகம். உதாரணமாய் சென்னை என்றால் மெரீனா பீச், தக்ஷின் சித்ரா, வண்டலூர் விலங்குகள் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், முட்டுக்காடு, கிஷ்கிந்தா, குவீன்ச்லேந்து என ஒவ்வொரு இடமும் சொல்லப்பட்டுள்ளது

                      

நீங்கள் கன்யாகுமரி சுற்றுலா செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம். அப்போது அருகில் பார்க்க உள்ள இடங்களான திற்பரப்பு அருவி, பத்மநாபுரம் பேலஸ் போன்ற இடங்களை புத்தகம் அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு இடத்தையும் பற்றி சொல்லும்போது எப்படி செல்வது ; அருகில் உள்ள ரயில் நிலையம், விமான நிலையம், எப்படி செல்வது, அருகில் உள்ள இடங்கள், அங்கு என்ன வாங்கலாம் போன்ற விபரங்கள் பகிரப்பட்டுள்ளன

எங்கு தங்கலாம் என்ற தகவல் தலைப்பில் அங்கு தங்க நல்ல ஹோட்டல்கள் உள்ளதா என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளதே தவிர, எந்த ஹோட்டல் பெயரும் அறிமுகம் செய்யவில்லை. செய்திருந்தால் மிக உதவியாய் இருந்திருக்கும்.

கவனம் என்கிற தலைப்பில் அங்கு செல்லும்போது எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்பது சொல்லப்பட்டுள்ளது. எந்த மாதங்களில் செல்லவேண்டும், சில இடங்களில் உணவு அல்லது தண்ணீர் கிடைக்காது ; எடுத்து செல்லவேண்டும் போன்ற விஷயங்களும் ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது

இந்த புத்தகம் ஒரு டிக்ஷனரி போல் தான் பயன்படுத்த முடியும். டிக்ஷனரி எப்படி நமக்கு சந்தேகம் இருந்தால் எடுத்து பார்க்கிறோமோ அதே போல் நாம் ஒரு ஊருக்கு போகணும் எனும்போது மட்டுமே எடுத்து பார்க்க முடியும். ஒரு நாவல் போல கட்டுரை போல ஒரே மூச்சில் படிக்க ஏதுவான புத்தகம் அல்ல.

புத்தகத்தில் சில சிறப்புகள் :

ஒவ்வொரு இடத்துக்கும் கருப்பு வெள்ளையில் புகைப்படம் போட்டுள்ளனர்.

அந்த இடம் எந்த நாளில் விடுமுறை எந்த நேரம் திறந்திருக்கும் லஞ்ச் நேரம் எப்போது போன்றவை தரப்படுள்ளது. அந்தந்த இடத்துக்கு அருகில் இருக்கும் பிரபலமான மற்ற சுற்றுலா தளம் கூறப்பட்டுள்ளது

மிக சில இடங்களுக்கு அங்கு என்ன சாப்பிடுவது ; அந்த ஊரில் எந்த உணவு சிறப்பானது என்றும் உள்ளது சுவாரஸ்யம்.

பல இடங்களுக்கு தொலை பேசி எண்ணும், அங்கு தங்க நல்ல ஹோட்டலும் பரிந்துரைத்திருக்கலாம்

சுற்றுலாவின் போது இப்புத்தகம் எடுத்து சென்றால் பல விஷயங்கள் தெரிந்து கொள்ள மிக பயன்படும்

பயணங்களில் ஆர்வம் உள்ளோர் வாங்கவேண்டிய புத்தகம் இது

பெயர்: தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டி 
ஆசிரியர்: தமிழ் சுஜாதா 
பதிப்பகம்: கிழக்கு 
பக்கங்கள்: 212 
விலை: Rs 125 

8 comments:

  1. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல புத்தகம்.

    ReplyDelete
  3. உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. Anonymous9:09:00 PM

    ஆவலைத் தூண்டியமைக்கு நன்றி..இந்த ஆண்டு விடுமுறையில் தென் தமிழகத்திற்கு ஒரு ட்ரிப் இருக்கு

    ReplyDelete
  5. தியாவின் பேனா: நன்றி

    நன்றி கந்தசாமி ஐயா

    வாங்க ரோஷினி அம்மா. நன்றி

    கலியபெருமாள்: நன்றி

    ReplyDelete
  6. நல்ல புத்தகம் அறிமுகத்திற்கு நன்றி மோகன். நிச்சயம் பயனுள்ள புத்தகமாக இருக்கும்......

    ReplyDelete
  7. நல்லதொரு புத்தக அறிமுகம். நன்றி.

    ReplyDelete
  8. ஏப்ரல் 24 (இப்பதிவுக்கு முன்தினம்) வரை நீங்கள் எழுதிய பதிவில் ஓட்டுப் போடும் வசதியில்லாத தமிழ்மணம் பட்டை, 'சப்மிட் டு தமிழ்மணம்' என்று மட்டுமே உள்ளது! ஏப்ரல் 25 (இந்தப் பதிவு) முதல் ஓட்டுப் போடும் வசதியுடன் உள்ள பட்டை உள்ளது! இந்தப் புதிய பட்டையை எப்படிப் பெறுவது? சுட்டி தர இயலுமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...