Friday, April 19, 2013

அசத்தும் ஸ்பெஷல் 26 & மாய மோகினி - விமர்சனம்

ஸ்பெஷல் 26

அண்மையில் மிக ரசித்து பார்த்த படம் என்றால் ஸ்பெஷல் - 26 தான். கதை , திரைக்கதை இயக்கம், ஒளிப்பதிவு, கலை - என எல்லா துறைகளும் ரவுண்டு கட்டி அடித்து அசத்தியிருக்கிறார்கள்

கதை

முழு கதையும் தெரிந்தால் படம் பார்ப்பது வேஸ்ட் ; படம் எந்த பக்கம் பயணிக்கிறது என்று மட்டும் சுருக்கமாக......



அவ்வப்போது போலிஸ் அல்லது CBI ஆபிசர் என்று நடித்து மாட்டி கொள்ளும் மக்களை பற்றி செய்தி தாள்களில் வாசிப்போமில்லையா ? நம் நண்பர்களில் சிலரே போலிஸ் மாதிரி உடல்வாகு இருந்தால், சிக்னல் மீறல்களின் போது இப்படி சொல்லி ஏமாற்றும் கதைகளை கேள்விபட்டிருப்போம்

இப்படி சீ . பீ ஐ ஆபிசர் என்று சொல்லி அரசியல் அல்லது பணக்கார பிசினஸ்மேன்களை ஏமாற்றும் கும்பல் - அதன் தலைவர் தான் படத்தின் ஹீரோ.

இன்னொரு பக்கம் இந்த கும்பலை பொறி வைத்து பிடிக்க அலையும் நிஜ CBI.

முடிவில் நம்ம போலி க்ரூப் பிடிபட்டதா என்பதை அவசியம் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

படம் செம விறுவிறுப்பாய் அடுத்து என்ன என்று பறக்கிறது. அதிலும் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு பிரேமிலும் பெரும்பாலும் நகர்ந்து (நடந்து) கொண்டே இருப்பதால் அதுவே ஒரு விறுவிறுப்பை கொடுத்து விடுகிறது


அற்புதமான காஸ்டிங். அக்-ஷைய் குமார் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. இயல்பான நடிப்பில் அசத்துகிறார் மனிதர். கூடவே அனுபம் கெர் வேறு. படத்தின் இறுதி காட்சிகளில் அனுபம் கெர் - தனது அனுபவத்தால் மிளிர்கிறார்

ஹீரோயின் - சேட்டு பொண்ணு காஜல். அதிக மேக் அப் இன்றி இயல்பாய் வருகிறார்

போலி கும்பலை பிடிக்க வரும் மனோஜ் பாஜ்பாய் - உடலை எவ்வளவு சிக்கென வைத்துள்ளார் ! இன்னொரு ஹீரோ போல மிக புத்திசாலி தனமாய் தான் இவர் காய் நகர்த்துகிறார். ஆனால்....

அனைவரையும் விட பாராட்டை அதிகம் அள்ளி போவது இயக்குனர் தான். மிக வித்யாசமான கதை, அதற்கு சுவாரஸ்ய திரைக்கதை, எதிர்பார்க்க முடியா கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என முழுக்க முழுக்க என்ஜாய் செய்கிற விதத்தில் படத்தை தந்துள்ளார். குறிப்பாக 80- களில் நடக்கும் படம் என்பதால் அதற்கான பஸ், வீடுகள் என அனைத்தும் பார்த்து பார்த்து செய்த விதம் படம் முழுதும் நம்மை வியக்க வைக்கிறது ! ஹாட்ஸ் ஆப் !

படம் தமிழிலும் கூட எடுக்கலாம். இது யூனிவர்சல் சப்ஜெக்ட் தான் ! விஜய் , அஜீத், சூர்யா மூவரில் ஒருவர் ஹீரோவாக நடிக்கலாம். அனுபம் கெர் வேடத்துக்கு எனது சாய்ஸ் - நாசர்.

அவசியம் கண்டு ரசியுங்கள் இந்த ஸ்பெஷல் படத்தை !

***********
மாய மோகினி

இந்த மலையாள படம் - ஹீரோ - பெண் வேஷம் போட்டு நடிக்கும் நம்ம அவ்வை சண்முகி டைப் கதை தான்.

                                 

படம் துவங்கி அரை மணி நேரம் ஹீரோவையே காணும். கதையை நன்கு எஸ்டாப்ளிஷ் செய்த பிறகு வருகிறார் திலீப். ஆரம்பத்தில் என்னமோ ஜாலியாக இருந்தாலும், அவர் பெண்ணாக நடிக்க ஒரு சீரியஸ் காரணம் இருப்பதை கடைசி காட்சிகளில் சொல்கிறார்கள்.

முழுக்க காமெடி என்றில்லாமல் சீரியஸ் + காமெடி என ஆகி போனதால் பெரிதும் கவராமல் போகிறது.

பெண்ணாக திலீப்பின் நடிப்பு வெரி குட். மற்ற பாத்திரங்களும் கதையை நகர்த்த உதவுகிறார்கள்.



அவ்வை சண்முகி அளவுக்கு காமெடி களை கட்ட வில்லை.

டைம் பாசுக்கு ஒரு முறை பார்க்கலாம்.

7 comments:

  1. இரண்டும் என்னை ரசிக்க வைத்திருக்கிறது.
    ஸ்பெசல் 26 செம படம்...படம் போட்டு ரொம்ப நேரம் திலீப் பை காணோம்.பார்த்தா 40 நிமிசம் கழிச்சி தான் ஹீரோ வருவார்...ஒரு சில காட்சிகள் மட்டுமே சிரிப்பைத்தூண்டின..

    ReplyDelete
  2. ஸ்பெஷல் 26 படத்துக்கு ஆங்கில சப் டைட்டில் போட்டால் பார்க்கலாம் .

    மலையாள படம் எங்க பாக்க போரேன் . ஏதாவது மலையாள சன்னலில் போட்டால் பாக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  3. ஸ்பெஷல் 26 பற்றிய நல்ல விமர்சனம்.....

    மாய மோகினி.... மோஹினின்னா எனக்குக் கொஞ்சம் பயம்! :)))

    விமர்சனத்திற்கு நன்றி......

    ReplyDelete
  4. ஸ்பெஷல் 26 படத்தில் பின்னணி இசை படு இரைச்சலாக இருந்தது. ஒரு காட்சியில் கூட அமைதியாக இல்லை. கிளைமாக்ஸ் கொஞ்சம் oceans 11னை நினைவுப்படுத்தியது. மற்றபடி எல்லாம் ஓகே. சில வெளிப்புற காட்சிகளில், அந்தக்கால மும்பை மற்றும் கொல்கத்தாவை கிராஃபிக்ஸில் காட்டி இருந்தது கொஞ்சம் செயற்கையாக பட்டது (மனது சுப்ரமணியபுரம் படத்தோடு ஒப்பிட்டு கொண்டிருந்தது:))

    ReplyDelete
  5. ஸ்பெஷல் 26 பார்க்க தூண்டுகிறது ஆனா எனக்கு ஹிந்தி தெரியாது தமிழ்ல ரீமேக் பண்ணுனா பார்ப்போம்

    ReplyDelete
  6. மாயமோஹினி பார்த்திருக்கிறேன்... கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளும் உண்டு...

    ReplyDelete
  7. பட விமர்சனங்களுக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...