Tuesday, April 16, 2013

தொல்லைகாட்சி: AR.ரகுமான் Vs கமல்- தமிழ் புத்தாண்டு நிகழ்சிகள் ஒரு பார்வை


 ஏ ஆர் ரகுமானின் அசத்தல் இசை விருந்து 



       
ஜெயா டிவியில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பி அந்நேரம் வேறு எந்த சானலுக்கும் செல்ல முடியாதபடி செய்து விட்டனர் ! அடடா எத்தனை அற்புத பாடல்கள் !                  

ரகுமான், தான் பாடிய பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடினார். ஹரிஹரன் சித்ரா ஹரிணி என பிரபல பாடகர்கள் வந்திருந்தனர்.

கடல் படம் ரிலீசுக்கு சற்று முன் நிகழ்ச்சி நடந்திருக்கணும் போலும். அதிலிருந்து 2- 3 பாட்டு பாடினர். மூங்கில் தோட்டம் பாட்டை கூட்டம் ஆர்ப்பரித்து ரசித்தது

எனது பெண் பாடல்களை ரசிப்பாளே ஒழிய இசை அமைப்பாளர் எல்லாம் கவனிக்க மாட்டாள். இந்த நிகழ்ச்சி பார்த்ததும் " என்னப்பா .. இவர் இசை அமைச்ச எல்லா பாட்டும் எனக்கு பிடிச்ச பாட்டா இருக்கு " என அசந்து போனாள். ஏ ஆர் ரகுமானுக்கு இன்னொரு ரசிகை தயார் !

புத்தம் புது படங்கள் 

சன்னில்- ஓகே ஓகே & நான் ஈ , ஜெயாவில் மாற்றான், விஜய்யில் துப்பாக்கி மற்றும் போடா போடி என எல்லாமே பார்த்த படங்களாய் இருந்தது. ஓகே ஓகே மற்றும் துப்பாக்கி பலரும் நேற்று பார்த்திருக்க கூடும். சில மாதங்கள் முன் வந்த தீபாவளிக்கு ஒரே நாளில் வெளியான துப்பாக்கி & போடா போடி விஜய் டிவி ஒரே நாளில் ஒளிபரப்பியது சற்று ஆச்சரியமான ஒற்றுமை.

கலைஞர் டிவிக்கு என்ன ஆச்சுதோ தெரியவில்லை. ஆதவன் மாதிரி ஏற்கனவே போட்ட படங்களை போட்டு கொண்டிருந்தனர் (அதுக்காக தமிழ் புத்தாண்டை கண்டுகொள்ளாமல் விட்டு விடவில்லை.. சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சி என பேட்டிகள் எல்லாம் தூள் பறந்து கொண்டு தானிருந்தது )

லியோனி பட்டி மன்றம் 

அந்த கால காமெடி - சிறந்ததா ? இந்த கால காமெடி சிறந்ததா என கலைஞரில் பட்டிமன்றம் நடத்தி சிரிக்க வைத்தார் லியோனி. ஒரு பேச்சாளர் " சென்ற முறை நான் பேசியதை வைத்தே இந்த முறை எனக்கு தீர்ப்பு வழங்குங்கள் என கூறி ஆரம்பிக்க " எப்படிய்யா அது முடியும்?" என்றதும் " தமிழ் இரண்டாம் தாளில் வாங்கிய மார்க் வைத்தே முதல் தாளுக்கு அரசாங்கம் மார்க் போடும் போது, நீங்கள் இப்படி செய்ய கூடாதா ?" என அரசியல் கலந்தனர்

பழைய நடிகர்களில் தருமி நாகேஷ், கல்யாண பரிசு தங்கவேலு என ஏராள நல்ல பாத்திரம் இருக்க, இப்போது அப்படி இல்லாமல் எதிரணி திண்டாடி விட்டது.

லியோனி பழைய காமெடி தான் சிறந்தது என தீர்ப்பு தருவார் என்பது ஏற்கனவே தெரிந்தது தானே !

குட்டீஸ்

முழுதாய் காணாமல் துண்டு துண்டாய் பார்த்த சில துளிகள் :

** ஜெயா டிவி ஜாக்பாட் நிகழ்ச்சியில் - வழக்கு எண் 18/9 &  கும்கி அணியும் வந்திருந்தன. லிங்குசாமி தலைமையில் ஒரு அணி - இன்னொரு பக்கம் பாலாஜி சக்திவேல்; கேள்விகள் பெரும்பாலும் சினிமா பற்றியே சுழன்றது. முழுதும் பார்க்க முடியலை

## நீயா நானா - பல்வேறு கேட்ஜட்ஸ் - அதை அதிகமாக மக்கள் உபயோகிப்பது பற்றிய நிகழ்ச்சி - மொபைல், இணையம் உள்ளிட்டவற்றுக்கு நாம் எவ்வளவு தூரம் அடிமையாகி போனோம் என்று பேசியது. வித்யாசமான சற்று அவசியமான விஷயம் தான் !

எதிர் நீச்சல்

எதிர் நீச்சல் குழு விஜய் டிவி யில் வந்திருந்தனர். பொதுவாய் இத்தகைய நிகழ்சிகளுக்கு ஒரு காம்பியர் இருப்பார். சிவகார்த்திகேயன் இருந்ததால், அவரே போதும் என விட்டு விட்டனர் போலும்.

நடுவே தனுஷ் & அனிருத் பாடல் கம்போஸ் செய்வதை காமெடியாக காண்பித்தனர் இந்த கால தலைமுறை என்பதால் - இயக்குனர் தயாரிப்பாளர்- இசை அமைப்பாளர் எல்லாருமே ஒருவரை ஒருவர் நன்கு கிண்டலடித்து கொண்டது ஜாலியாக இருந்தது

பாடல்களால் நிச்சயம் எதிர்பார்ப்பை உண்டாக்கி விட்டது எதிர்நீச்சல் !

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் கமல் 

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கமல் கலந்து கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி விஜய் டிவி ஒளிபரப்பியது. இரண்டாம் நாள் கவுதமியும் கமலுடன் இணைந்து கொண்டார்

கமலின் பறந்து விரிந்த அறிவு - தெளிவாக தெரிந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் ஏன் அப்படி சொன்னார் என்பதையும் அது சம்பந்தமான பல தகவல்களும் தந்தார்

குறிப்பாக இரண்டு ஆறுகள் ஓடும் ஸ்ரீரங்கம் போல சென்னையிலும் - அடையாறு மற்றும் கூவம் என இரண்டு ஆறுகள் அவர் நினைவு தெரிந்தே நன்கு இருந்ததாகவும், நாமெல்லாம் சேர்த்து தான் அவற்றை சாக்கடை ஆக்கினோம் என்றும் அவர் சொன்னது வருந்த வைத்தது. ஒரு காலத்தில் கூவம் வழியே காய்கறிகள் வேறு ஊரிலிருந்து வருமாம் ! குமுதம் ஆசிரியர் குழு அடையாறு ஆற்றில் திருவான்மியூர் வரை படகு சவாரி செய்து அது பற்றி ஒரு கட்டுரை எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.

கமல் 50 லட்சம் வென்றதும் 1 கோடிக்கான கேள்வி கேட்காமலே முடித்து விட்டனர் :))

கமல் பேசிய நிகழ்ச்சி முடிந்தால் யூ டியூபில் தேடி பாருங்கள் !
**********

8 comments:


  1. உலக நாயகன் விஜய் டி.வி. ஒரு கோடி நிகழ்ச்சியிலே....

    எந்த அளவுக்கு அவர் ரசிகர் இதயங்களில் பரவியிருக்கிறார் என்பதற்கு
    விஜய் டி.வி. யின் பிரபலங்களின் சொற்களும் செயல்களுமே சான்று.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. சித்திரைத் திருநாள் - ஒரு நிகழ்ச்சி கூட பார்க்கவில்லை மோகன்! இங்கே படித்து தான் தெரிந்து கொண்டேன்......

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. எனக்கு என்னமோ பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியாக இருந்தால் அது ipl மேட்ச் போல உள்ளதாய் ஒரு சந்தேகம்

    ReplyDelete
  4. தொலைக்காட்சியின் பார்வைப்பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete

  5. Rahman great guy :)

    fyi, thuppakki-ai vida NAAN E TRP sema, E E thaan, dummy piece dummy piece thaan


    oru kodi enna 2 kodi kuda kodukkalam. questions one week munnadiya andhaalukitteye koduttha pinna padichu vandhu solla maattaana?? idhu ellam BEHIND SCREEN-la nadakkiradhu. vijay tv patthi therincha neengaluma idhai nambureenga? :)

    ReplyDelete
  6. பொதுவாக பெண்கள் பாடல் நன்றாக இருந்தால் ரசிப்பார்களே தவிர யார் இசை அமைத்தார்,யார் எழுதியது,யார் பாடியது யார் என்றெல்லாம் கவலைபடுவதில்லை.ஆண்கள் இவ்விஷயத்தில் பாரபட்சம் உடையவர்கள்.

    ReplyDelete
  7. புத்தாண்டுக்கு கூட லீவு விடாமா கண்ணும் கருததுமா கரண்ட நிறுத்திட்டாங்க ,,,
    புது வருச நிகழ்ச்சிகளில் நான் பார்த்தது துப்பாக்கி, தமிழ்ச்சங்கம், நீயா நானா
    அவ்ளோ தாங்க
    காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையும் மதியம் அல்லது மாலை நான்கு மணி முதல் இடையில் 1 மணி நேரம் நிறுத்தி விட்டு 1௦ மணி வரையும் மின்சாரத்தை தந்தார்கள் .

    நீங்கள் நிச்சயம் தமிழ்சங்கம் பார்த்திருப்பிர்கள் அதை பற்றி எழுது விற்கள் என் நினைத்தேன் .. ஆனால் ஏமாந்து விட்டேன்.
    கமல் அவர்கள் ஒரு கோடி ரூபைக்கான கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றும் அவர் அவுட் ஆகிவிட்டதாகவும் நிகழ்ச்சி ஒளிபரப்புவதற்கு முன் ஒன் இந்தியா தளத்தில் படித்தேன்.

    ReplyDelete
  8. Anonymous10:19:00 AM

    துப்பாக்கி படம் கிளைமாக்ஸ் பிடிக்காதுதான்.இருந்தாலும் படம் முருகதாஸ் ஸ்டைல செம ஸ்பீடா போகும்,.அதனால பார்த்தேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...