தலாஷ்
கடந்த சில வருடங்களில் அமீர்கான் நடித்து வெளி வரும் எந்த படமும் பார்க்காமல் தவறியதில்லை. சற்று தாமதமானாலும் நிச்சயம் பார்த்து விடுவேன். 2 அல்லது 3 வருடத்துக்கு ஒரு படம் நடிக்கும் அமீர்கான் நீண்ட இடைவேளைக்கு பின் நடித்த தலாஷ் சமீபத்தில் தான் பார்க்க முடிந்தது
படம் துவங்கும் போது ஒரு கார் விபத்து நடக்கிறது. பிரபல நடிகர் ஒருவர் பீச்சில் கார் மூழ்கி இறக்கிறார். அதனை துப்பறியும் போலிஸ் இன்ஸ்பெக்டர் அமீர் கான். தனிப்பட்ட வாழ்வில் குழந்தையை இழந்த சோகத்தில் இருக்கின்றனர் அமீரும் அவர் மனைவி ராணி முகர்ஜியும்.

நடிகரை தொடர்ந்து இன்னும் சில மரணங்களும் நிகழ்கின்றன. படத்தின் இறுதியில் கொலையை செய்தது யார் என கண்டுபிடிப்பதுடன், மகனை இழந்த சோகத்திலிருந்தும் ஒரு வழியாய் விடுபடுகிறார் அமீர்.
ரொம்ப சாதாரண முடிச்சு. மிக நிதானமாக நகர்கிறது படம். இப்படி பட்ட சஸ்பென்ஸ் படத்தில் இருக்க வேண்டிய பரபரப்பு இல்லாதது பெரும் குறை
அமீர் கான் என்றைக்கு நடிப்பில் குறை வைத்தார் ? என்ன ஒன்று தூங்கும்போது கூட போலிஸ் உடையிலேயே இருக்கிற மாதிரி ஒரு பாத்திரம் ! தயாரிப்பாளராக அமீர் கான் எப்படி இந்த கதையை நம்பி படம் எடுத்தார் என்பது மிக பெரும் கேள்வி குறி. கதை தேர்வில் அமீர் சொதப்புவது மிக அரிது தான் !
ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் என இரு ஹீரோயின்களும் மிக நிறைவாய் செய்துள்ளனர் . கரீனா நீட்ட முகம் எனினும் செம அழகு.
பேய், பிசாசு போன்றவற்றை நம்புகிற விதமாகவும், அவற்றை அற்புதமாய் பேசுகிற விதத்திலும் படம் எடுத்தது நிச்சயம் உறுத்துகிறது. இதனாலேயே படம் மனதில் ஒட்டாமல் போகிறது.
இவ்வளவு சுமாராய் இருந்தும் 40 கோடியில் எடுத்த இப்படம் 174 கோடி வசூல் செய்துள்ளது ! ஜஸ்ட் அமீர் கான் மேஜிக் !
ஆடலாம் பாய்ஸ் - சின்னதா டான்ஸ்
நடுவில் பிரபு தேவா சவால் விடுவது, மனம் நோவது, சதி, நம்பிக்கை துரோகம் எல்லாம் உண்டு.
பழைய பாகவதர் கால படம் போல முணுக்குன்னா பாட்டு வந்துடுது.. பத்து பன்னிரண்டு பாட்டு இருக்கும்னு நினைக்கிறேன். புது ஆட்கள் நல்லாவே டான்ஸ் ஆடுகின்றனர்
பிரபு தேவா பயிற்சியாளர் ஆனதால் அதிகம் ஆடலை. மற்றவர்கள் தான் ஆடுகிறார்கள்.
கிளைமாக்சில் முக்கிய நடன போட்டியில் பிரபு தேவா தயார் செய்துள்ள நடனத்தை திருடி எதிரணி ஆடி விட, இவர்கள் கடைசி நிமிடத்தில் என்ன செய்கிறார்கள் என்பது சுவாரஸ்யம்.
நடனம் பிடிப்பவர்கள் மட்டும் ரசிக்கலாம் இப்படத்தை !

ஷாரூக் கானின் " Chake De India " ஹிந்தி படம் பார்த்து விட்டு அந்த பாதிப்பில் எடுத்துள்ளனர் போலிருக்கிறது. அங்கு ஹாக்கி.. இங்கு அதற்கு பதில். டான்ஸ் போட்டி
பிரபு தேவா ரொம்ப சுமாரான ஒரு நடன குழுவை வைத்து கொண்டு, தனது பயிற்சியால் எப்படி பெரிய டான்ஸ் போட்டியை வெல்ல வைக்கிறார் என்பதே கதை சுருக்கம்.
பிரபு தேவா ரொம்ப சுமாரான ஒரு நடன குழுவை வைத்து கொண்டு, தனது பயிற்சியால் எப்படி பெரிய டான்ஸ் போட்டியை வெல்ல வைக்கிறார் என்பதே கதை சுருக்கம்.
நடுவில் பிரபு தேவா சவால் விடுவது, மனம் நோவது, சதி, நம்பிக்கை துரோகம் எல்லாம் உண்டு.
பழைய பாகவதர் கால படம் போல முணுக்குன்னா பாட்டு வந்துடுது.. பத்து பன்னிரண்டு பாட்டு இருக்கும்னு நினைக்கிறேன். புது ஆட்கள் நல்லாவே டான்ஸ் ஆடுகின்றனர்
பிரபு தேவா பயிற்சியாளர் ஆனதால் அதிகம் ஆடலை. மற்றவர்கள் தான் ஆடுகிறார்கள்.
கிளைமாக்சில் முக்கிய நடன போட்டியில் பிரபு தேவா தயார் செய்துள்ள நடனத்தை திருடி எதிரணி ஆடி விட, இவர்கள் கடைசி நிமிடத்தில் என்ன செய்கிறார்கள் என்பது சுவாரஸ்யம்.
நடனம் பிடிப்பவர்கள் மட்டும் ரசிக்கலாம் இப்படத்தை !
தலாஷ் டீவியில் பார்த்தேன். ஆவிகளுடன் பேசுவது என்பதை பத்தி நல்ல ட்விஸ்ட்டுடன் கதை. எனக்கு பிடிச்சிருக்கு. ஜப்வீமெட்டுக்கு பிறகு கரீனாவின் நடிப்பு இந்தப்படத்தில்தான் பிடிச்சிருக்கு.
ReplyDeleteஏபிசீடி, ஹிந்தியில பார்த்து பதிவும் எழுதியிருக்கேன். இந்தப்படமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
அப்படியா? பிரபு தேவா உங்கள் ப்ளாகில் வாசித்தேன் நன்றி மேடம்
Deleteதலாஷ்-அந்த நடிகரின் மனைவிக்கும் நடிகரின் நண்பருக்கும் உள்ள உறவு-அந்த எபிசோட்-ஒரு சுஜாதா சிறுகதையை ஞாபகப்படுத்தியது."கார்ப்பெட்டில் ரத்தம் முகத்தில் புன்னகை" -கருப்புக்குதிரை புக்ல இருக்கு.. படிச்சிருக்கீங்களா?!
ReplyDeleteநீங்கள் சொல்லும் சிறுகதை படித்த நினைவில்லை நன்றி ees
Deleteநான் மொழி புரியாமலே s2 பெரம்பூர்ல பார்த்தேன் எல்லாம் நம்ம அமீர் கான் காக
ReplyDeleteSirae Eng subtitle show irukkae... useeeeeeeee
Deleteசென்னை வந்திருன்தீர்களோ ?
Deleteநல்லதொரு விமர்சனம்.
ReplyDeleteநன்றி கலிய பெருமாள்
Deleteஒரே பதிவில் ரெண்டு விமர்சனமா? கலக்குங்க சார்
ReplyDeleteவாங்க முரளி சார் நன்றி
Deleteஎனக்கு இந்தி தெரியாது என்பதால் நான் இந்தி படங்களை சுத்தமாக பார்ப்பதி இல்லை ஆங்கில சப் டைட்டிலுடன் நான் பார்த்த முழு நீல இந்தி படம் சக்தே இந்தியா. ஹாஸ்டலில் நண்பனின் லேப்டாப்பில் பார்த்தேன். தைலாஷும் பாக்கவில்லை.
ReplyDeleteதிருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலம் 3 டி தியேட்டரில் ஆடலாம் பாய்ஸ் படம் தமிழ் பதிப்பு பார்த்தேன். படம் செம சூப்பர் . நீங்கள் சொல்வது போல இந்த படத்தை பாக்கும் பொது எனக்கு கொஞ்சம் கூட சக்தே இந்தியா படம் நாபகம் வரவில்லை .
இந்த படத்தின் கதை அந்த பட கதையின் சாயலில் இருக்குமே தவிர இது வேறு அது வேறு . இரண்டு படமும் நல்ல விறுவிறுப்பான திரைக்கதையினை கொண்டிருந்தது. இரண்டு படத்தையும் நான் நல்லா ரசித்தேன்.
இந்தி சுத்தமா தெரியாது. ஆங்கிலமும் அரைகுறை இந்த லட்சணத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்த போது நல்ல ரசிக்க முடிந்தது. இதுவே இந்த படமா இருந்தால் நிச்சயம் ரசித்து இருக்க முடியாது .