சம்பவம் - சாதாரண மனிதர்கள்
தினம் காலை நேரம் குப்பை அள்ள - வீடு வீடாக வருகிறார்கள் ஒரு இளம் கணவன் - மனைவி தம்பதி. கணவன் தள்ளு வண்டியை தள்ளி கொண்டு வர, மனைவி கைக்குழந்தையை தோளில் சுமந்தபடி வருவார். காலை ஆறு மணிக்கு துவங்கி பத்து மணி வரை வெய்யிலில் சுற்றி வருகிறார்கள்.
வீடுகளின் உள்ளிருந்து மக்கள் குப்பை எடுத்து வந்து கொட்ட காத்திருக்கும் நேரம் - அந்த கணவன் - கை குழந்தையிடம் கொஞ்ச, சில மாத குழந்தை தந்தை முகம் பார்த்து சிரிக்க, அதை பார்த்து தாய் பரவசமுற... ஒரே நேரம் மூவர் முகத்திலும் அவ்வளவு சந்தோஷம் !
கடுமையான வெய்யிலில் வேலை.. வறுமை .. இதன் நடுவிலும் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கும் அவர்களை பார்க்க மகிழ்வாகவும், எவ்வளவோ இருந்தும் மகிழ்வுடன் வாழாத நம்மை எண்ணி சற்று வருத்தமாகவும் இருந்தது !
ஐ. பி. எல் கார்னர்
ஐ. பி. எல் துவக்க விழா பார்த்தீர்களா? கொல்கட்டாவில் வண்ண மிகு விழாவாக நடந்தேறியது. தீபிகா படுகோனே, காத்ரீனா, ஷாரூக் நடனம் - வீரர்கள் அணிவகுப்பு என கலக்கினர். காத்ரீனா மேடைக்கு வரும்போது போர்வை மாதிரி போர்த்தியிருக்க " என்னடா இது " என்று பார்த்தால், சற்று நேரத்தில் போர்வையை தூக்கி எறிந்து விட்டு பெல்லி டான்ஸ் ஆடி நம் வயிற்றில் பால் வார்த்தார் :)
டோர்னமென்ட் முதல் பந்திலேயே விக்கெட் ! அதன் பின் சுனில் நாராயண் பந்து வீச்சால் டில்லி அணியை நேற்று மிக எளிதாக கொல்கட்டா வென்றது. இன்றைய ஆட்டம் ( மும்பை Vs ராயல் சாலஞ்சர்ஸ்) சுவாரஸ்யமாய் இருக்க கூடும்.
அழகு கார்னர்
கேடி பில்லாவில் நம் உள்ளங்களை கொள்ளை அடித்த அழகு தேவதை.
அஞ்சலி - ஏடாகூட குண்டாகி போனதால் சின்ன தலைவி இடம் தற்காலிகமாக காலியாக உள்ளது. அதில் இவரை அமர வைக்கலாமா என்று தீவிர யோசனையில் உள்ளேன். முதலில் இன்னும் 2 படம் நடிக்கட்டும் என்கிறது மனசாட்சி...
வரதட்சணை கொடுமை - உச்ச நீதிமன்றம் வித்தியாச தீர்ப்பு
வரதட்சணை கொடுமை என பெண்கள் பதிவு செய்யும் வழக்கில் குடும்பத்து உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்ய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்து உறுப்பினர்களில் யார் யாரெல்லாம் அந்த மருமகளை கொடுமைப்படுத்தினரோ அவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாமல் அனைத்து குடும்ப உறுப்பினரையும் கைது செய்வது தவறு என்றும் நீதி மன்றம் கூறி உள்ளது.
சில பெண்களுக்கு ஒரு குடும்பத்தில் போய் செட்டில் ஆவதில் உள்ள ஆரம்ப கட்ட சிரமங்களில் அந்த குடும்ப உறுப்பினர் அனைவரையும் வழக்கில் சிக்க வைக்கும் வேலையை மிக சில பெண்கள் செய்வதாகவும் சொல்கிறது உச்ச நீதி மன்றம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்: வரதட்சணை வாங்கி வா என துன்புறுத்தியது கணவன் மற்றும் மாமியார் எனில் அவர்கள் மீது தான் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்; மாமனார், நாதனார் போன்றோர் மீது அல்ல - என்பதே இதன் சாராம்சம் !
பதிவர் பக்கம் - சிவகாசிக்காரன்
சிவகாசிக்காரன் என்கிற பெயரில் பதிவெழுதும் இளைஞர் - சேல்ஸ் வேலையில் ஜெயிக்க வழிகள் என ஒரு தொடர் எழுதுகிறார். நேரடி அனுபவத்தை எளிமையாய் சொல்லி செல்கிறார். இங்கு வாசித்து பாருங்கள்
என்னா பாட்டுடே !
சில படங்கள் நாம் பார்க்கும் மனநிலை, இடம் இவற்றாலேயே மறக்க முடியாமல் மாறி விடும். அப்படி ஒரு ஸ்பெஷல் படம் தான் அயன். ஊட்டி குளிரில் நடுங்கியபடி குடும்பத்துடன் இரவு காட்சி பார்த்தது இன்னும் பசுமையாக நினைவில்... .
இந்த பாடல் மிக பிடிக்க காரணம் பாடல் ஷூட் செய்யப்பட்ட அந்த இடம், ஒளிப்பதிவு மற்றும் தமன்னாவின் அழகு.
பாடலில் வானம் எத்தனை எத்தனை வண்ணங்களில் நிறம் மாறிக்கொண்டே இருக்கிறது பாருங்கள் ! குறிப்பாக காரில் இருவரும் சென்று கொண்டே இருக்க பின்னே தெரியும் வானம் கொள்ளை அழகு. அந்த ஷாட்டுக்காகவே இப்பாடலை எப்போது டிவி யில் போட்டாலும் பார்ப்பேன்
அய்யாசாமி கார்னர்
அய்யாசாமி ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்ள சென்றபோது, அங்கு அவர் நண்பர் தேவாவும் வர, " அட என்ன தேவா.. நீ வர்றேன்னு சொல்லவே இல்லியே?" .
ப்ரேக் பாஸ்ட் உடன் கூடிய மீட்டிங் என்பதால் நண்பர்கள் இருவரும் சாப்பிட்டபடி பேசினர். தேவா கோட் போட்டு கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தார் அய்யாசாமி. " பரவால்ல; பையன் டில்லி போன பிறகு கோட் எல்லாம் போடுறான் போல.. "

மீட்டிங் துவங்குது என அழைக்க, உள்ளே சென்றதும், வரவேற்புரை ஆற்றியவர், சிலரின் பெயரோடு தேவா பெயரையும் குறிப்பிட்டு சொன்னார். " இதென்னடா நம்ம பையனை குறிப்பா சொல்றாங்க ?" என நிமிர்ந்து உட்கார்ந்தார் அய்யாசாமி.
சற்று நேரத்தில் அய்யாசாமி அருகில் அமர்ந்திருந்த தேவா பெயரை சொல்லி மேடைக்கு அழைக்க - தேவா மேடையேறினார். அப்புறம் தான் அன்றைக்கு தேவாவும் ஒரு பேச்சாளர் என்று தெரிந்தது.
வீட்டுக்கு வந்த பின் ஹவுஸ்பாசிடம் இதனை சொல்ல, " இதுவே நீங்க மீட்டிங்கில் பேசினா என்ன செஞ்சிருப்பீங்க சொல்லுங்க "
" ஹீ ஹீ "
" என்ன ஹீ ஹீ ? சொல்லுங்க "
" பேசுறதுக்கு முன்னாடி இன்விடேஷனை ஸ்கேன் பண்ணி கூகிள் பிளஸ், பேஸ் புக்கில் போட்டிருப்பேன். முடிஞ்ச பிறகு போட்டோவை அப்லோட் பண்ணிருப்பேன். அப்புறம் ......"
அய்யாசாமியை முடிக்க விடாமல் ஹவுஸ் பாஸ் திட்டியது சபை நாகரிகம் கருதி சென்சார் செய்யப்படுகிறது.
இம்புட்டு இருந்தும் மறுநாள் தேவாவிடம் போனில் பேசும்போது அய்யாசாமி இப்படி அட்வைஸ் செய்தார்

" நம்ம திறமையை நாமே சொல்லாட்டி எப்படிப்பா? அப்புறம் வேற யார் சொல்லுவா. .. சொல்லு ? மேடையிலே நல்லா பேசினே. ரைட்டு. கூடவே நாலு போட்டோ எடுக்கணும். பேஸ்புக்கில் போடணும். நீ இன்னும் வளரணும் தம்பி ..."
வழக்கம்போல அருமையான வானவில்... குறிப்பாக அய்யாசாமி... நன்றி..
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்.
Deleteதீவிர யோசைனைகள் இருக்கும் போது வருத்தப்படலாமா...? ஹிஹி
ReplyDeleteதிருப்பூரில் சந்தித்த சிவகாசிக்காரன் அசுத்துகிறார் பதிவுகளில்... அவருக்கும் வாழ்த்துக்கள்...
இனிமையான காணொளி பாட்டு...
ரசிக்க வைக்கும் அ. கார்னர்... வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி அண்ணே :-)
Deleteவாங்க சார் நன்றி
Deleteவானவில்லின் வர்ண ஜாலம் வழக்கம்போல் அருமை
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
சாதாரண மனிதர்கள்.. நிஜம்தான்.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம்
Deleteசிவகாசிக்காரன் என்னும் பெயரை ஓரளவுக்கு இன்று வெளியில் தெரிய வைத்திருப்பது திருப்பூர் சந்திப்பு தான்.. எல்லோருமே மிகவும் நட்பாக ஊக்குவிக்கும் ஆட்களாக இருப்பது என் பாக்கியம்.. இப்போது அண்ணன் மோகன்குமாரும் என் கட்டுரையை பற்றி பேசியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. நன்றி அண்ணே :-)
ReplyDeleteமகிழ்ச்சி ராம்குமார். தொடர்ந்து எழுதுங்கள். பலரும் தங்களை விரும்பி வாசிப்பதை அறிய முடிகிறது வாழ்த்துகள்
Deleteநீ இன்னும் வளரணும் தம்பி! :)))
ReplyDeleteவானவில்லின் வண்ணங்கள் நன்று!
நன்றி வெங்கட்
Deleteசாதாரண மனிதர்கள்தான் எத்தனை சுத்ந்திரமானவர்கள்!
ReplyDeleteஅய்யாசாமி, நீங்க கலக்குங்க,வாழ்க்கையில என்னத்த கொண்டுபோகப்போகிறோம், இருக்கும்வரை சந்தோஷமா இருக்க நாம் நாமாக இருக்கலாம் We like your approach!
நன்றியும் மகிழ்ச்சியும் உமா மேடம்
Deleteகணவன் மனைவி சம்பவம் சூப்பர் ன்னே காசு இருத்தும் சில பேரால சந்தோசமா இருக்க முடியல்ல? இன்னைக்கு மேட்ச் எப்படி இருக்குன்னு பார்ப்போம்
ReplyDeleteமும்பை Vs பெங்களூரு செம சுவாரஸ்யமா இருந்தது, முழுக்க உட்கார்ந்து பார்த்ததில் காலையில் தூக்கம் தூக்கமா வருது
Deleteவானவில்லின் ஒவ்வொரு வண்ணமும் மனம் தொட்டுச் சென்றது.
ReplyDeleteநன்றி கீதமஞ்சரி மகிழ்ச்சி
Deleteசீ்க்கிரமே ரெஜினா பாப்பாவை சின்ன தலைவி பதவியில் உட்கார வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இல்லையெனில் அப்புறம் ஜீவி கிட்ட சர்வே எடுக்க சொல்லிடுவேன்...
ReplyDeleteஅய்யா சாமி கார்னர் சூப்பர்...
நீங்கள் சூர்யா ரசிகர் என நினைக்கிறேன்..
அந்த இளம் தம்பதி போல நான் என்னுடைய குறுகிய கால வாழ்க்கையில் நிறைய பார்த்து இருக்கிறேன்.. நானும் கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டு வருகிறேன்.. இப்போதொல்லாம் ஆசைப்பட்ட எதையும் உடனே வாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.. பணம் இருந்தால் வாங்குவேன் இல்லையேல் கவலை படுவதில்லை. இந்த வயதி்ல் எனக்கு இந்த மனப்பக்குவத்தை கொடுத்த கடவுளுக்கு இத்தருணத்தில் நான் நன்றி கூற கடமைப்பட்டுருக்கேன்.. வாய்ப்பை தந்த உங்களுக்கு மிக்க் நன்றி
விரிவான கருத்துக்கு நன்றி கார்த்தி;
Deleteசாதாரணமனிதர்கள் அன்பின் பிணைப்புகள்.
ReplyDeleteவானவில் பல வர்ணங்களில் கவருகின்றது.
மகிழ்ச்சி மாதேவி நன்றி
Delete//கடுமையான வெய்யிலில் வேலை.. வறுமை .. இதன் நடுவிலும் வாழ்க்கையின் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவிக்கும் அவர்களை பார்க்க மகிழ்வாகவும், எவ்வளவோ இருந்தும் மகிழ்வுடன் வாழாத நம்மை எண்ணி சற்று வருத்தமாகவும் இருந்தது !// #மனதை தொட்ட வரிகள்#
ReplyDeleteவா அன்பு ; நன்றி
Deleteசந்தோஷம் பொருளாதாரம் சார்ந்தது அல்ல. அது, மனசு சார்ந்தது என்பதை சாதாரண மனிதர்களின் வாழ்க்கையை உதாரணம் காட்டி விளக்கிய விதம் அருமை!
ReplyDeleteகடைசியில், திரு.தேவா அவர்களுக்கு திரு.அய்யாசாமி அவர்கள் சொல்லியது சரியே!
சார் உங்களுக்கு முன் பின்னூட்டம் போட்ட நபரை பார்த்தீர்களா? உங்களுக்கு நன்கு தெரிந்தவர் தான் :)
Deleteஆமாம் சார், இப்பதான் கவனிக்கிறேன். அடிக்கடி இந்தப் பேரை படிச்சாலும் 'அன்பு' நினைவு எனக்கு வரவில்லை. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. வணக்கம் அன்பு, நலமா?
Deleteநான் விரும்பிப் படிக்கும் பதிவர்களில்/ சிறுகதை எழுத்தாளர்களில் சிவகாசியும் ஒருவர்...
ReplyDeleteராம் குமாரின் எழுத்தைப் பற்றி அறிந்து கொள்ள அவர் எழுதிய கலர்காதலையும் முத்து செல்வியையும் படித்துப் பாருங்கள்... அவரின் மற்றொரு பரிணாமத்தைப் பார்க்க அவர் எழுதிய டைம்மெஷின் படித்துப் பாருங்கள்...
வாழ்த்துக்கள் ராம்குமார்.. அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றிகள் மோகன் குமார் சார்
ராம்குமார் பற்றி தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சீனு
DeleteElla bloglayum rejina puranamdan.Rejina nee engirunthalum vazhga..visit my blog kaliaperumalpuducherry expecting ur suggestions
ReplyDeleteஹா ஹா நன்றிங்க
Deleteசாதாரண மனிதர்கள் ரொம்பவும் கவர்ந்தார்கள். உண்மையான மகிழ்ச்சி என்பது காசு பணத்தில் இல்லைன்னு நிரூபிக்கிறாங்க. நீடித்திருக்க வாழ்த்துகள்.
ReplyDeleteஆம் அமைதி சாரல் நன்றி
Deleteரமணி சார் நலமா? வருகைக்கு நன்றி
ReplyDelete