Tuesday, April 2, 2013

இவ்வருட ஐ.பி.எல் - எப்படி? சில ஆரூடங்கள்

கிரிக்கெட் திருவிழாவான ஐ. பி. எல் நாளை துவங்குகிறது. கிராமங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் போல் இதுவும் வருடாந்திர விளையாட்டாகி விட்டது.

திட்டி கொண்டே பார்ப்பதும், எந்த அணி ஜெயிக்கும் என பந்தயம் கட்டுவதும், ஸ்டேடியம் முழுதும் நிரம்பி வழிவதும் இம்முறையும் தொடர கூடும்

இம்முறை அணிகளில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. டெக்கன் சார்ஜர்ஸ் இப்போது சன் ரைசர்ஸ் ஆகிவிட்டது. மற்றபடி ஒவ்வொரு அணியிலும் மிக சில மாற்றங்களே

ஐ. பி. எல் லில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் 2.

1. 8 மணிக்கு மேட்ச் துவங்கி - அதனை முடிக்க 11. 30 ஆக்குவது (நம்ம சப்போர்ட் செய்யும் டீம் தோற்று விட்டால் தூக்கம் வருவது வேறு கஷ்டமா இருக்கும்)

2. எல்லா டீமும் மற்ற டீமுடன் இருமுறை ஆடுவது. இதனால் டோர்னமென்ட் மாச கணக்கில் நீண்டு கொண்டே போகும்.

இந்த 2 விஷயமும் இம்முறையும் மாறவில்லை. ஏப்ரல் துவக்கத்தில் ஆரம்பித்து மே இறுதி வரை செல்கிறது ஐ. பி. எல்.

ஐ. பி. எல் லின் 5 - Underdog டீம்களை இந்த பதிவில் பார்ப்போம் .
##############
ராஜஸ்தான் ராயல்ஸ்


மிக சாதாரண இந்த அணியை வைத்து கொண்டு வார்னே முதல் வருடம் கப் ஜெயித்தார். சென்ற வருடம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஜெயித்தனர் அப்புறம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வெளியேறினர். 


ரிட்டையர் ஆன திராவிட் இந்த அணிக்கு கேப்டனாகவும், துவக்க வீரராகவும் இருப்பது நகை முரண்.

வெளிநாட்டு வீரர்கள் அளவுக்கதிமாக இருக்க, நன்கு தெரிந்த இந்திய வீரர்கள் மிக குறைவே. ப்ளேயிங் 11-க்கு தேவையான அணியே முழுக்க செலக்ட் செய்ய முடியலை ! இம்முறை ஒவ்வொரு மேட்சிலும் இதுவரை அதிகம் தெரியாத சில புதிய இந்திய வீரர்களுடன் தான் ஆட போகிறார்கள்.

முதல் நான்கிற்குள் வரவே வாய்ப்பு மிக மிக குறைவு

Probable Playing XI:

Rahanae, Watson, Dravid, Kevin Cooper, Shaun Tait, Sreesanth, Sameul Badree or Fidel Edwards, Sidharth Trivedi 

First Choice Reserves:

Brad Hogg, Owais Shah, Brad Hodge
****
சன்ரைசர்ஸ்

டெக்கன் சார்ஜர்ஸ் அணியை சன் குழுமம் வாங்கி சன்ரைசர்ஸ் என்று பெயரிட்டுள்ளது. சங்ககாரா காப்டன் ..தி.மு.க வை சார்ந்த ஒரு குழுமம் நடத்தும் அணியில் பல இலங்கை வீரர்கள் உள்ளனர் என எதிர்ப்பு ஏகமாய் கிளம்புகிறது.

பவுலிங் ஓகே என்றாலும் பேட்டிங் சற்று திண்டாட்டம் தான். சங்ககாரா மற்றும் வொயிட் தவிர பெரிதாக யாரும் இல்லை. பார்த்திவ் பாடேலை எல்லாம் பெரிதாக கணக்கில் எடுத்துக்க முடியாது. ஷீகர் தவன் காயம் முடிந்து வந்த பின் எப்படி ஆடுகிறார் என பார்க்கலாம்.

அணியில் அசத்தலான வீரர் தென் ஆப்ரிக்காவின் டேல் ஸ்டெயின் தான். வாட் எ பவுலர் !

அணியை பொறுத்த வரை ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே செமி பைனலுக்கு செல்லும்

பிளஸ்: டேல் ஸ்டெயின், சங்ககாரா, இஷாந்த் ஷர்மா

மைனஸ்: சரியான இந்திய வீரர்கள் இல்லாதது, பேட்டிங்

Probable Playing XI:

Parthiv Patel, Shikhar Dhawan, Sangakaara, Ravi Teja, Cameron White, Nathan Mccullum, Dale Steyn, Ishant Sharma, Amit Mishra, Veer Pratap Singh

First Choice reserves: Darren Sammy, Chris Lynn, Clint Mc Gay, Thisara Perera
**********
பஞ்சாப் கிங்க்ஸ் 

பஞ்சாப் மேட்ச் எல்லாம் மக்கள் பார்க்க ஒரே காரணம் தான் - ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்" என நமக்கு ஸ்டமக் பர்ன் ஆகும்.

நிற்க. சரியான தோத்தாங்குளி அணி. ஆள் ஆளுக்கு தோற்கடிப்பாங்க

கில்கிரிஸ்ட் - ஒரு காலத்தில் எனக்கு மிக பிடித்த வீரர். இன்றைக்கு ஆடி ஓய்ந்து போன அவரை காப்டன் ஆக்கி - அவரும் எதோ ஒரு விதமாய் வழிகிறார்

கடைசி இடத்துக்கு டப் பைட் கொடுக்க தகுதியுள்ள அணி இது

பிளஸ்: அசார் மகமூத்

மைனஸ்: வயதான காப்டன் தலைமையில் ஒரு ஓட்டை அணி

Probable Playing XI:

Gilchrist, Paul Valthaty, Shaun Marsh, David Hussey, Mandeep Singh, Azhar Mahmood, R. Sathish, Piyush Chawla, Parwinder Awana, Manpreet Goni, Praveen Kumar .

First Choice Reserves: Ryan Harris, Dimitri Mascarenhas, David Miller, Luke Pomerbach
*******
புனே வாரியர்ஸ் 

விளையாட ஆரம்பிச்சு 2 வருஷம் ஆகுது. முதல் வருஷம் - கடைசிக்கு முந்தைய இடம்- சென்ற முறை கடைசி இடம். இது போதும் புனே பற்றி சொல்ல..


இம்முறை இழப்பதற்கு ஏதும் இல்லை என்று சற்று தைரியமாய் ஆட கூடும். கேப்டன் பிடிப்பதற்குள் போதும் போதும்னு ஆகிடுச்சு. கிளார்க் முடியாது என ரெஸ்ட் எடுக்க கிளம்பிட்டார். ஒரு வழியா ஆண்ஜெலோ மாதியூஸ் கேப்டன் ஆகிருக்கார்

யுவராஜ் ஆடுவாரா, ஆடினாலும் எப்படி ஆடுவார் என தெரியவில்லை.

இந்திய அணியில் நுழைந்துள்ள புவனேஷ் குமார் புனேவிற்கு ஆடுகிறார். சற்று சுமாராய் பேட்டிங்கும் செய்ய கூடியவர். இந்த IPL வெர்ஷனுக்கு எப்படி செட் ஆகிறார் என பார்க்கணும்

பிளஸ்: ஸ்மித், டைலர், யுவராஜ் என நல்ல பேட்டிங்.

மைனஸ்: பவுலிங் - குறிப்பாய் சரியான ஸ்பின்னர் இல்லாதது. (மெண்டிசுக்கு அணியில் இடம் கிடைப்பதே சிரமம் )

வாய்ப்புகள் : செமி பைனல் வாய்ப்புகள் குறைவே. சென்ற முறையை விட நன்கு ஆட கூடும்

Pune - Probable Playing XI:

Robin Uthappaa, T Suman, Steve Smith, Yuvraj Singh., Ross Taylor, Abhishek Nayar, Marlon Samuels, Angelo Mathews, Bhuveneshwar Kumar, Ashok Dinda & Ishwar Pandey.

First Choice reserves: Ajantha Mendis, Wayne Parnell, Ali Murtaza, Mitchell Marsh and Harpreet Singh
டில்லி டேர் டெவில்

கடந்த சில டோர்னமெண்ட்டை கவனித்தால் டில்லி அணி பற்றி சில விஷயங்கள் தெரிய வரும்.

பெரும்பாலும் செமி பைனல் வந்த, ஒரு முறையும் பைனல்க்கு நுழையாத அணி.

கேப்டன்கள் வருஷா வருஷம் மாறிவிடுவர்.

இந்தியன் பிட்ச்சில் 4, சில நேரம் 5 வேக பந்து வீச்சாளர்களுடன் ஆடும் ஒரே அணி.(இம்முறை இதை உணர்த்து போத்தா - வை அணியில் சேர்த்துள்ளனர்)

இம்முறை பீட்டர்சன் இல்லாதது இவர்களுக்கு பெரிய குறை. சேவாக் மற்றும் வார்னர் இருவரும் பார்மில் இல்லாவிடினும், மீண்டும் தங்களை நிரூபிக்க வெறியுடன் ஆட வாய்ப்புண்டு.

மிக மோசமான அணி இல்லை. செமி பைனல் மீண்டும் நுழைய வாய்ப்புகள் ஓரளவு இருக்கவே செய்கிறது

Probably playing XI :

Sehwag, Warner, Jayawardane, Naman Ojha, Unmukdt Chand, Andre Russel, Irfan Pathan, Botha, Morne Morkel, Ashish Nehra, Umesh Yadav

First Choice Reserves:

Jeevan Mendis, Van Der Merwe, Agarkar, Venugopal Rao

*********
நாளை கலக்க போகும் 4 அணிகள் பற்றி பார்ப்போம் !

*****
சென்ற வருட ஐ. பி. எல் ஆருடங்கள் :

கடைசி 4 அணிகள் 

கலக்கபோகும் அணிகள் 

********

16 comments:

  1. சில ஆருடங்கள்... :)))

    ReplyDelete

  2. //கடைசி இடத்துக்கு டப் பைட் கொடுக்க தகுதியுள்ள அணி இது //


    கலக்கல் ரசித்தேன்

    ReplyDelete

  3. 1. 8 மணிக்கு மேட்ச் துவங்கி - அதனை முடிக்க 11. 30 ஆக்குவது (நம்ம சப்போர்ட் செய்யும் டீம் தோற்று விட்டால் தூக்கம் வருவது வேறு கஷ்டமா இருக்கும்)///

    சேம் பிளட்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா பிரகாஷ்? நன்றி

      Delete
  4. Replies
    1. Vanthutaaraiyaa..... Vanthutaaraiyaa.....

      Delete
    2. நன்றி தனபாலன். இந்த க்ரேசி பக்கர் உங்க நண்பர் போல; உங்க வருகையை அவர் ஆர்வமா எதிர்பார்க்கிறார்; அவரை ஏமாத்தாம நம்ம பதிவுக்கு அடிக்கடி வாங்க :)

      Delete
  5. இலங்கை ஆட்டக் காரர்கள் தமிழ் நாட்டில் விளையாடாதது குறித்து ஒன்றும் சொல்லவில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. அரசியல் வேணாமேன்னு தான் Sir :)

      Delete
  6. "ஹீ ஹீ. ஓணர் ப்ரீத்தி ஜிந்தா ! எந்த பேட்ஸ் மேன் அல்லது பவுலரை விட காமிரா ப்ரீத்தியை தான் அதிகம் காட்டும். அதிலும் அவர்கள் அணி என்றைக்காவது தப்பி தவறி ஜெயிச்சுட்டா ப்ரீத்தி குதிக்குற குதியும், வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியமும் செய்வதை கண்டால், "சே ! கிரிக்கெட் வீரன் ஆகிருக்கலாம்"


    என்ன ஒரு ரசனை

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு தியாவின் பேனா

      Delete
  7. Virivaana alasal.visit my blog kaliaperumalpuducherry.blogspot.com.Expectingyour comments and suggestions to improve my blog.

    ReplyDelete
  8. படிப்பு வேலை காரணமாக கடந்த 5 சீசனிலும் சூப்பர் கிங்ஸ் ஆடும்போது மட்டும் தான் பார்த்தேன் இப்போ வீட்டில் வெட்டியா இருப்பதால் இந்த சீசனி்ல் அனைத்து ஆட்டங்களையும் பார்க்க முடிவு செய்துள்ளேன். முதன் முறையாக நேற்று ஐபிஎல் தொடக்கவிழாவை பார்த்தேன்.. நல்லா இருந்தது ரொம்ப பீலிங்கா இருக்கு

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...