வைரம் கடத்துகிற கதைகள் தமிழிலேயே எவ்வளவு பார்த்து விட்டோம். அத்தகைய ஒரு கதையை டில்லியிலிருந்து இறக்குமதி செய்துள்ளார்கள்
கதை
ஆர்யா, சந்தானம் , பிரேம்ஜி மூவரும் பத்திர்க்கையில் நிருபர், புகைபடகாரர், கார்டூனிஸ்ட் ஆக இருக்கும் நண்பர்கள். தவறுதலாக ஒரு வைர பாக்கெட் இவர்கள் கைக்கு சேருகிறது அதனை தேடி வில்லன் கூட்டம் இவர்களை துரத்த இறுதியில் என்ன ஆனது என தைரியம் இருந்தால் திரையில் பாருங்கள் !
இயக்குனர் கண்ணன் Hindi- படங்களை ரீ மேக் செய்வதில் அதீத ஆர்வம் உள்ளவர். Jab We Met-ஐ கண்டேன் காதலாக்கி ஓரளவு வெற்றி கண்டார். இம்முறை Delhi Belly -ஐ படமாக்கி பெரும் தோல்வி !
ஓரிரு நாளைக்குள் நடக்கும் கதையில் எதற்கு இத்தனை பாடல்களோ? ஒன்றும் உருப்படியாய் இல்லை. வருகிற இடங்களும் துருத்தி கொண்டு நிற்கிறது ..... !
இன்றைய நம்பர் ஒன் காமெடியன் - சந்தானம் நடிபதால் மட்டுமே படமும் ஓடிடாது; சிரிப்பும் வந்துடாது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஆயி போவது, புர் விடுவது இவை முறையே 50 மற்றும் 40 முறை வசனம் அல்லது விஷூவலாக வருகிறது. வாந்தி வராத குறை தான் ! சில காட்சிகள் மகா கேவலம்
சிரிக்கிற மாதிரி இருக்கிற ஓரிரு இடங்களையும் டிரைலரில் காட்டி விட்டனர் எனவே திரையில் அவற்றை காண சிரிப்பு வர மாட்டேன் என்கிறது
அஞ்சலி மற்றும் ஹன்சிகா அவ்வப்போது வந்து போகிறார்கள். உருவத்தில் இருவரும் ஒரே லெவலில் இருக்க கூடும் !அஞ்சலியின் காதல் செயற்கை என்றால் ஹன்சிகா குடுமபமே படு அமெச்சூர்.
அஞ்சலிக்கும் ஆர்யாவுக்கும் லிப் லாக் சீன் இருக்கு என்றதை ஆர்வமாய் பார்த்தால், ஒன்றுக்கு இரு முறை வருகிறது; ஆனால் 2 முறையும் இருவரும் லிப் கிஸ் தருவதை நமக்கு தெரியாத படி எடுத்து வச்சிருக்காங்க :(
வில்லன்களின் அல்லக்கைகள் கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார்கள் நமக்கு தான் சிரிப்பு வரலை
பிரேம்ஜி என்கிற நடிகர் எப்படி நடிக்க வந்தார், சென்னை - 28 தவிர வேறு எந்த படத்திலாவது கொஞ்சமேனும் சிரிக்க வைத்தாரா, இன்னும் அவருக்கு எப்படி வாய்ப்புகள் கிடைக்கிறது என தெரிந்தால் யாராவது சொல்லுங்கள் !
எதோ ஆர்யாவுக்கு ஹன்சிகா தான் ஜோடி போல கதையை எடுத்து சென்று திடீரென அஞ்சலி ஜோடி என்பது போல் முடிக்கிறார்கள் ! தலை சுத்திடுச்சு !
இந்த படத்துக்கு ஒவ்வொரு டிவியா வந்து இவங்க கொடுத்த பில்ட் அப் இருக்கே ! அடேங்கப்பா !
டிவியில் போட்டால் பாருங்கள் என சில படங்களுக்கு சொல்வதுண்டு இந்த படம் அப்படி கூட சொல்ல முடியாது தப்பி தவறி வீட்டில் சாப்பாட்டு தட்டுடன் பார்த்தால் வாந்தி தான் !
படத்தில் நல்ல விஷயமே இல்லியா என கேட்கிறீர்களா ?
இருக்கு .. படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது அது மட்டும் தான் !
கதை
ஆர்யா, சந்தானம் , பிரேம்ஜி மூவரும் பத்திர்க்கையில் நிருபர், புகைபடகாரர், கார்டூனிஸ்ட் ஆக இருக்கும் நண்பர்கள். தவறுதலாக ஒரு வைர பாக்கெட் இவர்கள் கைக்கு சேருகிறது அதனை தேடி வில்லன் கூட்டம் இவர்களை துரத்த இறுதியில் என்ன ஆனது என தைரியம் இருந்தால் திரையில் பாருங்கள் !
இயக்குனர் கண்ணன் Hindi- படங்களை ரீ மேக் செய்வதில் அதீத ஆர்வம் உள்ளவர். Jab We Met-ஐ கண்டேன் காதலாக்கி ஓரளவு வெற்றி கண்டார். இம்முறை Delhi Belly -ஐ படமாக்கி பெரும் தோல்வி !
ஓரிரு நாளைக்குள் நடக்கும் கதையில் எதற்கு இத்தனை பாடல்களோ? ஒன்றும் உருப்படியாய் இல்லை. வருகிற இடங்களும் துருத்தி கொண்டு நிற்கிறது ..... !
இன்றைய நம்பர் ஒன் காமெடியன் - சந்தானம் நடிபதால் மட்டுமே படமும் ஓடிடாது; சிரிப்பும் வந்துடாது என்பதற்கு இந்த படம் ஒரு உதாரணம். ஆயி போவது, புர் விடுவது இவை முறையே 50 மற்றும் 40 முறை வசனம் அல்லது விஷூவலாக வருகிறது. வாந்தி வராத குறை தான் ! சில காட்சிகள் மகா கேவலம்
சிரிக்கிற மாதிரி இருக்கிற ஓரிரு இடங்களையும் டிரைலரில் காட்டி விட்டனர் எனவே திரையில் அவற்றை காண சிரிப்பு வர மாட்டேன் என்கிறது
அஞ்சலி மற்றும் ஹன்சிகா அவ்வப்போது வந்து போகிறார்கள். உருவத்தில் இருவரும் ஒரே லெவலில் இருக்க கூடும் !அஞ்சலியின் காதல் செயற்கை என்றால் ஹன்சிகா குடுமபமே படு அமெச்சூர்.
அஞ்சலிக்கும் ஆர்யாவுக்கும் லிப் லாக் சீன் இருக்கு என்றதை ஆர்வமாய் பார்த்தால், ஒன்றுக்கு இரு முறை வருகிறது; ஆனால் 2 முறையும் இருவரும் லிப் கிஸ் தருவதை நமக்கு தெரியாத படி எடுத்து வச்சிருக்காங்க :(
வில்லன்களின் அல்லக்கைகள் கிச்சு கிச்சு மூட்ட முயல்கிறார்கள் நமக்கு தான் சிரிப்பு வரலை
எதோ ஆர்யாவுக்கு ஹன்சிகா தான் ஜோடி போல கதையை எடுத்து சென்று திடீரென அஞ்சலி ஜோடி என்பது போல் முடிக்கிறார்கள் ! தலை சுத்திடுச்சு !
இந்த படத்துக்கு ஒவ்வொரு டிவியா வந்து இவங்க கொடுத்த பில்ட் அப் இருக்கே ! அடேங்கப்பா !
டிவியில் போட்டால் பாருங்கள் என சில படங்களுக்கு சொல்வதுண்டு இந்த படம் அப்படி கூட சொல்ல முடியாது தப்பி தவறி வீட்டில் சாப்பாட்டு தட்டுடன் பார்த்தால் வாந்தி தான் !
படத்தில் நல்ல விஷயமே இல்லியா என கேட்கிறீர்களா ?
இருக்கு .. படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது அது மட்டும் தான் !
//படத்தில் நல்ல விஷயமே இல்லியா என கேட்கிறீர்களா ?
ReplyDeleteஇருக்கு .. படம் 2 மணி நேரத்தில் முடிந்து விடுகிறது அது மட்டும் தான் !//
i like this point
:பிரேம் ))
Deleteஇதனால்தான் தியேட்டர் பக்கம் போகவே பிடிக்க மாட்டேன்கிறது. படங்கள்தான் மொக்கை என்றால் இசையும் மொக்கையாகவே வருகிறது.
ReplyDeleteஆம் கலியபெருமாள்
Deleteநான் படங்களை தேர்ந்தெடுத்து தான் பார்ப்பது! சேட்டையை தவிர்த்து விட்டால் போகிறது! நன்றி! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் சுரேஷ் !
Deleteஎன்னது படத்தில் நல்ல விஷயம் ரெண்டு மணி நேரத்தில் படம் முடிந்துவிடுகிறதா? ஐயோ ரெண்டுமணி நேரமா?
ReplyDeleteகும்மாச்சி: வணக்கம் . நலமா ?
Deleteபுரியாத புதிர் ????
ReplyDeleteஇந்த படத்தில் நாயகன் நாயகி வைரம் கடத்தும் காட்சியில் முஸ்லிம்கள் பயன்படுத்தும் உடையை கடத்தல் செய்ய பயன்படுத்துவது போல காட்சி வரும் இதற்கு ஏன் இஸ்லம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?
Yov rowdy, Kamal nadichu irukkara.. Varrathukku
Deleteha ha ha:-)
Deleteவாங்க சிவா & கிரேசி பக்கர் & சீனு: நன்றி
DeleteEngaeya namma aalu dindu dhanaa
ReplyDeleteநல்ல விமர்சனம். இரண்டு மணி நேரத்துல முடிஞ்சுடுது... :)
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மோகன்.
நன்றி சீனு
Deleteஎனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
ReplyDeleteவாங்க ராஜ சேகர்; இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமொக்கை படம்...
நல்ல விமர்சனம்.
நன்றி குமார் ; இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
Deleteஎன்னது சந்தானம் சிரிப்பு நடிகரா.............இதுவே நல்ல காமெடி........ அவர் நடித்த எல்லா படமும் சேர்ந்து சிரித்த சிரிப்பு நம்ம வடிவேலு நடித்த மருதமலை ஒரு படத்திலே சிரிசிருப்போம்....
ReplyDeleteரைட்ட்டு விடுங்க
Deleteநான் சொல்ல வந்ததை நண்பர் krishnaaleelai அவர்களே சொல்லிவிட்டார்கள். அவர் எழுத்துகளையே என் கருத்தாக எடுத்துக்கொள்ளவும் நண்பரே ...
ReplyDeleteசேட்டை படம் பற்றி அனைவரும் ஒரே மாதிரி சொன்னதால் நான் இது வரை அந்த படத்துக்கு போக வில்லை. நீங்கள் வலிய போய் அடி வாங்கி கிட்டு வந்து இருக்கீங்க என நினைக்கிறேன்.
சீக்கிரம் மருத்துவமனைக்கு சென்று கண் காது இவைகளுக்கு வைத்தியம் பாக்கவும் ...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்