Wednesday, April 11, 2012

வானவில் 83: நடிகை அஞ்சலி- விகடன்- கையில் 1 கோடி ஆர் யூ ரெடி?

பேஸ்புக் கிறுக்கல்கள் 
கலமான நல்ல சாலைகள் உள்ள ஏரியாக்களில் நிறைய பேர் காலை நேரம் நடைபயிற்சி செல்வதை பார்க்கிறேன். நாங்கள் இருக்கும் மடிப்பாக்கம் மாதிரி இடங்களில் ஊர் முழுதுமே மிக குறுகிய தெருக்கள். சாலையில் நடக்கும் போது கார் வந்தால் ஒதுங்கி நிற்கணும். இதனாலேயே நிறைய பேர் நடை பயிற்சி செல்வதில்லை

சாலை கட்டமைப்பு எவ்வளவு முக்கியம் ? ஹும்
#########
மூணு தேங்காய். ஆறு மூடி. என்னால எவ்வ்வ்வ்வளவு முடியுமோ அவ்வளவு திருகினேன்.

நல்லா ஆரம்பிச்சிருக்கு லீவு நாளு :))

#########
இன்று காலமான புதுக்கோட்டை எம். எல்.ஏ உட்பட எம். எல்.ஏக்கள் பலரும் கார் விபத்தில் இறக்கிறார்கள்

தொலை தூர பயணம் காரில் தவிர்ப்பது எத்தனை அவசியம் என உணர்த்துகிறது இந்த மரணங்கள்.

ரயில் பயணம் எவ்வளவோ மேல் ! ரயில் விபத்து ஆண்டுக்கு எங்கோ ஒரு இடத்தில் மட்டும் தான் நடக்கிறது. கார் விபத்துகள் தினம்தோறும் !! :((

சார் ! அஞ்சலி சார் !

அனுஷ்காவுக்கு அடுத்து அஞ்சலியை பிடிக்கும் என்பது தெரிந்ததே !

எங்கேயும் எப்போதும் படத்தில் "சொட்ட சொட்ட நனைய வைத்தாய் "
பாட்டு என்ன ஒரு மெலடி ! Fantastic ! ஜெய்- அஞ்சலி காதல் எபிசோட் பற்றி இந்த பாட்டை பார்த்தாலே தெரிந்து விடும். நடு நடுவே வரும் வசனங்களும் காட்சிகளும் கியூட். குறிப்பாய் எதிர் வீட்டு மொட்டை மாடியில் ஜெய் வருவார் என அதிகாலை அஞ்சலி காத்திருப்பதும், ஜெய் வராததால், அவர் வீட்டுக்கு போய் எழுப்பி, கதவை திறக்கும் ஜெய்யை அடிப்பதும்.. தன் அம்மாவிடம் போகிற போக்கில் ஜெய்யை காதலிக்கிறேன் என்பதும்..

அஞ்சலி எனக்கு தெரிந்து மிக மிக அழகாய் இருந்தது இந்த படத்தில் தான். ஒவ்வொருவருக்கும் அழகில் ஒரு பீக் இருக்கும். அந்த peak இந்த படத்தில் அவருக்கு இருந்த மாதிரி தோன்றியது. பாருங்கள் !




எதிர் கட்சியாக ஆனந்த விகடன்

சென்ற வார ஆனந்த விகடன் பார்த்து மிக மகிழ்ந்தேன். தமிழகத்தில் கேப்டன் மற்றும் கலைஞர் நல்ல எதிர் கட்சியாக செயல் படாத நிலையில், பத்திரிக்கைகள் தான் அந்த வேலையை செய்ய வேண்டும். நடுநிலையுடன் ஆளும் கட்சியை விமர்சித்துள்ளது விகடன்.

ஜெ -சசி இணைந்தது பற்றி ஒரு தெளிவான கட்டுரை- சசியின் அறிக்கை பற்றி விளாவாரியாய் சொல்கிறது. ("நான் போயஸ் கார்டனில் இருந்ததால், வெளி உலகில் என்ன நடந்தது என்றே தெரியாது" -சசி). சசி பேரை சொல்லி யார் யாரெல்லாம் சம்பாதித்தனர் என பட்டியலிட்டு விட்டு மக்களை முட்டாள்கள் என நினைக்கிறார் முதல்வர் என முடிகிறது கட்டுரை.

அடுத்த கட்டுரை மின் வெட்டு பற்றியது. அடடா ! மிக சிறிய ஆனால் இந்த பிரச்னையை சரியாக சொன்ன கட்டுரை ! சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் மின்சாரம் அதிகம் பயன்படுத்துவது பெரிய (MNC ) நிறுவனங்கள் தான். அவற்றுக்கு தடை இல்லா மின்சாரம் தருவதாக மாநில அரசு ஒப்புதல் தந்துள்ளதால், அதிக விலைக்கு தான் மின்சாரம் வாங்கி, குறைந்த விலைக்கு அவர்களுக்கு தருகிறது. மின்வாரியம் நஷ்டத்தில் இயங்கவும், மின்சாரம் அதிகம் தேவைப்பட்டு மின் பற்றாக்குறை வரவும் இவையே காரணங்கள்.

இப்படி இரண்டு கட்டுரைகளிலும் அரசுக்கு செம குட்டு வைத்துள்ளது ! வெல் டன் விகடன் ! சென்ற ஆட்சியிலும் இதே போல் தான் அந்த ஆட்சியின் குறைகளை எடுத்து சொன்னீர்கள். இப்போதும் அது தொடர்கிறது ! தமிழகத்தில் இருக்கிற பத்திரிக்கைகளில் விகடன் நிச்சயம் நன்று !

தமிழ் புத்தாண்டும் மலையாள புத்தாண்டு விஷுவும் 

தமிழ் புத்தாண்டு மறுபடி சித்திரை ஒன்றுக்கு மாற்றப்பட்டதில் மிக மகிழ்ச்சி.  உங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

புத்தாண்டு விஷு பற்றி அலுவலக மலையாள நண்பர் சொன்னது வேடிக்கையாக இருந்ததால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

விஷுவுக்கு முதல் நாள் இரவு சாமி படத்தை (அநேகமாய் கிருஷ்ணர்) வைத்து அதனை சுற்றி பழங்கள், புத்தகங்கள், ஒரு கிண்ணியில் தண்ணீர், விளக்கு எல்லாம் வைத்து விடுவார்களாம். கூடவே நகைகளும் !! விஷூ அன்று காலை எழுந்ததும் கண்ணை விழிக்காமல் நேரே வந்து கிண்ணியில் உள்ள தண்ணீரை எடுத்து முகம் துடைத்து கொண்டு,  இவற்றை ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும். காலை சூரிய வெளிச்சம் வரும் முன்னே இப்படி செய்தாக வேண்டும். இதற்காக பெரியவர்கள் எழுத பின் குழந்தைகளையும் அரை தூக்கத்தில் எழுப்ப, அவர்கள் முணுமுணுத்து  கொண்டே வந்து அவற்றை பார்ப்பார்கள்.

நாம் தீபாவளிக்கு வெடி வெடிக்கிற மாதிரி அவர்கள் விஷுவுக்கு தான் வெடி வெடிப்பார்களாம் (தீபாவளிக்கு அதிகம் வெடிப்பதில்லை)

ஏதாவது ஊர்க்கு போய் விட்டு வந்தால் பின் அந்த ஊர் குறித்த செய்தி எங்கு பார்த்தாலும் வாங்கி மனதில் போட்டு கொள்வதில் ஆர்வம் வந்துடுது.

டிவி கார்னர் சன் டிவி -"கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி "

விஜய்யில் சூர்யா நடத்தும் கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி துவங்கிய நிகழ்ச்சி "கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி ". இதை விட ஒரு அறுவை நிகழ்ச்சியை பார்க்கவே முடியாது.

நாலு ஆப்ஷன் தருவாங்க. ஒரு கோடி ரூபா பணமும் தருவாங்க. நமக்கு வேண்டிய ஆப்ஷனில் வேண்டிய பணம் வைக்கலாம். தவறு எனில் அந்த பணம் காலி ஆகிடும். சரியான ஆப்ஷனில் உள்ள பணம் மட்டும் மீதமிருக்கும். இப்படி ஒரு தலை சுத்தல் கான்செப்ட்.

கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் உள்ள முக்கிய விஷயம் ஒன்று வெற்றி அல்லது தோல்வி. அவ்வளவு தான். சரியான பதில் என்றால் அடுத்த கட்டம், இதனால் அவுட் ஆகும் வரை அவர்கள் ஒரு கோடி வெல்ல வாய்ப்புண்டு. இங்கு தவறாய் ஆப்ஷன் எடுத்தாலும் அடுத்தடுத்த லெவல் போகலாம்.

இதை விட கொடுமை நிகழ்ச்சி வடிவமைப்பு ! செம போர் ! விளையாடுபவர்கள் ஆப்ஷனுக்கு சரியான முடிவு தெரியும் வரை தங்களுக்குள் பேசிக்குறாங்க. அவங்க சட்டையில் உள்ள மைக்கில் நமக்கு இது தெளிவா கேட்குது. Irritating !

ஒரு உதாரணம் பாருங்க "இவர்களில் யார் கமலின் முன்னாள் மனைவி : இது கேள்வி. ஆப்ஷன்களில் ஷகீலா, சரிகா ஜெய மாலினி ஆகியோர் இருந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு இதற்கு சரியான பதில் தெரியாமல் பல ஆப்ஷனில் பணம் வைத்து விட்டு " ஷகீலாவா இருக்குமோ?" என சத்தமாய் பேசி கொண்டிருந்தனர். கொடுமை ! தப்பி தவறி கூட பார்க்க கூடாத நிகழ்ச்சி இது !

ஐ. பி. எல் கார்னர்

நமக்கும் ஐ. பி. எல் லுக்கும் ஒரு ராசி. நான் சப்போர்ட் செய்கிற டீம் எல்லாம் தோற்று விடும். என் முகத்தில் நான் ஆதரிக்கும் அணி தினம் கரி பூசுவார்கள். போங்கப்பா. இதெல்லாம் நமக்கு சாதாரணம் !முக்கியமாய் ஆதரிக்கும் அணி சென்னை. இவர்கள் கூட ஒண்ணரை மாதத்தில் நிறைய தோத்துட்டு கடைசி நிமிஷம் நாலாவது ஆளா செமி பைனல் நுழைந்து தான் கடந்த ரெண்டு வருஷம் கப் ஜெயிச்சாங்க

On a serious note, "தொடர்ந்து மேட்ச் பார்த்து மூட் அவுட் ஆக கூடாது மறு நாள் செய்தி தாளில் படிச்சுக்கலாம்" என யோசித்து கொண் டிருக்கிறேன். ஹும்

ப்ளாகை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கு ஒரு சிறு விண்ணப்பம் 

உங்களில் பலர் நமது பதிவுகளை வாசித்து நிறைய பின்னூட்டங்கள் இடுகிறீர்கள். மிக மகிழ்ச்சி ஆக உள்ளது. 

ஆனால் திரட்டிகளில் வாக்கு செலுத்துவோர் மிக மிக குறைவே. என்னுடைய எல்லா பதிவுக்கும் அவசியம் வாக்களியுங்கள் என சொல்ல வில்லை. பதிவு பிடிக்கிறது என பின்னூட்டத்தில் சொல்லும் போது, அது நிஜம் என்றால் வாக்கும் அளிக்கலாம் ! அளிக்க கூடாது என்பதல்ல, அவசர வேலையில் அப்படியே சென்று விடுகிறீர்கள் என்பதை உணர்கிறேன் 

ஆனால் தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் அதிக வாக்குகள் பெற்ற பதிவுகள் தான் மிக prominent-ஆக தெரிகிறது. நல்ல பதிவுகள் பலரிடம் சேர இது உதவுகிறது. 

குறிப்பாக இங்கு பகிரும் பயண கட்டுரை ஒவ்வொன்றும் எடுத்து கொள்ளும் நேரம், அதற்கான உழைப்பு மிக மிக அதிகம். 

மீண்டும் சொல்கிறேன்: அனைத்து பதிவுகளுக்கும் அல்ல, உங்களுக்கு பிடித்த பதிவுகளில் ஓட்டு போடுவதையும் சற்று ஞாபகத்தோடு செய்தால், உங்கள் நண்பன் அய்யாசாமியை மகிழ்வித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும் !
***********


thiraimanam

34 comments:

  1. படிச்சிட்டேன்.

    ReplyDelete
  2. Anonymous12:53:00 PM

    //"தொடர்ந்து மேட்ச் பார்த்து மூட் அவுட் ஆக கூடாது மறு நாள் செய்தி தாளில் படிச்சுக்கலாம்" என யோசித்து கொண் டிருக்கிறேன்"//

    கரண்ட் பில்லும் மிச்சம்.

    ReplyDelete
  3. mohan, good article
    i think no need vote for even a good things. u deserve for worthy article, that is enough!

    :-)

    ReplyDelete
  4. //"தொடர்ந்து மேட்ச் பார்த்து மூட் அவுட் ஆக கூடாது மறு நாள் செய்தி தாளில் படிச்சுக்கலாம்" என யோசித்து கொண் டிருக்கிறேன்"//

    //கரண்ட் பில்லும் மிச்சம். //

    But, you have pay for the newspaper..!!

    ReplyDelete
  5. தேங்காய் திருகினீ ர்களா ...துருவினீர்களா ....!

    ரயில் விபத்தென்ன, கார் விபத்தென்ன...நேரம் வந்தால் எப்படி வேண்டுமானாலும் வரும்...!

    அ-அ.... = எனக்கும் பிடிக்கும்!

    நான் தொடர்ந்து வாங்கும் பத்திரிக்கை, விகடனும் கூட!

    விஷுத் தகவல் புதிது.

    ஆர் யூ ரெடி சில கோணங்களில் சுவாரஸ்யம்....ஆனால் ரிஷி கத்தும் டாப்......பா...ட்ராப்....பா....."எர்....ரிச்ச்....சல்!"

    ஐ பி எல்.....நான் மேட்ச் பார்ப்பதில்லை... சேசிங்கில் சான்ஸ் கிடைத்தால் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டும், சில சமயங்களில் சில குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் ஆடும் ஆட்டம்! இவைகளும் கட்டாயம் கிடையாது!

    மறுபடியும் சொல்கிறேன்...எங்கும் எப்போதும் வாக்களித்து விடுகிறேன். (இன்டலி கிளிக் செய்தால் கூட வாக்களித்த விவரம், யாரார் வாக்களித்தார்கள் என்ற விவரம் முன்னர் தெரிந்தது, இப்போது தெரிவதில்லை. இன்டலி பட்டன் என்று சில சமயம் வருகிறது. கிளிக் செய்தாலும் நம்பர் மாற மாட்டேனென்கிறது) இப்பவும்! தமிழ்மணம் வாக்களித்தவர் பட்டியல் எப்படிப் பார்ப்பது?!

    ReplyDelete
  6. ஹா ஹா ஹா ஹா சரிதான் நீங்கள் சொல்வதும்....!!!

    ReplyDelete
  7. மோகன் குமார்,

    கணினி ,வலைப்பதிவு, கைப்பேசி குறுந்தகவல் என ஒரே வேலையை செய்து சோர்வுற்ற கைகளுக்கு தேங்காய் துறுவுதல் ஒரு நல்ல உடற்பயிற்சி,இரத்த ஓட்டம் அதிகரிக்கும் விரல்களில் எனவே தினசரி 2 தேங்காய் துறுவலாம் என ஒரு அறிஞர் கூறுகிறார்(ஹி..ஹி அடியேன் தான்) இப்படி பத்த வச்சுட்டா எல்லாரும் தேங்காவுக்கு மாறிடுவாங்க :-))
    -----

    அடிக்கடி நெடுஞ்சாலைப்பயணம் ஒரு மரண விளையாட்டே.
    -----
    ஐ.பி.எல் ஐ இரண்டு சீசனாக பார்ப்பதேயில்லை. செய்திகள் மட்டுமே. கிரிக்கெட்டை விட உற்சாக ஆட்ட பெண்டீரை தான் மிஸ் செய்கிறேன் :-))
    -----
    சார் அஞ்சலி சார் ...கூடவே "ஒரு சுவீட் ஸ்டாலே சுவீட் சாப்பிடுகிறது ...!"னு கவிதையும் எழதும் பழக்கமும் உண்டா :-))
    ----

    ஓட்டு போட்டா குவார்ட்டர் கீட்டர் கிடைக்குமா?
    (அதிகம் ஓட்டு வாங்கினா அமெரிக்க ஜனாதிபதி ஆகலாமா?)

    ReplyDelete
  8. தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  9. நல்லதொரு தொகுப்பு.

    விஷு எங்க அம்மா வைப்பாங்க. நானும் என் மாமியாரிடம் கேட்டுக் கொண்டு அதை தொடர்கிறேன். காலையில் எழுந்ததும் நல்லவைகளை பார்த்தால் நன்மை தானே.

    தமிழ் புத்தாண்டு மற்றும் விஷுக் கனி வாழ்த்துகள்.

    தமிழ்மணம் சில நேரம் சிலருடையதில், என்னுடையதிலும் கூட சிலநேரம் வந்திருக்கலாம். அவங்க லிஸ்ட்லயே இல்லை என்று வருகிறது. இண்ட்லியிலும் பிரச்சனை தான். இதற்கும் மேல் சோம்பல் தான்....:) இனிமேல் முடிந்த வரை வாக்களிப்பேன் என்று வாக்களிக்கிறேன்.....:))

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. //மூணு தேங்காய். ஆறு மூடி. என்னால எவ்வ்வ்வ்வளவு முடியுமோ அவ்வளவு திருகினேன்.//

    இதுக்கு ஃபேஸ்புக்ல போட்ட கமெண்ட்டை இங்க போடவா? மிசஸ்.அய்யாசாமிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல? ம்ம்..அந்த பயம் இருக்கட்டும் :))

    //சார் ! அஞ்சலி சார் !//

    இந்த பாட்டில் ஜெய்யின் முத்தத்திற்காக, துளியும் விரசம் இல்லாமல் அஞ்சலி கன்னத்தை காட்டும் காட்சி...........ப்பா...காதல் காதல் :))

    //இதை விட ஒரு அறுவை நிகழ்ச்சியை பார்க்கவே முடியாது//

    இந்த நிகழ்ச்சியை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனா கேள்வி எல்லாம் ரொம்ப மொக்கையா இல்லாம கொஞ்சம் பரவாயில்லன்னு ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க

    //நான் சப்போர்ட் செய்கிற டீம் எல்லாம் தோற்று விடும்.//

    தயவு செய்து பெங்களுருவையும், ஹைதராபாத்தையும் சப்போர்ட் பண்ணுங்க :))

    ReplyDelete
  12. அஞ்சலி! ம்ம்ம்... சரி ரைட்டு!

    விஷு விஷயம் - நம்ம வீட்டுலயும் உண்டு. கோயம்புத்தூரும் கேரளா பக்கத்திலேயே இருப்பதாலோன்னு ஒரு டவுட்!

    ஐ.பி.எல்.: நான் முதலிலிருந்தே அடுத்த நாள் பேப்பரில் பார்த்து விஷயம் தெரிந்து கொள்ளும் ரகம்.

    ஓட்டு! - போட்டு விட்டேன்... இண்ட்லி தவிர - அது ஏனோ வேலை செய்ய மாட்டேங்குது!

    ReplyDelete
  13. \\இன்று காலமான புதுக்கோட்டை எம். எல்.ஏ உட்பட எம். எல்.ஏக்கள் பலரும் கார் விபத்தில் இறக்கிறார்கள்.\\ ஆண்டவன் இருக்கிறான் சார்.

    ReplyDelete
  14. அஞ்சலி வீடியோ நல்லாயிருக்கு. படத்தில் பார்த்ததுதான், இப்போ உங்க பகிர்வில் பார்க்கும் போது நீங்கள் சொன்ன விஷயங்கள் ஸ்ட்ரைக் ஆச்சு.... சூப்பர்.

    ReplyDelete
  15. \\இதை விட ஒரு அறுவை நிகழ்ச்சியை பார்க்கவே முடியாது. \\ ஹா...ஹா..ஹா....மகிழ்ச்சியான செய்தி, நன்றி.

    ReplyDelete
  16. \\ஒரு உதாரணம் பாருங்க "இவர்களில் யார் கமலின் முன்னாள் மனைவி : இது கேள்வி. ஆப்ஷன்களில் ஷகீலா, சரிகா ஜெய மாலினி ஆகியோர் இருந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு இதற்கு சரியான பதில் தெரியாமல் பல ஆப்ஷனில் பணம் வைத்து விட்டு " ஷகீலாவா இருக்குமோ?" என சத்தமாய் பேசி கொண்டிருந்தனர். கொடுமை ! தப்பி தவறி கூட பார்க்க கூடாத நிகழ்ச்சி இது !\\ இதை உலக்கை நாயகன்... சாரி ஒலக நாயகன் பார்த்தா என்ன நினைப்பாரோ....

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. \\ஆனால் தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் அதிக வாக்குகள் பெற்ற பதிவுகள் தான் மிக prominent-ஆக தெரிகிறது. நல்ல பதிவுகள் பலரிடம் சேர இது உதவுகிறது. \\ அதில் தமிழ் மனம்/திரைமணம் என்றிருக்கிறது, ஒரு புறம் Thumbs-Up என்றும் இன்னொரு புறம் Thumbs-Down ஆகவும் உள்ளது, இதில் எதில் கிளிக் செய்ய வேண்டும்? எதில் செய்தாலும் ஓட்டு எண்ணிக்கை இரண்டுமே உயர்கிறதே ஏன்? மைனஸ் ஓட்டு என்றால் என்ன, அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

    ReplyDelete
  19. புதுகைத் தென்றல் said...

    படிச்சிட்டேன்.


    படிச்சதுக்கு நன்றிங்கோ

    ReplyDelete
  20. \\முக்கியமாய் ஆதரிக்கும் அணி சென்னை. \\ நம்மை எப்படி எப்படியெல்லாம் முட்டாளாக்குகிறார்கள் என்று பார்த்தால் மனம் ரொம்பவே புழுங்குகிறது சார். சென்னை அணியில சென்னைக்காரன் எத்தனை பேர்? அது கூட பரவாயில்லை, இந்தியாக் காரன் எத்தனை பேர்? அது கூட பரவாயில்லை சர்வதேச ஆட்டங்களில் ஆடும் தகுதியை இழந்தவன் எத்தனை பேர்? மைசூருக்கும் மைசூர் பாகுக்கும் உள்ள சம்பந்தம் தான் சென்னைக்கும் சென்னை அணிக்கும் உள்ள சம்பந்தம். வெறும் A,B,C,D...என்று பெயர் வைத்திருந்தால் சென்னை அணி விளையாடும் போது சென்னைக் காரன் \\ "தொடர்ந்து மேட்ச் பார்த்து மூட் அவுட் ஆக கூடாது மறு நாள் செய்தி தாளில் படிச்சுக்கலாம்"\\ என்று நினைப்பானா? அவ்வாறு நினைக்க வைத்து நம்மை முட்டாள்களாக்கி அவனுங்க பணத்தை அறுவடை செய்கிரானுன்களே? அது கூட விடுங்க, அடுத்த அவனுங்க விளம்பரங்களில் புரமோட் செய்யும் Cola-க்களை [அதை அவனுங்களே குடிக்க மாட்டானுங்க] நம்ம சனம் ஏகத்துக்கும் வாங்க குடிக்குதே , அவங்க உடல் நலம் என்னாவது? அதில் நடித்து கோடிகளைப் பார்க்கும் டெண்டுல்கர் போன்றவனுங்க தேச பக்தர்களா? கார்கில் சண்டையில் உயிரைப் பணம் வைத்துப் போராடிய இராணுவ வீரன் இன்றைக்கு என்னுடைய அலுவலகத்தில் வாட்ச் மென் வேலை பார்த்து வயிற்றைக் கழுவும் போது, தேசத்துக்கு எந்த விதத்திலும் பிரயோஜமில்லாத இந்த நாய்கள் நூற்றுக் கணக்கான கோடி பணமும், போகுமிடமெல்லாம் பெட்டைகளுடன் கூத்துமாய் ஜமாயக்கிரார்களே, என்ன தேசம் இது? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கேட்ட மாந்தரை நினைத்து விட்டால் ..... என்ற பாரதியின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  21. சிவா : கரண்ட் பில்??ம்ம்ம் இந்த மாசம் பில் வந்தா தெரியும் !!
    **

    ReplyDelete
  22. சர்புதீன்: சரிதான் ரைட்டு !
    **

    ReplyDelete
  23. மாதவா: //But, you have pay for the newspaper..!!//
    நியூஸ் பேப்பர் செலவல்ல. காசு குடுக்குது தெரியுமா? நம்ம டைம்ஸ் ஆப இந்தியா வருஷத்துக்கு 200 ரூபா காட்டிடுறேன். அதை பழைய கடையில் போட்டா மாசம் 25 ரூபா கிடைக்குது. ஆக வருஷத்துக்கு நூறு ரூபா லாபம் வருது !

    ReplyDelete
  24. ஸ்ரீராம். said...

    //தேங்காய் திருகினீர்களா ...துருவினீர்களா ....!//

    துருவினதுன்னு தான் சொல்லனுமா? திருகினேன்னு சொல்ல கூடாதா? ரெண்டும் சொல்லலாம்னு நினைச்சேன்
    **
    //அ-அ.... = எனக்கும் பிடிக்கும்!//

    அலோ என் வாழ்க்கையில் ஏன் குறுக்கிடுறீங்க? :))

    //சேசிங்கில் சான்ஸ் கிடைத்தால் கடைசி இரண்டு ஓவர்கள் மட்டும், சில சமயங்களில் சில குறிப்பிட்ட ஆட்டக்காரர்கள் ஆடும் ஆட்டம்//

    அவ்ளோ நேரம் விழிசிருப்பீன்களா?

    // தமிழ்மணம் வாக்களித்தவர் பட்டியல் எப்படிப் பார்ப்பது?!//

    ஆறு அல்லது ஏழு ஓட்டு வாங்கி முதல் பக்கத்தில் வந்தால் மட்டுமே நமது ப்ளாக் முதல் பக்கத்தில் வரும். அப்போது தான் நமக்கு வாக்களித்தவர் பெயர் பார்க்க முடியும் என நினைக்கிறேன். மூன்று அல்லது நான்கு ஓட்டு மட்டும் வாங்கினால் எப்படி பார்ப்பது என தெரியலை
    **
    விரிவான கமண்டுக்கு மிக நன்றி ஸ்ரீராம். தனி தனி காமன்ட்டா போட்டிருந்தா இன்னும் நாலு கமன்ட் கூடிருக்கும் :))

    (மனுஷனுக்கு ஆசைக்கு அளவே இல்லை என்பது இது தான் )

    ReplyDelete
  25. //இங்கு பகிரும் பயண கட்டுரை ஒவ்வொன்றும் எடுத்து கொள்ளும் நேரம், அதற்கான உழைப்பு மிக மிக அதிகம். //

    நான் இதைப் பற்றி யோசித்திருக்கிறேன். தாங்கள் சொல்லிவிட்டீர்கள்!

    ReplyDelete
  26. வவ்வால் said
    //தேங்காய் துறுவுதல் ஒரு நல்ல உடற்பயிற்சி,இரத்த ஓட்டம் அதிகரிக்கும் விரல்களில் எனவே தினசரி 2 தேங்காய் துறுவலாம் என ஒரு அறிஞர் கூறுகிறார்//

    நம்மளை மாதிரி தான் நீங்களுமா? எல்லா வீட்டிலும் ஒரே கதை தான் போலருக்கு

    ஓட்டு போட்டா குவார்ட்டர் கீட்டர் கிடைக்குமா?

    என்ன சார் ! பதிவர் அரசியல் தெரியாம கேட்குறீங்க. ஓட்டு போட்டால் ஓட்டு கிடைக்கும் :))

    ReplyDelete
  27. மனோ: நன்றி

    ReplyDelete
  28. ராமலட்சுமி: உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

    ReplyDelete
  29. கோவை2 தில்லி said
    //இனிமேல் முடிந்த வரை வாக்களிப்பேன் என்று வாக்களிக்கிறேன்.....:))

    மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  30. ரகு said
    //மிசஸ்.அய்யாசாமிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல? ம்ம்..அந்த பயம் இருக்கட்டும் :))

    ஹி ஹி உமக்கும் கல்யாணம் ஆகும் ஓய்

    //தயவு செய்து பெங்களுருவையும், ஹைதராபாத்தையும் சப்போர்ட் பண்ணுங்க :))

    பெங்களூரு சரி ஏன் ஹைதராபாத்தையும் சொல்றீங்க?

    ReplyDelete
  31. வெங்கட் நாகராஜ்

    விஷு விஷயம் - நம்ம வீட்டுலயும் உண்டு. கோயம்புத்தூரும் கேரளா பக்கத்திலேயே இருப்பதாலோன்னு ஒரு டவுட்!

    அட அப்படியா விஷயம் !

    இன்ட்லி பற்றி தனி (சிறு பத்தி) எழுதுறேன் நிறைய பேர் கேட்டுள்ளனர்

    ReplyDelete
  32. Jayadev Das said...
    \\இன்று காலமான புதுக்கோட்டை எம். எல்.ஏ உட்பட எம். எல்.ஏக்கள் பலரும் கார் விபத்தில் இறக்கிறார்கள்.\\ ஆண்டவன் இருக்கிறான் சார்.


    தாஸ் மற்ற அரசியல் வாதிகளுக்கு சரி புதுகை மறைந்த எம். எல் ஏ மிக எளிமையானவர் நல்லவர் ஜூ வி யில் அவரை பற்றி படித்து நெகிழ்ந்து போனேன்
    ***
    அஞ்சலி: ஹி ஹி நன்றி

    ReplyDelete
  33. //ஒரு புறம் Thumbs-Up என்றும் இன்னொரு புறம் Thumbs-Down ஆகவும் உள்ளது, இதில் எதில் கிளிக் செய்ய வேண்டும்? எதில் செய்தாலும் ஓட்டு எண்ணிக்கை இரண்டுமே உயர்கிறதே ஏன்? //

    இடப்புறம் உள்ளது ப்ளஸ். வலப்புறம் உள்ளது மைனஸ். இரண்டை க்ளிக் செய்தாலும் ஒரே அளவு உயராது. சில பதிவுகளில் 7 / 8 என இருக்கும். அதாவது ஏழு பேர் ப்ளஸ் ஒட்டு ஒருவர் மைனஸ் ஓட்டு என அர்த்தம். யார் மைனஸ் ஓட்டு போட்டது என கண்டு பிடிக்க முடியாது பெயர்களை பார்த்து இவரை இருக்கும் என guess செய்யலாம்

    ReplyDelete
  34. அமைதி அப்பா; நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...