Wednesday, April 4, 2012

ஐ. பி. எல் கிரிக்கெட்: எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு?

வருடம் தோறும் ஏப்ரல் மாதம் வந்தால் , தேர்வுகள் துவங்குகிற மாதிரி ஐ. பி. எல்லும் துவங்கி விடுகிறது ! ஏப்ரல் நான்கில் சென்னை Vs மும்பை பலப்பரீட்சையுடன் துவங்கும் இந்த வருட ஐ.பி.எல் அணிகளை சற்று அலசுவோம்.இந்த முதல் பகுதியில், 5 அணிகள்..அடுத்த பகுதியில் மீதம் நான்கு !


டெக்கான் சார்ஜர்ஸ்

கடந்த இரு வருடங்களாக நன்கு ஆடாத அணி. சங்ககாரா மற்றும் டேல் ஸ்டெயின் ஆகிய உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மன் மற்றும் வேக பந்து வீச்சாளர் அணிக்கு வலு சேர்க்கின்றனர். நம் இந்திய பிச்சிலும் கூட அற்புதமாய் பந்து வீசும் டேல் ஸ்டெயின்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

பலம்: நல்ல ஆல் ரவுண்டர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்

பலவீனம்: வலுவான இந்திய வீரர்கள் அணியில் இல்லை. இஷாந்த், அமித் மிஸ்ரா, பார்த்திவ் படேல் ஆகிய மூவர் மட்டுமே இந்தியர்களில் தெரிந்த பெயர் என்றால் பார்த்து கொள்ளுங்கள் (இந்த மூவரும் இந்திய அணியிலேயே தொடர்ந்து இடம் பெறுவதில்லை )

ஆல் ரவுண்டர்கள் : கிறிஸ்டியன், வொயிட் , பால் டூமினி .

வாய்ப்பு: .. திடீரென டீம் ஸ்பிரிட் ...அது இது என அதிசயம் நடந்தால் ஒழிய செமி பைனல் செல்வது சந்தேகமே !


ராஜஸ்தான் ராயல்ஸ்


மிக சாதாரண ஒரு டீமை வைத்துக் கொண்டு ஷேன் வார்ன் முதல் முறை கோப்பை வெல்ல வைத்தார். அதன் பின் அந்த மேஜிக் இவர்களிடம் இல்லை. அவ்வப்போது நன்கு ஆடினாலும் கோப்பையை வெல்பவர்கள் என, கடந்த மூன்று ஐ. பி எல்- களில் இவர்களை சொல்ல முடியவில்லை


இப்போது ஷேன் வார்ன் அணித் தலைவராக இல்லாதது பெரிய மைனஸ் தான். டிராவிட் எந்த அளவு நல்ல T-20 ஆட்டக்காரராக இருப்பார் என்பதும் நல்ல கேப்டனாக இருப்பார் என்பதும் பெரிய கேள்விக்குறி பேட்டிங்கில் டிராவிட், ரஹானே, சாண்டிமால் என எல்லாருமே டெஸ்ட் ஆடும் ஆட்கள் மாதிரி இருக்கிறார்கள். பவுலிங் ஸ்ரீசாந்த்தை நம்பியுள்ளது ” ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன் ” கதை தான் இவருடையது.

பலம்: பவுலிங்

பலவீனம்: டெஸ்ட் டீம் மாதிரியான பேட்டிங் வரிசை மற்றும் திராவிடின் Laidback கேப்டன்சி

ஆல் ரவுண்டர்கள் : ஷேன் வாட்சன் & ஜான் போத்தா

வாய்ப்பு: செமிபைனல் வாய்ப்பு இருக்கட்டும். முதலில் கடைசி இடம் வராமல் இருக்கப் பாருங்கள் !

கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்

இந்த அணியின் தலைவர் கில்கிறிஸ்ட் எனக்கு மிக பிடித்த வீரர். "நல்ல நபர் தவறான ஒரு அணியில்" என்று தான் சொல்லவேண்டும். என்ன தான் ஓனர் பிரித்தி ஜிந்தா துள்ளி குதித்து ஆதரவு தெரிவித்தாலும் தோற்று தோற்று அவரை அழ வைக்கும் அணி இது. செமி பைனல் கூட இதுவரை வராத நல்லவர்கள் இவர்கள்.

பலம்: சொல்லிக்கிற மாதிரி ஏதும் இல்லை ; பிரவீன் குமார், டேவிட் ஹஸ்சி மற்றும் பியூஷ் சாவ்லாவை மட்டும் பலம் என ஓரளவு சொல்லலாம்

பலவீனம்: பேட்டிங். (கில்கிறிஸ்ட் கூட முன்பு மாதிரி நன்கு ஆடுவதில்லையே) வால்தட்டி மேஜிக் இம்முறை செல்லுபடியாகுமா தெரியலை.

ஆல் ரவுண்டர்கள் : பியூஷ் சாவ்லா (நம்புங்க ! இவரும் ஆல் ரவுண்டர் தான் !) அசார் மகமூத் (பாகிஸ்தானில் இருந்து ஐ. பி. எல் லில் ஆடும் ஒரே வீரர். வயது ஜஸ்ட் 38 தான்!)

வாய்ப்பு: கடைசி இடத்துக்கு கடும் போட்டி நடத்துவார்கள் !புனே வாரியர்ஸ்

சென்ற வருடம் உள்ளே வந்து ரொம்ப கஷ்டப்பட்ட அணி. ஏனோ யுவராஜுக்கும் கேப்டன்சிக்கும் அம்புட்டு ராசி ! பஞ்சாப் கேப்டனாக இருந்து தொடர்ந்து தோற்றார். பின் புனேக்கும் அதே கதி தான்

இம்முறை கங்குலி கேப்டன். இந்திய அணியின் தாதாவாக இருந்தவர். அணி சற்று பலத்தோடு தான் உள்ளது. புது வரவாக ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் சேர்ந்துள்ளார்.

பலம்: ராபின் உத்தப்பா & Nathan மெக்கலம் ஆகியோரின் பேட்டிங்.
 நல்ல ஆல் ரவுண்டர்கள் இருவர் உண்டு. நெஹ்ரா, ராகுல் ஷர்மா, முரளி கார்த்திக் என பவுலிங்கும் ஓகே

பலவீனம்: கேப்டன் தற்போது தொடர்ந்து கிரிக்கெட் ஆடாததால் அணிக்கு ஒரு liability ஆக இருக்க வாய்ப்புண்டு !

ஆல் ரவுண்டர்கள்: மேதியூஸ், ஜெஸ்சி ரைடர்


வாய்ப்பு: பேப்பரில் நிச்சயம் நல்ல அணி உள்ளது !இம்முறை ஒரு டார்க் ஹார்ஸ் ஆக செமி பைனல் நுழைந்தால் ஆச்சரியம் தான் !
****

டில்லி டேர் டெவில்ஸ்

சேவாகுக்கும் டில்லி அணிக்குமான பந்தம் சீ-சா போல் இருக்கிறது. முதலில் அணியின் லெஜன்ட் வீரராய் இருந்தார். பின் பாதியிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கெளதம் கம்பீர் கொஞ்ச நாள் கேப்டனாய் இருந்து விட்டு பின் கொல்கத்தா அணிக்கு சென்ற பின், சேவாக் மீண்டும் கேப்டன் ஆனார்.

சேவாக் மற்றும் வார்னர் என இரு அதிரடி துவக்க ஆட்ட காரர்கள் இருந்தும் இருவரும் எப்போதும் சேர்ந்து ஜொலிப்பதில்லை. சென்ற ஆண்டு கடைசி இடத்தை பெற்றனர். இம்முறை பீட்டர்சன் மற்றும் ஜெயவர்த்தனே (எப்போது வருவார்களோ ? ) உள்ளதால் சற்று எதிர்பார்ப்பு உள்ளது.

பவுலிங்குக்கு முழுக்க இந்திய வீரர்களையும், பேடிங்குக்கு வெளிநாட்டு வீரர்களையும் நம்பி இருக்கும் அணி இது

நல்ல வெளிநாட்டு வீரர்கள் இருந்தும் உள்நாட்டு வீரர்கள் சரியான படி இல்லை !

பலம் : வேக பந்து வீச்சாளர்கள் : மார்கல், உமேஷ் யாதவ், பிரேஸ்வேல் (இவர்களுடன் அகர்கர் என்கிற அல்வா பவுலரும் கூட உண்டு )

சேவாக்- வார்னர்- பீட்டர்சன்- ஜெயவர்தேனே என்கிற பேட்டிங் லைன் அப்.

பலவீனம் : ஸ்பின் பவுலிங்கில் இந்த அணி செம வீக். சென்ற ஆண்டெல்லாம் ஸ்பின்னர்களே இல்லை ! இப்போது பேருக்கு எதோ ஓரிரு குட்டி ஸ்பின்னர்கள் உள்ளனர்.

மிக நன்றாக ஆடும் ராஸ் டைலருக்கு அடிபட்டு தொடர் முழுதும் ஆடமுடியாமல் போனது இந்த அணிக்கு பெரிய அடி.

ஆல் ரவுண்டர்கள் : இர்பான் பதான், பிரேஸ்வேல், ரஸ்ஸல்

வாய்ப்பு: பேட்டிங்கில் கலக்கினால் செமி பைனலுக்குள் நுழையலாம் !


****
வீக்கான அணியில் துவங்கி, அடுத்து அதை விட சற்று வலுவான அணி என்கிற ரீதியில் இப்பதிவு அமைந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். பட்டையை கிளப்ப போகும், செமி பைனல் செல்ல அதிக வாய்ப்புள்ள மீதம் நான்கு அணிகள் பற்றிய பதிவு மிக விரைவில் !

****
ஏப்ரல் 4 , 2012 தேதியிட்ட வல்லமை இணைய இதழில் வெளியானது 

13 comments:

 1. நல்ல அலசல் பலம் பலவீனம் என நுணுக்கமாக அலசியிருக்கீங்க

  ReplyDelete
 2. நல்ல தகவல் எந்த அணிக்கு பலம் எது பலவீனம் எது என தெரிந்து கொண்டேன்

  நம்ம சைட்டுக்கும் வாங்க

  ReplyDelete
 3. Not sure but I think McCullum is back to KKR...not in Pune Warriors.

  ReplyDelete
 4. செமையான அலசல்....!!!

  ReplyDelete
 5. கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்


  " செமி பைனல் கூட இதுவரை வராத நல்லவர்கள் இவர்கள். "

  Mr.Mohan its wrong, Kings XI 2008 semi finalist!!!

  apart from செமையான அலசல்....!!!

  ReplyDelete
 6. //PREM.S said...நல்ல அலசல் பலம் பலவீனம் என நுணுக்கமாக அலசியிருக்கீங்க//
  ***
  நன்றி பிரேம்

  ReplyDelete
 7. Sathish said...

  நல்ல தகவல் எந்த அணிக்கு பலம் எது பலவீனம் எது என தெரிந்து கொண்டேன்
  *********

  சதீஷ் நன்றி

  ReplyDelete
 8. ரகு: மெக்கல்லம் அண்ணன்-தம்பி ரெண்டு பேர் இருக்காங்க. நீங்க சொன்ன பிரெண்டன் மெக்கல்லம் கொல்கத்தாவுக்கு ஆடுறார். அவர் தம்பி நாத்தன் மெக்கல்லம் பூனேக்கு ஆடுறார் . நன்றி !

  ReplyDelete
 9. வெங்கட் நாகராஜ் said...
  நல்ல அலசல்...
  ********
  நன்றி வெங்கட்

  ReplyDelete
 10. MANO நாஞ்சில் மனோ said...
  செமையான அலசல்....!!!
  ***********

  நன்றி மனோ

  ReplyDelete
 11. HarisJoel said...

  கிங்க்ஸ் லெவன் பஞ்சாப்" செமி பைனல் கூட இதுவரை வராத நல்லவர்கள் இவர்கள். "

  Mr.Mohan its wrong, Kings XI 2008 semi finalist!!!
  ***

  அட ! தகவலுக்கு நன்றி ஜோயல் !

  ReplyDelete
 12. இந்த முறை வால்தாட்டி எப்படி ஆடுகிறார் என்று பார்க்க வேண்டும். அப்புறம் கெயில்ஸ்... இது மாதிரி சில ஆட்டக்காரர்கள் ஆடும்போது மட்டும் சற்று பார்க்கத் தோன்றுமே தவிர ஐ பி எல்லை ரொம்ப சீரியசாக பார்ப்பதில்லை! :))

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...