ஐ.பி.எல் ஆச்சரியங்கள்
ஐ.பி.எல் துவங்கும் முன் சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் தான் நன்கு ஆடும் என நினைத்தோம் . ஆனால் இப்போதுள்ள நிலையில் டில்லி, ராஜஸ்தான், புனே ஆகிய அணிகள் நன்கு ஆடுகின்றன !
மலிங்காவுக்கு காயம் பட்டு ஆட முடியாதது மும்பைக்கு பெரும் பின்னடைவு. கொல்கத்தா மற்றும் சென்னையின் Form முன்னும் பின்னுமாய் உள்ளது. சென்னை வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் என ஒரு வெற்றி ஒரு தோல்வி என்று போய் கொண்டுள்ளது
டில்லி செமி பைனல் செல்வது அநேகமாய் நிச்சயம். மற்ற அணிகளை சொல்ல முடியாத நிலை.
எதிர் பார்த்த படி நடக்கும் ஒரே விஷயம் பெங்களூருக்காக டீ வில்லியர்சின் அட்டகாச ஆட்டம் தான்.
நிற்க. மேட்சை பேப்பரிலும் இணையத்திலும் தான் அதிகம் follow செய்கிறேன். டிவியில் பார்ப்பதை பெரிதும் குறைத்து விட்டேன்.
இலவச லேப்டாப்
சென்னை கல்லூரிகளுக்கு இலவச லேப்டாப் தரும் பணி ஜரூராக நடக்கிறது. அரசு மற்றும் தனியார் கல்லூரியில் மூன்றாம்/ இறுதி ஆண்டு படிப்போருக்கு இது கிடைக்கிறது. மாணவர்களுக்கு கணினி பயன்பாடு கற்று கொள்ள உதவும் என்கிற அளவில் நல்லது தான். ( ஆனால் நம் இளைய சமுதாயம் இணையத்தை சேட் செய்ய தான் நிறைய பயன்படுத்துகிறது என்பது வேறு விஷயம்)
அரசு டிவியை ஆயிரம் ரூபாய்க்கு பலரும் விற்றது போல் லேப்டாப் வியாபாரமும் இனி நன்கு நடக்கும். உங்களுக்கு அவசரமாய் கணினி வாங்க வேண்டுமெனில் சற்று பொறுங்கள். ஐந்தாயிரம், ஆறாயிரம் ரூபாய்க்கு இந்த லேப்டாப்கள் விரைவில் விற்பனை துவங்கும்
நாட்டி- அஜூ கார்னர்
முன்பு நாட்டி கார்னர் எழுதியது நினைவிருக்கலாம். இப்போது நாட்டி- அஜூ சேர்ந்தே தான் லூட்டி அடிப்பதால் இருவரையும் பற்றி சேர்த்து தான் எழுத வேண்டியதாகிறது.
வெய்யில் அதிகம் என்பதால் தினம் குளிக்கின்றனர் நாட்டி- அஜூ இருவரும் ! ஒரு சின்ன இரும்பு வலை கூண்டில் வைத்து தான் குளிப்பாட்டுவோம். வெளியே சும்மா வைத்து குளிப்பாட்டினால், பறந்து போய் அருகிலுள்ள இந்தியன் டாய்லட்டில் விழுந்து விட கூடும் என்கிற பயமே காரணம் !
நாட்டிக்கு குளிக்க பிடிக்காது. ஓரமாக போய் ஒண்டி கொள்வாள். அஜூ செம ஜாலியாக குளிப்பான். கீழே நின்று கொண்டு தலையை தூக்கி முகத்தை நமக்கு காட்டி " தண்ணீர் ஊற்று" என காண்பிப்பான். Mug-ல் எடுத்து ஊற்றினால் வலிக்கும் என கைகளால் தான் தண்ணீர் எடுத்து எடுத்து ஊற்றுவோம்.
குளித்த பின் நாட்டியை மட்டும் சிறு துணி வைத்து துவட்டுவோம். அஜூ இன்னும் எங்கள் கைகளில் வர ஆரம்பிக்க வில்லை.
குளித்து உடல் நன்கு காய்ந்த பின் சிறு குழந்தைகளுக்கு பசிப்பது போல் நன்கு பசித்து இருவரும் சாப்பிடுவார்கள்
பதிவர் அறிமுகம்- நிரஞ்சனா
சுஜாதாவின் சிறுகதை ஒன்றை அடிக்கடி பலரிடமும் நினைவு கூறுவேன். கதை முழுதும் ஞாபகம் இருக்குமே தவிர அதன் தலைப்பு தெரியாது. அந்த சிறுகதையின் தலைப்பு " ஒரு சிக்கலில்லாத காதல் கதை" என நிரஞ்சனாவின் பதிவை வாசிக்கையில் அறிந்தேன். கதையை குறித்து விரிவாய் அறிய நிரஞ்சனாவின் இந்த பதிவை வாசியுங்கள்.
சுவாரஸ்யமாக எழுதுகிறார் நிரஞ்சனா. எல்லாரையும் அங்கிள் என்றும், சிஸ்டர் என்றும் கூப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது :))
ரசித்த கவிதை
ஓடும் ரயிலில்
அடம் பிடித்து
வாங்கிய குழலில்
அதை விற்றவன்
வாசித்த பாடலை
சலிக்காமல்
தேடிக் கொண்டிருக்கிறது
குழந்தை - முகுந்த் ராஜ்
சென்னையில் கால் ஆட்டோ
சென்னையில் கால் ஆட்டோ என்று தெரிந்ததும் மிக மகிழ்ந்தேன். இங்கு பகிரும் முன் சில விவரங்கள் கேட்டு பின் எழுதலாம் என நினைத்து கால் செய்தால் அந்த தொலை பேசி எண் வேலை செய்யலை. இதை நடத்துவது கேட்ஸ் இந்தியா என்கிற பெரிய நிறுவனம். இன்னும் இந்த சேவை தொடர்கிறதா, புது தொலைபேசி எண் என்ன தகவல்கள் தெரிய வில்லை. நண்பர்கள் தெரிந்தால் சொல்லவும்.
அட்சய திரியையும் அய்யாசாமியும்
நேற்று அட்சய திரியை ! அய்யாசாமி ஒரு நகைக்கடைக்கு தன் வண்டியில் சென்று இறங்கினார். இறங்கும்போதே ராஜ மரியாதை கிடைத்தது. மற்ற வண்டிகளை "உள்ளே போய் பார்க் செய்ங்க" என்று சொன்ன செக்யூரிட்டி, அய்யாசாமிக்கு மட்டும் கடை அருகில் இடம் ஒதுக்கி இறங்க சொன்னார். இவ்ளோ மரியாதைக்கு காரணம் அய்யாசாமி நகை கடைக்கு ஒரு பெரிய சூட் கேசுடன் சென்றது தான் ! படியேறி உள்ளே போகும் வரை அவர் அருகிலேயே ஒரு செக்யூரிட்டி முன் வாசல் வரை வந்தார். அனைவர் பார்வையும் சூட் கேஸ் மேல் தான் !
உள்ளே போன அய்யாசாமி நேரே சிட் செக்ஷன் சென்று, சீட்டு பணமான சில ஆயிரம் ரூபாய்களை கட்டினார். பின் வந்த வழியே நடையை கட்டினார்.
அப்போ சூட் கேஸ்? சம்மரில் அய்யாசாமி டூர் போக போறார். அதுக்கு சூட் கேஸ் கவர் வாங்க தான் அந்த சூட் கேசை எடுத்து வந்தது ! உள்ளே ஒண்ணுமில்லை ! " நல்லவேளை ! செக்யூரிட்டிக்கு நாம Chits செக்சன் தான் போனோம் என தெரியாது " என எண்ணியவாறு பக்கத்திலிருந்த சூட்கேஸ் கவர் கடையை நோக்கி வண்டியை விட்டார் அய்யாசாமி ...!

நண்பர் ஒருவர் முக புத்தகத்தில் இந்த விளம்பரம் பகிர்ந்திருந்தார்.

ipl tv இல் பார்ப்பது சென்ற வருடத்தை விட குறைந்து இருபதாக ஓர் ஆய்வு சொல்கிறது .வானவில் அருமை
ReplyDeleteநாட்டி, அஜூவுடன் அய்யா சாமியும் கலக்குகிறார்:)!
ReplyDeleteநிரஞ்சனா பதிவுகள் சமீபத்தில் எனக்கும் அறிமுகம். நன்றாக எழுதுகிறார்.
குழந்தை தேடும் பாடல் அழகு.
யார் அந்த அய்யாசாமி மோகன்?
ReplyDeleteசூட்கேச வண்டியில வச்சி பூட்டிட்டு போகவேண்டியது தானே; நல்லா கெளப்புராங்கையா டெரர;
ReplyDeleteமோகன் குமார்,
ReplyDeleteநல்லவேளை பெட்டியை மெட்டல் டிடெக்டர் வச்சு சோதிக்காம பாதுகாப்பு கிடைச்சுதேனு அய்யாச்சாமி சந்தோஷப்படணும்:-))
----
கால் ஆட்டோ என நெட் வொர்க் ஆக இல்லை என்றாலும் முன்ன இருந்தே கால் ஆட்டோ எங்க ஏரியாவில் உண்டு, ஆட்டோ டிரைவெர் நம்பருக்கு போன் செய்தால் வீட்டுக்கு வருவார், கட்டணமும் சரியாக இருக்கும்.இந்தகேட்ஸ் கால் ஆட்டோவில் 7-30-7-30 என காலம் எல்லாம் சொல்றாங்க,இரவு 12 மணிக்கு கூப்பிட்டாலும் வராங்க ஏரியா கால் ஆட்டோ.
கால் டாக்சியிலேயே கி.மிக்கு 10 ரூ தான் வருகிறது அதுவும் ஒரு நல்லவசதி.
------
ஹி..ஹி நான் ஐபிஎல் பார்ப்பதில்லை ,செய்திகள் மட்டுமே ,சென்னை அணி செம அடி வாங்கும் என நினைத்தேன் அது கொஞ்சம் நிறைவேறுவதில் ஒரு அல்ப சந்தோஷம் :-))
Jewellery shop - suitcase matter -- HA..HA.. HA.. :-)
ReplyDeleteஅய்யாசாமி பண்றது தாங்க முடியல:-)))))
ReplyDeleteநாட்டியும், அஜூவும் உங்க பொழுதுகளை இனிமையாக்கறாங்க போல....
ReplyDeleteநிரஞ்சனா நன்றாக எழுதுகிறார்.
கவிதை நன்று.
அய்யாசாமி வாரா வாரம் ஏதேனும் சாகசங்கள் செய்து கலக்குறார்..... தொடர்ந்து கலக்கட்டும்.
த.ம. 4
இலவச லேப்டாப்...//
ReplyDeleteஇனி இந்தியா பாகிஸ்தானை இதுல முந்திரும்...(எதிலன்னு தெரிய search(?) பண்ணி பார்க்கவும்..)
ஐ பி எல்...... நான் செய்தித் தாளிலும் தொடர்வதில்லை!
ReplyDeleteலேப்டாப் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டதாகச் செய்தித் தாள்கள் தகவல்!
நிரஞ்சனா ரசிக்கக் கூடிய பதிவர்தான்.
கால் ஆட்டோ ரொம்பப் பழைய நியூஸ். சரிவரவில்லை என்று நினைக்கிறேன்!
//மேட்சை பேப்பரிலும் இணையத்திலும் தான் அதிகம் follow செய்கிறேன்.//
ReplyDeleteமுதல் இரண்டு வருடங்கள் இருந்த ஆர்வம் இப்போது குறைந்திருக்கிறது. நானும் பேப்பர் பார்த்துதான் தெரிந்துகொள்கிறேன்.
//என். உலகநாதன் said...
யார் அந்த அய்யாசாமி மோகன்?//
please delete the first two characters and the last question mark..you'll get the answer :)
அய்யாசாமி கலக்கறார்....
ReplyDeleteஐ.பி.எல். - எப்போதாவது பார்க்கிறேன்.
நிரஞ்சனா - கணேஷ் அறிமுகம் செய்ததில் இருந்து படிக்கிறேன். நல்ல வலைப்பூ.
அஜு-நாட்டி... சோ ஸ்வீட்...
இலவச லேப்டாப் - கூவி கூவிக் கொடுத்தால் இது தான் நிலை!
அன்புள்ள மோகன் குமார்,
ReplyDeleteபதிவர் அறிமுகத்திற்கு நன்றி...
நீங்கள் குறிப்பிட்டுள்ள 'ஒரு சிக்கலில்லாத காதல் கதை' விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடான 'பாதி ராஜ்யம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
இந்தப் புத்தகத்தில் உள்ள மற்ற கதைகள்...
பாதி ராஜ்யம்
ஹோனாலூலு
ஒரு விபத்தின் அனாடமி
பாலம்
பிரேம்: ஐ. பி. எல் குறித்து நீங்கள் சொன்னது உண்மை தான்; வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி
ReplyDelete***
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநாட்டி, அஜூவுடன் அய்யா சாமியும் கலக்குகிறார்:)!
ஹிஹி நன்றி மேடம்
*
உலகநாதன்: ரகு சொல்லிருப்பதை பாருங்க !
ReplyDeleteஅய்யாசாமி ஒரு காமன் மேன். அவர் அடிக்கும் கூத்து என இங்கு பகிர்வது நம்மில் பலரும் எப்போதோ ஒரு முறை அடிப்பது தான்.
விஸ்வநாத் said...
ReplyDeleteசூட்கேச வண்டியில வச்சி பூட்டிட்டு போகவேண்டியது தானே; நல்லா கெளப்புராங்கையா டெரர;
********
ஹா ஹா நன்றி விஸ்வநாத்; இதுக்குன்னு ஒரு பூட்டு எடுத்துட்டு போக முடியுமா? அத்தோட சூட்கேசை வண்டியில் வச்சிட்டு போனா "குண்டு கிண்டு " ன்னு பயப்படுவாங்க என்கிறார் அய்யாசாமி
வவ்வால் சென்னைக்கு அடுத்த ஊரில் இருப்பதால் நல்ல ஆட்டோ டிரைவர்கள் கிடைக்கிறார்கள் போலும்
ReplyDeleteசென்னை மறுபடி ஜெயிக்கும் வவ்வால். பாருங்க :))
நன்றி மாதவா :))
ReplyDelete**
நன்றி அமைதி அப்பா; " எல்லாம் அமைதி அப்பா குடுத்த டிரைனிங் தான்" என்கிறார் அய்யாசாமி
ReplyDeleteகோவை2தில்லி said...
ReplyDeleteநாட்டியும், அஜூவும் உங்க பொழுதுகளை இனிமையாக்கறாங்க போல...
**
ஆம் மேடம் சரியா சொன்னீங்க
என்னது அய்யாசாமி சாகசம் பண்றாரா? அவரை சமாளிக்க வீட்டில் உள்ளவங்க படுற கஷ்டம் எக்க சக்கம் :)
ரெவரி சார் : நானெல்லாம் டியூப் லைட். நேரா சொன்னாலே புரிய நேரமாகும், நீங்க பூடகமா வேற சொல்றீங்க. பின் கூகிள் பண்ணி பார்க்கிறேன்
ReplyDeleteஇன்று நீங்கள் விமர்சனம் எழுதிய Hunger Games பார்த்தோம். All of us liked it.
முடிந்தால் பின் ப்ளாகில் பகிர்கிறேன்
ஸ்ரீராம்: ஐ. பி எல் பத்தி பேப்பரிலும் படிப்பதில்லை என்கிறீர்களே? கிரிக்கெட் அப்புறம் என்ன ஆவது?
ReplyDeleteகால் ஆட்டோ குறித்த தகவலுக்கு நன்றி
ரகு: அய்யாசாமி பற்றி ரொம்ப கஷ்டமா க்ளூ குடுத்திருக்கீங்க நன்றி :))
ReplyDeleteவிரிவான கருத்துக்கு நன்றி வெங்கட். விரைவில் சென்னையில் எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteபால ஹனுமான்: சுஜாதா புத்தகம் குறித்து தகவல் பகிர்ந்தமைக்கு மிக நன்றி மகிழ்ச்சி
ReplyDeleteநல்ல பதிவை அறிமுகம் செய்தமைக்கு நன்றி
ReplyDeleteஅய்யாசாமி அட்டகாசம்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 5
ReplyDeleteமோகன் குமார்,
ReplyDelete//ரெவரி சார் : நானெல்லாம் டியூப் லைட். நேரா சொன்னாலே புரிய நேரமாகும், நீங்க பூடகமா வேற சொல்றீங்க. பின் கூகிள் பண்ணி பார்க்கிறேன் //
உங்களைப்போல ஆசாமிகளால் தான் இந்தியா "அதுல" ரெண்டாவது இடத்தில இருக்கு ... எனக்கு மட்டும் அகலப்பட்டை இணையம் கிடைச்சுதுன்னா தனி ஒரு ஆளாவே களத்தில குதிச்சு இந்தியாவ "அதுல "முதல் இடத்திற்கு கொண்டு வந்திருப்பேன், அதுவும் பாகிஸ்தானுக்கு முதலிடமா ... பொறுக்க முடியவில்லை பொங்கி எழு தமிழினமே இணையத்தில் "கில்மா "வேட்டை ஆடி இந்தியாவை முதலிடம் பெற வைப்போம் :-))
கில்மா செர்ச் செய்கிற நாடுகளில் நாம் இரண்டாவது இடமாம் அத தான் ரெவெரி சொல்றார், பசங்க படிக்கிறாங்களோ இல்லையோ அது எல்லாம் "கன்" ஆஹ் செய்வாங்க :-))
இந்த சமாச்சாரம் இன்னும் கேப்டனுக்கு தெரியலைப்போல தெரிஞ்சா கண்ணு சிவக்க புள்ளி விவரம் சொல்லி அவர்கட்சி தொண்டர்களை தேட சொல்லி இந்தியாவை முன்னுக்கு கொண்டு வந்துடுவார்:-))
------
ஆமாங்க சிட்டிக்குள்ள ஆட்டோக்கள் ரொம்ப அட்டகாசம் செய்கிறார்கள்,புறநகரில் நல்லா தண்மையுடனும், நியாயமாவும் கட்டணம் வாங்குறாங்க என நினைக்கிறேன், எல்லா ஆட்டோ ஓட்டுநர்களும் அப்படியா என தெரியாது,நமக்கு நல்ல சேவைக்கிடைக்குது.
//சென்னை மறுபடி ஜெயிக்கும் வவ்வால். பாருங்க :))//
இன்னுமா இவனுங்களை நம்புறிங்க ஆனாலும் நீங்க ரொம்ம்ப்ப நல்லவரா இருக்கிங்க :-))
நன்றி மோகன்...
ReplyDeleteபடம் பார்த்து...மறுபடி வந்து சொன்னதற்கு...நீங்கள் மூவரும் ரசித்தது கண்டு சந்தோசம்...
உங்கள் பிள்ளை/நீங்கள் புத்தகம் படித்தீர்களா என்று அன்றே கேட்க நினைத்தேன்..
உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாய் இருக்கிறேன்...
நிறைய நண்பர்கள் டெம்ப்ளேட் குறித்து மெயில் அனுப்பினார்கள்...நேரம் கிடைக்கும் போது சாதாரண டெம்ப்ளேட்டுக்கு
மாறிவிடுகிறேன்...
தங்கள் அன்பிற்கு மீண்டும் நன்றி...
நன்றி வவ்வால் நண்பரே..You nailed it...
ரொம்ப லேட் நான். என்னைப் பற்றி அறிமுகம் செய்ததற்கு Many Thanks with full of my Heart Friend! நீங்க பகிர்ந்திருக்கிற கவிதையை ரொம்பவே ரசிச்சேன். நல்லா இருக்கு உங்க பதிவு. இனியும் வருவா நிரூ. அப்புறம் ஒரு விஷயம்... எனக்கு நல்லாத் தெரிஞ்சவங்களை மட்டும்தான் Sister, Uncleன்னு உறவு முறையில் கூப்பிடுவேன் மத்த எல்லாரும் எனக்கு Friend தான். சரியா Friend!...
ReplyDeleteஎன்னை சுவாரஸ்யமாக எழுதுகிறேன் என்ற தங்களுக்கும், என் பதிவை ரசித்துக் கருத்துச் சொன்ன ஸ்ரீராம் ஸார், வெங்கட் ஸார், கோவை 2 டில்லி மேடம் எல்லாருக்கும்... My Heartful Thanks!
ReplyDeleteரமணி: மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteவவ்வால் : "விளக்கமாய்" சொல்லிட்டீங்க ரைட்டு !
ReplyDelete//புறநகரில் நல்லா தண்மையுடனும், நியாயமாவும் கட்டணம் வாங்குறாங்க என நினைக்கிறேன்// உண்மை !
ரெவரி சார்: Hunger Games பட விமர்சனம் இன்று எழுதி விட்டேன். விரைவில் வெளியிடுகிறேன். அந்த புத்தகம் நாங்கள் யாரும் படித்ததில்லை. நன்றி
ReplyDeleteநிரஞ்சனா said:
ReplyDeleteஎனக்கு நல்லாத் தெரிஞ்சவங்களை மட்டும்தான் Sister, Uncleன்னு உறவு முறையில் கூப்பிடுவேன் மத்த எல்லாரும் எனக்கு Friend தான். சரியா Friend!...
சரி தான் Friend
காமன்டுக்கும் வருகைக்கும் நன்றி !