கழுகு படம் இப்போது தான் பார்த்தேன். கதைக்கான நல்ல முடிச்சு ஒன்று இருந்தும் சொதப்பி விட்டனர்.
கொடைக்கானல் மலையிலிருந்து விழுந்து இறப்போர் உடலை மீட்கும், அது குறித்து எந்த வருத்தமும் படாத ஹீரோ, க்ளைமாக்சில் தானே அப்படி விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இது தான் ஒன் லைன்.
இந்த நல்ல நாட்டை நிச்சயம் நன்கு செய்திருக்கலாம். ஆனால் ??? ஹும் :((
ஹீரோ கிருஷ்ணா. ஓரளவு நன்கு நடிக்கிறார். அவர் உதட்டுக்கு அனைத்து காட்சியிலும் வெள்ளை அடித்து வெருபேற்றி உள்ளனர். குவார்டருக்கே காசில்லாமல் தினம் அலைகிறார். ஆனால் அவர் ஹேர் ஸ்டைல் இருக்கே. கஜினி பட சஞ்சய் ராமசாமி மாதிரி அவ்வளவு ஸ்டைலான ஹேர் ஸ்டைல் !
படத்தின் பெரும் ஆறுதல் ஹீரோயின் பிந்து மாதவி. எப்போதும் சிரிக்கும் அழகான கண்கள். எடுப்பான மூக்கு. குழி விழும் கன்னம். குளிருக்கு ஆணின் சட்டையை போட்டு கொண்டு எப்போதும் திரியும் அவர் அந்த காரக்டருக்கு நன்கு பொருந்துகிறார். முதல் பாதியில் அஜித் மாதிரி நடந்து, நடந்து ஹீரோவை பார்த்தவாறே இருக்கிறார்.
அடுத்த நல்ல விஷயம்: கருணாஸ் மற்றும் தம்பி ராமையா. இருவரும் தங்கள் பாத்திரத்தை சரியாக செய்துள்ளனர். ஆங்காங்கு சிரிப்பும் வர வைக்கின்றனர். குறிப்பாய் கம்பியூட்டர் ஆட்களுக்கு முப்பதாயிரம் சம்பளம்; நமக்கு இவ்வளவு கம்மியா என புலம்புவதும், கம்பியூட்டர் கம்பனிகளை மூடிட்டா, நிறைய பேர் இங்கே வந்துடுவாங்க என்பதும் ! எப்படா ஆளுங்க மலையிலிருந்து விழுந்து சாவாங்க என ஆவலுடன் அலையும் இவர்கள் பாத்திரங்கள் தமிழுக்கு நிச்சயம் புதுசு
ஜெயப்ரகாஷ் வில்லனாக அடக்கி வாசிக்கிறார். தமிழுக்கு கிடைத்த நல்ல நடிகர் என நிச்சயம் இவரை சொல்லலாம்.
யுவன் இசையில் "பாதகத்தி" பாட்டு நல்ல மெலடி. இன்னும் ஓரிரு பாடல்களும் சற்று நன்கு இருந்தது. படம் ஹிட் ஆனால் அந்த பாடல்களும் ஹிட் ஆகியிருக்கும் !!
பொதுவாய் படங்களில் முதல் பாதி நன்கிருக்கும். அடுத்த பாதி சொதப்புவார்கள். இந்த படம் இதில் ரொம்ப வித்தியாசப்படுகிறது பட துவக்கம் செமையாக உள்ளது. அடுத்த சில காட்சிகளும் தான். மூணாவது காட்சி செம சொதப்பல். நான்கு நல்லா இருக்கு. ஐந்து அறுவை. இப்படி மாறி மாறி சில நல்ல காட்சியும், சில சொதப்பல் காட்சியும் வருகிற படம் சமீபத்தில் நான் பார்த்த நினைவில்லை. இயக்குனர் புதியவர் என்பது இதில் நன்கு தெரிகிறது.
என்ன செய்வது? ஒரு படம் ஹிட்டானால் அதன் பாதிப்பில் நிறைய படம் வருவதில்லையா? அப்படி மைனா படம் பார்த்து அதே மாதிரி மலை சார்ந்த இடத்தில் ஒரு கதை; முடிவில் ஹீரோ ஹீரோயின் சாவு என எடுத்திருக்கிறார்கள். ஹீரோ ஹீரோயின் இறந்தால் மட்டும் நம்ம மனசு நெகிழ்ந்துடுமா என்ன?
அட ஹீரோ ஹீரோயினை விடுங்கப்பா. படத்தில் வரும் வில்லன், வில்லனின் அனைத்து அல்லக்கைகள், ஹீரோ நண்பர்கள் என அநேகமாய் எல்லோருமே கொல்ல படுகிறார்கள். "படத்தின் இறுதியில் பிழைத்து இருப்போர் யார்..சொல்லுங்கள்" என போட்டியே வைக்கலாம்.
இதுக்கு மேலே இருந்தால் நம்மளையும் வெட்டிடுவாங்க பிழைத்தால் போதும்னு தெறித்து ஓடி வருகிறோம் நாம் !!
கழுகை டிவியில் மெதுவா பாருங்க; அதுவே போதும் !!

நேற்றைய பதிவு: ஏப்ரல் Fool ஆன சட்ட கல்லூரி மாணவர்கள்
காலையிலேயே ஒரு படம் பார்த்தாச்சா மோகன்!
ReplyDeleteமலையில் இருக்கும் ஹீரோவின் ஹேர் ஸ்டைல்..... :)) தமிழ் சினிமாவில் இதெல்லாம் சாத்தியம்.....
ஓகே, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாகப் பார்த்து விடுகிறோம்!!
ReplyDelete//யுவன் இசையில் "பாதகத்தி" பாட்டு நல்ல மெலடி. இன்னும் ஓரிரு பாடல்களும் சற்று நன்கு இருந்தது. //
ReplyDeleteஆமாம். ”பாதகத்தி” பாட்டில் கொஞ்ச நாட்களுக்கு பிறகு யுவனின் டச் தெரிந்தது. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் நல்ல பாடல்.
படத்தை சீக்கிரம் ஒருமுறை பார்க்கவேணும்.
கோவை நேரம் has left a new comment on your post "மைனாவை பார்த்து சூடு போட்டு கொண்ட கழுகு : விமர்சனம...":
ReplyDeleteபுலியை பார்த்து பூனை சூடு போட்டுகிச்சு..இங்க மைனா பார்த்து கழுகு சூடு போட்டுகிச்சு
என்னமோ போங்க மோகன் :)
ReplyDeleteவெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteகாலையிலேயே ஒரு படம் பார்த்தாச்சா மோகன்
***
நன்றி வெங்கட் நேற்று பார்த்தேன்
middleclassmadhavi said...
ReplyDeleteஓகே, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாகப் பார்த்து விடுகிறோம்!!
*******
ஆம் மேடம். அப்போ பார்த்துக்கலாம்
ஹாலிவுட்ரசிகன் said...
ReplyDelete”பாதகத்தி” பாட்டில் கொஞ்ச நாட்களுக்கு பிறகு யுவனின் டச் தெரிந்தது. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் நல்ல பாடல்.படத்தை சீக்கிரம் ஒருமுறை பார்க்கவேணும்.
**
நன்றி ஹாலிவுட் ரசிகன். நீங்கள் சொல்லும் இன்னொரு பாடல் சரியா கவனிக்கலை
நன்றி கோவை நேரம்
ReplyDeleteரகு: என்ன ரொம்ப அலுப்பு? :))
ReplyDeleteமைனாவைப் பார்த்து கழுகு மட்டுமா சூடு போட்டிருக்கும்? இன்னும் புறா, காக்கா, குருவி கெளதாரின்னு வரிசையா வர வாய்ப்பிருக்கு.
ReplyDeleteஅழகான கதாநாயகிகள் கிடைத்து விடுகிறார்கள் கதாநாயகர்களுக்குதான் (அழகான)தமிழ்நாட்டில் பெரும்பஞ்சம் வந்திருக்கிறது.
”சுப்ரமணியபுரம்” படம் மாதிரி எல்லாருமே செத்துப் போகிறார்களா.....
ReplyDeleteபொறுமையா பார்த்துக்கலாம்....