Saturday, April 14, 2012

டிவி- தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் எப்புடி - விமர்சனம்

பதிவர்களில் அஞ்சா நெஞ்சன் என்றால் அது அய்யாசாமி தான். பின்னே டிவி நிகழ்ச்சி எல்லாம் விடாம பார்த்து அது பத்தி விமர்சனம் வேற எழுதுறாரே !

இந்த வருடம் அவர் வீட்டில் தமிழ் புத்தாண்டுக்கு வடை பாயசம், சாம்பார் அல்ல ! இதுவே செஞ்சு செஞ்சு போர் அடிச்சிடுச்சு. மெனுவை மாத்தலாம் என பேசி, வெஜிடேரியனிலேயே முழுக்க வித்யாசமான மெனு ! சாப்பிட்டு முடிச்சுட்டு தெம்பா விமர்சனம் பண்றார் அய்யாசாமி. அவரது நேரடி ரிப்போர்ட் இதோ:

**************
விஜய் டிவியில் முதல் நாளிரவே நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் சூர்யா உட்பட அனைவரும் வேஷ்டி கட்டி கொண்டாடினர். இதில் கோபிநாத் பன்னிரண்டரை லட்சம் வரை ஜெயித்து இன்னும் இரு லைப் லைன் இருக்கையில் கேள்வி என்ன என்று கூட கேட்காமல் விலகி கொண்டார். காரணம் "நண்டு ஜெகன் மற்றும் ரம்யா ஆடட்டும் " செலிபிரிட்டி வைத்து விளையாடுவது முழுக்கவே match fixing போல் தான் தெரிகிறது. பின்னே? பெரும்பாலானோர் மூணரை லட்சத்துக்கு குறைவாய் அவுட் ஆவதே இல்லை ! 

தமிழ் புத்தாண்டு அன்னிக்கு லியோனி, சந்தானம் பேட்டி என சிரிக்கிற மாதிரி விஷயம் எல்லாம் காலையிலேயே வைக்கிறாங்க. ஆம்பளைங்க சமையலை பாப்பாங்களா இதை பாப்பாங்களா? என்ன கொடுமையா இருக்கு ! சமையலை முடிச்சிட்டு வந்து உட்கார்ந்தா எல்லா டிவியும் (பார்த்த) சினிமாவா போட்டு கொல்றாங்க ! இதுக்கு யாராவது ஒரு வழி பண்ணுங்க பாஸ் !

வெங்காயம் உரிப்பது, தேங்காய் திருகுவது இவை இடையே லியோனி பட்டி மன்றம் கேட்க தான் முடிந்தது. பார்க்க முடியலை. நிகழ்ச்சிக்கு போன நம்ம பதிவர் சிவகுமார் தலை தெரிஞ்சுதா என தெரியலை

அஞ்சலி, ஓவியா பேட்டி (மசாலா கபே) ஓரளவு பார்த்து மகிழ்ந்தேன். அஞ்சலி தேன் குரலால் கொஞ்சி கொஞ்சி பேசியதில் உள்ளம் நெகிழ்ந்தது. மகிழ்ந்தது.
இதில் "தமிழ் படம்" சிவா செம காமெடி செய்தார். தன்னுடைய டான்ஸ் மூவ்மன்ட் பற்றி இப்படி சொன்னார் " நான் டான்ஸ் மாஸ்டருக்கே டான்ஸ் மூவ்மன்ட் கத்து குடுத்துருக்கேன். எப்படிங்கறீன்களா? அவர் ஒரு மாதிரி சொல்லி தருவார். நான் வேற மாதிரி ஆடுவேன். இப்படி கூட டான்ஸ் ஆட முடியுமா என அவர் நொந்து போய் ஓகே சொல்லிடுவார்".

சாலமன் பாப்பையா பட்டி மன்றத்தில் ஆண்கள் மூவர் ஒரு அணியாகவும் பெண்கள் மூவர் வேறு அணியாகவும் இருந்தனர். ஆண்கள் "குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது பணமே" என்றும் பெண்கள் " பாசமே" என்றும் பேசினர். என்ன முடிவு சொல்வோரோ என்று டென்ஷனே வேண்டாம் ! பாரதி பாஸ்கர் அணிக்கு ஆதரவா தான் சாலமன் பாப்பையா தீர்ப்பு சொல்வார் என்பது டிவி பொட்டி தெரிந்த குழந்தைக்கு கூட தெரியும் !

நீயா நானாவை இந்த முறை பட்டி மன்றம் ஆக்கிட்டாங்க. அகமா புறமா என கத்தி, கபடாவுடன் போட்டு தாக்கினாங்க.கோபி கோட் போடாம பைஜாமா ஜிப்பா போட்டு கிட்டு, நமக்கு நன்கு அறிமுகமான பேச்சாளர்ககள் பெயர் எழுதிய "பேப்பரை பார்த்து படித்து விட்டு" உட்கார்ந்து விட்டார். தமிழருவி மணியன் நடுவராய் முழுதும் நடத்தினார். " நான் ஒரு இலக்கிய வாதி; இதை பார்க்காட்டி என்னை எழுத்தாளர்னு சமூகம் ஒத்துக்காது " என கெஞ்சி பார்த்தேன் "இதெல்லாம் பார்த்தா வீட்டை விட்டு விலக்கி வச்சிடுவோம் " என்றதால், பார்த்த சினிமாவை பார்த்து கொண்டு அமர்ந்து விட்டேன்.  

மாலை ஒரு பக்கம் சந்திரமுகி மறுபுறம் சிவாஜி என பழைய படங்கள் போட்டனர். பெண் இரண்டையும் மாறி மாறி பார்த்தாள். என் மாமனார் இங்கு இருந்தால் இரண்டு படமும் மாறி மாறி பார்த்து எப்படி குழம்பி போவார் என பேசி சிரித்தோம். 

எல்லா டிவியிலும் உதய நிதி மற்றும் சந்தானம் வந்து ஓகே ஓகே பற்றி பேசினர். விஜய் டிவியில் பாடகி சுசித்ரா இருவரையும் "காபி வித் சுசித்ரா" என பேட்டி கண்டார். சந்தானத்திடம் " ஆண் காமெடி நடிகர்கள் போல பெண்களில் நிறைய காமெடி நடிகைகள் ஏன் வருவதில்லை. மனோரமா, சச்சு , கோவை சரளா என கொஞ்சம் பேர் தானே உள்ளனர்?" என்று கேட்டார். அதற்கு சந்தானம் " உண்மை தான்; எங்களுக்கும் காமெடிக்கு ஆள் தேவை தான். நீங்க நடிக்கிறீங்களா? " என மடக்கினார். சுசித்ரா வழிந்ததை பார்க்க செமையா இருந்தது !

இதே போல வழக்கு எண் என்கிற பெயரில் பாலாஜி சக்திவேல் படம் பற்றியும் எல்லா சேனல்களிலும் ஒரு நிகழ்ச்சி. அதில் புது இசை அமைப்பாளர் எல்லா பேட்டியிலும் ஒரே விஷயம் சொல்லி மொக்கை போட்டார். அதாவது ஒரு பாட்டு இசையே (மியூசிக்) இல்லாமல் வெறும் பாடல் வரிகளை வைத்து போட்டுருக்காங்களாம் !" இதனை வரிக்கு வரி மாற்றாமல் அப்படியே எல்லா இடங்களிலும் பேசினார் இசை அமைப்பாளர். முடியலை !

பிரசன்னா -சினேகா பேட்டி விஜய் டிவியில் ஒளி பரப்பானது. அதில் பிரசன்னாவின் தம்பி அண்ணனின் காதல் தெரிந்ததும், இப்படி சொன்னதாக சொன்னார் " டேய் உனக்கு போய் சிநேகாவா? ரொம்ப ஓவர்டா !" ம்ம் இந்த ஜெனரேஷன் மக்கள் ரொம்ப ஓபன்- ஆ இருக்காங்க ! ஓபன்- ஆ இருப்பது பேஷன் மாதிரி ஆகிடுச்சு !

வேலாயுதம் படம் அவ்வப்போது பார்த்ததில், நடு நடுவே இளைய தளபதி வந்து படம் எடுத்த போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை சுவாரஸ்யம் இல்லாத மாடுலேஷனில் சொன்னார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பேட்டி தந்தனர். கணவன் மனைவி பற்றிய கேள்விகளுக்கு தப்பும் தவறுமாய் மாற்றி மாற்றி சொன்னதில் இருவருக்கும் இடையே "ஸ்ருதி சரி இல்லை "என புரிந்தது ! (நோ டபிள் மீனிங் )
*********
அடுத்த சிறப்பு நிகழ்ச்சிகள் உழைத்து உழைத்து ஓடாய் போகும் நம்மை மாதிரி மக்களுக்காக தொழிலாளர் தினமான மே 1 அன்று ! அதுவரை உங்களிடமிருந்து வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் அய்யா சாமி ! சீ யூ பை பை !!

24 comments:

  1. Anonymous8:24:00 PM

    முழுக்க வித்யாசமான மெனு !

    அது என்ன வித்யாசமான மெனு ? மண்டை காய்கிறது :-))

    >>அஞ்சலி தேன் குரலால் கொஞ்சி கொஞ்சி பேசியதில் உள்ளம் நெகிழ்ந்தது. மகிழ்ந்தது.

    தலைவி அனுஷ்கா மற்றும் மிஸஸ் அய்யாசாமியின் கவனத்திற்கு...

    ReplyDelete
  2. வாசிப்போர் சிரிக்க தான் இப்பதிவு எழுதியது நன்றி மிடில் கிளாஸ் மாதவி .
    **

    ReplyDelete
  3. பால ஹனுமான்: அப்படி ஒரு கொக்கி போட்டாலாவது யாரவது கவனிச்சு கேக்குறாங்கலான்னு பார்த்தா நீங்க சரியா கேட்டுருக்கீங்க

    எப்பவும் சாதம், சாம்பார், வடை பாயசம், சில குறிப்பிட்ட (அதே காய்கறிகள் மட்டுமே ) ஒவ்வொரு வருடமும் செய்வார்கள்,

    இவ்வருடம் பிசிபெல்லா பாத்; சர்க்கரை பொங்கல், தயிர் சாதம் என செய்து அவையே சாமிக்கும் வைக்கப்பட்டது. வருடா வருடம் செய்கிற சமையலில் இருந்து எங்களுக்கு இது வித்தியாச மெனு தான் !

    ReplyDelete
  4. \\செலிபிரிட்டி வைத்து விளையாடுவது முழுக்கவே match fixing போல் தான் தெரிகிறது.\\ சிவகார்த்திகேயன் & கோ., வெறும் பத்தாயிரத்தோடுதானே போனாங்க?!!

    ReplyDelete
  5. \\பாரதி பாஸ்கர் அணிக்கு ஆதரவா தான் சாலமன் பாப்பையா தீர்ப்பு சொல்வார் என்பது டிவி பொட்டி தெரிந்த குழந்தைக்கு கூட தெரியும் ! \\ :))

    ReplyDelete
  6. \\ "இதெல்லாம் பார்த்தா வீட்டை விட்டு விலக்கி வச்சிடுவோம் " என்றதால், பார்த்த சினிமாவை பார்த்து கொண்டு அமர்ந்து விட்டேன். \\ நிறைய இணைய தளங்களில் தொலைகாட்சி நிகழ்சிகளை அவை ஒளிபரப்பான பின்னர் வீடியோக்களாக போடுகிறார்கள், நேரம் கிடைக்கும் போது பார்க்கலாமே?

    ReplyDelete
  7. இன்றைக்கு தமிழ் மனத்தில் ஓட்டு போட்டேன், பின்னர் Refresh செய்த போது +, - இரண்டுமே 1 லிருந்து 2 ஆகிவிட்டது, இது பற்றி கொஞ்சம் நீங்களும் செக் பண்ணிப் பார்த்து சொல்லுங்களேன்!!

    ReplyDelete
  8. தாஸ்: சிவ கார்த்திகேயன் அணி தான் வென்றதா? புது தகவல் !

    நீங்கள் போட்ட ஓட்டு ப்ளஸ்ஸில் தான் சேர்ந்தது. நன்றி !

    இரண்டு பக்கமும் ஒரே அளவு எண்ணிக்கை தெரிந்தால், இரண்டு ஓட்டும் ப்லஸ்சுக்கு போனது என்று அர்த்தம். மூன்று பேர் ஓட்டு போட்டு அதில் ஒருவர் மைனஸ் ஓட்டு எனில் 2/3 என தெரியும் !அதாவது மொத்தம் ஓட்டு போட்டோர் மூவர். அதில் இருவர் ப்ளஸ் ஒருவர் மைனஸ் ஓட்டு என அர்த்தம்

    ReplyDelete
  9. முற்றிலும் வித்தியாசமான சமையல் என்ன? சொல்லவே இல்லையே......

    இதுவரை பார்க்காத படங்களான தெய்வத்திருமகள் மற்றும் சிவாஜியை பார்த்தேன். இரண்டாம் முறையாக அயன்...

    தமிழ்மணத்தில் என்னுடையது 2ம் ஓட்டு.

    ReplyDelete
  10. \\
    தாஸ்: சிவ கார்த்திகேயன் அணி தான் வென்றதா? புது தகவல் !\\ ஐயையோ நான் எங்கே அப்படிச் சொன்னேன், அவங்க லட்சம் என்றெல்லாம் ஜெயிக்கலே, தப்பா பதில் சொல்லி வெறும் பத்தாயிரம் ரூபாயிலேயே ஆட்டம் குளோஸ் ஆச்சுன்னு சொன்னேன்.

    ReplyDelete
  11. தாஸ் சாரி. தமிழில் டைப் செய்து விட்டு 10,000 என்கிற எண்ணை, "ஜெயித்தார்களுக்கு முன் " சேர்க்க எண்ணினேன். 10,000 மிஸ் ஆகி விட்டது :))

    ReplyDelete
  12. கோவை தில்லி மேடம்: நன்றி படங்கள் தான் பார்த்தீர்கள் போலும் ; எங்க வீட்டு மெனு மேலே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கேன்

    ReplyDelete
  13. அவர்கள் எல்லாம் அதி புத்திசாலியாம் ! யாரும் மூணரை லட்சத்துக்கு குறைவாய் அவுட் ஆவதே இல்லை ! இவ்ளோ அறிவை வச்சிகிட்டா சினிமா பீல்டுக்கு இவங்க வந்தாங்க !

    Hello Mohan,

    Do you think cine stars are not good in gk... don't criticize them just for writing...

    ReplyDelete
  14. தமிழ்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் விமர்சனம் ரசிக்கும்படி எழுதியிருக்கிறீர்கள் நன்று. என் வலைப்பதிவிற்கு வருகை தந்து 50 வது இணைப்பாளராக தாங்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் மோகன்!

    பல நிகழ்ச்சிகள் பார்க்காமல் தப்பினேன் - அலுவலகம் சென்றதால் :)))

    மாலை வந்த போது சந்திரமுகியும் சிவாஜியும் மாறி மாறி வந்து கொண்டு இருந்தது! :)

    ReplyDelete
  16. இதில் ஒரு ப்ரோக்ராம் கூட பார்க்கவில்லை. அன்னைக்கு மதியம்தான் ஊருக்கு போனேன். வடை, பாயசம், குட்டித்தூக்கம், மாலை காபி & அரட்டை வித் நண்பன்...இதுதான் என்னோட சிறப்பு நிகழ்ச்சிகள் :))

    ReplyDelete
  17. வடிவேலன்: நன்றி சில வரிகளை தற்போது நீக்கி விட்டேன் தங்கள் அக்கறைக்கு நன்றி

    ReplyDelete
  18. முரளிதரன் : நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  19. நன்றி வெங்கட் ; அலுவலகம் இருந்தாலும் கூட தமிழ் புத்தாண்டு வீட்டில் கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete
  20. ரகு: அப்படியா? வீட்டில் இருந்த வரை மகிழ்ச்சி தான்

    ReplyDelete
  21. சுருதி பேதத்தை நானும் கவனிச்சு எங்க வீட்ல சொல்ல, நம்மளுக்கு ஸ்பெஷல் வடை வீட்ல கெடச்சது, இன்னும் பல் வலிக்குது...இது எனக்கு தேவையா !!!

    ReplyDelete
  22. இன்னுமா டி.வி சிறப்பு(!) நிகழிச்சிலாம் பாக்கறீங்க..?
    உங்களலாம்.. ஆயிரம் சரியார் (சரியான ஆளு) வந்தாலும் திருத்தவே முடியாது...

    PS : என்ன சார்.. இந்தப் பதிவுக்கு இந்த திட்டு போதுமா ?

    ReplyDelete
  23. Thanks. Mohan


    -vadivelan.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...