Monday, April 16, 2012

பதிவர் RVS Vs வெங்கட் நாகராஜ் - ஒரு சந்திப்பு


வெங்கட் நாகராஜ் தலை நகர் டில்லியிலிருக்கும் பதிவர். எனக்கு ப்ளாகின் முக்கிய விஷயமான திரட்டிகள், தொடர்வோர் (Followers ) அறிமுக படுத்திய ரேகா ராகவன் சார் இவரின் சித்தப்பா.  ரேகா ராகவன் சார் தான் எனக்கு வெங்கட்டை அறிமுக படுத்தினார்.

மெயில், பின்னூட்டங்கள், போன் என பல விதத்திலும் வெங்கட்டும் நானும் பேசியிருக்கிறோம். நேரில் பார்த்ததில்லை. ஒரு முறை நாங்கள் குடும்பத்தோடு டில்லி செல்வதாக இருந்தது. அப்போது சந்திக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் நம்ம ஹவுஸ் பாஸ் " டில்லியில் ஒரே டென்குவா இருக்கு. போக வேணாம் " என உத்தரவு போட்டார். அவர் உத்தரவு போட்டா நான் வீட்டை விட்டு கூட வெளியே போக மாட்டேன். அப்புறம் டில்லிக்கு எங்கே போறது?

சமீபத்தில் வெங்கட் சொந்த காரர் திருமணத்துக்கு சென்னை வருவதாகவும் நாங்கள் இருக்கும் அதே ஏரியாவான மடிப்பாக்கத்தில் தான் தங்குவதாகவும் சொன்னார். நிச்சயம் சந்திப்போம் என சொல்ல, அதே மடிப்பாக்கத்தில் இருக்கும் RVS -ம் அவரை சந்திப்பதாக சொன்னதாகவும், மூவரும் சேர்ந்து பார்க்கலாமா என்றார்.
***
இப்போது RVS -   intro :

RVS என் பள்ளி தோழி கிருத்திகாவின் தம்பி. கிருத்திகாவையே 20 வருஷத்துக்கு பிறகு இப்போது தான் பள்ளி விழாவில் பார்த்தேன். அதன் பின் அவருடன் சேர்ந்து சில அரசு பள்ளிகளுக்கு நல்ல உதவிகள் செய்து வருகிறோம்

RVS-உடன் ஒரு முறை போனில் பேசியதோடு சரி. நான் படித்த அதே பள்ளி என்பதால் சிறு வயதில் டிராயர் போட்ட RVS-ஐ பார்த்திருக்க கூடும் ! நினைவில்லை !

 RVS- "மடிப்பாக்கத்தில் இருக்கும் அடையார் ஆனந்த பவனில் சந்திக்கலாம். நான் என் சிகப்பியில் மாலை ஏழரை மணிக்கு வந்துடுவேன்" என்றார். இதை வெங்கட்டிடம் சொல்லி "ஏழரைக்கு " சந்திக்க   முடிவானது

***
சென்னை காரங்க என்னைக்கு சொன்ன நேரத்துக்கு போயிருக்காங்க? வெங்கட் முதலில் வர, நான் சற்று தாமதமாகத்தான் போனேன். அவருக்கு பரிசாக சில புத்தகங்கள் கொண்டு சென்றிருந்தேன். அனைத்தும் பதிவர்கள் எழுதிய புத்தகங்கள் ! பாத்துக்குங்க ! நீங்க எழுதினதை வாங்குவதோட மத்தவங்களுக்கு பரிசு வேற தர்றேன். பாத்து செய்யுங்க :)))

"RVS வரும் வரை பேசிக்கிட்டு இருப்போம்" என வெளியிலேயே நின்று பேசிக்கொண்டிருந்தோம். வெங்கட் மகள் ரோஷினியின் படங்கள், ரோஷினியின் ப்ளாக் (ரோஷினிக்கு வயது 5 ) என பேச்சு போனது. திருச்சி சென்ற போது ரிஷபன், கோபால கிருஷ்ணன், ஆரண்ய நிவாஸ் ஆகிய பதிவர்களை சந்தித்ததாக, அந்த சந்திப்புகள் மிக மகிழ்வாக இருந்ததாக சொன்னார். "இப்போது உங்களையும் RVS-ஐயும்  பா க்க போறேன் ! இந்த ட்ரிப் முழுக்க பதிவர்களை தான் சந்திக்கிறேன்" என்றார்.

"நீங்கள் பார்ப்பது என்ன வேலை?" என்றால், சுஜாதா கதையில் வரும் ஹீரோ மாதிரி "வெளியில் சொல்ல முடியாது" என்றார். (நாம  ந்திப்பு பத்தி, இப்படி பதிவு எழுதுவோம்னு தெரியும் போல, நம்மளை நம்பலை ..ம்ம்ம்??)

பதிவுலக பிரச்சனைகள், சர்ச்சைகள், கமன்ட் மாடரேஷன் வைப்பதன் அவசியங்கள் இப்படி பதிவுலகையே சுத்தி சுத்தி வந்தது பேச்சு.

நின்று நின்று கால் வலித்தது ! RVS ஐ காணும் ! "சிகப்பியை (அவர் கார்) ஓட்டி கிட்டு இருப்பார். போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்" என அமைதி காத்தோம்.


ரொம்ப வெறுத்து போய் " வாங்க உள்ளே போய் உட்காருவோம்; அவர் அப்புறம் வரட்டும் " என சென்று அமர்ந்தால் பின்னாடியே வந்துட்டு " பார்த்தீங்களா? நீங்க எனக்கு வெயிட் பண்ணாம உள்ளே வந்துட்டீங்க?" என்றார் RVS !
********
ஆண்டவன் எதையும் ஒரு காரணத்துடன் தான் செய்கிறார் !. RVS வந்து அமர்ந்ததும் தான், நாங்கள் காத்திருந்ததும், அப்போது வெங்கட்டுடன் அரை மணி நேரம் பேசியதும் நல்லதுக்கு என புரிந்தது. பின்னே.... RVS என்கிற மனிதர் வந்ததிலிருந்து, எங்களுக்கு பேசுகிற சிரமமே அவர் வைக்கலை.

அவர் பேச நாங்கள் கேட்க, அப்புறம் நாங்கள் கேட்க அவர் பேச இப்படியே போனது அடுத்த ஒரு மணி நேரம். நடு நடுவில் அவரது இரு பெண்களும் அவருக்கு போன் செய்து " அப்பா எங்கே இருக்கே? " என தொந்தரவு செய்ய, அந்த கேப்பில் நானும் வெங்கட்டும் அவசரமாய் கொஞ்சம் பேசிக் கொண்டோம் !

சுவாரஸ்யமான பேச்சு RVS-உடையது ! மனிதர் System Administrator Head ஆக உள்ளார், நிச்சயம் மார்கெட்டிங் துறையை தேர்ந்தெடுதிருக்கலாம் ! எதையும் விற்றிருப்பார் !

நானும் வெங்கட்டும் மினி டிபன் வாங்கி சாப்பிட RVS காபி போதும் என்று சொல்லி விட்டார். "வீட்டுக்கு போய் பசங்க கூட சாப்பிடணும். இல்லாட்டி பிச்சுடுவாளுங்க !" என்னை மாதிரி ஆசாமிகள் மனைவிக்கு பயப்படுவோம் ! RVS மனைவிக்கல்ல, தன் பெண்களுக்கு தான் பயப்படுறார் !

அவர் பேசியதை இங்கு பகிர்ந்தால் சுவாரஸ்யமாய் இருக்காது. அவரே பேசினால் தான் அது சுவை ! இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் மாதிரிக்கு பகிர்கிறேன் !

கல்யாணத்துக்கு முன் அவர் வாழ்க்கையை பற்றி சொல்லி விட்டு அதன் பின் வந்த மாற்றம் குறித்தும் சொன்னார். " ஒரு பொண்ணு கல்யாணம் ஆன உடனே ஆம்பளை கிட்டே இருக்க கெட்ட பழக்கம் எல்லாத்தையும் மாத்திடணும். கல்யாணம் ஆன புதுசுல அவன் ஒரு மயக்கத்திலே இருப்பான். அதை வைச்சே தான் அவன் கெட்ட பழக்கம் எல்லாம் ஒழிக்கணும் "

டெயில் பீஸ்:


சாப்பிட்டு முடித்து பில் வந்தது. "வெங்கட் வெளியூர் ஆள். அவர் பணம் குடுப்பது நியாயம் இல்லை. RVS பில் குடுக்க கூடாதுன்னு உஷாரா காபி மட்டும் தான் குடிச்சார். இன்னிக்கு நாம தான் பில் குடுக்கணும் போல இருக்கு" என பர்சை எடுத்தார் அய்யாசாமி. அதற்குள் RVS பாய்ந்து போய் பில்லை எடுத்துட்டார். " நான் தான் தருவேன் " என !

"யோவ் என்னையா இது காபி மட்டும் குடிச்சுட்டு நீ போய் பில் தர்ரே? நீ பில் தருவேன்னு தெரிஞ்சா நல்லா சாப்பிட்டுருப்பேனே ! நான் தருவதா நினைச்சுள்ள கம்மியா சாப்பிட்டேன் " - என்றார் அய்யாசாமி !

" அதுனால என்ன? இப்ப கூட ஆர்டர் பண்ணி மறுபடி ஒரு ரவுண்ட் சாப்பிடுங்க" என்றார் RVS புன்னகை மாறாமல் !

46 comments:

  1. ஆஹா....... அடுத்த பதிப்புக்கு தயாரா இருங்கன்னு பப்ளிஷருக்கு சொல்லிடலாமா???????????

    பதிவர் சந்திப்புக்கே ஒரு தனி இனிமை இருக்கு!!!!!!!!

    ReplyDelete
  2. அண்ணே! இவ்ளோ நாள் கழிச்சு அந்த மயக்க மேட்டரை மட்டும் மறக்காம போட்டு புண்ணியம் கட்டிக்கிட்டீங்க! நன்றி!

    :-)

    ReplyDelete
  3. பதிவர் சந்திப்பு கலக்கல்

    ReplyDelete
  4. மன்னார்குடிகாரரை பாத்து 15 நிமிஷம் பேசிட்டு வரலாம்னு போய் 3 மணி நேரம் வம்பளந்த அனுபவம் எனக்கும் உண்டு. வெங்கட் அண்ணா கூடவும் ஒரு தடவை பேசனும்.பதிவர் சந்திப்பு எப்போதுமே மகிழ்ச்சி தான் :)

    ReplyDelete
  5. //என பர்சை எடுத்தார் அய்யாசாமி. //

    ஓடு.. ஓடு.. நிக்காம ஓடு..
    சுனாமி வந்தாலும் வரும்போல..

    ஆர்.வி.எஸ். எனது பள்ளித் தோழர்...
    அண்ணன் மோகன் அவர்கள். எனது அண்ணனின் பள்ளித் தோழர்.
    வெங்கட் சார் அவர்கள் பதிவுலகத் தோழர். (அவரை நான் அவரது தில்லி இல்லத்தில் சந்தித் திருக்கிறேன்.)

    ஆக மூணு பேரையும் நானும் நேர்ல பாத்து பேசி இருக்கேன்.. எல்லாரும் ஞாபகத்துல வச்சிக்கோங்க.. ஆமா..

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்:)!

    ReplyDelete
  7. மூவர் கூட்டணி சூப்பராத் தான் இருந்திருக்கிறது....

    ஆனா நீங்க பேசிய விஷயங்கள் எல்லாமே உடனடியா ”ஹாட் நியூஸ்”ஸா எனக்கு வந்திருச்சு...:))

    ReplyDelete
  8. உங்கள் பதிவுகளில் அடிக்கடி அய்யாசாமி என்று ஒரு கேரக்டர் வருகிறது. யார் அவர்?

    ReplyDelete
  9. உங்கள் பதிவுகளில் அடிக்கடி அய்யாசாமி என்று ஒரு கேரக்டர் வருகிறது. யார் அவர்?

    ReplyDelete
  10. Enjoyed the style of writing !

    ReplyDelete
  11. //சமீபத்தில் வெங்கட் சொந்த காரர் திருமணத்துக்கு சென்னை வருவதாகவும் //

    சமீபத்தில் என்பதை டிசம்பர் 2011 என்று கொள்க! என்னை விட உங்களுக்கு சுறுசுறுப்பு அதிகம் மோகன்! நான் அதுக்கு முன் தில்லியில் நடந்த பதிவர் சந்திப்பினைப் பற்றியே இன்னும் எழுதல!

    நிச்சயம் சுவையான சந்திப்பு தான் அது. சந்திப்பினைப் போலவே நீங்களும் சுவைபட எழுதி இருக்கீங்க! பாராட்டுகள்.

    மன்னை மைனர் பேச்சிற்கு நாம எல்லோருமே ரசிகர் தானே!

    ReplyDelete
  12. அருமை.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலுக்கும் எங்கள் வீட்டுக்கும் வாருங்கள்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. துளசி கோபால் said...

    ஆஹா....... அடுத்த பதிப்புக்கு தயாரா இருங்கன்னு பப்ளிஷருக்கு சொல்லிடலாமா???????????
    **
    டீச்சர் உங்கள் எழுத்துக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கு; நீங்க தாராளமா அடுத்த பதிப்பு போட சொல்லலாம்

    ReplyDelete
  14. RVS : வெங்கட் மறுபடி குடும்பத்துடன் சென்னை வருகிறார். மறுபடி நம் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தயாராய் இருங்கள் !

    ReplyDelete
  15. ஸாதிகா: நன்றி

    ReplyDelete
  16. தக்குடு said...

    மன்னார்குடிகாரரை பாத்து 15 நிமிஷம் பேசிட்டு வரலாம்னு போய் 3 மணி நேரம் வம்பளந்த அனுபவம் எனக்கும் உண்டு.

    ****
    ஹா ஹா நன்றி தக்குடு

    **

    ReplyDelete
  17. மாதவா: ஏஏன் ? சுனாமி எல்லாம் கூப்புடுற? நீ சென்னை வரும் போது சொல்லு. அய்யாசாமியை விட்டு டிரீட் தர சொல்றேன் :))

    ReplyDelete
  18. நன்றி ராமலட்சுமி மேடம்

    ReplyDelete
  19. கோவை2தில்லி மேடம்: வெங்கட்டும் அய்யாசாமி மாதிரி ஒரு விஷயம் விடாம ஒப்பிச்சுடுவாரா? ரைட்டு

    ReplyDelete
  20. அப்பாதுரை : மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  21. யுவகிருஷ்ணா : அய்யாசாமி நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் அந்நியன் ! நானும் அய்யாசாமி தான். நீங்களும் அய்யாசாமி தான்

    ReplyDelete
  22. பதிவர்களில் பலர், ஏதோ ஒருவகையில் உங்களுக்கு வேண்டியவர்களாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

    அருமையான பகிர்வு!

    ReplyDelete
  23. ரிஷபன் சார்: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  24. புதுகை தென்றல் மேடம்: நன்றி ( தங்கள் காமன்ட்டில் உள் குத்து ஏதும் இல்லையே :))

    ReplyDelete
  25. வெங்கட்: டிசம்பரிலா சந்தித்தோம் ? இன்னும் முன்னர் என நினைக்கிறேன். சரி பார்க்கவும் !

    ReplyDelete
  26. ரத்னவேல் சார்: தங்கள் அன்பிற்கு மிக நன்றி நிச்சயம் ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் வருவேன். உங்களை சந்திப்பேன்

    ReplyDelete
  27. ம்ம்ம்...கலக்குங்க!!

    ReplyDelete
  28. அமைதி அப்பா said...

    பதிவர்களில் பலர், ஏதோ ஒருவகையில் உங்களுக்கு வேண்டியவர்களாக இருப்பது ஆச்சர்யமாக உள்ளது.

    ***
    சார் அப்படியெல்லாம் இல்லை. எனக்கு தெரிந்தோர் எண்ணிக்கை குறைவு தான் தங்கள் அன்பிற்கு நன்றி

    ReplyDelete
  29. அன்புடன் அருணா said...

    ம்ம்ம்...கலக்குங்க
    **

    அட அருணா மேடம். நலமா? நன்றி !

    ReplyDelete
  30. //வெங்கட்: டிசம்பரிலா சந்தித்தோம் ? இன்னும் முன்னர் என நினைக்கிறேன். சரி பார்க்கவும் !//

    டிசம்பரில் தான் சந்தித்தோம் மோகன். நான் இங்கிருந்து 10.12.11 அன்று கிளம்பினேன். பயணம் பற்றிய எனது பகிர்வு

    http://www.venkatnagaraj.blogspot.in/2012/01/blog-post_06.html

    ReplyDelete
  31. பதிவர் சந்திப்பு சூப்பர். நானும் மடிப்பாக்கத்தில் வசிக்கிறேன்.

    ReplyDelete
  32. //ஆண்டவன் எதையும் ஒரு காரணத்துடன் தான் செய்கிறார் !. RVS வந்து அமர்ந்ததும் தான், நாங்கள் காத்திருந்ததும், அப்போது வெங்கட்டுடன் அரை மணி நேரம் பேசியதும் நல்லதுக்கு என புரிந்தது. பின்னே.... RVS என்கிற மனிதர் வந்ததிலிருந்து, எங்களுக்கு பேசுகிற சிரமமே அவர் வைக்கலை.
    அவர் பேச நாங்கள் கேட்க, அப்புறம் நாங்கள் கேட்க அவர் பேச இப்படியே போனது அடுத்த ஒரு மணி நேரம்//

    :)))
    சுவாரஸ்யமான மனிதர்.

    ReplyDelete
  33. yuvakrishna.. உங்க கேள்வியில் உள்ள ஆர்வம் எனக்கு புரிகிறது :)))

    ஆர்.வி.எஸ் சுவாரஸ்யமான மனிதர். இருவரும் ஒரு நாள் போனில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தோம்.

    இந்தமாதிரி சந்திச்சா கூப்பிடுங்கய்யா.. ஃபீரியா இருந்தாவருவோமில்லை..

    ReplyDelete
  34. //சமீபத்தில் என்பதை டிசம்பர் 2011 என்று கொள்க//
    அதானே, போனவாரம் பார்த்த பொழுது கூட ஊருக்கு போவதைப் பற்றிச் சொல்லவில்லையே என்று நினைத்தேன். ஆனால் செந்தக்காரரின் திருமணம் என்றவுடன் பழைய சந்திப்பாகத்தான் இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  35. //மோகன் குமார் said...

    யுவகிருஷ்ணா : அய்யாசாமி நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் அந்நியன் ! நானும் அய்யாசாமி தான். நீங்களும் அய்யாசாமி தான்//

    நல்ல பதில்!

    ReplyDelete
  36. கலக்கல் சந்திப்பு ! எங்க ஊருக்கு வந்தா ஒரு போன் பண்ணுங்க சார் ! (9944345233)

    ReplyDelete
  37. முரளி: மடிப்பாக்கத்தில் எங்கு இருக்கிறீர்கள்?snehamohankumar@yahoo.co.in என்கிற எனது மெயில் ஐ.டி க்கு தங்கள் மெயில் ஐ. டி மற்றும் தொலைபேசி எண் முடிந்தால் அனுப்புங்கள்

    ReplyDelete
  38. வேங்கட சீனிவாசன் : அப்படியா? நன்றி

    ReplyDelete
  39. நன்றி அமைதி அப்பா

    ReplyDelete
  40. தனபாலன் சார்: நிச்சயம் போன் பேசுகிறேன்

    ReplyDelete
  41. கேபிள் நீங்கள் இல்லாமலா? நிச்சயம் சொல்கிறோம்

    ReplyDelete
  42. ஸ்ரீராம்: நீங்களும் RVS ஐ பார்த்திருக்கிறீர்களா? நாம் தான் சந்தித்ததில்லை போலும் !

    ReplyDelete
  43. ஆர்விஎஸ், அவரது எழுத்துகளைப் போலவே சுவராசியமான மனிதர் என்று அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆர்விஎஸ்சை விட நீங்கள் மூத்தவர் என்பது நம்ப முடியவில்லை. (ஒருவேளை உங்கள் எழுத்துக்களில் கொஞ்சம் இளமை(?) இன்னும் இருக்கிறதோ?)

    ReplyDelete
  44. ஆஹா!!.. இனிமையான சந்திப்புதான்..

    //அவர் பேச நாங்கள் கேட்க, அப்புறம் நாங்கள் கேட்க அவர் பேச இப்படியே போனது அடுத்த ஒரு மணி நேரம். நடு நடுவில் அவரது இரு பெண்களும் அவருக்கு போன் செய்து " அப்பா எங்கே இருக்கே? " என தொந்தரவு செய்ய, அந்த கேப்பில் நானும் வெங்கட்டும் அவசரமாய் கொஞ்சம் பேசிக் கொண்டோம் !//

    செம :-))))))))))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...