Thursday, April 12, 2012

டிவியில் தமிழ் புத்தாண்டுசிறப்பு நிகழ்ச்சி லிஸ்ட் - எதை பார்ப்பது? பரிந்துரை

பண்டிகை தினத்தன்று "சாப்பிடுவோம்;  சாமி கும்பிடுவோம், பின் டிவி பார்ப்போம் " என்று இருப்போர் தான் உண்மை தமிழர்கள் ! அத்தகைய தமிழருக்கு உதவ, டிவி நிகழ்ச்சிகளை முன்னரே தரும் ஒரே ப்ளாக் நம்ம
வீடு திரும்பல் தான் ! இனி இந்த வருட டிவி நிகழ்சிகளுக்கும் அது பற்றி நம் கமன்டுகளுக்கும் செல்வோம் !

மஞ்சளில் ஹை லைட் செய்தவை நீங்கள் பார்க்கலாம் என நாம் செய்யும் பரிந்துரை !
 
சன் டிவி

தமிழ் புத்தாண்டு அன்று சன் டிவி துவங்க பட்டது. இம்முறை "புத்தாண்டு" என சொல்லி கலைஞர் மனம் வருந்த கூடாது என "19 வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள்" என அறிவித்து  கீழ் காணும் நிகழ்சிகளை ஒளி பரப்புகிறது 
 6. 30  AM சுகி சிவம் பேச்சு
 6.45 AM : 12 தமிழ்மாத ராசி பலன்கள்
8.00   AM  :  காமெடி கபே ( மசாலா கபே பட குழு பேட்டி; அவசியம் பார்க்கணும் அஞ்சலி மற்றும் ஒவியாவுக்காக மட்டுமல்ல. படத்தின்வசனகர்த்தா நம்ம நண்பர் கேபிள் அவர் கூட ஒருவேளை இதில் வர கூடும் )

8.00   AM ஓகே ஓகே படம் உதயநிதி, ஹன்சிகா, சந்தானம் பேட்டி 

8.00   AM  சாலமான பாப்பையா பட்டிமன்றம் - பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர் பார்ப்பது பணமே பாசமே ( பாசம் என சொல்லி தான் முடிப்பார் என சின்ன குழந்தை கூட சொல்லும். இருந்தாலும் இவர்களின் மொக்கை ஜோக்குக்காக பாக்கணுமாம்)

11.30 AM தெய்வ திருமகள் திரைப்படம் 

(ஒரிஜினல் அக்மார்க் காப்பி From "ஐயம் சாம் "; சந்தானம் + அனுஷ்காவுக்காகவும் குட்டி பெண் சாராவுக்காகவும் நீங்கள் இதுவரை பார்க்காவிடில் பாருங்கள்

2.30 PM அயன் திரைப்படம் 

6.00   PM சந்திரமுகி திரைப்படம் 

10.00   PM கராத்தே கிட் திரைப்படம் 
(காலை முதல் இம்புட்டு நிகழ்ச்சி பார்த்தும் உங்க  உடலில் எனர்ஜி  மிச்சம்  இருந்தா இந்த படம் பாருங்க. நல்ல படம் )

சினிமா தியேட்டர் போல நாலு சினிமா ஓட்டுறாங்க சன் டிவியில். இதில் தெய்வ திருமகள் மட்டுமே புதுசு ! மாலை கூட புது படமா போடாம சந்திரமுகி போடுவது ஏனோ?

விஜய் டிவி 

9.30 AM  3 பட குழு தனுஷ்/ சுருதி/ ஐஸ்வர்யா பேட்டி  (அட இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது !)
 போராளி படம் 

தமிழர் வாழ்வில் சிறப்பானது அகமா? புறமா? சிறப்பு நீயா நானா 
ஓகே ஓகே படம் உதயநிதி, ஹன்சிகா, சந்தானம் பேட்டி 
 ஸ்னேஹா பிரசன்னா பேட்டி 
நான் ஈ படம் ஒரு கண்ணோட்டம் 
6.00   PM எங்கேயும் எப்போதும் ( நல்ல படம்  இன்னிக்கு  பார்க்க  மூட்  இருக்குமா? 

கலைஞர் டிவி. 

அம்பேத்கார் பிறந்த நாள் என சிறப்பு நிகழ்சிகள் ஒளி பரப்புறாங்க கலைஞர் டிவி. அம்பேத்கார் பற்றி அஞ்சு நிமிட நிகழ்ச்சி கூட கிடையாது. போடும் நிகழ்சிகள் என்னவோ முழுக்க சினிமா தான். மற்ற சேனல்களுடன் போட்டி போட தான். ஆனால் காரணம் மட்டும் அம்பேத்காரா? அடுத்த முறையாவது அம்பேத்கார் பற்றி ஒரு அரை மணி நிகழ்ச்சி  வைக்கட்டும் கலைஞர் டிவி !

லியோனி பட்டிமன்றம் -

நம்ம பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் சிறப்பு பார்வையாளரா வந்திருக்கார். அவசியம் பாருங்க. லியோனி மற்றும் நம்ம பதிவர் சிவகுமாருக்காக

சிறப்பு படம்: அழகர் சாமியின் குதிரை 

ஜெயா டிவி

1.30 pm தம்பி வெட்டொத்தி சுந்தரம் (கலைஞர் டிவி தான் பொதுவா நல்ல நாளில் ரத்த களரியான படம் போடுவாங்க. இந்த முறை ஜெயா டிவி அதை செய்றாங்க. தம்பி வெட்டொத்தி சுந்தரம் சுந்தரம் படத்தில் ஹீரோ கண்ணை ஆசிட் ஊற்றி குருடாக்கி கொடுமை பண்ணுவாங்க. பாத்து நொந்து போகாதீங்க. சொல்லிட்டேன் !)

6 PM வேலாயுதம் இது வரை பார்க்காட்டி ஜாலியா பார்க்கலாம்
****
ராஜ் டிவி 

8.30 AM உதயநிதி ஸ்டாலின் பேட்டி

9.30 AM எஸ் வீ சேகர் தலைமையில் பட்டி மன்றம்

11 AM ராவணன் திரைப்படம்  (விளம்பரம் போட்டு கொல்வாங்க. ராஜ் டிவியில் சினிமா பக்கம் போயிடாதீங்க

6 PM - தெனாலி  திரைப்படம் 

பண்டிகை நாள்னா நடிகைகளிடம் பேட்டி எடுக்கணும் என்பதை மறக்காம, முதலில் மீரா நந்தன், பின் சரண்யா இவர்களிடம் பேட்டி எடுத்து போடுறாங்க !
***********
அனுஷ்கா (தெய்வ திருமகள்) அஞ்சலி (தம்பி வெட்டோத்தியில் அவர் வரும் துவக்க காட்சிகள் + எங்கேயும் எப்போதும்) என தம் தலைவிகளை காண அய்யாசாமி டிவி முன் ஆஜராகிடுவார் !

சில டிவிக்களின் நிகழ்ச்சி விவரம் முழுசா தெரியலை. தெரிந்ததும் இங்கே அப்டேட் செய்வேன். மறுபடி நம்ம ப்ளாக் மாலை அல்லது இரவு வந்து பாருங்க (இது வேறயா?)

அனைவருக்கும் இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் !
********
தமிழ்மணம் திரை மணத்தில் No :  1ஆக இந்த இடுகை 

thiraimanam

23 comments:

 1. Anonymous1:28:00 PM

  லியோனி பட்டிமன்றம்..சிறப்பு பார்வையாளர் எல்லாம் இல்லை சார். ஓசில அனுமதி தந்தாங்க. உள்ள போயி உக்காந்தேன். அம்புடுதேன்.

  ReplyDelete
 2. Anonymous1:31:00 PM

  எந்த பண்டிகை ஆனாலும் ரஜினி,விஜய் படம் போடாமல் சன் டி.வி. இருந்ததே இல்லை. போட்டிக்கு கலைஞர் டி.வி.யில் 'சிவாஜி' படம்.

  ReplyDelete
 3. அண்ணா இதைஎல்லாம் பார்க்க மின்சாரம் இருக்குமான்னு தெரியலியே....

  ReplyDelete
 4. // 11.30 AM தெய்வ திருமகள் திரைப்படம்

  (ஒரிஜினல் அக்மார்க் காப்பி From "ஐயம் சாம் "; சந்தானம் + அனுஷ்காவுக்காகவும் குட்டி பெண் சாராவுக்காகவும் நீங்கள் இதுவரை பார்க்காவிடில் பாருங்கள்

  2.30 PM அயன் திரைப்படம்

  6.00 PM சந்திரமுகி திரைப்படம்

  10.00 PM கராத்தே கிட் திரைப்படம் //

  Sun Theatre ?
  I never seen a theatre showing four different films in continuous four shows.

  Thanks God.. I have working day... தப்பிச்சிட்டேன்..

  ReplyDelete
 5. நிகழ்ச்சி அப்டேட் நல்லா இருக்குங்க.

  ReplyDelete
 6. பதிவர்கள் குழம்பாமல் டி.வி பார்க்க
  அருமையான லிஸ்ட் கொடுத்தமைக்கு நன்றி
  இடையிடையே கொடுத்த கமெண்ட் அருமை

  ReplyDelete
 7. தி.மு.க டி.வி யில் வருடாவருடம் இந்த பித்தலாட்டம் தான். விடுமுறை தினத்தை முன்னிட்டு என விநாயகர் சதுர்த்திக்கு நிகழ்ச்சிகள், சித்திரை முதல் நாள் என வருடப்பிறப்புக்கு ,இவ்வாறாக அவர்களின் அரசியல் போலவே இதிலும் சாக்கடை நாற்றம். பருவ கால அடிப்படையில்தான் வருடங்கள் பிரிக்கப்பட்டிருக்கும்., அதன்படி வசந்த காலத்தில் வரும் சித்திரை முதல் நாள் தான் புத்தாண்டாக இருக்கும். பிற திராவிட இனங்களான தெலுங்கரும்,கன்னடரும் இந்த சித்திரைக்கு சில நாட்கள் முன்புதான் தங்களது புத்தாண்டு கொண்டாடுகின்றனர். இன்னும் சொல்லப்போனால் நினைவு தெரிந்த நாளாக கொண்டாடுவது சித்திரை முதல் நாளே. அதையே கொண்டாடுவதில் என்ன பிரச்சினை?

  ReplyDelete
 8. நல்ல அப்டேட்.... :)

  அய்யாசாமிக்கு நல்ல வேட்டை தான்!

  இங்கே அலுவலகம் உண்டு! எப்போதும் போலவே. அதனால் நோ டிவி நிகழ்ச்சிகள். இருந்தாலும் பார்ப்பதே இல்லை!

  என்னுடையது தமிழ்மணத்தில் நாலாவது ஓட்டு!

  ReplyDelete
 9. சிவா: நன்றி உரிமையில் கலாய்தேன் நீங்க சென்றதை சொல்லணும் இல்லை ?

  ReplyDelete
 10. சங்கவி எல்லாம் உங்க அம்மா செய்தது தானே ?

  ReplyDelete
 11. மாதவா: ஆம். சண் தியேட்டர் தான்

  ReplyDelete
 12. கோவை2 தில்லி மேடம் நன்றி

  ReplyDelete
 13. ரமணி: ஆதரவு வார்த்தைக்கும் ஓட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 14. விவேக் : தங்கள் கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 15. வெங்கட்: அங்கு ஆபிஸ் உண்டா? புது தகவல் நன்றி

  ReplyDelete
 16. தமிழ்மணம் திரை மணத்தில் No : 1ஆக இந்த இடுகை

  சூடான சினிமா இடுகைகள்
  டிவியில் தமிழ் புத்தாண்டுசிறப்பு நிகழ்ச்சி லிஸ்ட் - எதை பார்ப்பது? ...
  மோகன் குமார்

  ReplyDelete
 17. ஏப்ரல் 14 தான் அம்பேத்கர் பிறந்த தினம்; கலைஞர் தொலைக்காட்சியில் இன்று கொண்டாடுகிறார்களா? அல்லது இன்றிலிருந்து கொண்டாடுகிறார்களா?

  இல்லை என்றாலும் அவர்கள் சித்திரைத் திருவிழா என்று சென்ற வருடங்களில் கொண்டாடியதாக ஞாபகம்.

  புத்தாண்டை மாற்றினாலும், இந்த கொண்டாட்டங்களை அவர்களால் தவிர்க்க முடியாது; ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானத்தை இழக்க விரும்ப மாட்டார்கள்.

  அதனால், மற்ற மதப் பண்டிகைகளை அந்த பெயரிலேயேக் கொண்டாடினாலும், இந்து மதப் பண்டிகைகள் தினத்தில் விடுமுறை தினக் கொண்டாட்டம் என்று இரட்டை நிலை எடுத்தாவதுக் கொண்டாடுவார்கள்.

  எது எப்படியிருந்தாலும் இப்பொழுதெல்லாம் தொலைக்காட்சிகளில் எல்லா பண்டிகைகளுக்கும் ஒரே மாதிரி stereo-type நிகழ்ச்சிகள் தான். வெவ்வேறு பண்டிகளின் தாத்பர்யங்களும் கொண்டாட்ட முறைகளையும் மெதுவாக நாம் மற்ந்து தான் வருகிறோம்.

  புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. விளக்கமான லிஸ்ட் ! நன்றி ! புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 20. உங்கள் ரசனைதான் மற்றவர்களுக்கும் இருக்கும் என எப்பிடி முடிவு செய்தீர்கள்..

  உங்களுக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாம்..

  மற்றவரின் அறிவுரை கேட்டுத்தான் தன் ரசனையை தீர்மானிக்கும் அளவிற்கு தமிழன் ரசன்னை அவ்வளவு கேவலமா.. இதெல்லாம் உங்களுக்கு பிடித்தவை என சொல்லியிருந்தால் பிரச்சினையேயில்லை...

  ReplyDelete
 21. வேங்கட ஸ்ரீனிவாசன் said

  //ஏப்ரல் 14 தான் அம்பேத்கர் பிறந்த தினம்; கலைஞர் தொலைக்காட்சியில் இன்று கொண்டாடுகிறார்களா? அல்லது இன்றிலிருந்து கொண்டாடுகிறார்களா?//

  ஹா ஹா சரியா கேட்டீங்க. ஏப்ரல் 13-ஏ கொண்டாடிடுறாங்க. ஏப்ரல் 14 கூட சில சிறப்பு நிகழ்சிகள் கலைஞர் டிவியில் மட்டும் இருக்கு


  //புத்தாண்டை மாற்றினாலும், இந்த கொண்டாட்டங்களை அவர்களால் தவிர்க்க முடியாது; ஏனென்றால், இதன் மூலம் கிடைக்கும் விளம்பர வருமானத்தை இழக்க விரும்ப மாட்டார்கள். //

  100௦ % True ! Thanks for ur excellent Comment !

  ReplyDelete
 22. நன்றி திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 23. ரிசி: நீங்கள் பார்க்க நாம் செய்யும் பரிந்துரை என்று தான் சொல்லியிருக்கிறேன். இதை மட்டும் தான் பார்க்க வேண்டும் என்றல்ல ! தங்கள் கருத்துக்கு நன்றி !

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...