Chennai Vs Bangalore ! What a match ! What a win !!
அந்த கடைசி இரு ஓவர் பற்றி விரிவாய் சொல்கிறேன். அதற்கு முன் ..
இன்றைய மேட்ச் பின்னணியில் அலுவலகத்தில் நடந்த சில சம்பவங்கள்...
முதலில் பெங்களூர் பேட்டிங் - மூணு ஓவரில் ஸ்கோர் பார்த்தால் முப்பதுக்கு மேல். கெயில் பொறுமையாய் ஆட, அகர்வால் உரித்து கொண்டிருந்தார். பின் மேட்ச் பற்றி மறந்தே விட்டேன் ! செம வேலை (மூணு நாள் லீவ் ஆச்சே ! நிறைய முடிக்க வேண்டி இருந்தது )
பின் ஐந்தரைக்கு ஜிம் செல்ல, ஜிம் மாஸ்டர் மோகன் செம குஷியா " பெங்களூர் 205 ரன் அடிச்சிருச்சு ; சென்னை ஊ ஊ தான் என்றார்"
ஜிம் மாஸ்டர் ஒரு சச்சின் பேன். இதனால் மும்பை இந்தியன்ஸ் சப்போர்ட் செய்வார். ஜிமுக்கு வரும் பலரும் சென்னை பாசம் நிறைய உள்ளவர்கள் அனைவரும் சென்னையை சப்போர்ட் செய்தாலும் இவர் சென்னை தோற்க வேண்டும் என நினைப்பார். எங்களுக்குள் தினம் செல்ல சண்டை நடக்கும்
"உங்க டீம் பேர் மும்பை இந்தியன்ஸ் இல்லை. "பொட்டி Indians " எங்கே போனாலும் பொட்டி எடுத்துட்டு போயிடுவாங்க. பணம் குடுத்தே தான் ஜெயிக்குறீங்க " என்பேன் நான்.
"நீங்க ஜெயிச்சா மட்டும் பொட்டி இல்லையா? நாங்க ஜெயிச்சா தானா?" என்பார் ஜிம் மாஸ்டர்.
அதிசயமாய் இன்று எனது Finance டிபார்ட்மெண்டில் இருந்து நிறைய பேர் ஜிம் வந்திருந்தனர். ஒருவர் பேர் ரஜினி காந்த். இன்னொருவர் கமல். (கமல கண்ணனை கமல் என்போம் ) ரஜினி, கமல் இருவருமே சென்னைக்கு சப்போர்ட் செய்ய, ஜிம் மாஸ்டர் நீங்க தோற்பது உறுதி என்று கலாய்த்து கொண்டிருந்தார்.
ஜிம்மில் உள்ள ரேடியோவில் ஒரு ஸ்டேஷனில் ஒவ்வொரு ஓவரில் எவ்வளவு ரன் அடிப்பார்கள் என கேட்டு சரியாய் கால் பண்ணி சொன்னால் பரிசு என நிகழ்ச்சி ஒலி பரப்பானது. சென்னை முதல் பல ஓவர்களில் மொக்கை போட்டது. ஜிம் மாஸ்டர் கிண்டல் அதிகம் ஆனது
" 15 ஓவரில் நூறு ரன் தான் அடிப்போம். கடைசி அஞ்சு ஓவரில் மீதம் 105 ரன் அடிப்போம்" என சும்மாங்காட்டியும் சொல்லி கொண்டிருந்தேன். எங்களுக்குள் இன்னிக்கு " ஊத்திக்கும்" என்று தான் பேசி கொண்டிருந்தோம்.
"நாங்க எல்லாம் மும்பை மாதிரி உள்ளூர் பிட்சில் ஜெயிக்க மாட்டோம். வெளியூரில் போய் ஜெயிச்சா தான் கெத்து !"
"ரன்னிங் ரேசில் முதலில் ஓடினவன் என்னிக்காவது ஜெயிச்சிருக்கானா? கடைசியா ஓடினவன் தான் லாஸ்ட் ரெண்டு ரவுண்டில் பின்னி எடுத்து முன்னாடி வருவான். நாங்களும் அப்படி தான் "
"என்னய்யா உங்க ஆளு (சச்சின்) ? கையில் சின்ன அடி பட்டதுக்கே பத்து நாளும் ரெஸ்ட் எடுக்குறான்! பயந்தாங்கொள்ளி !"
இப்படியெல்லாம் ஜிம் மாஸ்டரை கலாய்த்து கொண்டிருந்தோம் !
நிரஞ்சன் என்ற இளைஞர் ரொம்ப நாள் கழித்து ஜிம் வந்தார். அவரை டிரெட் மில்லில் ஏற்றிய ஜிம் மாஸ்டர் " பத்து ஸ்பீடில் பத்து நிமிஷம் ஓடுங்க. அப்ப தான் சென்னை ஜெயிக்கும்" என்றார். இது நிஜமாய் ஒரு கஷ்டமான காரியம். தொடர்ந்து தினம் செய்தால் தான் முடியும். அதற்கே சற்று திணறும் ! நிரஞ்சன் கஷ்டப்பட்டு ஓடினார். எட்டு நிமிஷத்துக்கு பிறகு நாங்கள் எல்லாம் "எஸ் எஸ்" என்று ஊக்குவிக்க பத்து நிமிஷம் ஓடி முடிச்சிட்டார் ! சென்னை ஜெயிக்கணும் என மக்கள் எவ்வளவு நினைக்கிறாங்க பாருங்க !! It was fun !!
ஜிம்மிலிருந்து கீழே இறங்கி வந்து மீண்டும் வேலையில் இறங்கி விட்டேன். மேட்ச் போச்சு என்று தான் எண்ணம் ! அவ்வபோது ஸ்கோர் பார்த்து வந்தேன். இனி கிளை மாக்ஸ் !
*******************
ரெண்டு ஓவரில் 43 ரன் எனில் ஓவருக்கு 21 . ஒரு பந்துக்கு மூன்றரை ரன் ! அதாவது ஒவ்வொரு பந்தும் போர் அடிச்சால் மட்டும் தான் வெற்றி. சென்னை கதை முடிந்தது என அறிவித்தது Cricinfo!
19-வது ஓவர் புதிதாய் வந்த ஆல்பி மார்கல் சந்திக்கிறார். விராட் கோலி தனது மீடியம் பேஸ் பந்துகளை வீசுகிறார். மார்கல் சந்தித்த முதல் பந்து inside edge வாங்கி நான்கு ரன். அடுத்த பந்து லாங் ஆன் திசையில் ஆறாக்கினார் மார்கல். அடுத்த பந்து தேர்ட் மேன் திசையில் நான்கு.
திடீரென சென்னைக்கு துளியூண்டு சான்ஸ் இருக்குமோ என்று எண்ணம்.
அனைவரும் ஆபிசில் டிவி இருக்கும் ரூமுக்கு ஓடினோம்.
18 வது ஓவரின் நான்காவது பந்து இன்னொரு பெரிய ஆறு ! அந்த டிவி ரூமில் அனைவரும் dance ஆடாத குறை தான் !
அனைவரும் ஆபிசில் டிவி இருக்கும் ரூமுக்கு ஓடினோம்.
18 வது ஓவரின் நான்காவது பந்து இன்னொரு பெரிய ஆறு ! அந்த டிவி ரூமில் அனைவரும் dance ஆடாத குறை தான் !
ஐந்தாவது பந்தில் ரெண்டு ரன்.
அந்த ஓவரின் கடைசி பந்தில் நிஜ வான வேடிக்கை. Biiiiiiiiiiiiig six !!!!
ஒரே ஓவரில் 28 ரன் எடுத்தாச்சு. இன்னும் பதினைந்து ரன் தானே. ஆல்பி அடிச்சுடுவார் என செம நம்பிக்கை.
அந்த நம்பிக்கை 20-வது ஓவரின் இரண்டாவது பந்தில் தகர்ந்தது. வினய் குமார் வீசிய முதல் பந்தில் ஒரு ரன். அடுத்த பந்தில் ஆல்பி மார்கல் அவுட். நான்கு பந்தில் பதினாலு ரன். போன ஓவரில் மேட்சின் போக்கை மாற்றிய ஆல்பியும் இல்லை ! டென்ஷன் !
மூன்றாவது பந்து புல் டாஸ். அதோடு வயிற்றுக்கு மேல் வீச நோ பால் வேறு. அதை நான்காக்கினார் பிரேவோ. அடுத்த பந்தும் புல் டாஸ். அது ஆறுக்கு பறந்தது. மூணு பால் மூணு ரன். நினைச்சு பாருங்க. ஒவ்வொரு பாலும் நான்கு எடுத்தால் தான் வெற்றி என ஒரு நிலைமை இருந்தது. இனி ஜெயிப்பது ஈசி. அனைவரும் குதிக்கிறார்கள்
அடுத்த பந்தில் ரன் இல்லை. ஐந்தாவதில் ஒரு ரன் தான் கிடைத்தது.
புதிதாய் வந்த ஜடேஜா முதல் முறை face செய்கிறார். ரொம்ப நேரம் கலந்து பேசி, நேரமாக்கி வீசினர். தேர்ட் மேனில் நான்கு ரன் - வின்னிங் ஷாட் அடித்தார் ஜடேஜா !
What a match ! What a win !!
**********

இன்று மேட்ச் நேரடியாக பார்த்த கவிஞர் மனுஷ்ய புத்திரன் முகநூலில் இப்படி எழுதி இருந்தார்
இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ்சிற்கும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்சிற்கும் இடையிலான 20-20 மேட்ச் நேரடியாக பார்த்தேன். சென்னை கடைசி 3 ஓவரில் 50க்கும் மேற்பட்ட ரன்கள் எடுக்கவேண்டும். தோற்றுவிடும் என்று எல்லோரும் முடிவுக்கு வந்து அரங்கத்தில் கனத்த மொளனம் நிரம்பியபோது மோர்க்கல் அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். 19 ஆவது ஓவரில் அவர் அடித்த 28 ரன்கள் நம்பமுடியாத ஒரு காட்சி.சிறந்த வெற்றி..சிறந்த நாள்.

நமது நேற்றைய வானவில் பதிவில் தாஸ் என்கிற நண்பர் நேற்று கிரிக்கெட் பற்றி நிறைய திட்டினார். அவரது கோபம் நியாயமே !
நமது நேற்றைய வானவில் பதிவில் தாஸ் என்கிற நண்பர் நேற்று கிரிக்கெட் பற்றி நிறைய திட்டினார். அவரது கோபம் நியாயமே !
நிறைய பேர் வெறுத்தாலும் சின்ன பிள்ளை மாதிரி நாங்கள் அடித்து கொள்ள, செல்ல சண்டை போட, சிரிக்க கிரிக்கெட் உதவுகிறது.
இன்றைக்கு உண்மையான Man of the match மார்கல் தான் ! அந்த 19வது ஓவர் பாருங்கள் !
இதோ அந்த கடைசி ஓவர் !
இன்று எங்கள் ஆபிஸ் டாப் பீபில் மைதானத்தில் மேட்ச் பார்க்க போனார்கள். செம ஜாலி ஆகியிருப்பார்கள். இது போன்ற மேட்ச் நேரில் பார்த்து ஜெயித்த பின் spectators ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து கொள்வார்கள். அருகில் இருக்கும் தெரியாத மக்களையும் தான் ! அந்த மகிழ்ச்சி அந்த நாற்பதாயிரம் மக்களை ஒன்றிணைக்கிறது !எனக்கு மேட்ச் முடிந்ததும் நேரில் பார்த்த spectators நினைத்து தான் மிக மகிழ்ச்சியாய் இருந்தது ! க்ளோஸ் மேட்ச் தோற்றால், வெறுத்து போய் வரும் அவர்கள், இன்று மிக மகிழ்வாய் வந்திருப்பார்கள் !
இது போன்ற மயிர் கூச்செறியும் மேட்ச் தான் இன்னும் கிரிக்கெட்டை பார்க்க வைக்கிறது !
எதையேனும் சார்ந்திரு...
கவித்துவம்.. தத்துவம்
காதல்.. சங்கீதம்...
இங்கிதம்.. இப்படி
எதன் மீதேனும்
சார்ந்திரு...
இல்லையேல்
உலகம்
காணாமல் போய் விடும்..
-வண்ண நிலவன்
*********
சமீபத்திய பதிவுகள்

superep win by csk...
ReplyDeletesame thing happend my office also...
Ram.R
HDFC Mumbai..
இந்த மாதிரி மேட்ச் ஜெயிக்கும்போது பக்கத்தில் சூப்பர் ஃபிகர் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
ReplyDeleteயோவ் பிலாசபி...சியர் கேர்ல்ஸ் கைல வேப்பிலைய குடுத்து உனக்கு மந்திரிக்க சொல்லணும்யா. ராஸ்கோலு!!
ReplyDeleteகடைசி இரண்டு ஓவர்கள் நானும் பார்த்தேன்... அசத்தல் ஆட்டம்!
ReplyDelete//ரெண்டு ஓவரில் 43 ரன் எனில் ஓவருக்கு 21 .//
ReplyDeleteதங்களுக்கு கணிதம் கற்பித்த ஆசான் எவரோ..?
// rAAm said...
ReplyDeletesuperep win by csk...
same thing happend my office also...
Ram.R
HDFC Mumbai..//
***********
மிக மகிழ்ச்சி திரு ராம் அவர்களே. மும்பை HDFC-ல் இருந்தாலும் சென்னை ஜெயிக்கணும் என நினைத்த நீங்கள் வாழ்க ! வாழ்க !
Philosophy Prabhakaran said...
ReplyDeleteஇந்த மாதிரி மேட்ச் ஜெயிக்கும்போது பக்கத்தில் சூப்பர் ஃபிகர் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
***
பிரபா ஹி ஹி .
Thanks for the comment.
! சிவகுமார் ! said...
ReplyDeleteயோவ் பிலாசபி...சியர் கேர்ல்ஸ் கைல வேப்பிலைய குடுத்து உனக்கு மந்திரிக்க சொல்லணும்யா. ராஸ்கோலு!!
*************
ஓய் சிவா நீர் தான் பெண்களை பார்த்தால் தள்ளி நிற்பீர். பிரபா மாதிரி யூத்துங்களை கண்டா ஏன்யா காண்டாகுரீர்? :))
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteகடைசி இரண்டு ஓவர்கள் நானும் பார்த்தேன்... அசத்தல் ஆட்டம்!
***
அப்படியா? மகிழ்ச்சி வெங்கட் !
Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteMadhavan Srinivasagopalan said...
//ரெண்டு ஓவரில் 43 ரன் எனில் ஓவருக்கு 21 .//
தங்களுக்கு கணிதம் கற்பித்த ஆசான் எவரோ..?
***
உனக்கு கணக்கு சொல்லி குடுத்த அதே சீனிவாசன் சார் தான் தம்பி.
21 1/ 2 என சொல்லிருக்கனுமா?அது ரொம்ப கஷ்டம் என தான் ரவுண்ட் பண்ணி சொன்னேன்
// 21 1/ 2 என சொல்லிருக்கனுமா?அது ரொம்ப கஷ்டம் //
ReplyDelete'21.5' looks very simple.. no need to complicate it..
:-)
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூப்பர் ஆட்டம் ! தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாதவா: நீ கணக்கு வாத்தியாரா இருந்தா கணக்கில் நிறைய மார்க் வாங்கி வேற profession போயிருப்பேன்
ReplyDeleteநன்றி மாதேவி தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தனபாலன் சார்
ReplyDeleteபோன வருடம் நடந்த ஆட்டம் இப்போ பார்த்த மாதிரி இருந்தது. நல்லா எழுதி இருக்கிங்க .
ReplyDeleteஎனக்குதான் இந்த கருமம் வர மாட்டேன்கிறது