நரகத்திலிருந்து ஒரு குரல்: இது சாரு நிவேதிதாவின் புத்தக விமர்சனம் அல்ல. அதே பெயரில் உள்ள கவிதை புத்தக விமர்சனம். இக்கவிதை தொகுப்பு சாருவின் புத்தகம் வருவதற்கு மிக முன்பே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
"கவிதையுலகில் பிரகாசமாக தெரிய வரும் கல்யாண ராமன் மிக இளைஞர். வாழ்வின் சகல அனுபவங்களும் கவிதை மொழியில் பிடிபடுகின்றன. எளிமையும், சரளமும், கனமும் காண கிடைக்கின்றன" என புதிய தலைமுறை புத்தகத்தில் "நம்பிக்கையூட்டும் கவிஞராக" அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் கல்யாண ராமன். தாம்பரம் கிறித்துவ கல்லூரியின் "வனம்" கவிதை பட்டறையில் உருவான இவரின்
*********
தன்னை அறிமுகபடுத்தும் விதத்தில் உள்ளது முதல் கவிதை :
கோலம் வியக்க தெரிய வில்லை
வானம் பார்க்க ரசனையில்லை
வசந்தத்தின் முதல் பூ
கண்ணிலேயே படுவதில்லை
என தன் குறைகளை அடுக்கி செல்லும் கவிதை இப்படி முடிகிறது
இந்த படு மோசமான வாழ்விலும்
ஒரே ஆறுதல்
மடியை நனைத்த
எந்த குழந்தையையும் கடிந்ததில்லை
இதுவரை
*******
கவிதைகளின் தலைப்புகளே வித்யாசமாக உள்ளன. மாதிரிக்கு சில தலைப்புகள்:
எப்படி அனுபவிப்பேன் மனைவியின் முத்தத்தை?
பூனையை முன் வைத்து காதலியுடன் ஒரு சம்பாஷனை
தற்கொலைக்கு முன் என் 24 வயது தங்கை எழுதிய கடிதத்திலிருந்து ..
பல கவிதைகள் அன்பை எதிர் நோக்கி தவிக்கும் மனித மனத்தை காட்டுகிறது.
அறைந்து சாத்தபடுகிற கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி
புத்தகத்தின் தலைப்பு கவிதை ( நரகத்திலிருந்து ஒரு குரல்) வாழ்க்கையின் வலியை சொல்லி சென்று இப்படி முடிகிறது :
விரைவாக யாரேனும்
ஒரு பெரிய புன்னகையை வீசி யெறியுங்கள்
கவ்வி பிழைத்த கொள்கிறேன்
தெரு நாயாய் !
ஆங்காங்கு தத்துவம் பக்கமும் எட்டி பார்க்கிறார்
தேட தேட குழப்பம் மிகுகிறதா
சிறு பிள்ளைகள் இருக்கட்டும் தெளிவாய்
அவர்களுக்கே சாத்தியமது
நீ குழம்பு
மேன்மேலும் மேன்மேலும் குழம்பு
குழம்பி தெளிதலே ஞானம்
மனதை குடை
குடைந்து கொண்டே போ
போய்க்கொண்டே இரு
"நடு இரவில் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது நீரழிவு நோயால் இறந்து போன அப்பா நினைவு"
"என்னத்தை சொல்ல சாப்பிடும் போதா ஞாபகம் வரணும் கழிப்பிட வாசனை"
என அவ்வபோது வரும் சங்கட உணர்வுகளை கவிதையில் வடித்து தன் மன பாரம் குறைக்க முயற்சித்திருக்கிறார்.
*****
கல்யாண ராமன் என் நண்பரின் (ம. செந்தில் குமார்) நண்பர். இதுவரை நேரில் சந்தித்ததில்லை. முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற இவர், இந்நேரம் ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராய் இருக்க கூடும். இது அவரது கல்லூரி காலத்தில் எழுதி, அப்போதே வெளி வந்த தொகுப்பு.
இன்னமும் அவர் கவிதைகள் எழுதி கொண்டிருப்பாரா அல்லது வாழ்வின் நிஜங்களில் கவிதை மனதை தொலைத்திருப்பாரா என தெரிய வில்லை.
நரகத்திலிருந்து ஒரு குரல் -கவிதை பிடித்த எவருக்கும் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !

முதல் கவிதை தொகுப்பு " நரகத்திலிருந்து ஒரு குரல்" .
********
நம்புங்க! இது சென்னை MCC கல்லூரி வளாகம்! இது போன்ற திறந்த வெளியில்தான் தான் "வனம்" கவியரங்கம் நடக்கும் ! |
*********
தன்னை அறிமுகபடுத்தும் விதத்தில் உள்ளது முதல் கவிதை :
கோலம் வியக்க தெரிய வில்லை
வானம் பார்க்க ரசனையில்லை
வசந்தத்தின் முதல் பூ
கண்ணிலேயே படுவதில்லை
என தன் குறைகளை அடுக்கி செல்லும் கவிதை இப்படி முடிகிறது
இந்த படு மோசமான வாழ்விலும்
ஒரே ஆறுதல்
மடியை நனைத்த
எந்த குழந்தையையும் கடிந்ததில்லை
இதுவரை
*******
கவிதைகளின் தலைப்புகளே வித்யாசமாக உள்ளன. மாதிரிக்கு சில தலைப்புகள்:
எப்படி அனுபவிப்பேன் மனைவியின் முத்தத்தை?
பூனையை முன் வைத்து காதலியுடன் ஒரு சம்பாஷனை
தற்கொலைக்கு முன் என் 24 வயது தங்கை எழுதிய கடிதத்திலிருந்து ..
இதில் கடைசி தலைப்பான தற்கொலைக்கு முன் தங்கை எழுதிய கடிதம் அதிர வைக்கிறது குறிப்பாக கவிதையின் கடைசி வரிகள் !!
பல கவிதைகள் அன்பை எதிர் நோக்கி தவிக்கும் மனித மனத்தை காட்டுகிறது.
அறைந்து சாத்தபடுகிற கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி
புத்தகத்தின் தலைப்பு கவிதை ( நரகத்திலிருந்து ஒரு குரல்) வாழ்க்கையின் வலியை சொல்லி சென்று இப்படி முடிகிறது :
விரைவாக யாரேனும்
ஒரு பெரிய புன்னகையை வீசி யெறியுங்கள்
கவ்வி பிழைத்த கொள்கிறேன்
தெரு நாயாய் !
ஆங்காங்கு தத்துவம் பக்கமும் எட்டி பார்க்கிறார்
தேட தேட குழப்பம் மிகுகிறதா
சிறு பிள்ளைகள் இருக்கட்டும் தெளிவாய்
அவர்களுக்கே சாத்தியமது
நீ குழம்பு
மேன்மேலும் மேன்மேலும் குழம்பு
குழம்பி தெளிதலே ஞானம்
மனதை குடை
குடைந்து கொண்டே போ
போய்க்கொண்டே இரு
"நடு இரவில் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது நீரழிவு நோயால் இறந்து போன அப்பா நினைவு"
"என்னத்தை சொல்ல சாப்பிடும் போதா ஞாபகம் வரணும் கழிப்பிட வாசனை"
என அவ்வபோது வரும் சங்கட உணர்வுகளை கவிதையில் வடித்து தன் மன பாரம் குறைக்க முயற்சித்திருக்கிறார்.
*****
கல்யாண ராமன் என் நண்பரின் (ம. செந்தில் குமார்) நண்பர். இதுவரை நேரில் சந்தித்ததில்லை. முதுகலை தமிழ் இலக்கியம் பயின்ற இவர், இந்நேரம் ஏதாவது ஒரு கல்லூரியில் விரிவுரையாளராய் இருக்க கூடும். இது அவரது கல்லூரி காலத்தில் எழுதி, அப்போதே வெளி வந்த தொகுப்பு.
இன்னமும் அவர் கவிதைகள் எழுதி கொண்டிருப்பாரா அல்லது வாழ்வின் நிஜங்களில் கவிதை மனதை தொலைத்திருப்பாரா என தெரிய வில்லை.
நரகத்திலிருந்து ஒரு குரல் -கவிதை பிடித்த எவருக்கும் பிடிக்கும். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் வாசியுங்கள் !
//இன்னமும் அவர் கவிதைகள் எழுதி கொண்டிருப்பாரா அல்லது வாழ்வின் நிஜங்களில் கவிதை மனதை தொலைத்திருப்பாரா என தெரிய வில்லை//
ReplyDeleteநிச்சயம் தொலைத்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். தொடருங்கள்....பாராட்டுகள்.
சிறப்பான விமர்சனம்.
அருமையான கவிதைகளுக்கு அழகான விமர்சனம். தொகுப்பை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்திய பகிர்வு. மிக்க நன்றி.
ReplyDelete//அறைந்து சாத்தபடுகிற கதவுகளுக்கென்ன தெரியும்
ReplyDeleteவெளியே நிற்பவர் துயரம் பற்றி //
அடித்து போட்டது மாதிரி உண்மை....
ஆங்காங்கே எடுத்துக்காட்டிய கவிதைகள் தொகுப்பினை படிக்கத் தூண்டுகிறது மோகன்....
நல்ல புத்தக அறிமுகத்திற்கு நன்றி.
அருமையான பகிர்வு. நிச்சயம் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி.
ReplyDeleteஎண்ணற்ற கவிஞர்கள் புகைக்குள் ஓவியமாய் புதைந்துதான் கிடக்கிறார்கள். அதில் ஒரு முத்துதான் இவர் போலும். நல்ல கவிஞரையும், அவரது அழகான கவிதைகளையும் அறிமுகம் செய்த உங்களுக்கு நன்றி. அவர் இப்போதும் கவிதை எழுதிக் கொண்டுதான் இருப்பார் என்று நினைக்கிறேன். காரணம் கவிதை கருக்கொண்டு விட்டால் இந்த பேய் பிடித்த குரங்காய் மாறிவிடும். இந்தப் பித்தத்தை எத்தனை பிறப்புகளும் மாற்ற முடியாது. ஆனால் எரிமலையா அல்லது பெருங்கடலா என்பதை வாழ்க்கை தீர்மானிக்கிறது. அருமையான பகிர்வுக்கு நன்றி சகோ.
ReplyDeleteஅருமையான கவிதைகள்.
ReplyDeleteநல்ல விமர்சனம்.
வாழ்த்துகள்.
ஒரு சிறப்பான கவிதைத் தொகூப்பை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteMCC யின் சூழலைப் பார்த்தாலே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது!
அறைந்து சாத்தபடுகிற கதவுகளுக்கென்ன தெரியும்
ReplyDeleteவெளியே நிற்பவர் துயரம் பற்றி
>>
மனதை பிசைந்த வரிகள். நல்லதொரு கவிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
//வாழ்வின் நிஜங்களில் கவிதை மனதை தொலைத்திருப்பாரா என தெரிய வில்லை. //
ReplyDeleteவெளிப்படையாக சொன்னால் எனக்கு கவிதைகளில் அவ்வளவாக ஆர்வம் இல்லை...ஆனால் நீங்கள் எழுதியதில் இந்த வரி பிடித்திருந்தது.
கோவை2தில்லி said...
ReplyDeleteநிச்சயம் தொலைத்திருக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.
**
நன்றி மேடம். அப்படி இருந்தால் மகிழ்ச்சி தான் !
ராமலக்ஷ்மி said...
ReplyDeleteஅருமையான கவிதைகளுக்கு அழகான விமர்சனம். தொகுப்பை வாசிக்கும் ஆவலை ஏற்படுத்திய பகிர்வு.
*******
மிக நன்றி மகிழ்ச்சி
வெங்கட் நாகராஜ் said...
ReplyDelete//ஆங்காங்கே எடுத்துக்காட்டிய கவிதைகள் தொகுப்பினை படிக்கத் தூண்டுகிறது மோகன்....//
*******
நன்றி வெங்கட். இது சில துளிகள் தான். முழுதும் வாசித்தால் நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள்
BalHanuman said...
ReplyDeleteஅருமையான பகிர்வு. நிச்சயம் வாசிக்கத் தூண்டுகிறது. நன்றி.
***
நன்றி பாலஹனுமான்
துரை டேனியல் : தங்கள் விரிவான கமன்ட் மிக அழகு. நன்றி
ReplyDeleteRathnavel Natarajan said...
ReplyDeleteஅருமையான கவிதைகள். நல்ல விமர்சனம்.
***
நன்றி ரத்னவேல் ஐயா
சென்னை பித்தன் said...
ReplyDeleteஒரு சிறப்பான கவிதைத் தொகூப்பை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
MCC யின் சூழலைப் பார்த்தாலே ஒரு கவிதை மாதிரி இருக்கிறது!
***
மகிழ்ச்சி சார். MCC வளாகம் பற்றி நீங்கள் சொன்னது மிக சரி
ராஜி said...
ReplyDeleteஅறைந்து சாத்தபடுகிற கதவுகளுக்கென்ன தெரியும்
வெளியே நிற்பவர் துயரம் பற்றி
>>
மனதை பிசைந்த வரிகள். நல்லதொரு கவிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி
உண்மை தான் நன்றி ராஜி
ரகு: நன்றி
ReplyDeleteஅந்த கவிஞரின் மாணவன் நான் என்று சொல்லி கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்
ReplyDelete