அதிரப்பள்ளி மலையிலிருந்து சாலக்குடி என்கிற ஊருக்கு இறங்கும் போது உள்ள இடம் தும்பூர்முழி. இது ஒரு அழகான பூங்கா. இங்கு இறங்கி அங்குள்ள பூக்களையும் செடிகளையும் சற்று ரசித்தேன். வீட்டம்மா இருந்தால் இந்த இடத்தை மிக மிக ரசித்திருப்பார் என்ற வருத்தம் எட்டி பார்த்தது.
இந்த பூங்காவில் எடுத்த வீடியோவும் படங்களும் இதோ :
பூ பேர் தெரியலை ! அழகா இருந்தது. எடுத்தேன் ! |
தும்பூர் மொழி தோட்டம் |
பல இடங்களிலும் தமிழில் போர்டுகள் இருந்தன. தும்புர்முழி டேம் என்கிற இந்த போர்டை பாருங்கள்.
தும்பூர்முழிக்கு நேர் எதிரே ஒரு சிறு பெட்டி கடையுடன் கூடிய டீ கடை இருந்தது. அங்கு தான் சாலக்குடி செல்ல பேருந்துக்கு காத்திருந்தேன். அது வீடு + கடை. இரு குட்டி பசங்க (ட்வின்ஸ்) ஞாயிறு என்பதால் கடை வேலையில் உதவி கொண்டிருந்தனர். ஐந்தாவது படிக்கும் சிறுவன் அருமையாக டீ போடுவது பார்க்க ஆச்சரியமாக இருந்தது ! இதெல்லாம் "அப்புடியே வந்துரும் போலருக்கு!"
*************
படம் பிடிப்போரை படம் பிடிப்போம் கார்னர்
அதிரப்பள்ளியில் எடுத்த படம் இது. சில நண்பர்கள் தங்கள் காமிராவில் மிக சீரியசாக படம் எடுத்து கொண்டிருந்தனர். பார்த்தால் சினிமா சான்ஸ் தேடுவோர் போலிருந்தது. நின்று கொண்டு, அமர்ந்து, பாறையில் படுதெல்லாம் வித வித போஸில் செம காமிராவில் சுட்டு கொண்டிருந்தனர் !
தங்கிய ஹோட்டல்
திருச்சூரில் ஹோட்டல் கேசினோவில் தங்கினோம். வெரி டீசன்ட் ஹோட்டல் ! நிகழ்ச்சியில் பேச தான் இங்கு சென்றது. எனவே பில் நாங்கள் தராததால் வாடகை சரியாய் தெரியவில்லை. ஆனால் ஒரு நாளுக்கு இரண்டாயிரம் வாடகை இருக்கும் என நினைக்கிறேன். பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள ஹோட்டல். மற்றவர்கள் தங்க நம்பி பரிந்துரைக்கலாம்.
உணவு:
நாங்கள் தங்கிய ஹோட்டலில் தான் நிஜமா நல்ல சாப்பாடு சாப்பிட்டேன்
காலை: குழாய் புட்டு + கொண்டை கடலை காம்பினேஷன் செம !
மதியம்: நெய் மீன்... ஒரே பெரிய பீஸ் தான். ஆனால் வெரி டேஸ்ட்டி!
இன்னும் பல வித உணவு சாப்பிட்டாலும் இந்த இரண்டு உணவும் தான் நிஜமான கேரள ஸ்பெஷல்.
தங்கிய ஹோட்டல் தவிர மற்ற இடங்களில் சாப்பிடும் போது பெரிய அரிசி சாப்பிட சற்று சிரமமாய் இருந்தது.
ஹோட்டலில் இரவு உணவு வெளியே புல்வெளியில் சாப்பிட முடியும். அங்கு இருவர் பான்ட் வாசிக்க, ஆங்காங்கு சிறுவர்கள் ஓடி விளையாட, மெல்லிய வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிடுவது இனிய அனுபவம்.
ஹோட்டலுக்கு வெளியே |
ஷாப்பிங்: சில கலை பொருட்கள் (திருச்சூர் விழாவை போல அமைந்த சிலை), அல்வா, சிப்ஸ் போன்றவை இங்கு விசேஷம். நான் வாங்கியதும் அதுவே. துணி கடையில் சென்று மனைவி, மகளுக்கு துணி வாங்கலாம் என பார்த்தால் அவ்வளவு நன்றாய் இல்லை. சென்னை போன்ற நகரத்திலிருந்து வந்து, அதை விட சிறிய நகரத்தின் கடைகளில் துணி பார்த்ததால் பிடிக்க வில்லையோ என்னவோ !
திருச்சூரில் ஆங்காங்கு நடிகர் சூர்யா படம் போட்டு அதில் ரூ. 50 என போட்டிருந்தனர். அங்கு பல சலூன் வெளியில் உள்ள போர்டில் சூர்யாவை கஜினி பட ஹேர் ஸ்டைலுடன் போட்டு தான் விளம்பரம் செய்திருந்தனர். இதுவும் ஒரு சலூன் கடை செய்த விளம்பரம் என்றே நினைத்து விசாரிக்க, எதோ ஒரு நிறுவனம், Branded ( !!??) சட்டைகள் ஐம்பது ரூபாய்க்கு விற்கிறார்களாம் ! " ஐம்பது ரூபாய் எனில் சட்டை எப்படி இருக்கும்னு பாத்துக்குங்க. சுத்த வேஸ்ட் " என்று கூறினார். சூர்யா படத்தை இதுக்கா உபயோகிக்கணும்?
சில நண்பர்கள் காய்கறி இங்கு வாங்கி போகலாம் என சொன்னதால் காய்கறி மார்கெட் சென்றேன். முருங்கை காய், பீன்ஸ், கேரட், பாகற்காய், காராமணி உள்ளிட்ட சில காய்கள் மிக செழிப்பாக குறைந்த விலையில் கிடைத்தது. பழங்கள் விலையை விசாரித்தால் சென்னையை விட அதிகமாய் இருந்தது. இதை சொன்னதும் கடைக்காரர் சொன்னது" தமிழ் நாட்டிலிருந்து தான் பழம் வருது. அப்போ உங்க ஊரை விட இங்கே கூட தானே இருக்கும் !"
************
விளங்கன்குன்னு என்கிற சிறு மலை திருச்சூரிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
விளங்கன்குன்னு மலையிலிருந்து |
இங்கு மலையேறி அழகான திருசூரையும் அதன் பசுமையையும் ரசிக்கலாம் என மாலை நேரத்தில் கிளம்பினேன்... அப்போது தான் சூரிய அஸ்தமனமும் பார்க்க நன்றாக இருக்கும் .! இங்கு செல்ல சிறந்த வழி கார் எடுத்து கொண்டு போவது தான். இந்த மலை இருக்கும் ஊர் வரை பஸ்ஸில் சென்று விட்டு பின் ஆட்டோ பிடிக்கலாம் என சிலர் சொன்னதால் அவ்வாறு சென்றேன்.
ஆட்டோ காரர் மலைக்கு டிக்கட் தரும் இடம் வரை வந்து விட்டு அதன் பின் ரோடு சரியில்லை நடந்து போய் விடுங்கள் என கிளம்பி விட்டார். சரிநடக்கலாம் என பார்த்தால் சில பல கிலோ மீட்டர்கள் இருக்கிறது. நாள் முழுதும் அலைந்து விட்டு மலை ஏற மிக சிரமம் ஆகி விட்டது.
பாதி வழியில் சிறுவர்கள் இருவர் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களிடம் மலைக்கு செல்ல வழி கேட்டேன். நீங்கள் இப்போது போகும் வழியில் போனால் மேலே போக இன்னும்15 நிமிஷத்துக்கு மேலாகும்; வாங்க சுருக்கு வழியில் போகலாம் என சிறு குன்று மேல் ஏறி இரண்டே நிமிஷத்தில் அழைத்து போய் விட்டனர். நன்றி சொல்லி அவர்களை ஒரு புகை படம் எடுத்து காட்டி விட்டு மலை மேல் வந்து சேர்ந்தேன்
நல்ல காற்று, அழகான ரம்மியமான சூழல், சிறுவர்கள் விளையாட சாதனங்கள் என அழகாக இருந்தது. சரியாக சூரிய அஸ்தமனம் முன் சென்று விட்டேன். பலரும் நின்று அந்த அழகிய அஸ்தமன காட்சியை ரசித்த வண்ணம் இருந்தனர்.
இந்த மலையில் எடுத்த ஓரிரு நிமிட வீடியோ இதோ :
**************
பசுமையான ஊர், பழக இனிய மக்கள்.. எத்தனை முறை, கேரளத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் அலுப்பதே இல்லை !
**************
கேரள பயணம் முற்றும்.
உங்கள் ஆதரவின் காரணமாய் பிற பயணங்கள் தொடர்ந்து வெளியாகும் !
**************
கேரள பயணம் முற்றும்.
உங்கள் ஆதரவின் காரணமாய் பிற பயணங்கள் தொடர்ந்து வெளியாகும் !
பயணக்கட்டுரை அருமையாக இருந்தது.
ReplyDeleteஇருந்த & தெரிந்த ஊர் என்பதால் மிகவும் ரசித்துப் படித்தேன்.
அருமையான கட்டுரை.
ReplyDeleteGood photo collections!
ReplyDeleteகேரளப் பயணம் அருமையாக இருந்தது சார். படங்களும், காணொளிகளும், தகவல்களும் என மிகவும் பயனுள்ளதாக இருந்தது. செல்ல நினைத்தால் உங்க பதிவை ஒரு எட்டு வந்து பார்த்தாலே எல்லா தகவல்களும் கிடைத்து விடும்.
ReplyDeleteவிரிவான விவரங்களுடன் அருமையான பகிர்வு. அது ஆம்பல் மலர்(water lily). நானும் படமெடுத்திருக்கிறேன் என்பதால் பார்த்ததும் தெரிந்து விட்டது:)!
ReplyDeletesir..branded shirt 5o rupai.. pudavai illa....
ReplyDeletesir..branded shirt 5o rupai.. pudavai illa....
ReplyDeleteஅருமையான பயணம்.. சட்ன்னு முடிச்சுட்டீங்களே..
ReplyDeleteபுகைப்படங்கள் அருமை. கேரள பயணக் கட்டுரையின் பிற பகுதிகளை படித்துக் கொண்டிருக்கிறேன். நரேஷன் நன்று.
ReplyDeleteமிகவும் ரசிக்கும்படியாக எழுதி இருக்கிறீர்கள் சாலக்குடியைப் பற்றிப் பதிவர் துளசி சொல்லிக் கேள்வி. நீங்கள் எழுதி இருக்கும் விதம் அங்கே போகும் ஆசையைக் கொடுத்திருக்கிறது.
ReplyDeleteமிக மிக நன்றி. வீடியோக்காட்சிகளும் இனிமை.
நன்றி துளசி மேடம். தெரிந்த/ நாம் இருந்த ஊர் பற்றி படிக்க ஆனந்தமாய் தான் இருக்கும்
ReplyDeleteநன்றி கந்தசாமி ஐயா
ReplyDeleteநன்றி சிவா
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி கோவை2தில்லி
ReplyDeleteராமலட்சுமி : நன்றி மேடம்
ReplyDeleteபொழுது போக்கு : தங்களுக்கு மலையாளம் படிக்க தெரியுமோ? நன்றி மாற்றி விட்டேன்
ReplyDeleteஅமைதி சாரல்: என்ன மேடம் இதுவே ஆறு பதிவு போல போயிடுச்சே. மற்ற ஊர்கள் பற்றி தொடர போறேன்
ReplyDeleteநன்றி மகிழ்ச்சி முரளி தரன்
ReplyDeleteநன்றி வல்லிசிம்மன் அம்மா
ReplyDeleteசூரிய அஸ்தமன ஃபோட்டோ சூப்பர் மோகன். என்ன கேமரா யூஸ் பண்றீங்க?
ReplyDeleteகேரளா'வின் அழகு யாரையும் மயக்கும்! நல்ல ஒரு பயணகட்டுரை தந்ததுக்கு நன்றி!
ReplyDeleteபடங்களும் வீடியோக்க்களுமாக அசத்தியுள்ள பயணக் கட்டுரை. பூங்கா அவ்வளவு கவரவில்லை! செடிகள் அதிகம் இருக்கும் அளவு ஓய்வெடுக்க, உட்கார நிறைய இடம் இல்லை போல! நான் பார்த்த லட்சணம் அவ்வளவுதானா என்றும் தெரியவில்லை. இருந்தும் மன் அதிர நடந்து பூங்காவைச் சுற்றிப் பார்த்த திருப்தி எனக்குள்ளும்! அந்தச் சிறிய மலை நம்மூர் தாமஸ் மாவுண்டை நினைவு படுத்துகிறது!
ReplyDeleteதிரு மோகன் குமார் அவர்களின் கேரள பயணம் பற்றிய நிறைவு பதிவு.
ReplyDeleteஒரு பயண பதிவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.
வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.
ரகு: நன்றி சோனி டிஜிட்டல் காமிரா.
ReplyDeleteஅப்புறம் ? நீங்க கூட ரொம்ப நாள் கழிச்சு போட்டோ மாத்திடீங்க போல !
வீடு சுரேஷ்: ஆம் உண்மை தான் நன்றி
ReplyDeleteஸ்ரீராம் said
ReplyDelete//பூங்கா அவ்வளவு கவரவில்லை! செடிகள் அதிகம் இருக்கும் அளவு ஓய்வெடுக்க, உட்கார நிறைய இடம் இல்லை போல!//
உட்கார நிறையவே இடம் இருந்தது. நான் எடுத்தது மிக குறைவே. மற்றொரு விஷயம் நம்மை விட பெண்கள் இந்த பூங்காவை மிக ரசிப்பார்கள் என நினைக்கிறேன்; செடி பூக்கள், Gardening இவற்றின் மேல் அவர்களுக்கு நம்மை விட அதிக ஈடுபாடு இருக்கும் தானே?
//அந்தச் சிறிய மலை நம்மூர் தாமஸ் மாவுண்டை நினைவு படுத்துகிறது!//
மிக சரியாக சொன்னீர்கள். எனக்கும் நேரில் பார்க்கும் போதும் அதே தான் தோன்றியது. உயரம் ஆகட்டும் மற்ற விஷயங்களாகட்டும் செயின்ட் தாமஸ் மலை போல் தான் இதுவும் !
விரிவான கமண்டுக்கு நன்றி !
ரத்னவேல் ஐயா: நன்றி; முகநூலில் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி
ReplyDeleteஅருமையான பயணம்.
ReplyDeleteஇடங்கள் பார்க்க அழகாக இருக்கின்றன.
நன்றி மாதேவி மகிழ்ச்சி
ReplyDelete