Wednesday, May 30, 2012

வானவில் 90: அனுஷ்கா- கன்னட நடிகை தன்யா

ஆறாம் அறிவை இழந்த தன்யா

ஏழாம் அறிவு உள்ளிட்ட சில தமிழ் படங்களில் ஹீரோயினின் அல்லக்கையாக நடித்த பெங்களூரை சேர்ந்த தன்யா என்கிற நடிகை இப்படி ஒரு Facebook மெசேஜ் விட்டிருக்கிறார் :

dear chennai, you beg for water, we give! you beg for electricity, we give! ur people come n occupy our beautiful city and kocha paduthify it , we allow and nw u were at our mercy to go to playoffs, n we let be!! like this u begging – we givin! dai ungalukku vekkame illaiya da??

தன்யாவுக்கு சில கேள்விகள்:

சென்னை இரண்டு முறை கோப்பை வென்ற அணி. இன்னும் இரு முறை பைனல் சென்று இறுதி நிமிடம் வரை போராடி தோற்ற அணி. உங்கள் அணி எப்போதாவது கோப்பையை வென்றுள்ளதா? கெயில் மற்றும் டீ வில்லியர்ஸ் என்கிற இரு வெளிநாட்டு வீரர்கள் புண்ணியத்தில் ஆட்டமாய் ஆடி வந்த நீங்கள் இப்போது அடங்கி போய் உள்ளீர்கள். சொல்லி கொள்ளும்படி பெங்களூரு வீரர்கள் யாராவது உண்டா உங்களிடம்? அனைத்து எடிஷன்களிலும் most consistent அணி என்றால் அது சென்னை தான் என்பதை கிரிக்கெட் தெரிந்த யாராலும் மறுக்க முடியாது.

கிரிக்கெட்டை விட முக்கிய விஷயத்துக்கு வருவோம். தமிழகத்துக்கு தண்ணீர் பிச்சை போடுவதாக சொல்கிறீர்கள். காவிரி உங்கள் ஊரில் பிறப்பதால் தண்ணீர் முழுதும் உங்களுக்கு சொந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே அது தான் பிரச்சனை.

நீங்கள் நன்கு படித்த ஒரு பெண் (என வைத்து கொள்வோம்). நீங்கள் பிறந்து வளர்ந்தது ஒரு இடத்தில். அங்கு தான் பிறந்தீர்கள் என்பதால் வாழ்க்கை முழுதும் சம்பாதிப்பதை உங்கள் பெற்றோருக்கே கொடுப்பீர்களா? அப்படி தான் இருக்கு தண்ணீர் விஷயமும்.

காவிரி என்கிற சொத்துக்கு தமிழகம் கர்நாடகம் இரண்டுக்கும் உரிமை உண்டு என்று சுப்ரீம் கோர்ட்டே பலமுறை சொன்ன பின்னும் எங்களுக்கு உரிமையான தண்ணீரை கன்னடியர்களே வைத்து கொள்கிறீர்களே? எங்களுக்கு சொந்தமான ஒன்றை தராமல் வைத்து கொள்ளும் நீங்கள் திருடர்கள் தானே? உண்மையில் எங்களுக்கு முழு உரிமை உள்ள தண்ணீரை எங்கள் அரசியல் வாதிகளின் ஒற்றுமையின்மையால் முழுதும் பயன் படுத்த முடியாமல் இருக்கிறோம். உங்கள் தேவை பூர்த்தியான பின் நீங்கள் தரும் உபரி தண்ணீரை எந்த எதிர்ப்பும் இன்றி பெற்று கொண்டு அமைதியாய் இருக்கிறோம்.

பெண்களுக்கு மட்டுமல்ல; எந்த மனிதனுக்கும் அகம்பாவம் கூடாது. தண்ணி அடித்து விட்டு டுவீட் செய்து, இப்போது "தமிழ் நாடு பக்கம் வர மாட்டேன்; தமிழில் நடிக்க மாட்டேன்" என்று அழுது புலம்புகிறீர்கள். அடுத்த வருட கிங் பிஷர் காலண்டரில் இடம் பிடிக்க நீங்கள் போட்ட நாடகம் இனிதே முடிந்தது. இனியாவது நாவை அடக்கி பேச கற்று கொள்ளுங்கள் !

ஆனந்த் கார்னர்


Everyday may not be good, but there is something good in every day.

ரசித்த கவிதை


எனக்கு நாயுடன் பழக்கமில்லை
நாயும் என்னோடு பழகியதில்லை.
நாய்க்கு ஒரு கவிதையும் சொன்னதில்லை
நாயும் என்னிடம் எதையும் சொன்னதில்லை

நாயைக் கண்டதும் பயப்படுகிறேன்.
நாயும் என்னைக் கண்டதும் பயப்படுகிறது.

நான் அறையில் உறங்குகிறேன்.
நாய் தரையில் உறங்குகிறது.
நாய் தேர்தலில் நிற்பதில்லை.
நானும் தேர்தலில் நிற்பதில்லை.

நாய் இப்போதும் நாயாக இருக்கிறது.
மனிதன் நான் எல்லாவற்றுக்கும்
நாயாக அலைந்து கொண்டிருக்கிறேன். -கோசின்ரா

ஐ.பி.எல் இறுதி போட்டி


ஐ.பி.எல் லை இந்தியன் பிரீமியர் லீக் என்பதை விட இந்தியன் பெட்டி லீக் என்பதே சரியாக இருக்கும். முதலில் பண பெட்டி வைத்து தங்கள் அணிக்கான வீரர்களை வாங்குகிறார்கள். பின் ஆட்டம் துவங்கியதும் அதே பெட்டி மூலம் அடுத்த அணி வீரர்களை தங்கள் வெற்றிக்காக வாங்குகிறார்கள். அருமையாக பந்து வீசும் ஹிலன்பாகஸ் என்கிற சென்னை வீரர் ஒவ்வொரு முக்கிய போட்டியிலும் தன் கடைசி ஓவரில் பல புல்டாஸ்கள் போட்டதை பார்த்தால் மேட்ச் பிக்சிங் உண்டு என்பது நிச்சயம் தெரிந்தது.

சென்னை தோற்றதை விட வருத்தம் மேட்சை நேரில் பார்த்து கண்ணீர்  விட்டு அழுத 35000 சென்னை மக்களை நினைத்து தான் ! நொந்து போன இவர்கள் மூட் சரியாக சில நாள் ஆகியிருக்கும் !

பொதுவாக கோப்பைகள் ரோலிங் முறையில் இருக்கும். அதாவது ஒரு முறை வென்ற அணி அந்த கோப்பையை ஒரு வருடம் வைத்திருக்கும், அடுத்த வருடம் வேறு அணி வென்றால் அதே கோப்பை அவர்களிடம் செல்லும். ஆனால் மூன்று முறை தொடர்ந்து ஒரு அணி கோப்பை வென்றால் அந்த குறிப்பிட்ட கோப்பை அவர்களிடமே தங்கி விடும். அடுத்த முறை புது கோப்பை தான் செய்வார்கள். சென்னை கோப்பையை தன்னிடமே தக்க வைப்பதை நூலிழையில் தவற விட்டது. :((

நாட்டி அஜூ கார்னர்


நாட்டி - அஜூ இருக்கும் இடத்தை வீட்டு வாசலுக்கு நேரே மாற்றி விட்டோம். இங்கும் ஸ்க்ரீன் கம்பி மீது தான் இருப்பார்கள். தேவையான போது கூண்டின் மேல் இருக்கும் சாப்பாட்டை போய் சாப்பிட்டு கொள்வார்கள்.

கூண்டின் மேல் இருவரும் இருக்கும் போது நாட்டியை எங்கள் பெண் எடுத்து கொஞ்ச, அஜூ பயத்தில் கீழே இறங்கி, தத்தி தத்தி நடந்து வீட்டு வாசலுக்கு வந்து விட்டான். வீட்டின் உள்ளே இருந்து அதனை பார்த்த எனக்கு அதிர்ச்சி ! அவரசமாய் ஓடினால் என்னிடமிருந்து தப்புவதாக நினைத்து வெளியே பறந்து விட வாய்ப்புண்டு. மிக மெதுவாய் போய் உள்ளே விரட்ட, நல்ல வேளையாக உள்ளே வந்து விட்டான். ஒரு நொடி கவனிக்காமல் இருந்தால் வீட்டை விட்டு வெளியே போயிருப்பான். எப்போதும் கதவு திறந்து இருக்கும் அதற்கு நேரே தான் இருவரும் இருப்பார்கள். ஆனால் பறக்க பார்த்ததில்லை.

வெளியே போவதில் பிரச்சனை பக்கத்து வீட்டிலியே நான்கு நாய்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கவ்வினாலும் உடனடி மரணம் தான் ! நல்ல வேளை அன்று அஜூ தப்பி விட்டான் என பெருமூச்சு விட்டோம்

ஷ்......அனுஷ்கா !


‘‘இந்த அனுஷ்காவிடம் என்ன இருக்கிறது என்று கோடிகளில் கொட்டிக் கொடுத்து அப்படித் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்?’’

‘‘அனுஷ்காவின் இதழ், இடை போன்ற கவர்ச்சிப் பிரதேசங்கள் எதுவுமே ‘என்னைப் பார்... என் அழகைப் பார்’ என்று துருத்தா தவை... உறுத்தாதவை. அதேசமயம், மழையில் நனைந்து, பிகினியில் உருண்டு புரளும் கவர்ச்சித் தருணங்களில்... அனுஷ்காவின் முகத்தைக் கவனித்திருக்கிறீர்களா? அத்தனை சாந்தமாக அழகின் எந்தத் திமிரும் தொனிக்காத ஒரு வசீகரப் புன்னகையை அது சூடி இருக்கும். ‘கவர்ச்சிப் பிரதேசங்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை உண்டாக்கும் சேதங்களுக்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பாகாது!’ என்பதுபோல ஒரு குழந்தைத்தன எக்ஸ்பிரஷனைச் சுமந்து இருக்கும் அனுஷ்கா முகம். அது மிக அரிதான அழகு. அதனால்தான் ‘கோடி லேடி’யாக வலம்வருகிறார் அனுஷ்!’’

நன்றி: நானே கேள்வி - நானே பதில் @விகடன்.

கல்யாண சமையல் சாதம்


சமீபத்தில் சாப்பிட்ட கல்யாண சாப்பாட்டின் (காலை டிபன்) மெனு:

இட்லி / மசால் தோசை/ தேங்காய் சட்னி/ தக்காளி சட்னி/ பொதினா சட்னி/ சாம்பார்/

பூரி/ குருமா/

பொங்கல்/

குழாய் புட்டு/ கொண்டை கடலை/

அசோகா அல்வா/

திவ்யமான காபி

இதுக்கு மேல் டிபன் ஐட்டம் ஏதாவது மிச்சம் இருக்கா? சமீபத்தில் மணாலி போய் ரொட்டியாக சாப்பிட்டு வந்தவன், இங்கு இந்த உணவுகளை பார்த்ததும் பாய்ந்து விட்டேன். அனைத்திலும் ஒன்று சாப்பிடவே கஷ்டமாய் இருந்தது. பக்கத்தில் ஒருத்தர் எக்ஸ்ட்ரா பூரி எல்லாம் வாங்கி சாப்பிட்டார். நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல :)

சமீபத்திய பதிவுகள்:


ஆனந்த விகடனும் வீடுதிரும்பலும்

குளு-மணாலி பயணம் -படங்கள் டிரைலர்

சென்னை பெட்ரோல் தட்டுப்பாடு: நேரடி அனுபவம்

28 comments:

  1. ///ஆறாம் அறிவை இழந்த தன்யா///

    நல்ல தலைப்பு ..,

    ReplyDelete
  2. ஒரு கதம்ப சாதகமாக உங்கள் பதிவு..படிக்கவும் சுவாரஸ்யத்தை அள்ளித்தந்தது.
    இந்த தன்யா என்ற அல்லக்கை இப்படியா எழுதுனச்சு..பணம் இருக்கு என்கிற கொளுப்பு போல...என்னமோ எல்லாமே இவங்கதான் படைச்சாங்க என்ற திமிரும் போல..எல்லாம் ஆண்டவன் பார்த்துக்குவான்.இங்க மலேசியாவுல இருந்துகுட்டு எனக்கு இதுக்கு மேல சொல்லத்தெரியல சகோ.
    அழகாக எழுதுகிறீர்கள்..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

    Carnage (2011)- திரைப்பார்வை

    ReplyDelete
  3. தன்யா- இந்தம்மா அடுத்து தமிழ்ப் படம் நடிக்கும், நம்மாளு பார்க்காமலா இருப்பான்!!

    ReplyDelete
  4. \\காவிரி உங்கள் ஊரில் பிறப்பதால் தண்ணீர் முழுதும் உங்களுக்கு சொந்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களே அது தான் பிரச்சனை.\\ இந்தியாவின் முதல் எதிர்கள் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் தண்ணீர் இந்தியாவில் இருந்துதான் சிந்து, கங்கை நதிகள் வாயிலாகச் செல்கின்றன. ஆனால், சீனாக்காரன் பிரம்ம புத்திராவை வழி மறித்து விட்டதாகச் சொல்கிறார்கள். தமிழக அண்டை மாநிலங்களில் காங்கிரஸ் அவ்வப்போது ஆட்சிக்கு வருகிறது, அதனால் அம்மக்களை திருப்தி படுத்தினால் தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் [அ] அடுத்த முறை ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் நினைக்கிறது. தமிழகத்தில் கழகங்களை நம்பி தமிழன் வீணாய்ப் போனதுதான் மிச்சம். கருணாநிதியைப் பொறுத்தவரை அண்டை மாநிலங்களில் அவருக்குள பிசினஸ் கேட்டு விடாத படி தான் நடந்து கொள்வார், தன்னை வழக்குகளில் இருந்து காத்துக் கொள்ள பல முறை தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்துதான் வந்திருக்கிறாரே தவிர தமிழருக்காக எதையும் வற்ப்புறுத்தி அவர் கேட்டதாகச் சரித்திரமே இல்லை. ஆனாலும் அந்தக் கட்சியில் உள்ள வட்டம் மாவட்டம் என்ற ஓட்டுப் பொறுக்கிகளால் அந்தக் கட்சி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் கேவலமான நிலை. ஜெயலலிதா சொல்லிக் கொள்ளும்படி எதையும் செய்யவில்லை. ஆனாலும் பலமுறை வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார், உண்ணாவிரதம் [மூன்று மணி நேரமல்ல, மூன்று நாள்] இருந்திருக்கிறார். தமிழர்களைப் பொறுத்தவரையில் இது குறித்த awareness இல்லாமல், தேர்தல் சமயத்தில் கொடுக்கும் இலவசத்திற்க்காக காஞ்சு போய்க் கிடப்பவர்களாகவே இருக்கிறார்கள், எல்லா விதத்திலும் தமிழகம் துரதிர்ஷ்ட்டம் பண்ணியதாகவே இருக்கிறது.

    ReplyDelete
  5. \\இந்தியன் பிரீமியர் லீக் என்பதை விட இந்தியன் பெட்டி லீக் \\இந்தியன் பைசா லீக் என்று யாரோ சொன்னார்கள்!!

    ReplyDelete
  6. நன்றாக சொல்லியுள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் சூடாக இருந்திருக்கலாம்.இதை ஆங்கிலபடுத்தி அனுப்பினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  7. \\அருமையாக பந்து வீசும் ஹிலன்பாகஸ் என்கிற சென்னை வீரர் \\ இப்படியெல்லாம் தமிழ்க் காரன் பேரு வச்சுக்க ஆரம்பிச்சுட்டானா!!சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்ற பெயரில் சென்னை என்று வருவது தவிர்த்து சென்னைக்கும் அந்த அணிக்கு எதாச்சும் சம்பந்தம் இருக்குதான்னு யாராச்சும் சொல்லுங்கப்பா!! எதனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.......... நம் நாட்டிலே..........சொந்த நாட்டிலே..........

    ReplyDelete
  8. -அட, விடுங்க பாஸு... தனியாப் பொலம்பற ஆளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு... அவங்க ஊர்ல இருக்கும்போது டயலாக் இப்படித்தான் இருக்கும். இங்க வந்தா மாறிடும்!
    -ஆனந்த் கார்னரும் ரசித்த கவிதையும் நன்றாக இருக்கிறது.
    -தினமணியில் மதி கார்ட்டூன் மறுபடியும் ஞாபகத்துக்கு வருகிறது...ரெண்டு பேட்ஸ்மென் பேசிக் கொள்கிறார்கள்..."டீமா...பேரெல்லாம் யாருக்குத் தெரியும்? போனதரம் அஞ்சு கோடி கொடுத்த டீமுக்கு விளையாடினேன்... இந்த தரம் ஏழு கோடி கொடுக்கற டீமுக்கு விளையாடறேன்..."
    ஆனால் இதில் தோற்றவர்களின் சோகமும் அபத்தம். வென்றவர்களின் ஆர்ப்பாட்ட கொண்டாட்டமும் அபத்தம்! (ஸாரி... இது என் கருத்து)
    -நாட்டி, அஜு கிரேட் எஸ்கேப்...!
    -அனுஷ்கா.... :)))

    ReplyDelete
  9. பாஸ்...அந்த பெண்ணின் பேச்சு முட்டாள்தனம்! ஆனால், அதை கண்டிக்கும் பொழுது நீங்கள் CSK-வுக்கு கொடி பிடிப்பது சிறிது நெருடுகிறது.

    IPL குறித்து நான் எழுதிய கட்டுரை!
    http://www.poopakkangal.blogspot.de/2012/05/blog-post.html

    ReplyDelete
  10. Anonymous6:28:00 PM

    நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல :)
    //

    விழுந்து விழுந்து சிரித்தேன்...அடி படாமல்...

    IPL//

    WWF

    தன்யா//

    விட்டுத்தள்ளுங்க மோகன்...

    ReplyDelete
  11. ஆனந்த் கார்னருமம் ரசித்த கவிதையும் மிகவும் ரசிக்க வைத்தன!
    இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய சென்னை நன்றாகவே ஸ்கோர் செய்திருந்தது. ஆனால் கம்பீர் அவுட் ஆகியும்கூட, கல்கத்தாவின் நிதானமான ஆட்டமும் சென்னையின் பெளலிங் சொதப்பலும்தான் கையெட்டும் தூரத்திலிருந்த வெற்றியை கல்கத்தாவிற்கு தாரை வர்த்து விட்டது!!

    ReplyDelete
  12. //அனைத்திலும் ஒன்று சாப்பிடவே கஷ்டமாய் இருந்தது. பக்கத்தில் ஒருத்தர் எக்ஸ்ட்ரா பூரி எல்லாம் வாங்கி சாப்பிட்டார். நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல :)//

    ஹா ஹா ஹா ஹா...!

    ReplyDelete
  13. //ஹீரோயினின் அல்லக்கையாக//

    உங்க கோபம் புரியுது. ஆனால் இந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம். அந்த பொண்ணோட மெசேஜ் ரொம்பவும் இம்மெச்சூர்ட. அந்த மெசேஜ்ல இருந்தே மேடம் எவ்வளவு 'புத்திசாலி'ன்னு தெரியுது! நாம அவங்க ஊரை ஆக்குபை பண்ணிக்கறோமாம்....அங்க அவ்வளவு திறமைசாலிங்க இருந்தா, கம்பெனி எல்லாம் ஏன் நம்மளை எடுக்கறாங்க?

    ஒன்னு மட்டும் தெரியுது.....சென்னை மேல் அளவு கடந்த பொறாமை இருக்கு...அதனோட வெளிப்பாடுதான் இந்த மெசேஜ்.

    // மேட்ச் பிக்சிங் உண்டு என்பது நிச்சயம் தெரிந்தது. //

    ப்ளே ஆஃப்பில், மோர்னே மோர்கேலை ஏன் டீம்ல சேர்க்கலைன்னு டெல்லிக்காரங்க ஒரு காரணம் சொன்னாங்க பாருங்க......."தம்பி கொஞ்சம் பெட்டரா யோசிப்பா"ன்னுதான் தோணுச்சு.

    //ஷ்......அனுஷ்கா !//

    ஒரு போட்டோ போட்டிருக்கலாம்ல :(

    //அசோகா அல்வா//

    அதென்ன அசோகா அல்வா? பாதாம் அல்வாவையா இப்படி சொல்றீங்க? சீரியசாவே கேக்குறேன்...எனக்கு தெரியல!

    //நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல //

    செம்ம :)))))))))))

    ReplyDelete
  14. நன்றி வரலாற்று சுவுடுகள்.. கடந்த சில பதிவுகளாய் முதல் பின்னூட்டம் போடுவதற்கும்

    ReplyDelete
  15. மகிழ்ச்சி நன்றி குமரன்

    ReplyDelete
  16. தாஸ்: தன்யா இனி தமிழ் படத்தில் நடிக்காமல் இருக்க போறாராம். ஒப்புக்கொண்ட படங்களையும் விட்டுட்டாராம்

    //\\இந்தியன் பிரீமியர் லீக் என்பதை விட இந்தியன் பெட்டி லீக் \\இந்தியன் பைசா லீக் என்று யாரோ சொன்னார்கள்!!//

    பெட்டியில் இருப்பதும் பைசா தானே?

    ReplyDelete
  17. சின்ன பையன்: நன்றி. பெங்களூரில் இருக்கும் பலர் அம்மணியை மீடியாவில் வெளுத்து விட்டனர். அம்மணி இப்போது மன்னிப்பு கேட்டதாக அறிகிறேன்

    ReplyDelete
  18. பாலன்: அந்த பெண் CSK-ஐ திட்டும் போது கசக் சப்போர்ட் செய்பவன் என்கிற முறையில் பேச வேண்டியதானது நன்றி

    ReplyDelete
  19. ரெவெரி said...

    IPL//

    WWF

    நல்ல ஒப்பீடு தான்

    ReplyDelete
  20. மனோ மேடம்: பைனல் பற்றி சுருக்கமாய் அழகாய் சொல்லி விட்டீர்கள் நன்றி

    ReplyDelete
  21. ரகு: அனுஷ்கா படம் நிறைய இருக்கு; இனி ஒவ்வொன்னா வரும்.

    அசோகா என்பதும் அல்வா வகை தான். கோதுமை அல்வாவை விட இன்னும் திக்கா இருக்கும். இது தஞ்சை ஸ்பெஷல் அல்வா. சென்னையில் சில கடைகளில் மட்டும் கிடைக்கும். மேலும் வீட்டிலும் கூட இதை செய்வார்கள். எனக்கு இதுக்கு மேல் விளக்கம் தெரியலை. உங்கள் அம்மாவிடம் கேட்டால் விரிவாய் சொல்வார்கள் என நினைக்கிறேன்

    ReplyDelete
  22. அமைதி அப்பா: நன்றி

    ReplyDelete
  23. நிசாமுதீன் : நன்றி

    ReplyDelete
  24. நல்ல தொகுப்பு சார் !

    ReplyDelete
  25. // நம்மை விட அதிக தூரம் டூர் போயிருப்பார் போல :)// ரசித்தேன்....

    அஜு - எஸ்கேப்.... அப்பாடா.... நல்ல வேளை.

    ஐ.பி.எல். - தன்யா - விட்டுத்தள்ளுங்க இவங்க இவ்வளவுதான்...

    ReplyDelete
  26. அனுஷ்கா போட்டோ போட்டு இருக்கலாமே மோகன் சார் .... ஹி ஹி ஹி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...