Tuesday, January 15, 2013

சமர் - சினிமா விமர்சனம்

முஸ்கி: படத்தின் கதை மற்றும் முக்கிய சஸ்பென்ஸ்கள் இங்கு சொல்லப்படவில்லை . இருப்பினும், நீங்கள் படம் பார்ப்பதாய் இருப்பின், இந்த விமர்சனம் மட்டுமல்ல, இப்படம் குறித்த எவ்விமர்சனமும் படிக்காமல் இருப்பது நல்லது !
****


முஸ்கியில் இவ்ளோ சொல்லியும் உள்ளே வந்தாச்சா?

ஒரு விதத்தில் நானும் பாசிடிவ் விமர்சனம் படிச்சுட்டு தான் படம் பார்க்க போனேன். முக்கிய சஸ்பென்ஸ் தெரியாவிடினும் கதையின் போக்கு, வாசித்த விமர்சனங்களால் பெருமளவு தெரிந்து விட்டது. அதுவும் தெரியாவிடின் படத்தை இன்னும் ரசித்திருக்கலாம் .

பள்ளியில் படிக்கையில், தாத்தா அல்லது மாமா வீட்டுக்கு விடுமுறையில் பயணம் போவோம். அப்போது நாள் முழுக்க அலுக்காமல் கண்ணாமூச்சி, தாய கட்டை, பரம பதம் என்று ஆடுவோம் இல்லையா? அப்படி ஒரே நாளில் தொடர்ந்து வெவ்வேறு விளையாட்டு ஆடி முடித்ததும் உங்க மனசும், மூளையும் எப்படி இருக்கும்? சிறு வயதில் நிகழ்ந்ததால் நினைவில்லையா? இந்த படம் பாருங்கள் .. பார்த்து முடித்ததும் வருவது அதே உணர்வு தான் !

"பீட்சா" பாணி த்ரில்லர் தான் இதுவும். ஆனால் வேகமான த்ரில்லர் இல்லை. நின்று நிதானமாய் செல்லும் த்ரில்லர்.

கதை பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என சொல்லிருக்கேன். நெக்ஸ்ட்?

விஷால்

நிச்சயம் வித்யாசமான பாத்திரம். முதலில் இயற்கை காதலராக, பின் கண்ணா மூச்சி ஆட்டத்தில் குழம்பி விழிப்பவராக வருகிறார். அவர் உயரம் மற்றும் உடல்வாகுக்கு பாத்திரம் நன்கு பொருந்துகிறது. கார்களை தாண்டி குதிப்பதிலும், சண்டையிலும் பரபர-வென்றிருக்கிறார்.

சுனைனா மாதிரி அழகான பெண் இருக்கும் போது, அவரை கண்டுக்காமல் காட்டை பார்க்க போறேன் என்பது சாரி கொஞ்சம் ஓவர் - 1

ஒரு சண்டையில் 50 பேரை வீழ்த்துகிறார். அதுவும் ராஜ்கிரண் மாதிரி ஒவ்வொரு அடியில் ஒவ்வொரு வில்லன் வீழ்வது சா. கொ .ஓ - 2

த்ரிஷா

சூப்பர் பாத்திரம் இவருக்கு. விஷால், சுனைனாவை விட இவர் வரும் அறிமுக காட்சியில் தான் தியேட்டரில் விசில் மற்றும் க்ளாப்ஸ் அள்ளியது. தன்னை விட 15 வயது குறைந்த சுனைனா இன்னொரு ஹீரோயினாய் இருக்க, வயதில் மூத்த இவருக்கு இவ்வளவு கிளாப்ஸ் விழுவது ஆச்சரியமாய் இருந்தது.

சுனைனா

மிக சில காட்சிகளே வந்து போகிறார். ஒரு காட்சியில் மிக அழகாயும், இன்னொரு காட்சியில் செம சுமாராயும் பல படத்திலும் இவர் இருப்பது ஏன் என்றே புரியவில்லை (மேக் அப் ஓவர் ஆனால் அப்டி ஆகிடுது போல !)

வில்லன்கள்


J .D  சக்ரவர்த்தி & மனோஜ் பாஜ்பாய்  : இவ்வளவு சுவாரஸ்ய வில்லன் பாத்திரங்கள் காக்க, காக்க & வேட்டையாடு விளையாடு -க்கு பிறகு இப்போது தான் பார்க்கிறோம்.

இந்த கதை "The Game " என்கிற ஹாலிவுட் படத்தழுவல் என்கிறார்கள். ஹாலிவுட்டிலும் சரி, தமிழிலும் சரி - இந்த கதையை எழுதும் போது முதலில் எழுதியது -இவர்கள் பாத்திரங்களாய் தான் இருக்கும். ஹீரோ உட்பட மற்ற பாத்திரங்கள் எல்லாம் - வில்லன்களை மையமாக வைத்தே சுழலுவது செம வித்யாசம்.

இத்தனைக்கும் இரு வில்லன்களும் இடைவேளையின்போது தான் லேசாய் தலையை மட்டும் காட்டுகின்றனர் அதன் பின்னும் நெடுநேரம் வரவில்லை.

தமிழ் மக்கள் இவர்கள் பாத்திரங்களை எப்படி எடுத்து கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே படம் ஹிட்டா இல்லையா என்பது அமையும் !

இசை

இசை மிகப்பெரும் சொதப்பல். யுவனுக்கு என்ன ஆச்சு? பாடல்களும் தேறலை. பின்னணி இசையும் மிக சுமார் ! பட துவக்கத்தில் காதலர்கள் பிரிகிற காட்சியில், எமோஷன் ஒரு பக்கம் போக,   விடாமல் பின்னணி இசை வாசிக்கிறார் :(

இயக்கம்

எழுதி இயக்கியவர் திரு.

கண்ணாமூச்சி போல செல்லும் கதையில் நிச்சயம் சுவாரஸ்யம் வருது. "என்னய்யா நடக்குது!" என மக்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அவர் அவிழ்க்கிற முடிச்சும் ஏமாற்றவில்லை. DVD பார்த்து கதையை சுடாமல், ஒரிஜினலாய் எடுத்திருந்தால் இன்னும் பாராட்டிருக்கலாம். (விக்கிபீடியாவில் The Game பற்றி படிக்கும்போது, மூலக்கதை மட்டுமே  அதில் எடுத்து கொண்டு, திரைக்கதை இவர்களாக  செய்திருப்பது தெரிகிறது)

எஸ் ராமகிருஷ்ணன்  வசனத்தில் சில இடங்கள் அப்ளாஸ் வாங்குது; 1 பெக், 2 பேக், 3 பெக் அடிச்சா என்ன ஆகும் என்பது மாதிரிக்கு ஒன்று

தியேட்டர் நொறுக்ஸ்

தீபாவளி- பொங்கல் போன்ற பண்டிகைக்கு சென்னையில் இருந்தால், காலை எங்கள் வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு மதியம் தாம்பரம் - மாமனார் வீடு சென்று விடுவோம். அப்படி நேற்று சென்று, ரொம்ப போர் அடிக்க - மாலைக்காட்சி - தாம்பரம் நேஷனலில் இப்படம் சென்றேன்.

50 வருட ஓல்ட் தியேட்டர் இது. இருந்துட்டு போகட்டும். ஆனால் கூட்டி பெருக்கி, தியேட்டர் முழுமையும் கழுவி பல வருஷம் ஆகிருக்கும் போல ! இத்தகைய தியேட்டர் சென்றால், அட்லீஸ்ட் பால்கனி சென்று விடுவது நல்லது. ஓரளவாவது சுமாராய் இருக்கும். அது (மட்டும்) ஹவுஸ்புல் என்பதால் பஸ்ட் கிளாஸ் என்ற பேரில் 80 ரூபா தந்து விட்டு கட்டை சேரில் அமர வேண்டியதாயிற்று. எங்க நீடாமங்கலம் தியேட்டர்களும், டெண்ட்டு கொட்டகைகளும் இதை விட நீட்டா இருக்கும். ஒவ்வொரு காட்சி முடிந்த பின் கூட்டி பெருக்குவார்கள்.

சவுண்ட் சிஸ்டம் மட்டுமே ஓகே. "தியேட்டர் வளாகத்தில் புகை பிடிக்காதீர்கள் " என்று போர்டு போட்டிருந்தாலும், உள்ளே வெளியே என எல்லா இடத்திலும் ஊதி தள்ளுகிறார்கள்.

தியேட்டர்கள் நிலைமை இப்படி இருந்தால் சினிமா வாழாது :(

கமர்ஷியல் பக்கம் /  மக்கள் கருத்து

ஜனவரி 13- அன்று - கண்ணா லட்டு தின்ன ஆசையா- வுடன் இப்படமும் ரிலீஸ் ஆனது. அப்படத்துக்கு இணையத்தில் டிக்கெட் புக் செய்ய பார்த்தால் - பல தியேட்டரில் ஹவுஸ் புல். அதே நாள் ரிலிஸ் ஆன இப்படம் முதல் நாள் (ஞாயிறு) ஒரு தியேட்டரிலும் ஒரு ஷோ கூட புல் ஆகலை என்பது தெரிந்தது !

படம் நன்றாக இருப்பதாக விமர்சனம் மற்றும் மவுத் டாக் வருவதால் இப்போது ஓரளவு ஓடுகிறது. படம் எனக்கு பிடித்திருந்தது ஆயினும் ஹிட் ஆவது கஷ்டம் என நினைக்கிறேன்.

தாம்பரத்தில் படம் முடிந்து கேட்ட சில டயலாக்:

" நான் அலெக்ஸ் பாண்டியன் இல்லாட்டி கண்ணா லட்டு தின்ன ஆசையா போகலாம்னேன். நீதான் பிடிச்சு இழுத்துட்டு வந்துட்டே இப்ப பாரு " (அவருக்கு அலெக்ஸ் பாண்டியன் பத்தி இன்னும் தெரியலை போலருக்கு ! )

இன்னொருத்தர் ஒரே வரியில் சொன்னது தான் ஹை லைட்: " என்னய்யா இது ! படம் வீடியோ கேம் பாக்குற மாதிரியிருக்கு !"

அவர் ஏன் அப்படி சொன்னார் என்று புரியணும்னா நீங்க படம் பார்க்கணும் !

சமர் - வித்தியாச கதைக்களன் மற்றும் முயற்சிக்காக ஒரு முறை பார்க்கலாம் !

*******
அண்மை பதிவுகள்:

கண்ணா லட்டு தின்ன ஆசையா - Laugh Riot - விமர்சனம்

சென்னை புக் பேர் 2013 : பெஸ்ட் டீல்ஸ்


சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்

தொல்லைகாட்சி- பெப்சி உமா + பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி...

12 comments:

  1. நேஷனல் தியேட்டரில் பட்ம் பார்த்த உங்க தைரியம்..சும்மா சொல்ல கூடாது.

    ReplyDelete
    Replies
    1. ஆமுங்கோ. உங்க ஊர் தியேட்டர் ஆச்சே. நீங்களும் பல வருடம் முன் சென்று நொந்து போயிருப்பீங்க போல.

      Delete
  2. ஒரு மணி நேரத்துக்கு முந்தி இந்த விமர்சனம் படித்திருந்தால் இந்நேரம் நான் போரூர் 'கோபாலகிருஷ்ணா'வில் உட்கார்ந்து இருப்பேன். மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வீடியோ கேம் என்றால் எனக்கும் பிடிகுமே, அடடா, கேபிள் சங்கர் விமர்சனத்தை வாசித்ததில் ஒரு நல்ல படம் பார்க்கிற வாய்ப்பை இன்றைக்கு இழந்துவிட்டேனோ?

    ReplyDelete
    Replies
    1. சார் அதிக எதிர்பார்ப்பின்றி பாருங்கள் ; புறக்கணிக்க கூடிய படம் அல்ல. ஒரு முறை பார்க்கலாம்

      Delete
  3. பார்க்கலாம்னு சொல்றீங்க....

    இங்கே பி.வி.ஆர் சினிமாஸ்-ல இந்த வாரம் இருக்கு. சனி-ஞாயிறு வரை இருந்தால் பார்க்க முயற்சிக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. அப்படியா முடிஞ்சா பாருங்க வெங்கட்

      Delete
  4. //தன்னை விட 15 வயது குறைந்த சுனைனா இன்னொரு ஹீரோயினாய் இருக்க//

    யாரைவிட? :)

    ReplyDelete
    Replies
    1. ஹீ ஹீ தெரியாத மாதிரி கேட்குறீங்க நண்பா; த்ரிஷா நடிக்க வந்தே 15 வருஷத்து கிட்டே ஆச்சு

      Delete
  5. நான் முஸ்கிக்கு அப்புறம் படிக்கவில்லை. சென்று விட்டேன்.

    என்ன, சுனைனாவுக்கும் த்ரிஷாவுக்கும் 15 வயது வித்தியாசமா?

    வீடியோ கேம் மாதிரியா... அப்போ கணினியில்தான் விளையாடணும்....ச்சே.. பார்க்கணும்!

    ReplyDelete
    Replies
    1. சார் முஸ்கிக்கு அப்புறம் படிக்கலைன்னு சொல்லிட்டு உள்ளே உள்ள மாட்டர்ஸ் கரீட்டா சொல்றீங்களே :) நீங்க படம் பார்க்காத ஆள். அதனால் வாசித்தால் தப்பில்லை

      Delete
  6. எனக்கு முதல் பாதி பிடிச்சிருந்தது. இரண்டாம் பாதி கொஞ்சம் சுமார்தான். பட் ஒகே, ஒரு தடவை பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரகு: கரக்டா சொன்னீங்க

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...