சிவகார்த்திகேயன் பேட்டி
சன் டிவியில் திடீர்னு ஒரு வார நாள் காலையில் பார்த்தா - சூரிய வணக்கத்தில் சிவ கார்த்திகேயன் பேசிட்டு இருக்கார். என்னடா இது லீவு நாள் கூட இல்லை; இன்னிக்கு இவரை மாதிரி ஒரு பிரபலத்தை கூட்டி வந்திருக்காங்களே என வியப்போடே பார்த்தேன்
சிவகார்த்திகேயன் நிச்சயமா ஒரு செம என்ட்டர்டேயினர். தொகுத்து வழங்கினாலும் சரி, பேட்டி தந்தாலும் சரி சிரிக்க வச்சிடுறார் (நடிக்கும் போது தான் அந்தளவு Flow வர மாட்டேங்குது )
பள்ளியில் படிக்கும் போது தினம் நெற்றியில் 3 பட்டை போட்டு கொண்டு போனதும், கல்லூரி வந்ததும் செய்த அலம்பல்களும், அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் என பேசி காட்டியதும், விஜய் உள்ளிட்ட பலரை மிமிக்ரி செய்ததும் அட்டகாசம் ! ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.
சீரியல் பக்கம் : ராஜ குமாரி
சன் டிவி யில் இன்று முதல் தொடங்குகிறது " ராஜ குமாரி" சீரியல். காசியில் மிக பெரும் பகுதி படமாக்கப்பட்டது இந்த சீரியலில் தான் என்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் தனக்கு பேர் வாங்கி தந்த நீலாம்பரி என்கிற பெயரில் நடிக்கிறார். தினம் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் நம்ம டிகிரி தோஸ்த் ஒருத்தர் பணி புரிந்துள்ளார்.
பிளாஷ்பேக் : லொள்ளு சபா
இன்றைய சந்தானத்தின் விசிட்டிங் கார்ட் இந்த சீரியல் தான். ஒவ்வொரு ஹிட் படத்தையும் எடுத்து கொண்டு அநியாயத்துக்கு கலாய்ப்பார்கள். பாஷா, சின்ன கவுண்டர் போன்ற உல்ட்டாக்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. சந்தானத்தின் டைமிங் காமெடி மற்றும் இயக்கிய ராம்பாலாவின் புத்தி சாலித்தனம் இரண்டும் சேர்ந்து, தொடர்ந்து பார்க்க வைத்தது.
சினிமாவை கலாய்த்த சந்தானத்தை சினிமா துறையினர் வெறுக்காமல், வாரி அணைத்து கொண்டனர். திறமைக்கு சில நேரங்களில் உரிய மரியாதை கிடைத்து விடுகிறது !
ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?
குட்டி சுட்டீஸ்
இமான் அண்ணாச்சி குட்டீசுடன் அதகளம் செய்கிறார். வீட்டில் நாம சின்னதா கிண்டல் செய்தாலே முறைக்கும் மனைவிகள், இமான் அண்ணாச்சி தங்களை பார்வையாளர் வரிசையில் உட்கார வைத்து விட்டு ஓட்டும் போது விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
எல்லா குழந்தைகளிடமும் " உங்க வீட்டுல யார் யாரை அடிப்பாங்க? உங்க அம்மா- அப்பாவுக்குள்ளே சண்டை வருமா? " என்று கேட்கிறார் பசங்க அடிச்சு விடுதுங்க. என்னா கற்பனை திறன் ! அழகா டிரஸ் பண்ணி அதை விட அழகா குழந்தைகள் பேசும் இந்நிகழ்ச்சி குட்டீஸ் இருக்கும் வீடுகளில் பாபுலர் ஆகிடுச்சு. இதுவரை பார்க்காவிடில் ஞாயிறு மாலை ஆறு மணிக்கு கண்டுகளியுங்கள் !
கிரிக்கெட் கார்னர்
ஆண்டர்சன், சுவான் போன்ற நல்ல பவுலர்கள் இல்லாததாலோ என்னவோ இந்தியா இங்கிலாந்தை ஒரு நாள் தொடரில் (3-2) வென்றது. இந்த கம்பீரை கட்டி கொண்டு ஏன் தான் அழுகிறார்களோ தெரியலை.
நிற்க பைனல் எந்த அணி ஜெயித்தது என தெரியலை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள் !
***
அண்மை பதிவுகள்:
உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல் தஞ்சாவூர்
வீட்டில் போலிஸ் தேடல் (Search Warrant ) - ஏன் எதற்கு எப்படி?
விஸ்வரூபம் - தடை சரியா? மக்கள் கருத்து

துவக்க ஆட்டக்கார்கள் பார்ம், வீக் ஆன வேக பந்து வீச்சாளர்கள், யுவராஜ் பேட்டிங், வாரி வழங்கும் அஷ்வின் என பல பிரச்சனைகள் - வெற்றிக்கு முன் தெரியாமல் போய் விட்டது. ஜடேஜா இந்திய மண் என்பதாலோ என்னவோ அசத்தி விட்டார்.
தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்
சூப்பர் சிங்கர் T -20-பைனல்
சாய் சரண் அணியும், பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் ! T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும் இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்
பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது. நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாடலை இங்கு கேட்டு ரசியுங்கள்
தோனி விரைவில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்கிறார்கள் பார்க்கலாம்
சூப்பர் சிங்கர் T -20-பைனல்
சாய் சரண் அணியும், பூஜா அணியும் பைனலில் மோதிக்கொண்டன. மொத்தம் 9 ஜட்ஜுகள் ! T -20- முழுவதுமே, ஒவ்வொரு மேட்சிலும் இரு டீமுக்கும் இடையில் அதிக வித்யாசம் இருக்க கூடாது; அப்போது தான் கடைசி பாட்டு வரை பார்ப்பார்கள் என மார்க்குகள் இரண்டு அணிக்கும் ஒரே மாதிரி போட்டு வந்தனர். இதுவே அவர்களின் நம்பக தன்மையை குறைத்து விட்டது. இதனை பார்க்கும் ரசிகர்கள் எப்படி கண்டுபிடிக்காமல் போவார்கள் என underestimate செய்தனரோ தெரியலை. உதாரணமாய் எதிர் எதிரே பாடும் இருவரில் ஒருவர் Outstanding ஆக பாடுவார். இன்னொருவர் மிக சுமாராக பாடுவார். நன்கு பாடியவருக்கு 10 மதிப்பெண்ணும், சுமாராய் பாடியவருக்கு 9 மார்க்கும் தருவார்கள். பார்க்கும் நமக்கு காண்டாகும்
பைனலில் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பாட்டை ஷ்ரவன்- பிரியங்கா ஜோடி பாடியது அட்டகாசமாய் இருந்தது. இதே பாட்டை எஸ் பி. பி மேடையில் பாடினால் கூட இஷ்டத்துக்கு மாற்றி பாடுவார். ஆனால் ஷ்ரவன் அப்படியே நிஜ பாட்டை கேட்கும் விதத்தில் பாடியது அருமை. பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது. நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பாடலை இங்கு கேட்டு ரசியுங்கள்
நிற்க பைனல் எந்த அணி ஜெயித்தது என தெரியலை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள் !
***
அண்மை பதிவுகள்:
உணவகம் அறிமுகம்: தேவர் ஹோட்டல் தஞ்சாவூர்
வீட்டில் போலிஸ் தேடல் (Search Warrant ) - ஏன் எதற்கு எப்படி?
விஸ்வரூபம் - தடை சரியா? மக்கள் கருத்து
//ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.'//
ReplyDeleteஉண்மை தான் ஆனால் ஹீரோ மட்டுமே என அடம்பிடிக்கிறாமே
ம்ம். ஆம் அப்படி தான் தோணுது
Deleteநிற்க பைனல் எந்த அணி ஜெயித்தது என தெரியலை. நீங்கள் பார்த்திருந்தால் சொல்லுங்கள் !//////
ReplyDeleteஅது சரி!!!!!!! ம்ஹும்....
//சிவகார்த்திகேயன்//
ReplyDeleteசின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு என இவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் ஆரம்ப கால ஷாரூக்கான்தான் ஞாபகத்துக்கு வருகிறார். ஷாரூக் அளவிற்கு இல்லாவிட்டாலும், தனக்கென ஒரு இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவார் என்றே நம்புகிறேன், சரியான இயக்குனரும், கதைக்களனும் அமைந்தால்.
//சூப்பர் சிங்கர் T -20-பைனல் //
க்ரிக்கட்ல மேட்ச் பிக்ஸிங் இருக்கோ இல்லியோ, இந்த சூப்பர் சிங்கர்ல......
மேட்ச் பிக்சிங் கண்டிப்பா இருக்கு. சில தகவல்கள் அதை ஊர்ஜிதம் செய்ற மாதிரி காதில் விழுது
Deleteஏகனில் சிவகார்த்திகேயன் என்ன கேரக்டரில் நடித்திருந்தார்... நினைவுக்கு வரவில்லையே...
ReplyDeleteநன்றி பிரபா
Deleteநல்ல தொகுப்பு. லொள்ளு சபா விரும்பிப் பார்த்த ஒரு நிகழ்ச்சி.
ReplyDeleteஆமாங்க நன்கு சிரிக்க வைத்த நிகழ்ச்சி அது
Delete////ஹீரோவாக இல்லாமல், சந்தானம் போல காமெடியன் ஆனால் செமையாய் கலக்குவார் என தோன்றுகிறது.
ReplyDelete//
இல்ல சார், அவருக்கு காமெடியுடன் கூடிய ஹீரோ செமைய சூட் ஆகும், பாண்டியராஜன் ஒரு காலத்தில் அடைந்த வெற்றிகளை இவர் சீக்கிரமே அடைவார்ன்னு தோணுது!!
//ஆமாம் இந்த வகை காமெடி + உல்ட்டா தொடருக்கு இன்னும் கூட நிறைய Viewers இருப்பார்களே.. ஏன் மறுபடி அவர்களோ வேறு டீமோ தொடங்க கூடாது?//
ஹீ ஹீ.. அதே டீம் இன்னும் அத செய்யுது சார், அதுதான் கண்ணா லட்டு தின்ன ஆசையா "இ.போ.நா.வா"வை கலாய்த்து வந்து சூப்பர் ஹிட் ஆச்சே, அடுத்து "மாப்பிளை விநாயகர்", முந்தானை முடிச்சில் இருந்து வருதாம்!! :-)
வணக்கம் சந்தானம் பேன்ஸ் . சினிமாவா தொடருகிறார்கள் என நீங்க சொல்றது உண்மை தான்.
Deleteஇருந்தாலும் இன்னும் டிவி யில் இதை தொடரை தொடர வாய்ப்பு இருக்கு தானே ?
முந்தானை முடிச்சை அடுத்து உல்ட்ட பண்ண போறாங்க என்பது எனக்கு புது தகவல் நன்றி
//அஜீத்துடன் முதல் படத்தில் (ஏகன்) நடித்த போது அவர் எப்படி பேசினார் //
ReplyDeleteentha scene la varuvar?????
Deleteவாங்க ஜெட்லி
ஏகனில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் சிறு பாத்திரத்தில் வந்தாராம்.
ReplyDeleteரெண்டு கைகளிலும் புத்தகங்களை பிடித்த படி சிவகார்த்திகேயன் நிற்கும் போது அஜீத் அவரிடம் வந்து பேசும் காட்சி மட்டும் தான் சிவகார்த்திகேயன் டயலாக் பேசும் படி வந்ததாம்; நாலு நாள் ஷூட்டிங் சென்ற பின் அந்த பாத்திரத்துக்கு அதிக ஸ்கோப் இல்லை என விட்டுட்டார்களாம் ;
புத்தகத்துடன் சிவா நிற்பதும் அஜீத் பேசுவதும் மட்டும் இன்னும் உள்ளது என்றார்
சுவையான பகிர்வு! சூப்பர் சிங்கர் பிக்சிங் பண்றதாலே வெறுத்து போச்சு! சிவகார்த்திகேயன் உண்மையில் காமெடி பண்ணினால் நன்றாகத்தான் இருக்கும்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஅண்ணே வணக்கம்.
ReplyDeleteவணக்கம் ராஜி :)
DeleteT20 ல் பைனலில் சாய்சரண் அணி தான் ஜெயித்தது. எட்டு லட்சம் பரிசு பெற்றார்கள். பூஜாவுக்கு மேன் ஆஃப் த மேட்ச் பட்டதுக்கு ஒரு சைக்கிள் கிடைத்தது.
ReplyDeleteகுட்டி சுட்டீஸ் பார்க்க நினைத்திருக்கிறேன். இதுவரை முடியவில்லை.
அப்படியா? நீங்க சொல்லி தான் யார் ஜெயிதார்கன் என்பது தெரிந்தது. வீட்டில் கூட உங்க கமண்ட் பார்த்துட்டு தான் சாய் சரண் டீம் ஜெயிதார்களாம் என சொன்னேன்
Deleteகுட்டி சுட்டீஸ் ரோஷினிக்கு கூட நிச்சயம் பிடிக்கும் பாருங்க ஞாயிறு மாலை 6 மணிக்கு வருது
சிவகார்த்திகேயனின் மிமிக்ரி சூப்பராக இருக்கும். நீங்க சொல்வது போல் காமெடியனா போனா நல்ல எதிர்காலம் கிடைக்கும்...
ReplyDelete// பிரியங்கா குரல் தேன் போல் இனிக்கிறது. நமக்கு தெரிந்து பிரியங்காவின் பாடல் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. தமிழகத்தின் அட்டகாசமான பாடகியாக பிரியங்கா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. //
ReplyDeleteநிச்சயமாக . ஆரம்ப காலம் தொட்டு இந்த நிகழ்ச்சிய பார்த்துட்டு வாரேன். பிரியங்கா , சத்யப்ரகாஷ், கிருஷ்ணமூர்த்தி இவங்க மூணு பெரும் ஆல்டைம் பேவரைட் . அலப்பரையெ இல்லாம அசத்திடுவாங்க .
சிவகார்த்திகேயன் தொடங்கி சூப்பர் சிங்கர்வரை தொகுத்துத் தந்துள்ளீர்கள்.
ReplyDelete