சூப்பர் சிங்கரில் கமல்
கமல் மற்றும் விஸ்வரூபம் ஹீரோயின் பூஜா சூப்பர் சிங்கருக்கு வந்திருந்தனர் ( ஆண்ட்ரியா வருவார் என அய்யாசாமி தினம் காத்திருந்து, காத்திருந்து ஏமாந்து போனார்)
கமல் பல நேரம் எளிமையாய் பேசியது ஆச்சரியமாய் இருந்தது. "இப்படி நல்லா பாடுபவர்களை முன்பே தெரிந்திருந்தால், நான் அதிகம் பாடியிருக்க மாட்டேன்" என்றார் கமல் சிரித்தபடி. DTH பற்றியும் மனம் விட்டு பேசினார்.
திவ்ய தர்ஷினி மற்றும் மா. கா. பா என இரு தொகுப்பாளர்கள் இருந்தும் கமல் இருந்த 3 நாளும் மா. கா. பா அநேகமாய் வாயே திறக்கலை. திவ்யதர்ஷினி தான் பேசி தள்ளினார்.
சன் மியூசிக்கில் படபிடிப்பு தளம்
சினிமா- படபிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்யங்களை சன் மியூசிக்கில் இயக்குனர்களே வந்து பேசும் "கட் டு கட் " என்கிற நிகழ்ச்சி சன் மியூசிக்கில் வருகிறது. புது படங்களுக்கு அல்ல சில வருடம் முன்பு வெளியான படங்களுக்கு ! ஆடுகளம் படம் எடுத்த போது நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்தார் வெற்றிமாறன். தெருவில் தனுஷும் தாப்சியும் பேசிக்கொண்டு நடக்கும் அந்த அழகான இரவு காட்சிக்கு தாப்சி பாட்டுக்கு எதோ பேசி கொண்டு நடக்க, டப்பிங்கில் தான் ஒழுங்கான வசனம் போட்டு நிரப்பி கொண்டோம் என்றார் இப்படி சினிமாவின் பின்னணியில் இருக்கும் பல கதைகள், ரீல் இவற்றை அறிய சுவாரஸ்யமாய் இருக்கிறது. நாமெல்லாம் சினிமா கிசு கிசுவை ரசிக்கிற ஆட்கள் தானே ! இணையத்திலாவது அந்துமணி துணுக்கு மூட்டை வாசித்து கொண்டு தானே இருக்கிறோம் !
பிளாஷ்பேக் : இளமை -புதுமை
சன் டிவியில் இந்த நிகழ்ச்சி வாராவாரம் வரும் நாளும், நேரமும் கூட நினைவிருக்கிறது. ஒவ்வொரு புதன் மாலை ஏழரைக்கு ஒளிபரப்பாகும். சொர்ணமால்யா தொகுப்பாளராக வந்த முதல் நிகழ்ச்சி. அப்போல்லாம் அவருக்கு என்னா fan following தெரியுமா !
ஐந்தாறு இளைஞர்கள், இளைஞிகள் உடன் அமர்ந்து அவர்களை ஜோக் அடிக்க வைத்து, சொர்ணமால்யாவும் களாய்ப்பது தான் நிகழ்ச்சி. நடு நடுவே காமெடி சீன்களும் போடுவர்.
தலைப்புக்கேற்றவாறு இளமையும், மகிழ்ச்சியும் ததும்பும் இந்நிகழ்ச்சி ஒரு காலத்தில் பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருந்து பின் அர்ச்சனா தொகுப்பாளராக வந்து, சில வருடங்கள் கழித்து fade out ஆனது !
கலைஞர் டிவி - குடும்ப திரைப்புதிர்
குடும்ப திரைப்புதிர் என்கிற சினிமா குவிஸ் நிகழ்ச்சி (நமக்கெல்லாம் திரைப்புதிர் என்றால் தெரியாது. சினிமா குவிஸ் என்றால் தான் புரியும் :)
ஒரு குடும்பத்திலிருந்து மூன்று பேர் வந்து பங்கேற்க ஏதாவது வீடியோ ஆடியோ கிளிப்பிங் காட்டி கேள்விகள் கேட்கிறார்கள். வருவோரில் வயதானோர் பலர் இருப்பதால் இவர்கள் கேட்கும் இக்கால கேள்விகளுக்கு சரியே பதில் சொல்வதில்லை
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா? சொர்ணமால்யா ! இன்றைய சொர்ணமால்யாவை சின்ன திரைக்குள் அடக்குவது சற்று சிரமம் தான் ! ரெண்டு வித குரலில் பேசி பயமுறுத்துகிறார்.
நிகழ்ச்சி பார்க்கிறீர்களோ இல்லையோ, சினிமா என்பது பலருக்கும் பிடித்த ஒன்று தானே ! விருப்பமுள்ளோர் முடிந்தால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் !
செட் அப் பாக்ஸ் அப்டேட்
அரசு டிவி கனக்ஷன் தருகிறோம்; செட் அப் பாக்ஸ் தேவையில்லை என லோக்கல் கேபிள் டிவி காரர்களே தங்கள் சேவையை தொடர்கிறார்கள். எங்களுக்கும் வழக்கமாய் காணும் பெரும்பாலான சானல்கள் வருவதால் அதில் தொடர்கிறோம். நிறைய புது தமிழ் சானல்கள் கூட வருது. இரண்டு முக்கிய ஸ்போர்ட்ஸ் சானல்களும் உண்டு ! செட் பாக் பாக்ஸ் செலவு இப்போதைக்கு இல்லை. நூறு ரூபாயில் மாதம் டிவி பில் முடிஞ்சிடுது !
ஆரோகணம் - லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி
ஏனோ இவ்வார இறுதியில் பல சானல்களிலும் ஆரோகணம் பட இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணா பேட்டி வந்து கொண்டிருந்தது. எனக்கு கூட படத்துக்கு ஏதும் தேசிய விருது கிடைச்சிடுச்சோ என சந்தேகமே வந்திடுச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுது. புத்தாண்டுக்கு பல சானல்களும் அவரிடம் பேட்டி எடுத்துட்டு அதை இன்று மறு ஒளிபரப்புகின்றன என்பது !
ஆரோகணம் மலையாளம், தெலுகு, கன்னடா எல்லாவற்றிலும் ரீ மேக் ஆகுதாம். லட்சுமி ராமகிருஷ்ணா அவர்களின் பெண்ணுக்கு திருமணம் ஆவதால் (என்னாதிது ! அவருக்கு கல்யாண வயசில் பெண்ணா !) தற்போது எந்த ப்ராஜக்ட்டும் எடுக்கவில்லை என்றார்.
ஆரோகணம் படம் இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்கணும் !
குட்டி செய்திகள்
பொங்கலுக்கு தமிழக அரசு ஏராள பஸ் விட்டுருக்காங்களாம். இதை சொல்லிட்டு எல்லா நியூசிலும், தனியார் பஸ் அதிக கட்டணம் வாங்கினால் 2479 0479 என்ற எண்ணுக்கு தகவல் சொல்லுங்க" என சொல்லியவாறு உள்ளனர் ( நீங்க என்னமோ இந்த நம்பருக்கு போன் பண்ணா, உடனே உங்க டிக்கெட் விலை குறைஞ்சிடும்னு நினைக்க போறீங்க. தகவல் தந்தா, மற்றவை அவங்க பாத்துப்பாங்க. டீலிங் ஸ்டார்ட்ஸ். அவ்ளோ தான்)
அலெக்ஸ் பாண்டியன் டிரைலர் டிவியில் அலுக்காம போடுறாங்க. பழைய மசாலா ரஜினி படம் பாக்குற மாதிரியிருக்கு. கார் பறக்குது; எகிறுது; போடுற காமெடி சிரிக்குற மாதிரியில்லை. கார்த்திக்கு இன்னொரு தோல்வி படமா இருக்குமோ என பயமாருக்கு (கார்த்தி ஓரளவு பிடித்த நடிகர் ; இது பொய்த்தால் மகிழ்ச்சியே !)

பசங்க எல்லாரும் as usual " இவர் கடவுள் மாதிரி ; இவரை ஒருமுறை பார்ப்பதே பூர்வ ஜன்ம புண்ணியம் " என்று பேசினர் (கமலும் இதற்கு வழக்கம்போலவே நாத்திகம் பேசினார்)
நிற்க. பொங்கலுக்கு விஸ்வரூபம் வரலியாமே ! குடியரசு தினமருகே தள்ளி போகுதாம் ! ஹூம் :((

இளமை புதுமை நிகழ்ச்சியை தொகுத்தவர்கள் நால் பேர். இது எந்த வரிசையில் என்பது நினைவில் இல்லை.
ReplyDeleteஸ்வர்ணமால்யா
ப்ரியா பிள்ளை
காயத்ரி ஜெயராம்
அர்ச்சனா
இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தது ஸ்வர்ணமால்யா மற்றும் ப்ரியா பிள்ளை இருவரின் தொகுப்பு தான்.
ப்ரியா பிள்ளை?
Deleteபிள்ளை - பேரே அப்படித்தானா? இல்லை ஜாதியா?
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் சுவையான அலசல்.
ReplyDeleteகமல் கலந்து கொண்ட நிகழ்ச்சியை நான் பார்த்தேன். நன்றாக இருந்தது. நீங்க குறிப்பிட்ட மாதிரி கமல் சற்று எளிமையாக பேசியது ரசிக்கும் படியாக இருந்தது.
நான் இருக்கும் பகுதியில் தமிழ் சேனல் எதுவும் வருவதில்லே. ஸோ எதுமே பாக்கமுடிகிறதில்லே.
ReplyDeleteஉங்களுக்கு பிடித்த ஆண்ட்ரியா இந்த வாரம் வருகிறார்.(விஜய் டிவியில் தான் )
ReplyDeleteஅரசு கேபிள் வந்து விட்டதா? எங்கள் பகுதியில் (சைதை) இன்னும் வரவில்லை.
அலெக்ஸ் பாண்டியன் --எனக்கும் அதே சந்தேகம் தான்
டிவி நிகழ்சிகள் பெரும்பாலும் பார்ப்பதில்லை! சூப்பர் சிங்கரில் ஆண்டிரியா வந்து விட்டார்! அடுத்த பதிவில் ஜொள்ளூவீர்களோ? சாரி! சொல்லுவீர்களோ!
ReplyDelete//அப்போல்லாம் அவருக்கு என்னா fan following தெரியுமா ! //
ReplyDeleteஉங்களையும் என்னையும் சேர்த்து தானே சொன்னீர்கள் மோகன்?
திருமணமான புதிதில் நான் இளமை -புதுமை நிகழ்ச்சியை விடாமல் பார்த்து ரசிப்பதை (அட சொர்ணமால்யாவை இல்ல, நிகழ்ச்சியைனு சொன்னா நம்பவா போறாங்க) பார்த்து என் வீட்டம்மா என்னங்க உங்கள் நான் 'ரொம்ப நல்லவர்னு நினைச்சு ஏமாந்துட்டேன்' என்று சொல்வார்கள்.
இப்போ நம்ம பேவரைட் மீண்டும் திரையில் தோன்ற, பழைய கதையெல்லாம் அம்மா மூலம் அறிந்துள்ள என் மகள், அம்மா இப்பல்லாம் அப்பா வீக் எண்ட்ல சீக்கரமா எழுந்திருப்பது ஏன் தெரியுமா? சொர்ணமால்யா நிகழ்ச்சியை பார்க்க தான் என்று என்னை களாய்கிறாள். அவளுக்கு எங்கே தெரிய போகிறது. அம்மணி அரவிந்தசாமி, ஐஸ்வர்யா ராய் லிஸ்டில் சேர்ந்துள்ளது?
A good Anchor!
செட் டாப் பாக்சுக்கு எங்களிடம் 500 அட்வான்ஸ் வாங்கிச் சென்றிருக்கிறார்கள்
ReplyDeleteமதுரைப் பக்கம் எல்லாம் கேபிள் டிவி கட்டணத்தைச் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளனராம் இங்கு என்ன செய்கிறார்களோ பார்ப்போம்.
ReplyDelete