சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன். முதல் நாளில் கண்ணில் பட்ட சில பிளஸ் மற்றும் மைனஸ் இதோ:
பிளஸ் :
கிண்டியிலிருந்து சென்றால் சைதாப்பேட்டை தாண்டியதுமே புத்தக கண்காட்சி நடக்கும் YMCA உடற்பயிற்சி கல்லூரி வளாகம் வந்து விடுகிறது. இம்முறை சென்னைக்கு மிக நடுவில் கண்காட்சி இருப்பதால் பலருக்கும் பயணிக்க மிக எளிதாய் இருக்கும் என்று தோன்றுகிறது. நேற்று அங்கு சந்தித்த பதிவர் நண்பர்கள் பலரும் கூட இதே கருத்தை எதிரொலித்தனர்
கண்காட்சி நடக்கும் அந்த கல்லூரியே மிக வித்யாசமான ஒன்றாய் இருக்கிறது. அது PET ஆசிரியர்களாக செல்வோர் பயிலும் கல்லூரி என நினைக்கிறேன். மேலும் அதற்கான பள்ளியும் கூட இருக்கிறது. நுழைந்ததுமே ஐந்தாறு வயது சிறுவர்கள் செய்து கொண்டிருந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அசத்தியது. மேலும் ஆங்காங்கு சிறுவர்- சிறுமியர் பல்வேறு வித பயிற்சியில் இருந்தனர் அங்கு இல்லாத விளையாட்டுகளும், விளையாட்டு மைதானங்களும் இல்லை எனலாம். இம்முறை புத்தக கண்காட்சியின் அடிஷனல் அட்ராக்ஷன் - இந்த உடற் பயிற்சி கல்லூரியை வேடிக்கை பார்ப்பது !
பார்க்கிங்குக்கு நிறைய இடம் இருக்கிறது. நிறைய செக்கியூரிட்டிகள் இதற்காக உள்ளனர். கண்காட்சி செல்ல வழி சொல்லவும் தான் (அவர்கள் வழக்கம் போலன்றி மக்களிடம் சற்று பொறுமையாய் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்)
ஒவ்வொரு வருடமும் ஸ்டால்கள் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. இம்முறை ஸ்டால்கள் கிட்டத்தட்ட 700 இருக்கிறது புத்தக விரும்பிகளுக்கு வேட்டை தான்.
எப்போது புத்தக கண்காட்சி சென்றாலும் குறைந்தது பத்து பதிவர் நண்பர்களை சந்திக்கலாம். நேற்று சந்தித்தவர்கள்: அகநாழிகை வாசுதேவன், மணிஜி, அப்துல்லா, பபாஷா, எறும்பு ராஜகோபால், கரா, மேவி, ராகவன் (கென்யா), வழிப்போக்கன் யோகேஷ் உள்ளிட்டோர்.
மைனஸ்
டாய்லெட் எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியலை. கல்லூரி மைதனாத்தில் ஆங்காங்கு கழிப்பறை என போர்டு மட்டும் உள்ளது. சென்று பார்த்தால் பூட்டி உள்ளது. பெரும்பாலான ஆண்கள் மரங்களின் அருகே தான் சிறுநீர் கழிக்கிறார்கள். பதிவர் மேவி எங்கோ ஒரு இடத்தில் கழிப்பறை இருப்பதாக பிளஸ் ஒன்றில் எழுதியிருந்தார். நிச்சயம் நான் 10 பேரிடம் கேட்டவரை யாருக்கும் தெரியலை.
ஸ்டால்கள் உள்ளே நுழைந்தால் கடைசி எண்ணில் இருந்து துவங்குகிறது. எதிர்பக்கம் வேறு வரிசையில் எண்கள். துவக்கத்தில் ஒன்றில் இருந்து துவங்கினால் வரிசையாய் நாம் பார்க்கவும், எவற்றை பார்த்தோம் என நினைவு கொள்ளவும் வசதியாய் இருக்கும்.

படம் : நன்றி பலாபட்டறை ஷங்கர் |

மேலே உள்ள கூரை சற்று உயரம் குறைவு என்பதால் காற்றோட்டம் அதிகமில்லை. மின்விசிறிகள் பல இருந்தாலும் உள்ளே மிக வெக்கையாக உள்ளது.
பபாசி மற்றும் அதன் அரசியல் பற்றி அறிந்தால் தலை சுற்றுகிறது. அதற்குள் செல்ல வேண்டாம்.
எங்கு பார்த்தாலும் ஜீ டிவி, ராஜ் டிவி சீரியல்கள் பற்றிய விளம்பரங்கள் பயமுறுத்துகிறது. புத்தகத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை !
***
சிற்சில குறைகள் இருந்தாலும் புத்தக கண்காட்சி சென்னை வாசிகளின் வரப்ரசாதம். நேற்று புத்தகம் ஏதும் வாங்கலை. நாளை மகளுடன் செல்லவுள்ளேன்.
சென்ற முறை போல ஸ்பெஷல் தகவல்கள் இருந்தால் பின்னர் பகிர்கிறேன் !
***
தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டால் விபரங்கள் பபாசி இணைய தளத்தில் கிடைக்கிறது தங்கள் வசதிக்காக இங்கும் பகிர்கிறேன்
இந்த லிஸ்ட் சற்று பெரிது. மவுஸ் பிடித்து ஸ்க்ரோல் செய்ய கஷ்டமாக இருக்குமாயின் இப்பவே எஸ் ஆகிடுங்க :)
மீண்டும் சந்திப்போம் !
******
அண்மை பதிவு -
பாண்டியன் மெஸ் : (அலெக்ஸ் பாண்டியன் சினிமா விமர்சனம் ) இங்கு

36th CHENNAI BOOK FAIR - 2013
Inauguration And Award Function
Inauguration And Award Function
36th CHENNAI BOOK FAIR STALL LIST - 2013
|
suda suda pathiva arumai....
ReplyDeleteநன்றி சீனி
Deleteநல்ல பகிர்வு. புத்தக ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். நாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் - தில்லி புத்தகக் கண்காட்சிக்கு.... இங்கே ஃபிப்ரவரியில் தான்.
ReplyDeleteதொடரட்டும் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவல்கள்.
Deleteவாங்க வெங்கட் நன்றி
அருமையான , பயனுள்ள தகவல்கள் ! நன்றி !
ReplyDeleteநன்றி ஸ்ரவாணி மேடம் மகிழ்ச்சி
Delete/////எப்போது புத்தக கண்காட்சி சென்றாலும் குறைந்தது பத்து பதிவர் நண்பர்களை சந்திக்கலாம். நேற்று சந்தித்தவர்கள்: அகநாழிகை வாசுதேவன், மணிஜி, அப்துல்லா, பபாஷா, எறும்பு ராஜகோபால், கரா, மேவி, ராகவன் (கென்யா), வழிப்போக்கன் யோகேஷ் உள்ளிட்டோர்/////
ReplyDeleteஇதில் பிரபல லைக்கர் பட்டிக்ஸ் பெயர் இல்லாததை கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்....
ராம்சாமி அண்ணே: அவரு நேத்திக்கு தான் போயிருக்காரு :)
Deleteஅருமை தகவல்கள் thanks mohankumar sir
ReplyDeleteமகிழ்ச்சி சரவணன் சார்
Deleteமிக்க நன்றி !
ReplyDeleteபயன்தரும் தகவல் !
வாங்க நிஜாம் நன்றி
Deleteதகவல்களுக்கு நன்றீஸ். ;-)))
ReplyDeleteநாளை போகலாம் என்ற எண்ணம்.
நேற்று இருவரும் குடும்பத்துடன் வந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்க முடியலை
Deleteநான் 19ம் தேதிக்கு ப்ளான் பண்ணியிருக்கேன்.
ReplyDeleteஅப்படியா? ஓகே ரகு. முடிந்தால் வருகிறேன்
Deleteஆமாம்.. டாய்லெட் கண்ணிலேயே காணோம். வெக்கை. காம்பவுண்டுக்குள் நுழைந்து எவ்...வ்..வ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது...நான் பார்த்தவரை தொடுதிரைக் கணினி கண்ணிலேயே படவில்லை!
ReplyDeleteஇப்போ டாயலேட் உள்ளது ; ஆனா கொடுமையா இருக்கு :(
DeleteTF
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
வாங்க ரோஷினி அம்மா நன்றி ! பொங்கல் வாழ்த்துகள் !!
Deleteஅருமையான தொகுப்பு தலைவரே.. புத்தகங்கள் அங்கே மட்டும் குவிந்து கிடக்கும் போது நாம் அங்கே இல்லை என்று நினைக்கும் போது வயிறு வாயெல்லாம் பத்தி வருகிறது..
ReplyDeleteஇருந்தாலும்.. வாழ்த்துக்கள்
அப்படியா ஹாரி. சென்னை வரும்போது டிஸ்கவரி புக் பேலஸ் செல்லுங்கள். எல்லா புக்கும் கிடைக்கும். பதிவர் என்றால் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் உண்டு
Deleteஸ்பெஷல் டீல்ஸை இந்த முறையும் எதிர்பார்க்கிறேன். :)
ReplyDeleteநன்றி தேவா; ஓரிரு நாளில் வெளியிடுறேன் :)
Deleteபுத்தகம் வாங்கணுமே ...எங்கள் ஊரில் இருந்து கிளம்பி வர டிக்கட் கிடைக்கலையே
ReplyDeleteஹாரிக்கு சொன்னதே தான். சென்னை வரும்போது டிஸ்கவரி செல்லுங்கள். தேவையான புத்தகம் கிடைக்கும்
Deleteபொங்கல் வாழ்த்துகள் சார்.
ReplyDeleteநன்றி ஆரிப் பொங்கல் வாழ்த்துகள்
Deleteரசித்த பதிவு. நன்றி.
ReplyDeleteஇது உடற்பயிற்சி ஆசிரியர் படிப்புக்கான கல்லூரிதான். அக்காவின் கணவர் இங்கே தான் படித்து பி டி மாஸ்டராக இருந்தார்.
அப்படியா டீச்சர்? மகிழ்ச்சி நன்றி
Deleteஅருமையான தகவல்கள். நன்றி. வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்கிறேன்.
மிக்க மகிழ்ச்சி ஐயா
DeleteSirantha pathivu nantri
ReplyDeleteபுத்தகக் கண்காட்சியில் உள்ள ஸ்டால்களின் எண்களையும் அங்குள்ள பதிப்பகத்தின் பெயரையும் கொடுத்துள்ள தகவல், தேவையான புத்தகங்களை தேடும் நேரத்தை குறைக்க உதவும். தகவலுக்கு நன்றி
ReplyDelete