Monday, January 14, 2013

தொல்லைகாட்சி- பெப்சி உமா + பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் : எதை பார்க்கலாம்?

சீரியல் பக்கம் : சாய்பாபா ஜெயா டிவி சீரியல் 

ஜெயா டிவி யில் வருது சாய்பாபா குறித்த ஒரு ஆன்மீக சீரியல். இதனை தொடர்ந்து பார்ப்பெதேல்லாம் இல்லை. எப்பவாவது சானல் மாற்றும்போது குட்டி சாய்பாபாவாக நடிக்கும் சிறுவன் அழகில் மயங்கி சில நிமிடம் தங்கி விடுவதுண்டு. இரண்டு வயதுக்குள் இருக்கும் இந்த சிறுவன் செம ஸ்மார்ட். அட்டகாசமான முகபாவம் காட்டுகிறான். ஏதேதோ அவன் வாயசைக்க, வேறு யாரோ பின்னணி குரல் தருகிறார்கள்.

அந்த சிறுவன் இறை அருள் பெற்றவன் என்றும் (குட்டி சாய்பாபா) "அனைத்தும் அறிந்தவன்" என்றும் கதை செல்கிறது. உங்களில் யாரும் இந்த சிறுவனை ரசித்துள்ளீர்களா?

பிளாஷ்பாக்: பெப்சி உங்கள் சாய்ஸ்

" பெப்சி உங்கள் சாய்ஸ் " இந்த வார்த்தைகளே எவ்வளவு பிரபலமானது ! ஒரு தனி நபர் ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் பெப்சி உமா ரிக்கார்ட் பிரேக் செய்தார் என்று அப்போது சொன்னார்கள். உமாவின் வளர்ச்சியை (இடமிருந்து வலமாக) அடுத்தடுத்த வருடங்களில் தமிழகம் கண்டு மகிழ்ந்தது.



இந்நிகழ்ச்சி ஒரு லைவ் ஷோ அல்ல என்றேனும் ஒரு நாள், எதோ ஒரு நேரத்தில் திடீரென சன் டிவியில் " பெப்சி உமாவுடன் பேசலாம்; கால் செய்யுங்கள்" என கீழே ஒரு வரி ஓடும். அதை பார்த்து விட்டு அடித்து பிடித்து போன் செய்து, எப்படியோ லைன் கிடைத்த ஒவ்வொரு தமிழனும் ஜென்ம சாபல்யம் அடைந்தான் அல்லது அப்படி சொன்னான். " நான் உங்கள் ரசிகனுங்க நீங்க அழகுன்னா அழகு அவ்ளோ அழகுங்க " என்று சொல்லாமல் போனை வைத்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

போனில் பேசிய பின் சினிமாவிலிருந்து எதோ பாட்டும் ஒளிபரப்பியதாய் கேள்வி.

பல ஆண்டுகள் தமிழகத்தின் TRP -களை தன் வசம் வைத்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று !

நீயா நானா : முகங்கள் குறித்த நிகழ்ச்சி 

முகங்கள் குறித்த நீயா நானா இன்னொரு நெகிழ்வான அனுபவமாய் இருந்தது. " உங்கள் முகத்தில் என்ன பிடிக்கும் எது பிடிக்காது? 'என்று சாதாரணமாய் ஆரம்பித்த நிகழ்ச்சி "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மையா?", " முகத்தை வைத்து ஒருவரை ஜட்ஜ் செய்தீர்களா? அது சரியாய் இருந்ததா?" "எந்த மாதிரி முகத்துக்கு வேலை தருவீர்கள்?" என்றெல்லாம் சென்றது.

பலரும் அழகுக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர் என்பது வெளிப்படையாய் தெரிந்தது. நிகழ்ச்சியில் பேசிய ஒரு திருநங்கை மிக தெளிவாக அழகாக பேசினார்

வழக்கு எண் பட நாயகி போல முகத்தில், கணவனால் ஆசிட் ஊற்றப்பட்ட பெண் ஒருவர் தனது கதையை பகிர்ந்து கொண்டார். குடும்ப சண்டையில் மனைவி மற்றும் தனது 2 மகள்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி விட்டு ஓடியிருக்கிறான் அந்த மிருகம் ! அந்த பெண்ணின் வார்த்தைகள் மனதை தைத்தது.

பொங்கல் டிவி சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட் ஒரு பார்வை

பல்வேறு வேலைகளில் இருந்ததால் இம்முறை டிவி சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட் தனியே போட முடியலை (ரொம்ப முக்கியம்) குட்டி லிஸ்ட் இதோ:

சன் டிவி ஜனவரி 14 - அன்று வேங்கை (10 AM ), சகுனி (6 P M ) என சூர மொக்கை போடுகிறார்கள்.

மாட்டு பொங்கல் (ஜனவரி 15) அன்று அதையும் தாண்டி புனிதமாகி வெடி (11 AM ), மகேஷ் பாபுவின் தெலுகு டப்பிங்க் படம் என்று போய் விடுகிறார்கள். வழக்கம் போல் அன்று பட்டிக்காடா பட்டணமா என்று பாட்டு போட்டி (கங்கை அமரன் நடுவர்) - காலை 10 மணிக்கு உண்டு. சித்தப்பா & சித்தி இணைந்து கலக்கும் சென்னையில் ஒரு நாள் படம் பற்றி பார்வை காலை 9 மணிக்கு !

சன்னில் பார்க்க தக்க நிகழ்சிகள் என நான் நினைப்பவை இவை: 

ஜனவரி 14- மதியம் ஒன்னரை மணிக்கு போடும் அரவான் குழுவின் உழைப்புக்காகவும் தன்ஷிகாவிர்காகவும் பார்க்கலாம்.

ஜனவரி 15- காலை 8 மணி கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் - சிட்டி பாபுவுடன் பேசுகிறார்கள் (சந்தானம், சிட்டி பாபு, VTV கணேஷ் ) இவர்கள் பேசுவது நிச்சயம் சிரிப்பை வரவழைக்க கூடும்
*********

ஜெயாவில் சில வாரங்கள் முன் சென்னையில் நடந்த ரகுமான் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பார்க்க நினைத்துள்ளேன்

கலைஞர் TV

 மொக்கை சினிமா மட்டுமே போடுவது என பொங்கலுக்கு முடிவேடுத்துட்டனர் கலைஞர் TV காரர்கள் ! ஜனவரி 14 - பொன்னர் சங்கர் (மாலை 5 மணி) ; ஜனவரி 15- மன்மதன் அம்பு (மாலை 5.30) என கொல்கின்றனர். நிறைய சிறு படங்கள் பற்றிய சிறப்பு நிகழ்சிகள் கலைஞர் டிவியில் உள்ளது !

விஜய்யில் சில நிகழ்சிகள் :

ஜனவரி 14- விஸ்வரூபம் மேக்கிங் - சிறப்பு பார்வை (இன்று மாலை 5 மணிக்கு கேடி பில்லா டீம் - ஹீரோயின்களுடன் வருகிறார்கள். போலவே 6 மணிக்கு த்ரிஷா பேட்டி உள்ளது. ஹிஸ்டரி இஸ் இம்பார்டன்ட் )

ஜனவரி 15 - மாலை 6.30 க்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா டீம் மறுபடி வருகிறது (ஜனவரி 14 காலை ஒரு ரவுண்டு வந்து சென்றனர்)

ஜனவரி 16th- 9 AM-  Unplugged with Anirudh (3 Film Music Director) என்ற நிகழ்ச்சி உள்ளது.

மாலை 7 மணிக்கு சரவணன் - மீனாட்சி பற்றி 3 Hours காட்டுகிறார்களாம். மீனாட்சி ரசிகர்கள் 3 மணி நேரம் அவரை மட்டும் பார்த்து மகிழலாம் !
****
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...

பொங்கலோ பொங்கல் ! நகரத்து பொங்கல் !

சூரிய வணக்கம் +  படையல் ! 
கோலம் : மகள் வரைந்தது
***********
அண்மை பதிவுகள்:

கண்ணா லட்டு தின்ன ஆசையா - விமர்சனம் 

பாண்டியன் மெஸ் (அலெக்ஸ் பாண்டியன் - சினிமா விமர்சனம் - By: ராஜசுந்தர்ராஜன்)

சென்னை புத்தக கண்காட்சி: பிளஸ், மைனஸ் - ஸ்டால் & நிகழ்ச்சி விபரங்கள்
***

20 comments:

  1. பெப்சி உமா 4 வார்த்தை பேசுவதற்குள் அந்தப் புடைவைத் தலைப்பைப் படுத்தும் பாடு இருக்கிறதே....! :))

    ReplyDelete
    Replies
    1. அட எவ்ளோ சரியா சொன்னீங்க :)

      Delete
  2. பெப்சி உமா தூர்தர்ஷனில் வாருங்கள் வாழ்த்துவோம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்தினார்.அதில் மூன்று முறை என்கவிதை வாசிக்கப் பட்டது. ஒரு முறை மகுடம் சூடிய மடலாக என் கவிதை தேர்ந்தெடுக்கப் பட்டு ஒரு கைக் கடிகாரம் பரிசாகப் பெற்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட, பாராட்டுகள் முரளி..!

      Delete
    2. வாழ்த்துகள் முரளி சார் !

      அம்மணி கவிதை எல்லாம் வாசித்தார் என்பது புது தகவல் !

      Delete
  3. பொங்கல் வாழ்த்துக்கள்.
    அலெக்சா தரவரிச்யில் 127898 வந்து விட்டர்கள். விரைவில் ஒருலட்சத்திற்குள் இடம் பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. வீடுதிரும்பலில் அலெக்சா பட்டை இணைத்தும், டாட் காமாக மாற்றி தந்ததும் நீங்கள் தான் வீடுதிரும்பலை/ அதன் வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து வருகிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது

      Delete
  4. இதுபோல ஒரு படத்தைப்போட்டு பசியைக்கிளப்பி விட்டீர்களே. அழகாக கோலம் போட்ட கை களுக்கு என்ன பரிசு கொடுத்தீங்க?

    ReplyDelete
    Replies
    1. இப்போ தான் ரேன்க் வாங்கினா அதுக்கு பரிசு கேட்டுகிட்டு இருக்கா; வாங்கி தரப்போறேன் கோலத்துக்கு தனி பரிசு கொடுக்கலை. பாராட்டுக்கு நன்றி பூந்தளிர்

      Delete
  5. டி. என். முரளீதரன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தொலைக்காட்சி - நாள் முழுவதும் நிச்சயம் பார்க்க முடியாது - அலுவலகம் உண்டு. மாலை வந்த பின் பார்க்கவில்லை! :)

    பெப்சி உமா.... - பலரை வழிய வைத்த நிகழ்ச்சி... :) இப்போ எங்க இருக்காங்க அவங்க?

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க எந்த ஊர்னு தெரியலை

      Delete
  7. மன்மதன் அம்பு படத்திற்கு என்ன சார் குறைச்சல்...

    ReplyDelete
    Replies
    1. அப்படத்தில் எனக்கு பிடித்தது நீலவானம் பாட்டும் அது படமாக்கப்பட்ட விதமும் மட்டும் தான். மற்றபடி விசு சினிமாவுக்குள்ளேயே டிராமா போடுவாரே அது போல் தான் எனக்கு இருந்தது. சிரிப்பு படமென்று எடுத்தார் கமல். எனக்கு மட்டுமல்ல வீட்டிலும் யாருக்கும் சிரிப்பு வரலை.

      உங்களுக்கு அந்த படம் பிடித்தது தான் ஆச்சரியமா இருக்கு பிரபா !

      Delete
  8. பொங்கலோ பொங்கல்!!!!!! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் பொங்கல் வாழ்த்துகள்

      Delete
  9. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. கோலத்துக்கு முதல் மார்க்!!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...